Monday, March 26, 2012

வரும் .... ஆனா வராது ....


மன்னித்து விடுங்கள் நண்பர்களே ,வேலை பளுவினால் , உங்களுடன் எதையும் பகிர முடியவில்லை .

சோ , உங்களுக்காக  ஒரு சின்ன கார்டூன் , (இத நானே சிந்திச்சேன் ).


அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் ,

ஒரு நல்ல செய்தி , ஒரு கெட்ட செய்தி , 

எத முதலில் சொல்ல ?

கெட்ட செய்தி ....

ரெண்டு மாசம் பூரா நகர முடியாத அளவுக்கு வேலை , பதிவு எழுதுவது கடினம் .

அப்ப நல்ல செய்தி ....  

ரெண்டு மாசம் பூரா நகர முடியாத அளவுக்கு வேலை , பதிவு எழுதுவது கடினம் .( இது உங்களுக்கு நல்ல செய்தி ).

சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடர்வோம் ...

Thursday, March 15, 2012

Dr.Dolittle ட்டும் மொக்க மொபைல் கேமராவும்



face  book ஒரு மயில் பறக்குற போட்டோ போட்டுருந்தாங்க , அதுக்கு பல லைக் , பல share ,


    அடப்பாவிங்களா மயில் பறக்குறத பாத்ததே இல்லையா ?

   போட்டா என்னமோ நல்லா  தான் இருந்திச்சு , அதோட கமென்ட்ட  பாத்தா , பொண்ணுங்க எல்லாம் "ஐயோ so  cute ", பசங்க எல்லாம் "wide angle camera   long shot வச்சு strite drive close  up வச்சு எடுக்க பட்ட அருமையான படம்  ",அப்பிடின்னு பொண்ணுங்க கமென்ட்டுக்கு கீழயே பயங்கரமா அளந்து விட்டுருந்தானுங்க ( அப்ப தானே அந்த புள்ள அதை படிக்கும்ன்னு ஒரு நப்பாசை ---- தம்பி சூது என்னன்னு எங்களுக்கும் தெரியும் ).
............................................................................................................................................

அன்னைக்கு நான் சில முடிவுகள் எடுத்தேன் ....

   நான் தங்கியிருந்த farm சுத்தி மான் ,மயில்ன்னு நிறைய இருக்கும் ,நாமளும் அதே மாதிரி ( அதை விட சூப்பரா) மயில் பறக்குறத போட்டா புடிக்குறோம் , FB போடுறோம் , ஓவர் நைட்டுல பேமஸ் ஆகுறோம் .

நாங்கல்லாம் யாரு ?

மூணாவது படிக்கும் போதே முனிவர் வேஷம் போட்டவங்ய   , தெரியும்ல ?
........................................................................................................................................................
மயில் நல்லா பறக்குது , ஓகே ...

போட்டா புடிக்க நான் இருக்கேன் ,ஓகே ...

எதோ ஒன்னு மிஸ் ஆகுதே ?

ஆங் !கேமரா ......
....................................................................................................................................................
இடம் : கேமரா , மொபைல் விற்கும்  அங்காடி

என்னென்னமோ எடுத்து காமிச்சான் , பன்னண்டு , பதினாறுன்னு மெகா பிக்சல் கணக்கு சொன்னான் , நல்லா தான் இருந்துச்சு ...

விலையை கேட்டேன்   .............................................

சரி மயில் பாட்டுக்கே பறந்துட்டு போவுதுன்னு முடிவுக்கு வந்தேன் .

கடைக்காரன் : சார் பேசாம இந்த கேமரா போன் வாங்கிக்குங்க அஞ்சு மெகா பிக்சல் கேமிராவுல போட்டா புடிக்கலாம் , பாட்டு கேக்கலாம் , கேம்ஸ் ஆடலாம் , போன் பேசலாம் , அலாரம் வைக்கலாம் , காப்பி குடிக்கலாம் , கல்யாணம் பண்ணலாம் .....

நான் : மயில் பறக்குறத போட்டா புடிக்கலாமா ?

 கடைக்காரன் : மயில் என்ன சார் , மஸ்கிட்டோ பறக்குறதயே படம் புடிக்கலாம் .

என்னை படம் புடித்து டெமோ வேறு காட்டினான் .


சார் போட்டாவுல எப்புடி MGR கலருல மின்னுறீங்க பாருங்க என்றான் .

அழகா தான் இருக்கோமோ ?

  ச்சே இருக்காதா பின்னே ?
.....................................................................................................................

