Tuesday, January 31, 2012

சும்மா இருப்பதே சுகம்


சம்பாரிக்கிறவன் "சம்பாரி " , அப்போ சும்மா   இருக்குறவன் "சோம்பேறி " ( இந்த "றி" தானே வரும் ?) .

ஆங்கிலத்தில் lazy fellow ( shoe  "லேஸ்" அவுந்து shoe  " " ன்னு இளிச்சா கூட , அதை சரிசெய்யாததால் "லேசீ " பெல்லோன்னு கூப்புடுறாங்க ). 

இந்த உலகம் , ஒன்றும் அறியாத அப்பாவிகளான சோம்பேறிகளை சாதா சோம்பேறி , வாழைபழ சோம்பேறி , சோம்பேறி மூக்கன் என பலவாறு வகை படுத்தி உள்ளது .

சோம்பேறிகளை உலகம் திட்டலாம் , ஆனா எல்லாம் தெரிஞ்ச என் அப்பாவே என்னை சோம்பேறின்னு திட்டிட்டாரு . :-(

நான் அப்புடி என்ன பண்ணிட்டேன் ?

train போய்கிட்டு இருந்தம்போது லைட் சுட்ச off பண்ண சொன்னாரு , நான் சுவிட்ச் கால் பக்கத்துல இருந்ததால , காலால off பண்ணுனேன் , இது ஒரு குத்தமா ?

சோம்பேறிகள் என்றால் சோமபானம் குடித்து விட்டு குப்புற படுத்து தூங்குபவர்கள் மட்டும் தான் உங்கள் கண்ணுக்கு தெரிவார்கள் , 

ஆனால் சோம்பேறிகளால தான் இந்த உலகமே உருவாசுன்னா அது மிகை அல்ல .உலகின் ஒவ்வொரு புது idea வும் சோம்பேறிகளாலேயே கண்டுபிடிக்க படுகிறது,எந்தரிச்சு போய் Tv அமத்த கஷ்டப்பட்டதால தான் remote கண்டுபிடிச்சாங்க .கற்காலத்துல நடந்து போக கஷ்டபட்டதுனால தான் குதிரை மேல போக ஆரம்பிச்சாங்க , அடுத்த category சோம்பேறிகள் சக்கரம் கண்டுபிடுச்சு , வண்டி கண்டுபிடிச்சு , இப்ப கார் வரை கண்டுபிடிச்சுட்டாங்க .

நீங்க உண்மையான உழைப்பாளியா இருந்தா கடல்ல நீந்தி போக வேண்டியது தானே , ஏன் கப்பல்ல போறீங்க ?


evolution நடந்ததே சோம்பேறி த்தனத்தாலதான்  ,

தரையில் போட்டியை சமாளிக்க முடியாத பல்லிகள் பறக்க ஆரம்பித்தன ,
சந்ததிய சுமக்க சோம்பேறித்தனம் பட்டதால தான் ஆண் பெண் பிரிவே உருவானது .

நீங்க உண்மையான உழைப்பாளியா இருந்தா உங்க ஆடையை நீங்களே நெய்துகொள்ள வேண்டியது தானே , உங்க அரிசிய நீங்களே பயிர் பண்ண வேண்டியது தானே ?

சோம்பேறிகள் தான் "நான் எனக்கு எளிதாக படுகிற ஆடை நெய்தலை செய்கிறேன் , நீ உனக்கு எளிதாக படுகிற வயல் வேலையை செய் ", என்று சமுதாய அமைப்பை உருவாக்கினார்கள் .

சோம்பேறிகள் தான் "நீ வீட்டுல புள்ளைங்கள பாத்துக்க , நான் போய் வெளி வேலை செய்ரேன்னு ," குடும்ப அமைப்பை உருவாக்கினாங்க .

சோம்பேறிகள் தான் உலகிலேயே உண்மையின் புதல்வர்கள் .

