Monday, February 27, 2012

ஒன்று எங்கள் ஜாதியே ,ஒன்று எங்கள் நீதியே , உலக மனிதர் யாவரும் , குரங்கில் இருந்து தோன்றினர்


சேவிங் செய்த குரங்கு -8




முன்குறிப்பு :
நான் கடவுளை எதிர்ப்பவன் அல்ல , என்னால் ஒன்றுமே முடியாத   சமயங்களில் "கடவுளை  என்னை அறியாமல் துணைக்கு அழைக்கும் ஒரு சாதாரணமான மனிதன் நான். இருப்பினும் கண்ணுக்கு தெரியாத கடவுளைவிட கண்முன்னே நடப்பவற்றை , அறிவியலால் நிரூபிக்கபட்டவற்றை நம்புபவன் .
---------------------------------------------------------------------------------------------------------
      உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் குரங்கில் இருந்து தோன்றினர் ,
விலங்குகளுக்கு நெருப்பின் மேல் பயம் அதிகம் , அதன் வழித்தோன்றலாக வந்த நமது முன்னோர்களுக்கும் நெருப்பின் மேல் பயம் இருந்தது

    நெருப்பை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு ( after invention of controlled fire -இதை சரியாக மொழிபெயர்த்து உள்ளேனா ? ) அதன் மேல் உள்ள பயம் போய் , அதனுடைய ஆற்றலை கண்டு அதை கடவுளாக வழிபட்டான் , இப்படிதான் முதல் மதம் உருவாகியது .





    பரிணாமம் எப்போதுமே ஜாதியையோ , நிறத்தால் ,குணத்தால்  உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கருத்தையோ ... என்றுமே முன்வைத்ததில்லை.

இயற்கைக்கு எல்லாமே "செய் அல்லது செத்து மடி ,"தான் ,

உன்னால் selection  pressure ரை தங்க முடிகிறதா  , பல்கி பெருகு ...
இல்லையெனில் செத்துவிடு .
----------------------------------------------------------------------------------------

    இந்த கதகதப்பான சூழலில் தாக்குபிடித்து வாழும் நாம் ,
புவி வெப்பமாவதினால் spermatogenesis தடை பட்டு நமது சந்ததியே இல்லாமல் போகலாம் , அப்போது வேறொரு உயிரினம் இந்த சூழ்நிலைக்கு தாக்குபிடித்து ,பரிணாமம் அடைந்து  உலகை ஆளலாம் .

     ஆனால் அந்த ஒரு காரணத்தினால் அதை உலகின் சிறந்த உயிரினம் எனக்கூறும் கருத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியாதோ ; அதே போலதான் நிலப்பரப்பினால் ,வாழும் சூழலினால் , குளிரினால் , வெயிலால் ....உயரம் , தோற்றம் , நிறம் போன்றவை மாறுபட்டு இருப்பதை காரணம் காட்டி உயர்ந்தவன் ,தாழ்ந்தவன் எனும் இன பேதங்களை கற்பிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது .

   எங்க தாத்தா மைசூர் மகாராஜா , எங்க பாட்டன் கோல்கொண்டா கோட்டை முதலாளி என ரெண்டு மூணு ஜெனெரேசன் முன்னாடி வரை சிந்திக்கும் நாம் ,

அறிவை விசாலப்படுத்தி பல கோடி ஜெனெரேசன் முன்னாடி சிந்தித்து பழகினால் ,நம்ம எல்லாருக்கும் தாத்தா குரங்கு தான் என்ற முடிவுக்கு வரலாம் .

   அதனால் இனச்சண்டைக்கு வேலையே இல்லாமல் போய்விடும் .

இது எல்லாம் உண்மை என நிரூபிக்கப்பட்ட பரிணாமத்தை நம்புவதால் கைகூடலாம் .

ஆனால் அந்த பரிணாமத்தின் ஆணிவேரை அசைத்துப்பார்க்கும் ஆசையில் சில கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன , அதன் பதில்களை தற்போது பகிர்ந்து கொள்ளலாம்..
------------------------------------------------------------------------------
இந்தப்பதிவில் என்னை விட பலமடங்கு கடவுளின் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் கார்பன் கூட்டாளியின் கேள்விகளும் , அவரை விட பரிணாமத்தில் நிறைய  நம்பிக்கை வைத்திருக்கும் எனது பதில்களும் இடம் பெற்று உள்ளன .

