Friday, February 10, 2012

திருடாதே கொரங்கே திருடாதே-சேவிங் செய்த குரங்கு- 4


நமக்கு நம்ம பொருட்களை பாதுகாப்பதில் ரொம்ப அக்கறை,



என்னதான் நாம வில்லத்தனமா யோசிச்சு நம்ம பொருட்களை பாதுகாக்க முயற்சி செய்தாலும் , திருடர்களிடம்   அவை தப்புவதில்லை,


இருந்தாலும் நாம் முயற்சியை கைவிடுவதில்லை,


எங்கேயிருந்து மனிதனுக்கு இந்த திருட்டு புத்தி வந்தது ?

இதுக்கு என்னோட பதில் என்னவா இருக்கும்ன்னு உங்களுக்கே தெரியும் ,

ஆம் இதுவும் ஒரு குரங்கு புத்தி தான் .
-----------------------------------------------------------------------------------------------------
         Desmond morris ஒரு tv show க்காக the great banana theft and egg omelet ன்னு ஒரு சீரியல் பண்ணுனாரு . 

    அவரு ரூம்ல வாழைப்பழம் டின்னோட  திருடு போய்டுச்சு , அவரு ரூமுக்கு அவர் ஆராய்ச்சிக்காக வைத்திருந்த குரங்குகள் வந்து போகும் , அவருக்கு அந்த குரங்குகள் மீது சந்தேகம் . யாரு இந்த தப்ப சரியா கண்டுபிடிப்பாங்கன்னு யோசிச்சாரு . வாசிம் கானா இருந்தா விஜயகாந்த் கண்டுபிடிச்சுடுவாரு , ஆனா திருடினது குரங்காச்சே , 


வேற வழியே இல்லைன்னு அவரு scotland yard க்கு கம்ப்ளைன் பண்ணாரு .

scotland yard லேருந்து ரிடையர் ஆனா cheif  சுப்ரிண்டன்ட் Bob cherryl ன்னு    ஒரு பெரிய கை இந்த கேச விசாரிச்சாரு . வாழைப்பழ டின்இல் இருந்த குற்றவாளியின் கை ரேகையை ,எல்லா குரங்குகளின் கைரேகையோடு ஒப்பிட்டு பார்த்தார் .

கடைசியில் Annabelle என்கின்ற பேராசை பிடித்த ஒரு குண்டு ஒரான்கூடான்  கைரேகையோடு கச்சிதமாக போருந்திப்போவதை கண்டுபிடித்தார் .


குண்டு Annabelle வாழைப்பழமும்  கையுமாக பிடிபட்டாள்?

இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் :
 முதலாம் உண்மை :

குரங்குகளுக்கும் நம்மை போல கைரேகை உண்டு ( மாடுகளுக்கு கூட மூக்கு ரேகை ஒன்றுக்கு ஒன்று மாறுபடும் -muzzle ).



இது குரங்கிலிருந்து evolve ஆகி வந்த வந்த எனது கைரேகையும் ,ஒரு குரங்கின் கைரேகையும்(indian macaque monkey) - பாருங்கள் இருவருக்கும் ஒரே போல அமைப்பு இருப்பதை .
 
இரண்டாவது : நமது திருட்டு புத்தியும் குரங்கிலிருந்து வந்தது தான்.

பின்குறிப்பு :

இன்னும் பல குரங்கு புத்திகள் உள்ளன நம்மிடம் , அதற்கான ஆதாரங்களும் நிறைய , இருப்பினும் இது போதும் என்று நினைக்கிறேன் ,

அடுத்து எப்படி மனிதன் சேவிங் செய்த குரங்கு ஆனான் , அவனது முடி எங்கே போயிற்று என்பதற்கான விடைகளை பார்க்கலாம் நண்பர்களே.

கைகொடுக்கும்  கை :


2 comments:

  1. அதான் குரங்கும் மனிதனும் ஒண்ணு என்று சொன்னார்களோ...

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் குரங்கு புத்தி உள்ளது சார்

      Delete

வாதம்‌

  வாதம்‌   கொழுப்போ, சர்க்கரையோ, அமினோ அமிலமோ எதுவாகிலும் அது உணவின் வழியாகவே உடலுக்குள் பெறப்பட்டது. இந்த ஆற்றல் மூலக்கூறுகள் ‘வளி’ எனு...