வெறும் உண்மையை பேசிகிட்டு இருந்தால் யோசிச்சு கஷ்டப்பட தேவை இல்லை ,

ஒருத்தரு உங்ககிட்ட உங்களோட பேர கேக்குறாரு , நீங்க அவருகிட்ட உங்களோட பேரு டக்லஸ் அண்ணேன்னு பொய் சொல்றீங்க ன்னு வச்சுக்குவோம் , அதுக்கப்புறம் அவரு உங்கள தூக்கத்துல டக்லஸ் அண்ணேன்னு கூப்பிட்டா கூட நம்பள தான் கூபிடுராருன்னு , தூக்கத்துல கூட விழிப்பா இருந்து கரெக்டா எந்திரிக்கனும் .வேற யாரவது அவரு முன்னாடி  உங்களோட உண்மையான பேரை சொல்லி கூப்பிட்டா கூட , அது என்னோட இன்னொரு பேருன்னு சொல்லி சமாளிக்கணும் .

சோ , உண்மையை உள்ளவாறு கூறிவிட்டால் இவ்ளோ கஷ்டம் தேவையில்லை .

இதனால் தாங்கள் கூற விரும்புவது ?
 
யோசிச்சு கஷ்டப்பட கஷ்டப்படுற சோம்பேறிகள் தான் உண்மையயே பேசுவார்கள் .

உலகில் உள்ள ஒவ்வொரு உண்மையானவனும் ஒரு வகையில் சோம்பேறி தான்

இனி யாராவது உங்களை சோம்பேறின்னு திட்டினா நெஞ்சை நிமித்தி பெருமையா சொல்லுங்க ," ஆமாம் நான் சோம்பேறிதான் " என்று ( அப்பாவா இருந்தா மட்டும்  விட்டுருங்க ).


சும்மா இருப்பதே சுகம்..............

Monday, January 23, 2012

தானம் குடுத்த பறவையை பல்லை பிடுங்கி பார்க்காதே


கண் தெரியாத மாற்று திறநாளிகள் யானையை அடையாளம் கண்ட கதை தெரியும் தானே?

அத அப்புடியே mind  வச்சுக்குங்க , பின்னாடி use ஆகும் .

அம்மணமா போற ஊர்ல Darwin முத முதல்ல கோமணம் கட்டுனாரு .

நாம எல்லோரும் காத்து வாங்கிகிட்டு போகும் பொது இவன் மட்டும் எப்புடி கவர் பண்ணிட்டு போகலாம்னு எல்லாருக்கும் ஒரே காண்டு .

Darwin  தன்னோட தியரிய 1859 வெளியிட்டு , " எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி ", ன்னு மக்கள் முன்னாடி பாவமா நின்னாரு

மக்கள் : நீ சொல்றதுக்கு என்னடா ஆதாரம் ?

 Darwin : finches பறவை இருக்குங்க .

மக்கள் : செல்லாது செல்லாது .

Richard oven : தாத்தா நா பாத்தேன் .

மக்கள் : என்றா கண்ணு பாத்த?

 Richard ஓவன்: இந்த Archaeopteryx fossil பறவை  மாதிரியே இருக்கு பாருங்க , இதுலேருந்து தான் பறவைங்க எல்லாம் வந்துச்சு .


Darvin theory publish ஆன அடுத்த வருஷம் Archaeopteryx  இன்  fossilai கண்டுபிடித்தார்கள் .

மக்கள் கொஞ்ச கொஞ்சமாக evolution நம்ப ஆரம்பித்தனர் .

யானை கதைல வரும்  குருடர்கள் போல்  , நம் அப்போது அறிவியலின் வெளிச்சம் படாமல் குருடர்கள் போல ஆதாரங்களை ( யானையை ) தடவி தடவி தேடிக்கொண்டு இருந்தோம் .

அப்போது தான் பறவை மாதிரி ஒருத்தன் கிடைச்சுட்டான்னு ஜேர்மனிக்காரன்   ( Richard oven ) அவுங்க  ஜேர்மனி மொழியில முதல் பறவைன்னு பேரு வச்சாங்க (named by Hermann von Meyer ).

(இந்த உயிரினத்துக்கு ஜெர்மனில் "யுர்வோகெல் (Urvogel)" என்று பெயர் சூட்டினார்கள். இதற்கு "முதல் பறவை" என்று அர்த்தம். )

சிவப்பு  கலர்ல  இருப்பதெல்லாம்  இங்கிருந்து  எடுக்கப்பட்டது

நாள் செல்ல செல்ல அறிவியல் ஆதவனின் கதிர்கள் விழ விழ மக்களின் அறிவுக்கண் திறந்து , மக்களுக்கு கண்தெரிய ஆரம்பித்தது .