கேள்விகள் இங்கிருந்து எடுக்கப்பட்டன ,
2)
கேள்விகள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------
முதலில் சில அடிப்படை செய்திகளை தெரிந்து கொள்ளலாம் , இவை சகோதரர் கார்பன் கூட்டாளியினால் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது , எனினும் சில தவறுகள் உள்ளது போல எனது அறிவியல் அறிவு கூறியது , அதை பின்னர் பார்ப்போம் .

மேற்சொன்ன இரண்டு பதிவிலும் நண்பர் கூறிய கருத்துக்களை படித்தால் குரோமோசோம்களை பற்றி ஒரு தெளிவு கிடைத்திருக்கும் ( சில குழப்பங்களோடு ).
-----------------------------------------------------------------------------------
ஒரு நண்பரின் கேள்விக்கு கார்பன் கூட்டாளி இவ்வாறு பதில் அளித்துள்ளார் ...
//23 ம் 23 ம் நேருக்கு நேர் இணையும் பொது ஒவ்வொன்றும் அதனுடைய பாதியுடன் இணைந்து 46 வரும், 23 ம் 24 ம் அதே போன்று இணைந்தால் என்ன நடக்கும் எதோ ஒன்று மிச்சமிருக்கும், ஒன்று விடு படும், இது சாதாரண 2 ம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு கூட தெரியும், இந்த சாதாரண சிந்தனை கூட இல்லாமல் அவசர அவசரமாக கேட்கப்படும் இந்த கேள்விகள் அறியாமையின் வெளிப்பாடு. ஒரு குரோமோசோம் என்பது பல பகுதிகளை உருவாக்க கூடியது என்பதை ஏனோ அறியவில்லை அவர்.//

comment no.6 in  //குரோமோசோம்களின் எண்ணிக்கை பரிணாமத்தை மெய்பிக்குமா?// பதிவு .

--------
இந்த கேள்வியில் குரோமொசொம்கள் இணைவதை பற்றி மூன்று முறை தெளிவாக கூறியுள்ளார் ,

இருப்பினும் தனது பதிவில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார் ...

//குரோமோசோம்களின் இந்த மாற திறன் பரிணாம வாதிகளின் வாதத்திற்கு தக்க பதிலடியாக இருக்கும் என்பதை அனைவரும் நன்கு அறிவர், இரு குரோமோசோம்களை இணைப்பது என்பது தற்போது உள்ள அறிவியலில் கூட அதி நவீன ஆய்வகங்களை வைத்து கூட சாத்தியமில்லாத ஒன்று அப்படி ஒரு அதிசயத்தை தானாக ஒட்டி கொண்டது என்பது Gluestick வைத்து இரு குச்சிகளை ஓட்டுவது போல ஒட்டிக்கொள்ளும் என்று நினைப்பவர்களுக்கு வேண்டுமானால் சுலபமாக தெரியலாம் அதை நன்கு ஆராய்ந்து அதன் விளைவை அறிந்தவர்கள் அதை ஒரு பொழுதும் ஒப்பு கொள்ள மாட்டார்கள்.//

    குரோமோசோம்கள் mitosis  and meiosis இன் பொது இணைவது சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்று , இதற்கு ஆதாரம் அந்த பதிவை எழுதிய அவரும் , இந்த பதிவை எழுதிய நானும் , படித்துக்கொண்டிருக்கும்  நீங்களும் தான்   .
           meiosis சின் போது crossing over step இல் தந்தையின் குரோமோசோமின் ஒரு பகுதி தாயின் குரோமோசோமின் ஒரு பகுதியை replace செய்கிறது , அப்போது அங்கு Gluestick  தடவி ஒட்டி வைத்தது யார் ?





  இந்த ஒட்டுதல் ,இது போல சாதாரணமாகவும் நடை பெறலாம் ,இல்லை சில அசாதாரண நிகழ்சிகளின் மூலமாகவும் நடைபெறலாம் .

