Wednesday, January 11, 2012

கற்றது வெட்னரி -3 .சாவடிக்கிராய்ங்களே என்னைய


இடம் Mvc B mess :

நானும் எனது நண்பனும் பம்மிய படி உணவை விழுங்கலாமா வேணாமா என்று யோசித்த படி உட்காந்திருக்க ,எதிரில் கோழியின் கால் எலும்பில் ஏதேனும் சதை மிச்சம் இருக்கிறதா இல்லையா என்று ஆழ்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்  சீனியர். இப்படி எதோ ஒரு ஜந்து செய்வதை  national geography சேனலில் பார்த்திருக்கிறோமே ,என நான் கொலை பசியிலும் எனது நியுரானை நிண்டிக்கொண்டு இருந்தேன் .


எனது நியுரான் கடுப்பாகி ,முதலில் எனக்கு சோறு போடுடா என காதை  அடைத்து வேலை நிறுத்தம் செய்தது . நானும் அதற்கேற்ப வாயில் ஒரு 'கவளம் ' ghee rice தினித்தேன் .

சடாரென்று நிமிர்ந்தான் சீனியர்

 சீனியர் : எந்த ஊருடா நீ?

நான் : (வாயில் சோற்றை ஒரு ஓரமாக ஒதுக்கி விட்டு ) பழனி சார்

 சீனியர் : பழனினா ? எங்க ? bus stand  தங்கியிருக்கியா ?

நான் : இல்ல சார்  , ஆயக்குடி

 சீனியர்  :  ஆயக்குடில எங்க , ரோட்டல தங்கியிருக்கியா ?

நான்: இல்ல சார் , மூணாவது குறுக்கு தெருவுல நாலாவது வீடு .

 சீனியர்  : அப்புடி புரியிற மாதிரி சொல்லு ....

பின்னர் அவனது பார்வை நண்பனை நோக்கி திரும்பியது

 சீனியர்  : எந்த ஊருடா நீ?

நண்பன் : வேலூரு .

 சீனியர் : வேலூர்னாஎங்க ? bus stand  தங்கியிருக்கியா ?

நண்பன் :முதல்ல  உங்களுக்கு வேலூர் எங்க இருக்குன்னு தெரியுமா ?


வாயில் வைத்திருந்த சாதம் சிதற சிரித்தேன்.

சிரிச்சா உடம்புக்கு நல்லதுன்னு எந்த நாய் சொன்னுச்சு  ?

சீனியர்: எங்க இப்ப சிரி பாப்போம் ? சிரிடா .... சிரிடான்னா ....

திமிராய் பதில் சொன்ன நண்பனை விட ,சீனியர் பட்ட அவமானத்தை சிரிப்பால் இரட்டிப்பாக்கிய எனக்கு இரு மடங்கு அடி அதிகமாக விழுந்தது   .

பழுத்து கிடந்த கன்னத்தை தடவிக்கொடுத்த படி அன்று இரவு உறங்கிப்போனேன்.

இந்த வாய் இருக்கே இதுனால நான் பட்ட அடிகள் கொஞ்சமா நஞ்சமா.

அடுத்த நாள் வகுப்பில்

வகுப்புல எல்லோரும் சந்தோசமா உட்காந்திருக்க , ஒருத்தன் மட்டும் பைல்ஸ் வந்த பன்னியாட்டம் உர்ர்ன்னு உட்காந்து இருந்தான் . என்னோட கெரகம் நான் அவன் பக்கத்துல போய் உட்கார்ந்தேன் ,

நான் காலைல மோசன் போகாம கூட இருந்துடுவேன் , ஆனா என்னால பேசாம இருக்க முடியாது ,

அது என்னன்னே தெரியல சனி பகவானுக்கு என்னோட நாக்குன்னா ரொம்ப இஷ்ட்டம் , சனி என்னோட நாக்குல எப்பவுமே நடனம் ஆடிக்கிட்டே இருப்பாரு ,( அன்னைக்கு கொஞ்சம் ஓவராவே ஆடிட்டாரு   ).

நான் அவனிடம் லைட்டா பேச்சு குடுத்தேன் ...

நண்பா ஏன் உர்ர்ன்னு இருக்க , உன்னையும் அந்த சீனியர் நாய்ங்க அடிசுட்டானுங்களா ? கவலைப்படாத கம்ப்ளைன் குடுத்து அவனுங்கள கதற விட்டுரலாம் .

அவன் பதிலுக்கு பேசவே இல்ல , திரும்பவும் உர்ர்ன்னு  ஒரு பார்வை பாத்தான்.

நான் அவுனுக்கு confirm பைல்ஸ்  தான் என முடிவுக்கு வந்தேன் .

பின்னர் எனது அறையில்  என்னோட நண்பர்கள் இருவரும் என்னிடம் ," ஏன்டா அந்த சீனியர் கிட்ட அவ்ளோ நேரம் என்ன குசு குசுன்னு பேசிகிட்டு இருந்த ?" என்று கேட்டனர் .

என்னது சீனியரா ? என அலறியபடி நண்பர்கள் இருவரையும்  பார்த்தேன் .
ஆமாண்டா போன வருஷம் பெயில் ஆகி நம்மோட படிக்குராண்டா அவன்.
திரும்பவும் சொந்த செலவுல சூனியம் வச்சுகிடேனே என எண்ணியபடி ,இனியாவது தங்கள் ஆட்டத்தை குறைத்துக்கொள்ள கூடாதா ,என சனி பகவானிடம் மன்றாடி வேண்டிக்கொண்டேன் . அவர் என்னை நோக்கி மந்தகாசமாக ஒரு புன்னகையை வீசினார்  .