அப்ப தான் மக்களுக்கு இவன் முதல் பறவை இல்லை , பறவை போல இறக்கை கொண்ட பல்லி   என்று உணர்ந்து இவனுக்கு புராண ( பழங்கால ) இறகு என்று பேர் வைத்தனர்.

 (ஆங்கிலத்தில் இதற்கு "அர்கீயாப்டெரிக்ஸ் (Archaeopteryx)" என்று பெயர் சூட்டினார்கள். இந்த பெயர் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு "பழங்கால இறகு (Ancient wing or feather)" என்று அர்த்தம். )

இது ஆங்கில பேர் இல்லை , scientific name .

(ஆக, டைனாசர்களின் தன்மைகளும் பறவைகளின் தன்மைகளும் ஒருசேர கலந்திருந்ததால், உலகின் முதல் பறவை டைனாசர்களில் இருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டுமென்று நம்பப்பட்டது. அதற்கு ஆதாரமாக அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது

டார்வினின் புத்தகம் வெளியாகி இரண்டு ஆண்டுகளில் நடந்த இந்த நிகழ்வு மிகப்பெரிய பாதிப்பை அறிவியல் உலகில் நிகழ்த்தியது. உயிரினங்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக வேறொன்றாக மாறுகின்றன என்று டார்வின் சொன்னது சரிதான் என்று நம்பப்பட்டது

சிறிய அளவிலான டைனாசர்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக (தொடக்க நிலை பறவையான) அர்கீயாப்டெரிக்ஸ்சாக மாறி பின்னர் அவற்றிலிருந்து பறவைகள் வந்தன என்று பரிணாமம் விளக்கப்பட்டது

பரிணாம கோட்பாட்டிற்கு என்ன ஆதாரம் என்று கேட்டவர்களுக்கு, இதோ ஆதாரம் என்று அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது

மொத்தத்தில், உலகின் முதல் பறவையாகவும், பரிணாம கோட்பாட்டிற்கான வலிமையான ஆதாரமாகவும் அர்கீயாப்டெரிக்ஸ் கொண்டாடப்பட்டது  

எப்படி காலங்கள் செல்லச் செல்ல பரிணாமத்தின் மற்ற உயிரினப்படிம ஆதாரங்கள் ஒன்றுமில்லாமல் சிதைந்தனவோ அதுப்போலவே அர்கீயாப்டெரிக்ஸ்சின் நிலையும் ஆனது.

கடந்த சிலபல ஆண்டுகளாகவே மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது அர்கீயாப்டெரிக்ஸ். இதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து கண்டுப்பிடிக்கபடும் (அர்கீயாப்டெரிக்ஸ் போன்ற) இறகுகள் கொண்ட டைனாசர்களின் (feathered dinosaurs) உயிரினப்படிமங்கள். இறகுகள் இருந்தாலும் இவை பறக்க தகுதி இல்லாதவை. குறிப்பாக சீனாவில் இருந்து மட்டும் மிக அதிக அளவிலான 'இறகுகள் கொண்ட டைசானர்' படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  )

சரிதான் .

இப்ப சில உண்மைகள் :

அப்பவே இவன Saurischia (lizard-hipped dinosaurs)  ஆர்டர்ல சேத்துட்டாங்க.

அதாவது இவன் ஒரு பல்லி இடுப்பு கொண்ட டைனோசார் .

இருந்தாலும் இவன் பறக்க கூடியவன்னு  ஒரு சாரார்  நம்பிக்கிட்டு இருந்தனர் .

சில gliding models வச்சு பார்த்தும் , சீனாவில் கிடைத்த Archaeopteryx  போன்ற இறக்கை கொண்ட பல்லியினை ஒப்பிட்டு பாத்தும்  இவனுக்கு பறக்க தெரியாது , மரத்தை  விட்டு மரத்திற்கு  காத்தில் சறுக்க ( gliding)தான் தெரியும் என முடிவுக்கு வந்தனர்  .

இதை பற்றி மேலும் அறிய,

இவன் ஏன்  முதல் பறவை இல்லை ?