எடுத்துக்காட்டு :

Robertsonian translocation
  (The most frequent forms of Robertsonian translocations are between chromosomes 13 and 14, 14 and 21, and 14 and 15, and occur when the long arms of two acrocentric chromosomes fuse at the centromere and the two short arms are lost [4].)

--------
இருந்தும் அவர் ஏன் தனது பதிவில் chromosomes ஒட்டிக்கொள்ளாது என்று அழுத்திக்கூற வேண்டும் ????

    அப்படி ஓட்டியதால் பிறந்ததே மனித இனம் , அந்த காரணத்தை அறிந்ததால் தான் அவர் அப்படிக்கூறியுள்ளார் என கருதுகிறேன் .

 //  46 குரோமோசோம்கள் கொண்ட ஒரு உயிரினம் 44 குரோமோசோம்கள் கொண்ட ஒரு உயிரினத்திடம் புணருமானால் அந்த விந்து கருமுட்டையுடன் சேராது,  46 குரோமோசோம்கள் கொண்ட மனிதன் 46 குரோமோசோம் கொண்ட துணையுடன் சேர்ந்தால் மட்டுமே இன அபிவிருத்தி நடைபெறும்.//

எளிய வார்த்தைகளில் அருமையாக கூறப்பட்ட கருத்து,

.//இந்த தடையை உருவாக்கியது யார்? பரிணாமம் தேவை எனில் பரிணாமத்தினாலேயே(?!) எதற்காக இந்த தடை உருவாக்கபடவேண்டும் இப்படி இருக்க 48 குரோமோசோம் உள்ள ஒரு விலங்கு 46 குரோமோசோம் உள்ள மனிதனாக மாறி இருப்பனானால் அது எதனுடன் சேர்ந்து இன விருத்தி செய்தது, 46 குரோமோசோம் கொண்ட மாற்ற பட்ட விலங்கு இனப்பெருக்கம் செய்ய அதே 46  குரோமோசோம் கொண்ட அதன் துணை எங்கிருந்து வந்தது, ஆணின் குரோமோசோமும் பெண்ணின் குரோமோசோமும் முழுமையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே சந்ததி பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.//

48 குரோமோசோம் உள்ள ஒரு விலங்கு 46 குரோமோசோம் உள்ள மனிதனாக எப்படி மாறியது ?

மனிதனை தவிர மற்ற குரங்குகளுக்கு  48 குரோமோசோம் , மனிதனுக்கு  46 குரோமோசோம் , மீதி எங்கே ?




   விஞ்ஞானிகளின் மூளையில் நெருஞ்சியை போல குடைந்து கொண்டிருந்த இந்த  கேள்விக்கான பதில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது .




--------------------------------------------------------------------------

குரோமொசொமில் நடுவில் இருப்பது centromere , இருபக்க முடிவில் இருப்பது telomere .  


48 குரோமோசோம் 46 குரோமோசோமாக மாறினால் , ஏதோ இரண்டு குரோமொசொம்கள் ஒட்டிக்கொண்டிருக்கலாம் என பலகாலமாக நம்பி வந்தனர் ,

அப்படி ஒட்டியிருந்தால் …..

அந்த ஒட்டி உருவான குரோமொசொமில் இருபக்க முடிவில் இரு telomere இருப்பது மட்டுமல்லாமல் இரண்டும் இணைந்ததால் உருவான ஒரு telomere நடுவில் காணப்படவேண்டுமல்லவா?










 அப்படி ஒரு குரோமோசோமை கண்டு பிடித்து விட்டார்கள் , மனிதனின் இரண்டாம் எண் குரோமோசோம் முடிவில் இரு telomere மற்றும் நடுவில் ஒரு telomere  , மற்றும் நடுவில் இருக்கும் ஒட்டிய இரு telomere இருபுறமும் இரு centromere இருப்பது உறுதி செய்யப்பட்டது .




இது குறித்தான ஆராய்ச்சி கட்டுரை 2005  லேயே   வெளிவந்து விட்டது . அதுவும் nature ஜர்னலில்   இல்,


இதை இங்கே கீழ் எடை( download ! ) செய்து கொள்ளலாம்,

http://www.bx.psu.edu/miller_lab/dist/chr2.4.pdf
---------------------------------------------------------------------------------------------------

மனிதனும் ape ப்பும்   98.6% ஜீன்  அளவில் ஒத்துப்போயுள்ளனர்.