   அடுத்த நாள் கிளினிக்குல ஒரு ascites ( தமிழில் வயிறு வீக்க நோய் ?) கேசு நாய் ஒன்னு வந்துச்சு . சரி வித்யாசமா ஒரு கேஸ் வந்துருக்கு , மருத்துவத்துக்கு முன் மருத்துவத்துக்கு பின்னுன்னு வழுக்கதலை add மாதிரி போர்டு போட்டு பட்டய கெளப்பிட வேண்டியதுதான்னு   முடிவு பண்ணி owner அம்மா கிட்ட நாய  போஸ்  குடுக்க சொன்னேன்  .

பந்தாவா போஸ்  குடுக்க அது என்ன பாவனாவா ?

நானும் போட்ட புடிக்கிற பட்டன அமுக்குனேன்,

அது மெல்ல போட்டா புடிக்கிறதுகுள்ளார ,நாய் நாலு தடவ சாபிட்டுடுச்சு, மூணு தடவ பாத்ரூம் போயிடுச்சு .

புது கேமரா இல்லையா , அப்பிடிதான் இருக்கும் . பழக பழக எல்லாம் சரியா போயிடும் ( அவ்வ்வ்வ் ).


............................................................................................................................

அந்த பொன்னான நாளும் வந்தது , காட்டுக்குள்ளார இருக்குற அந்த farm மூணு நாள் டூட்டி போட்டாங்க .


அஞ்சு மெகா பிக்சல் கேமரா ...

சொய்ங்க்னு மயில் பறக்க ...

டைமிங்கா அத நான் போட்டா புடிக்க .....

அத FB அப்லோட் பண்ண ...

பொண்ணுங்க லைக்கோ லைக்கா குடுக்க ...

ஒரே நாளில் பேமஸ் + தாய்மார்கள் ஆதரவு ....
தேர்தல் ....
முதல்வர் ....
பிரதமர் ......

க்கா ….க்கா ...சதக்ப்ளிச்

நல்ல வேலை.
ஜஸ்ட்டு மிஸ்ஸு ,

காக்கையின்  கழிவு கனவை கலைத்த சோகத்துடன்  அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன் .
............................................................................................................................
   farm வேலை எல்லாம் முடித்து விட்டு , சாயங்காலம் கையில் கையில் கேமராவோட ( மொபைல் என்று வாசிக்க ) போட்டா புடிக்க கிளம்பினேன் .கொஞ்சம் லேட்டா போயிட்டேன் போல , எல்லா மயிலும் மரத்துல செட்டில் ஆகி தூங்க ஆரம்பிச்சுடுச்சுங்க .






விடுவனா ?

மயிலே மயிலே போட்டா புடிக்கணும் . பறந்து போ’ ன்னா போகாதுங்க .

நாமதான் மரத்த ஆட்டி விடனும் !!! 

ஆட்டி விட்டேன் .....

எல்லா மயிலும் பரப்பிக்கிட்டு பறக்க ஆரம்பிச்சுங்க .

க்ளிக் .... பட்டன அமுக்கி பத்து நிமிஷம் கழிச்சு இந்த சத்தம் வந்துச்சு .
அதுக்குள்ளே   மயிலுங்க எல்லாம் வேற மரத்துல செட்டில் ஆயிடுச்சுங்க .

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ... கடைசியா போட்டா புடிச்சோம்ல ... வரலாற்றில்  இடம் பிடிக்க போகும் அந்த போட்டா தங்கள் பார்வைக்கு ...


சத்தியமா  இது மயிலு தாங்க ...

அட நம்புங்க ...

அரிதின் அரிதாக grey  horn  bill ஒன்றையும் படம் பிடித்துள்ளேன் ,

  அதோ அந்த மரத்தின் உச்சியில்  ஒன்று பறந்து கொண்டிருக்கிறதே  , அதே தான் .

என்னது தெரியலையா ?

சீக்கிரம் நேத்ராலயாவுக்கு  கிளம்புங்க .கடைய மூடிற போறாய்ங்க .
................................................................................................................................
இதெல்லாம் வேலைக்காவதுன்னு நான் ஒரு முடிவுக்கு வந்தேன் .


அனிமல்ஸ்சே தான் படம் புடிக்கனுமா ? ( பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ?) , அனிமல்ஸ நாமளே கற்பனை பண்ணி பாக்கலாமே ?

எப்புடி ?