இவனிடம் பறவைகளுக்கான  பண்பை விட பல்லியின் பண்புகளே நிறைய இருந்தன .

பறவையின்  பண்புகள் :

1)இறக்கை

2)பறவை போன்ற அலகு

 ( ஆனால் அதில் பல் இருந்தது , இருப்பினும் சில பறவைகளுக்கு இப்போதும் பல் உண்டு ,
எடுத்து காட்டு : வாத்து


--                                அப்பாடா தலைப்பை பிடிச்சாச்சு  )

3)wish bone.


பல்லியின் பண்புகள் :


1)அலகு ( பறவைகளுக்கு அலகு epidermis layer ஆல் மூடியிருக்கும் , இவனுக்கு அப்படி இல்லை )

2)பல்லியை போன்ற பெரிய பாதங்கள் ( big toe )

3)நீண்ட வால்

3)இறக்கையில் மூன்று விரல்கள்

4)இன்னும் அனடாமிகாலா நிறைய ஆதாரங்கள் .

இவற்றை ஆதாரமாக கொண்டு ஒரு முடிவுக்கு வந்தனர் ,
என்ன முடிவு ?

Archaeopteryx no longer first bird - Matt Kaplan, Nature news, 27th July 2011.
இனி (உலகின்) முதல் பறவையல்ல அர்கீயாப்டெரிக்ஸ் - (Extract from the original quote of) Matt Kaplan, Nature news, 27th July 2011.
An icon knocked from its perch - Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.
ஒரு முக்கிய சின்னம் (அர்கீயாப்டெரிக்ஸ்தன்னுடைய இருப்பிடத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டது - (extract from the original quote of) Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.

கடைசியாக  நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் :

இவனோட பேரு முதல் பறவை கிடையாது , இவனோட பேரு "புராண / பழமையான சிறகு ".
இவன் பறவை அல்ல , பறவை உருவான பரிணாம படிக்கட்டில் ஒரு முக்கிய படி
அவ்ளோதான் .பறவை மாதிரியான நிறைய fossil கண்டுபிடித்து  விட்டார்கள்.

பின்னர் ஏன் இவனுக்கு இவளோ முக்கியத்துவம் ?

darvin theory வெளியிட்ட அடுத்த வருடமே , அவர் கருத்துக்கு வலு சேர்ப்பது போல இவன் கண்டு பிடிக்க பட்டதினால் தான் , athukku பிறகு நிறைய கண்டு பிடித்து விட்டார்கள் .

BYE BYE BIRDIE ......now ur relatives are Dinos ...அப்புடின்னு நாட்டாமை தீர்ப்ப மாத்தி 

 சொல்லிட்டாரு . 

Wednesday, January 18, 2012

வாட்சன் - ரொம்ப நல்லவன்


உங்களுக்கு கொலைப்பசி , சாபுடலாம்ன்னு போனா ஒருத்தன் கட்டயால அடிக்க வரான் ,

நிம்மதியா சாப்புட முடியுமா ?

ச்சே கொரங்கு மாதிரி கன்னத்துல பை (cheek pouche ) இருந்தா , அதுல பதுக்கி வச்சுக்கிட்டு பின்னாடி சாப்டலாம் இல்ல .

இந்த டெக்னிக்க பல பேர் பாலோ பண்றாங்க .

ஆடு ,மாடு .மான்கள் எல்லாத்துக்கும் காடு நிறைய ஆபத்து , அதுனால வேக வேகமாக சாப்டுட்டு , பாதுகாப்பான இடத்துக்கு போய் உட்கார்ந்து பொறுமையாக சாப்பிட்ட உணவை அசை போடும் .

அது எப்புடி அசை போடுது ?

குரங்கு chipmunks போன்றவை cheek pouches  வச்சுருக்குரத போல , அசை போடுவன தனது உணவுக்குழாயினை( oesophagus ) மாற்றியமைத்து ( அது ஒரு பெரிய கதை ) RUMEN , RETICULUM  போன்ற பைகளை உருவாக்கியது .
வேக வேகமாக சாப்பிட்ட உணவு தற்காலிகமாக  RETICULUM  தில் சேமித்து வைத்திருந்து , regurgitation மூலம் வாய்க்கு கொண்டு வந்து அசை போடும் .