(This is the conceptual framework within which we interpret the 98.6% or whatever similarity of human and ape. They are really, really similar, almost identical. )

http://personal.uncc.edu/jmarks/interests/aaa/marksaaa99.htm
-------------------------------------------------------------------------------------------------------


தற்போது சீனாவில் ஒரு மனிதனுக்கு 44 குரோமோசோம்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,


   அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் , அவரது அனைத்து ஜீன்களும் நம்மை போன்றது தான் , என்ன அவருக்கு  பேக்கிங் வேறு மாதிரியாக உள்ளது , அனைத்து ஜீன்களும் 46 பைகளில் பேக் பண்ணப்படாமல் 44 பைகளிலேயே திணிக்கப்பட்டு உள்ளது .


  அவருக்கு அதே போல 44 குரோமோசோம்கள் உள்ள ஒரு நல்ல பத்தினி கிடைத்தால் , 44 குரோமோசோம்கள்  கொண்ட மனித இனம் உருவாகும் .

    பின்னால் அவர்கள் இனம் மேன்மேலும் பரிணாமம் அடைந்தால் ........


அப்போதும் ஒரு கார்பன் கூட்டாளி இது சாத்தியமில்லாது , மீதி இரண்டு எங்கே என வாதிடக்கூடும் .


--------------------------------------------------------------------------------------------------


அது எப்படி இன்னொரு பெண்ணுக்கும் அவ்வாறு நேர்வது(44 குரோமோசோம்கள் வருவது ) சாத்தியம் ?


          (கார்பன் கூட்டாளியே மரபு மாற்றம் பற்றி கூறும் போது   "புற ஊதா கதிர் மற்றும் அகசிவப்பு கதிர் மற்றும் கெமிக்கல் பாதிப்பால் சீர்குலைய வாய்ப்புள்ளது", என கூறியுள்ளார் , 


     வெயிலில் இருந்து வரும் அத்தகைய கதிர்கள் அனைத்து உயிர்கள் மீதும் படும் , அனைத்து உயிர்களும் mutation க்கு suseptible தான்   .


       permutation and combination படி பல ஆயிரம் ஆண்டுகளில் ஏதாவது ஒரு இணை இவ்வாறு உருவாவது சாத்தியமே , அதுவும் favorable mutation னை இயற்கை அனுமதிக்கும் , இதை பற்றி பின்னால் காண்போம் . )




கேள்வி பதில் :
-------------------------------------------------------------------------------------------------

 1)மரபில் உள்ள atgc யில் திடிரென ஒரு 'a' வை யாராவது இடையில் இணைதாலோ அல்லது எடுத்தாலோ, பரிணாம வாதிகளின் சிந்தனைப்படி திடிரென வேறொரு உயிரினம் உருவாகிவிடாது, 

    உண்மைதான் ஆனால் பரிணாமம் என்பது ஒரு தொடர் நிகழ்ச்சி , evolution is a continuous process ,அதுவும்  வெறும் nucleotide அளவில் இல்லாமல் குரோமோசோம் அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது , அதுவும் நிரூபிக்கப்பட்டது .

எடுத்துக்காட்டு : chromosomal abberation, ploidy , deletion , duplication, translocation etc.
---------------------------------

2)இது போன்று சில நேரங்களில் சிறு மாற்றங்கள் (புற ஊதா கதிர் மற்றும் அகசிவப்பு கதிர் மற்றும் கெமிக்கல் பாதிப்பால் சீர்குலைய வாய்ப்புள்ளது) ஏற்படும் போது அந்த மரபு மாற்றமான உயிரினத்திற்கு நோய் அல்லது ஊனம் போன்ற ஏதேனும் ஒன்று ஏற்பட்டு விடும், அதையே mutation என்று கூறுவர், அந்த மாற்றமும் அவ்வளவு சீக்கிரம் ஏற்பட்டு விடாது, அந்த மாற்றங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காகவே DNA repair செய்ய கூடிய புரதங்கள் உடலிலேயே உருவாகின்றன, வேறொருவர் மாற்றினாலே அது தவறாகும் என்கிற பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இவைகள் தானாக மாறி மாறி வேறொரு மரபுகளை வடிவமைத்து கொள்கிறது என்பதெல்லாம் எந்த அளவு அறியாமை என்பதை சிந்தித்து பாருங்கள்.