இப்புடி .....
கலைக்கண்ணோடு பாருங்கள் மரமும் ஒட்டகசிவிங்கியாய் தெரியும் .
......................................
எல்லாம் இந்த ஓட்ட போனால வந்தது 



Monday, March 12, 2012

ஏழாம் அறிவு


அறிவு என்பது இன்னது என்று நாம் வகை படுத்துவதில் தவறு செய்து விட்டோம் என்றே சில நேரம் எண்ணத்தோன்றுகிறது .

மனிதனுக்கு ஆறு அறிவாம் ....

அதை இன்னும் எந்த ஐந்து அறிவு நாயும் ஒத்துக்கொண்டதில்லை என்று ஒரு கவிஞன் சொன்னது நினைவுக்கு வருகிறது .
 .............................................................................................................................................................................................
உண்மை தான் ....

 சில செய்கைகளை வைத்துப்பார்க்கும்  போது அறிவில் குறைந்த(தாக நாம் கருதும்உயிரினங்கள் , சிந்திக்கும் திறன் அற்றதாகவே தோன்றுகிறது .

எடுத்துக்காட்டு : கண்ணாடியை பார்த்து சண்டைக்கு போகும்  விலங்கு .






கண்ணாடிக்கும் காற்றுக்கும் வித்யாசம் தெரியாமல் , கண்ணாடியில் முட்டியபடி அதை கடக்க நினைக்கும் பறவை , பூச்சி .


இருப்பினும் நாமும் குழந்தை பருவத்தில் இது போன்று கண்ணாடியில் நமது உருவத்தை கண்டு ஏமாந்தவர்கள் தான் .



நமக்கு இந்தசமயங்களில் learned behaviour தான் கைகொடுக்கிறது .

இருப்பினும் நமது மூதாதையர்களும் ( சிம்பன்சி ) தனது உருவத்தை கண்ணாடியில் பார்த்து அறியும் திறன் பெற்றவர்கள் .



.............................................................................................................................................................

நானும் இந்த ஐந்து ,ஆறு... அறிவு வரிசையில் நம்பிக்கை கொண்டிருந்தேன் ....

அந்தக்காட்சியை காணும் வரை .

சித்தர்களுக்கு மட்டுமே கைவரப் பெற்றதாக நாம் நம்பும் சில செயல்களை என் கண் முன்னே அரங்கேற்றின சில ஐந்தறிவு ஜீவன்கள் .

அந்த நிகழ்ச்சியை பகிர்வதற்கு முன்னர் வரலாற்று சிறப்பு மிக்க சில நிகழ்சிகளை பகிர்ந்து கொள்ளலாம் .
.............................................................................................................................

நம்மை விட மிருகங்கள் நுண்ணறிவு பெற்றவை , அவற்றை பற்றி இந்த பதிவில் சொல்லி இருக்கிறேன் .

............................................

   இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் Rupert Sheldrake  நடத்திய ஆராய்ச்சியில் மிருகங்களுக்கு டெலிபதி அறிவு இருப்பதாக கண்டுபிடித்து உள்ளார் ( இவை செடிகளுக்கு இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது ) .

   உங்கள் வீட்டு நாய் உங்கள் மேல் வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தினால் உங்கள் மேல் எண்ணத்தினால் ஒரு பிணைப்பை ஏற்படுத்தி உங்களை அதன் எண்ணத்தோடு பிணைத்து வைத்துள்ளது ,

   நீங்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் விஷயத்தை உங்கள் மனைவிக்கு தொலைபேசியில் தெரிவிக்கும் முன்னரே உங்கள் நாய் அதை உணர்ந்து உங்களுக்காக வாசற்படியில் காத்திருக்க ஆரம்பிக்குமாம் .


நீங்கள் மெளனமாக குடுக்கும் கட்டளைகளை அவை புரிந்து கொள்ளும்.

 (As reported in the Journal of the Society for Psychical Research (July 1998), a telephone survey of 200 households in Northern California conducted by Sheldrake found 132 of the households surveyed had pets.  45% of dog owners claimed their animal knew in advance when a member of the household was on the way home, compared with 37% of cat owners, and around 20% of these pets were said to react more than 10 minutes in advance.  The survey indicated 46% of dog owners and 41% of cat owners stated their pets respond to their thoughts or silent commands. )



   சுனாமி வருவதை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கை செய்த உயிரினங்களை   பற்றி நீங்கள் படித்திருக்கக்கூடும் .

   உங்கள் செல்லபிராணி உங்களுக்கு வரும் கான்சர் நோயையோ , வலிப்பு வாதம் போன்ற நோய்களையோ முன்கூட்டியே உணரும் சக்தி படித்தவை .