புல்லில் cellulose உள்ளது , அதை செரிக்க வைக்க cellulase தேவை , அந்த enzyme  நுண்ணுயிரிகளிடம் உள்ளது ,

அப்ப மாடு எப்படி புல்ல   செரிக்க வைக்குது ?

rumen உள்ள நுண்ணியிரிகளின் துணையுடன் செரிக்க வைக்குது .

கோழியில பாத்துருப்பீங்க , நிறைய தானியம் போட்டா , வேக வேகமாக தின்னு கழுத்துல பதுக்கி வைக்கும் . பறவைகள் கிட்டேயும் cheek pouches மாதிரி ஒரு அமைப்பு இருக்கு, அதுக்கு பேரு crop ,இதுவும் உணவுக்குழாயின் ( oesophagus ) ஒரு உருமாற்றம் தான் .

அது எப்புடி அசை போடும் ? அதுக்கு தான் பல்லே கிடையாதே ?

கோழி சாப்புடும் போது உத்து பாத்தீங்கனா அது சில கல்லையும்  சேத்து விழுங்குவதை காணலாம் .

அந்த கல்லின் துணை கொண்டு தனது சதை வயிறான ( muscular stomach ) gizzard இல் ( கிப்லேட் சாப்டுருக்கீங்களா? அதுல கடிப்பதற்கு கடினமான ஒரு பகுதி இருக்குமே அதுதான்  gizzard ) தானியங்களை அரைத்து செரிக்க வைக்கும்

சரி இப்ப வாட்சனுக்கு வருவோம் ,
யார் இவன் ?
இவன் செய்த குற்றம் என்ன  ?

இவன் உண்மையிலயே ரொம்ப நல்லவன் , ஒரு பாவமும் அறியாதவன் , பறவைகளிலேயே இவன் ஒரு சைவம் ( மதம் இல்லை , vegiterian ) , இவன் தான் பறவைகளின் பரிணாமத்தின் ஒரு முக்கிய ஆதாரம் .

எப்புடி ?

http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post.html

இந்த பதிவில் நான் கூறியிருந்த படி Archaeopteryx  ,( it is  not the  first bird - note the Hierarchy order of the list which i have shown - "first bird " term itself a misleading one ) Confuciusornis போன்ற  டினோசாருக்கு கையில் விரல்கள் , வாயில் பல் (Confuciusornis  க்கு பல் இல்லை )போன்ற பல்லியின் பண்புகள் மிச்சம் இருந்தன ,

ஆனால் நம்ம வாட்சனுக்கு சின்ன வயசில் கையில் ( ரெக்கையில்) விரல்கள் இருக்கும் ( note antogeny recaptulates phylogeny   ). 

இவன் ஒரு வாழும் fossil .

வாட்சன் பற்றி சில சந்தேகங்களுக்கு பதில் (-கேள்விகள் கர்டசி 
1.மற்ற பறவைகளில், அவை உண்ணும் உணவுகள் gizzard எனப்படும் இரப்பையில் உடைக்கப்பட்டு செரிமானம் நடக்கின்றது. ஆனால் வாட்சின்களிலோ, இவற்றினுடைய பெரிய தொண்டைப்பையில் (Crop) உணவு செரிமானம் நடக்கின்றதுஇது அறிவியல்ரீதியாக மிகவும் ஆச்சர்யமான விசயமாகும்.

வாட்சன் ஒரு சைவன் , அதை rumen digestion போல crop இல் செரிக்க வைக்கிறான் ( நுண்ணுயிரிகள் துணையோடு - crop இல் எல்லா பறவைகளுக்கும் இது சாதரணமாக நடக்க கூடிய ஒன்று தான் , என்ன, இவனுக்கு இது தான் செரிமானத்தில் முக்கிய பகுதி ) இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை .


2.நம்மை வியப்பில் ஆழ்த்தும் மற்றொரு தகவல், இந்த பறவைகள் தங்களது தொண்டைப்பையில் உணவுகளை நிறுத்திவைக்கும் நேரம்தான். திரவ உணவுகளை சுமார் 18 மணி நேரங்கள் வரையும், திட உணவுகளை சுமார் 1-2 நாட்கள் வரையும் நிறுத்திவைக்கின்றன. உலகில் வேறெந்த பறவைக்கும் இப்படியான தன்மை கிடையாது.