       DNA repair செய்ய கூடிய புரதங்கள் கிட்டத்தட்ட நமது வெள்ளை அணுக்கள் போல தான் , வெள்ளை அணுக்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகின்றன , DNA repair செய்ய கூடிய புரதங்கள் DNA வை  கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகின்றன.வெள்ளை அணுக்களை மீறியும் கிருமிகள் உடலை சீர்குலைக்கலாம் ,DNA repair செய்ய கூடிய புரதங்களை மீறி mutation  ஏற்படலாம் ,



    The DNA repair ability of a cell is vital to the integrity of its genome and thus to its normal functioning and that of the organism. Many genes that were initially shown to influence life span have turned out to be involved in DNA damage repair and protection. Failure to correct molecular lesions in cells that form gametescan introduce mutations into the genomes of the offspring and thus influence the rate of evolution.( Browner, WS; Kahn, AJ; Ziv, E; Reiner, AP; Oshima, J; Cawthon, RM; Hsueh, WC; Cummings, SR. (2004). "The genetics of human longevity". Am J Med 117 (11): 851–60.doi:10.1016/j.amjmed.2004.06.033. PMID 15589490.)



      mutation நடப்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று , அது favorable mutation ஆக  இருந்தால் பரிணாமத்திற்கு  உதவும் என்பதும் நிரூபிக்கப்பட்ட ஒன்று .

(it is now generally thought that the majority of mutations are mildly deleterious, that many are have little effect on an organisms fitness, and that a few can be favorable. As a result of natural selection, unfavorable mutations will typically be eliminated from a population while favorable changes are quickly fixed, and neutral changes accumulate at the rate they are created by mutations.)

http://en.wikipedia.org/wiki/Mutation_rate

------------------------------------
3)ஒரு விலங்கிற்கும் மற்றொரு விலங்கிற்கும் இடையே உள்ள குரோமோசோம் மற்றும் மரபு வித்தியாசம் என்பது அவ்விலங்குகளுக்கு இடையே உள்ள உள், வெளிப்புற வித்தியாசத்தை காண்பிக்குமே தவிர இதிலிருந்து அது வந்தது என்பதற்கு எந்த வகையிலும் ஆதாரமாகாது.

DNA வில் உள்ள conserved region பரிணாமத்தை  மெய்பிக்கின்றது .......

என்று நான் கூறவில்லை ,
--- >Surprising 'ultra-conserved' regions discovered in human genome
--à (Sequence similarities serve as evidence for structural and functional conservation, as well as of evolutionary relationships between the sequences. Consequently, comparative analysis is the primary means by which functional elements are identified.
Among the most highly conserved sequences are the active sites of enzymes and the binding sites of a protein receptors.
Conserved non-coding sequences often harbor cis-regulatory elements which constrain evolution. Some deletions of highly conserved sequences in humans (hCONDELs) and other organisms have been suggested to be a potential cause of the anatomical and behavioral differences between humans and other mammals.[2])

http://en.wikipedia.org/wiki/Conserved_sequence
--------------------------------
4) மனிதனின் தோலும் விலங்கின் தோலும் ஒன்று போல இருக்கின்றன என்பதற்காக மனித தொலிலுருந்து தான் விலங்கின் தொல் உருவானது என்று யாராவது ஆதாரம் கூறுவார்களா? 
இது சம்பந்தமாக பல ஆதாரங்கள் உண்டு , தாங்கள் விரும்பினால் கூற சித்தமாக உள்ளேன்.
--------------------------------------
5) மனிதனும் சிம்பன்ஜியும் ஒரு வழிதோன்றங்கள் என்பதற்கு குரோமோசோம்களை ஆதாரமாக கொள்வார்களானால் மனிதனுக்கு 46  குரோமோசோம்கள் அதேபோல Reevees’s Muntjac  மற்றும்Sable Antelope போன்ற விலங்கினத்திற்கும் 46 குரோமோசோம்கள் தான். ஆக மனிதனும்  அவ்விலங்குகளும் ஒன்று தான் என்று ஆகுமா?