   நாம் ஐந்தறிவு உள்ளதாக   கருதும் இதே நாய் தான் ,ஆப்பில் துண்டு மூச்சுக்குழாயில் சிக்கி மூச்சுத்திணறி இறக்க இருந்தவரை நெஞ்சின் மேல் குதித்து முதலுதவி செய்து காப்பாற்றியது என்பதை நீங்கள் நம்புவீர்களா ?

   கண்காணாத தேசத்தில் வீட்டிலிருந்து ஆயிரம் மைல்கள் தள்ளி ,தனித்து விடப்பட்ட நாய் ஒன்று சரியாக தனது வீட்டை அடையாளம் கண்டு பிடித்து வீட்டிற்கு  திரும்பிய கதையை நம்புவீர்களா ?

..................................................................................
  ஆஸ்கார் என்று ஒரு செல்லப்பூனை ஒன்று தோசா மருத்துவரின் மருத்துவமனையில் வளர்ந்து வந்தது (மருத்துவரின் பெயர் . David M. Dosa, M.D., a geriatrician and associate professor of medicine at Brown University ) .

  அந்த பூனை, மருத்துவர்கள் தினமும் ரவுண்ட்ஸ் வருவதைப்போல மருத்துவமனையை தினமும் சுற்றி வந்தது .ஆனால்  அதன் செய்கை சாதாரண மருத்துவர்களை போல அல்லாமல் வித்யாசமாக இருந்தது .

   சில நோயாளிகளிடம் மட்டும் அது அதிக பாசத்துடன் இருப்பதை அவர் கவனித்தார் ,
அதுவும் அந்த பூனை தனி கவனம் செலுத்திய அந்த நோயாளிகள் சில மணி நேரங்களில் இறைவனடி சேர்ந்தனர் .அதுவும் அவர்களின் கடைசி நிமிஷங்களை துல்லியமாக அறிந்தது போல அவர்களுடனே அந்த பூனை செலவிட்டது .



    ஒரு முறை அல்ல இரு முறை அல்ல இருபத்தி ஐந்து   மரணங்களை துல்லியமாக கணித்தது  அந்த பூனை .அந்த பூனையின் இருப்பை விரும்பாமல் கதவை சாத்தினாலும் அந்த அறைக்கதவை வெளியில் நின்று பிராண்டியபடி  இருக்குமாம் ( உனக்கு சங்குதாண்டி என சொல்லாமல் சொல்லுமாம் ).



அது இறப்பிற்கு முன்னால் வெளிப்படும் சில pheromone களை அறியும் திறன் பெற்றிருக்கலாம்  . இந்த துறையில் இன்னும் கவனம் செலுத்தினால் உயிர் என்பது என்ன என நாம் அறியக்கூடும் .


.....................................................................................................................................................
எனக்கு நேர்ந்த அனுபவம் :

நான் வேலை செய்யும் ஒரு பண்ணையில் சில சமயம் சில மாடுகள் நோய்வாய்பட்டு படுத்தபடுக்கையாகி விடும் .

அதில் பல  மாடுகள் நாங்கள் வழங்கும் மருத்துவத்தினால் பிழைத்துக்கொள்ளும் , ஆனால் சில மாடுகள் என்ன வைத்தியம் பார்த்தாலும் இறந்து விடும் .

அப்படி இறக்கப்போகும் பசுக்களை சக பசுக்கள் அடையாளம் கண்டுகொள்வது போல தோன்றுகிறது , நான்கு முறை இது போன்ற காட்சியை நான் கண்டு உள்ளேன் .

......................................................................................................................................................

         இவ்வுலகத்திலிருந்து விடைபெறப்போகும் தனது தோழியை பசுக்கள் சூழ்ந்து கொண்டு அதை ஆசுவாசப்படுதுகின்றன , சிறிது நேரத்தில்  அதன் உயிர் மெல்ல அதன் உடலை விட்டு பிரிகிறது .




அதன் உடலை அப்புறப்படுத்தும் போதும் துக்கம் தாளாமல் வாசல் வரை வந்து வழியனுப்புகின்றன .


அவற்றிற்கு பிரிவின் துயரம் ,எனக்கு எனது மருத்துவத்தை மீறியும் உயிர் பிரிந்த தோல்வியின் வலி இருந்தாலும் , இவற்றின் இந்த செய்கை அன்று இரவின் தூக்கத்தை தின்றது என்னவோ உண்மை .

..................................................................................................................................................................
பிரிவின் துயரம் நமக்கு மட்டும் தான் சொந்தமா என்ன ?



Related Posts Plugin for WordPress, Blogger...