ஏன்னா  microbial fermentation ( நொதித்தல் ) பொறுமையாகத்தான் நடக்கும் .அசைவ உண்ணிகள் வேகமாக செரித்து விடும் புரத உணவை உண்ணுபவை , ஆனால்  cellulose  செரிக்க நேரமாகும் .

3. பாதி அறைத்த நிலையில் தொண்டைப்பையில் உள்ள உணவுகளை மேலே கொண்டுவந்து தங்கள் குஞ்சுகளுக்கு உணவாகக் கொடுக்கின்றன இந்த பறவைகள். வாட்சின்களின் உணவில் ஏதேனும் நச்சுப் பொருட்கள் இருந்தால் அவை தொண்டைப்பையில் உள்ள திரவங்களால் நீக்கப்பட்டு தூய்மையான உணவுகளே குஞ்சுகளுக்கு செலுத்தப்படுகின்றன.

இது சாதரணமா பல பறவைகளில் நடப்பது தான்
 எடுத்து காட்டு :புறா
அதுவும் புறா ,flemingo மனிதர்களை போல குஞ்சுகளுக்கு பால் ஊட்டும் (crop milk ) .4. வியப்புக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல இருக்கக்கூடிய மற்றொரு தகவல், வாட்சின்களுடைய தொண்டைப்பையும் அதன் தன்மைகளும் கால்நடைகளை ஒத்திருக்கின்றன என்பதுதான். ஆம், மாடு போன்ற கால்நடைகளும் இப்படியான செரிமான மண்டலத்தையே கொண்டிருக்கின்றன
பதில் சொல்லியாச்சு
இது ஒன்னும் எனக்கு வியப்பளிக்க வில்லை ,  cellulose செரிக்கனும்னா அப்புடி தான் இருந்தாகணும் .

5 இவை எந்த உயிரினத்திலிருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்கும்?

இது எல்லா பறவைகளை போல டைனோசாரில் இருந்து தான் வந்தது , இதன் நெருங்கிய உறவினன் dove  .

கையில்  விரல் இருப்பது ஒன்னும் அதிசயம் அல்ல, பறவைகளுக்கு மூன்று விரல் உண்டு  ,


 

(Digits

The digits or ‘fingers’ of a bird's wing are also reduced in number to three. In the embryonic stage, there is a predisposition of five or possibly six digits, which reveals something about the number of fingers in the ancestors of modern birds (Kaiser 2007).
Remaining are the 1st digit: alula or thumb wing and the 2st digit (large or index finger) and a rudimentary part of the 3rd digit (middle finger).

Alula

The alula (thumb wing) consists of one phalanx (occasionally two, sometimes even with a nail in some bird species). The alula is present in all birds except the penguins, where it is fused to the carpomatacarpus. It is a freely movable digit with a few small feathers attached. The function of the alula is not yet fully understood. Ornithologists suggest that one function among others is in the landing because it can make a change in the airflow and turbulence along the wing edge. The alula articulates to the carpometacarpus near the wrist. 
There has been discussion about whether the alula is really a thumb or an index finger remaining after an evolutionary adaptation. Recent genetic research has shown that the alula is a real thumb and the other two the 'index finger' and 'middle finger'. The outer two fingers are lost (Kaiser 2007).
2nd and 3rd finger
The 2nd digit consists of a flattened first phalanx and the last phalanx.
Next to the first joint of the 2nd digit sits the rudimentary phalanx of the 3rd finger. It is functionally merged with the 2nd finger and plays no independent role in the function of the wing. In penguins it is incorporated in the phalanx of the 2nd finger.
The second, last phalanx of the 2nd finger has a groove that holds the last primary. The remaining primaries are attached to the first phalanx and the carpometacarpus.)

வாட்சன் ,ஈமு போன்ற பறவைகளுக்கு கையில் விறல் evolution இன் ஆதாரமாக வெளியே தெரியுது , அவ்ளோ தான்.
இதோ ஈமுவின் விரல் ,

Related Posts Plugin for WordPress, Blogger...