சிறப்பான கேள்வி

 குரோமோசோம்கள்  என்பது மஞ்சப்பை மாதிரி ,ஜீன் என்பது அதில் இருக்கும் பொருட்களை போன்றது , பொருட்கள் தான் நமக்கு தேவை ,
 குரோமோசோம்கள் எண்ணிக்கை ஒன்றாய் இருந்தால் மட்டும் பத்தாது உள்ளே இருக்கும் gene sequencing ஒன்று  போல  இருக்க  வேண்டும் . அத்தகைய ஒன்று போல் உள்ளதற்கான ஆதாரம் மேலே கூறப்பட்டு விட்டது .
------------------------------------

6) 46 குரோமோசோம்கள் கொண்ட ஒரு உயிரினம் 44 குரோமோசோம்கள் கொண்ட ஒரு உயிரினத்திடம் புணருமானால் அந்த விந்து கருமுட்டையுடன் சேராது,  46 குரோமோசோம்கள் கொண்ட மனிதன் 46 குரோமோசோம் கொண்ட துணையுடன் சேர்ந்தால் மட்டுமே இன அபிவிருத்தி நடைபெறும். இந்த தடையை உருவாக்கியது யார்? பரிணாமம் தேவை எனில் பரிணாமத்தினாலேயே(?!) எதற்காக இந்த தடை உருவாக்கபடவேண்டும்.

     அந்த தடை இல்லாவிட்டால் வித்தியாசமான உயிரினங்கள் ஒன்று கூடி அவற்றின் எல்லா gamete ம் இணைந்து ஒரு identity இல்லாத உயிரினம் உருவாகிவிடும் , அதை தடுக்கத்தான் இந்தத்தடை பரிணாமித்தது.

   சிங்கமும் மாடும் கூடி சந்ததி உருவானால் அது புல்லை தின்னுமா? மானை கொல்லுமா  ?
----------------------------------

7) இப்படி இருக்க 48 குரோமோசோம் உள்ள ஒரு விலங்கு 46 குரோமோசோம் உள்ள மனிதனாக மாறி இருப்பனானால் அது எதனுடன் சேர்ந்து இன விருத்தி செய்தது, 46 குரோமோசோம் கொண்ட மாற்ற பட்ட விலங்கு இனப்பெருக்கம் செய்ய அதே 46  குரோமோசோம் கொண்ட அதன் துணை எங்கிருந்து வந்தது,
8) குரோமோசோம்களின் இந்த மாற திறன் பரிணாம வாதிகளின் வாதத்திற்கு தக்க பதிலடியாக இருக்கும் என்பதை அனைவரும் நன்கு அறிவர், இரு குரோமோசோம்களை இணைப்பது என்பது தற்போது உள்ள அறிவியலில் கூட அதி நவீன ஆய்வகங்களை வைத்து கூட சாத்தியமில்லாத ஒன்று அப்படி ஒரு அதிசயத்தை தானாக ஒட்டி கொண்டது என்பது Gluestick வைத்து இரு குச்சிகளை ஓட்டுவது போல ஒட்டிக்கொள்ளும் என்று நினைப்பவர்களுக்கு வேண்டுமானால் சுலபமாக தெரியலாம் அதை நன்கு ஆராய்ந்து அதன் விளைவை அறிந்தவர்கள் அதை ஒரு பொழுதும் ஒப்பு கொள்ள மாட்டார்கள்.

     இந்த இரு கேவிகளுக்கும் பதில் முதலிலேயே கூறியாகிவிட்டது .


------------------------------------------------------------------------------------------------------------
இப்போது  நமக்கு எல்லாம் தெளிவாகிவிட்டது


  மத , இன பேதங்கள் அனைத்தும் நமக்கு instinct behavior அல்ல , நாமாக உருவாக்கிய learned behavior தான் . நமக்கு ஒரே ஜாதி தான் - நாம்  அனைவரும் மனித ஜாதியை சேர்ந்தவர்கள் ,நமக்கு குரங்குகள் தான் முன்னோர்கள் .


அதனால்  யாரும் பிறப்பாலோ , இனத்தாலோ , நிறத்தாலோ உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது .

நமது சந்ததிகளுக்கு இதை தவறாக கற்பிக்காமல் உண்மையான அறிவியலை கற்பிப்போம் .




-------------------------------------------------------------------------------------------------------

பரிணாமம் என்பது உண்மை .நான் சொல்வதை கேட்டால் கேளுங்கள் ...

------------------------------------------------------------------------------------------------------------

வேறு சந்தேகங்களோ , கேள்விகளோ இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

----------------------------------------------------

சேவிங் செய்த குரங்கு Planet of  apes series - முற்றும் (துறந்த சரித்திரம் ).



11 comments:

  1. அருமையான கட்டுரை.. வாழ்த்துக்கள். ஆனால் தங்கள் தமிழை கொஞ்சம் சரி செய்து கொள்ளுங்கள்.. அது என்ன கீழ் எடை (download)

    ReplyDelete
    Replies
    1. thanks sir ,

      கீழ் - down ,எடை load

      Delete
  2. அழகாக விளக்கி உள்ளீர்கள், இருப்பினும் முன்பே இது போன்ற ஆதாரங்கள் என காண்பிக்க பட்ட அனைத்தும் தவிடு போடி ஆகி உள்ளது, ஊசியை எடுத்து மலையை நகர்த்த முயற்சி செய்கிறீர்கள்,

    mutation rating பற்றி குறிப்பிட வில்லை?

    வெவ்வேறு குரோமோசோம் உள்ள விலங்குகள் இணைய மறுக்கும் போது எப்படி மனித இனம் உருவானது என்பதை விளக்க வில்லை.

    புள்ளை தின்னுமா மானை கொல்லுமா என கேட்கும் நீங்கள் அந்த தடை எவ்வாறு உருவானது, அதற்கு பரிணாமத்தில் என்ன வாய்ப்பு இருக்கிறது என்று கூறவே இல்லை?

    பரிணாமம் என்பதே identity பார்க்காத ஒன்று தானே பிறகு எதற்காக identity இல்லாத விலங்கு வருவதை தடை செய்ய வேண்டும்.?

    44 குரோமோசோம் களுடன் உள்ளவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள், ஆனால் அந்த மனிதருக்கு உடல்நலன் சரி இல்லை என படித்திருக்கிறேன்.குரோமோசோம்களின் ஒற்றுமை இதிலிருந்து அது வந்தது என்பதற்கு ஆதாரம் ஆகாது என்று தான் பதிவில் கொடுத்துள்ளேன், மரபு ஒற்றுமை மட்டுமே பார்க்க வேண்டிய ஒன்று,...

    இன்னும் நிறைய இருக்கிறது ...

    ReplyDelete
    Replies
    1. சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் ?

      குரோமொசொமே இணைப்பு சாத்தியமா ?

      நீங்கள் கூறியது சரியா , இல்லை நான் ( அறிவியலில் கூறியிருந்ததை நான் மொழிபெயர்த்து ) கூறியது சரியா ?

      Delete
  3. //அழகாக விளக்கி உள்ளீர்கள், //

    நன்றி சகோதரா :-)

    //இருப்பினும் முன்பே இது போன்ற ஆதாரங்கள் என காண்பிக்க பட்ட அனைத்தும் தவிடு போடி ஆகி உள்ளது, ஊசியை எடுத்து மலையை நகர்த்த முயற்சி செய்கிறீர்கள்,//

    ஏன் முடியாதா ? ஊசியில் உள்ள ஒரு அணு போதும் , அந்த மலையயே இருந்த இடம் தெரியாமல் தகர்த்து விடலாம் .( நல்ல மலைக்கு ஒரு ஊசி ? ).

    //mutation rating பற்றி குறிப்பிட வில்லை?

    வெவ்வேறு குரோமோசோம் உள்ள விலங்குகள் இணைய மறுக்கும் போது எப்படி மனித இனம் உருவானது என்பதை விளக்க வில்லை.

    புள்ளை தின்னுமா மானை கொல்லுமா என கேட்கும் நீங்கள் அந்த தடை எவ்வாறு உருவானது, அதற்கு பரிணாமத்தில் என்ன வாய்ப்பு இருக்கிறது என்று கூறவே இல்லை?

    பரிணாமம் என்பதே identity பார்க்காத ஒன்று தானே பிறகு எதற்காக identity இல்லாத விலங்கு வருவதை தடை செய்ய வேண்டும்.?//

    நான் தங்களின் அந்த குறிப்பிட்ட பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க இந்த பதிவை எழுதினேன் , நீங்கள் கேட்டிற்கும் கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்கிறேன் ( ஆனாலும் இது பல பதிவுகளுக்கு இட்டு செல்லும் ... அது தங்களுக்கும் தெரியும் )

    //44 குரோமோசோம் களுடன் உள்ளவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள், ஆனால் அந்த மனிதருக்கு உடல்நலன் சரி இல்லை என படித்திருக்கிறேன்.//

    உடல் நலம் சரி இல்லை என்று எதை வைத்து கூறுகிறீர்கள் என்று புரியவில்லை ,

    பிறவிக்குறைபாடா?

    http://www.asiahealthcareblog.com/2011/07/03/chinas-44-chromosome-man-may-be-missing-link-between-us-and-the-chimp/

    இந்த லிங்கில் "What’s truly amazing is that the man is functioning normally, and does not appear to have any problems often associated with abnormal numbers of chromosomal pairs, like Down Syndrome."
    இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்கள் , எந்த பிரச்சனயும் இல்லை என்றால் , சாதாரண மனிதன் போன்று உள்ளார் என்று அர்த்தம் , அதற்காக சளி காய்ச்சல் எல்லாம் வராது என்று அர்த்தமல்ல , ஒரு வேலை இருமல் வந்திருக்கலாம் , அந்த செய்தியை நீங்கள் படித்திருக்கக்கூடும் , சுக்கு கசாயம் குடித்தால் சரியாகிவிட வாய்ப்பு உள்ளது .

    //குரோமோசோம்களின் ஒற்றுமை இதிலிருந்து அது வந்தது என்பதற்கு ஆதாரம் ஆகாது என்று தான் பதிவில் கொடுத்துள்ளேன், மரபு ஒற்றுமை மட்டுமே பார்க்க வேண்டிய ஒன்று,...

    இன்னும் நிறைய இருக்கிறது ...//

    பொறுமையாக விவாதிப்போம் ..

    இனி வரும் மாதங்களில் கொஞ்சம் ( நிறையவே ) குடும்ப , படிப்பு , தொழில் வேலைகள் உள்ளது , எனவே பதில் அளிப்பதில் தாமதம் நேரலாம் , மன்னித்தருள்க .

    ReplyDelete
  4. good one Dr.
    //after invention of controlled fire//
    should be
    //after invention of fire control//

    ReplyDelete
    Replies
    1. சாரி சார் , ஆங்கிலத்துல நான் கொஞ்சம் வீக்கு ( தமிழிலும் தான் :-( ) . தவறினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி .

      The ability to control fire was a dramatic change in the habits of early humans.....(en.wikipedia.org/wiki/Fire )

      இதை தான் நான் அப்படி மாற்றி எழுதி விட்டேன்

      Delete
  5. உங்கள் தளத்தில் மின் அஞ்சல் மூலம் பதிவை பெரும் அமைப்பை ஏற்படுத்தவும்.எனக்கு உதவியாக இருக்கும்.வைத்த உடன் எனக்கு அறிவிக்கவும்.arifstar09@gmail.com

    ReplyDelete
    Replies
    1. அதை எவ்வாறு நிறுவுவது என்று தெரியவில்லை சார் , கூடிய விரைவில் அதை செய்கிறேன் , செய்த பின்பு தங்கள் மினஞ்சலுக்கு தெரிவிக்கிறேன் , அது வரை என்னை மன்னித்தருளுங்கள்

      Delete
  6. மிகவும் நல்லதொரு பதிவு .. என்னதான் எடுத்துச் சொன்னாலும், பரிணாம எதிர்ப்புவாதிகள் தாம் பிடித்த முயலுக்கு மூணுக் கால் என்னும் கருத்தை மாற்றிக் கொள்ளப் போவதில்லை ... !!!

    தொடர்ந்து பரிணாமம் குறித்து எழுதுங்கள் சகோ ... !!!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக நிறைய எழுதுகிறேன் நன்றி சகோ

      Delete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...