அன்று இரவு ,Mvc B mess :

ஒரு பக்கம் சீனியர்கள் ,எங்க பசங்களுக்குஅந்திமாலை சந்தி சாய’ன்னு ஆரம்பிக்கிற வெட்னரி oath , சொல்லிக்” குடுத்துகிட்டு !இருந்தாங்க  .

நானோ முடியை கலைத்து விட்டபடி , வாயை ஒரு புறம் கோணி வைத்து கொண்டு ( மாறுவேசம் போடுராராம் ) தலையை கவிழ்த்தியபடி சாப்பாடு வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தேன்  .முடியை மாத்திய என்னால் முழியை மாத்த முடியவில்லை . மாட்டினேன் வசமாக  .

மச்சி அவன் தான்டா  என என்னை அடையாளம் கட்டினான் பைல்ஸ் வந்த பன்னி.

காட்டு யானைக்கு கைலி கட்டி விட்டது  போல தோற்றம் அளித்த ஒருவன் என் முன்னாடி வந்து நின்றான்.

காட்டு யானை சீனியர் : என்னது கம்ப்ளைன்ட் பண்ணிடுவியா ?
தெரியும்ல காலேஜே என் பின்னாடி .

நான் எச்சிலை விழுங்கியவாறு மனசுக்குள்ளேயே " எல்லோருக்கும் பின்னாடி அவுங்க பெடக்சு தானே இருக்கும் " என நினைதேன் .

 எனது இரண்டாவது  உள் மனம்  இந்த ரணகலதுளையும் உனக்கு காமடி கேக்குதா , ஒழுங்கா நெஞ்சை நிமித்தி மிதி வாங்குற வழிய பாரு  என்று அறிவுறுத்தியது .

அடி வாங்க ரெடி ஆனேன் , அப்போது..........................


இறுதி ஆண்டு சீனியர் ஒருவர் என்ட்ரி கொடுத்தார் ,
அவரை கண்டவுடன் காட்டு யானையின் முகத்தில் கலவர ரேகைகள் ,

இறுதி ஆண்டு சீனியர் : என்னடா சின்ன பையனை புடிச்சி மிரட்டுறீங்களா ?

 காட்டு யானை : அய்யயோ அப்புடி எல்லாம் ஒன்னும் இல்ல சார், சும்மா பேர் கேட்டுகிட்டு இருந்தோம்.

இறுதி ஆண்டு சீனியர் : சரி சரி அவன அனுப்பி வை .
தப்பித்த சந்தோஷத்தில் அவர் பின்னால் பம்மியபடி சென்றேன் .

மெஸ் பையனிடம் இரண்டு பிளேட்டு சாப்பாடு சொல்லி விட்டு டேபிளில் அமர்ந்தோம் .
பேச ஆரம்பித்தார் !
பேசினார் !!!
பேசிக்கொண்டே இருந்தார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ....................

காதுக்குளே கூஊஊஊஊ ன்னு ஒரு சத்தம் மட்டும் தான் ஒலித்தது.

நான்  மனசுக்குள்ளேயே " டேய் இதுக்கு நான் அடியே வாங்கி இருப்பேன்டா , சாவடிக்கிறான்களே என்னைய , டேய் காட்டு யான,  உன் கண்ணுல கலவரத்த பாத்தப்பயே பொறி தட்டுச்சுடா எனக்கு "  .

நச்சு வாயன் கிட்ட இருந்து தப்பிச்சு நாற வாயன் கிட்ட வந்து மாட்டிகிட்டோமே……
என் விதியை நொந்த படி ,காதில் கையை விட்டு குடைந்து கொண்டு அறைக்கு திரும்பினேன் .

டேய் இங்க வா என கூப்பிட்டார் ஒரு சீனியர் , அவரை  சுற்றி மலங்க மலங்க விழித்த படி காட்சியளித்தனர் எனது நண்பர்கள் ,

அங்கே சீனியர்கள் ,எல்லோர்க்கும் அசைமென்ட் டாபிக் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள் .

எனக்கு கிடைத்த தலைப்பு " ஜில்லுன்னு காத்து , ஜன்னல சாத்து".

 அன்று இரவு ஒரு கதாசிரியன் உருவாகிக்கொண்டு இருப்பதை அறியாமல் சென்னை ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தது.

3 comments:

  1. எனக்கு என்னோட வாழ்க்கையில பிடிக்காத ஒரே பகுதி கல்லூரி வாழ்க்கைதான். ஆனால், இந்த மாதிரி விஷயங்கள் எனக்கும், என்னோட நண்பர்களுக்கும் நடந்தது இந்த கட்டுரையை படிச்சதும் ஞாபகம் வந்தது! சிரிச்சிக்கிட்டே இத நண்பர்கள் கூட ஷேர் பண்ணிக்கிட்டேன். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு என்னோட வாழ்க்கையில பிடிச்சது பகுதி கல்லூரி வாழ்க்கைதான். thanks annae

      Delete
  2. இந்த சீனியருங்க வளைச்சு , வளைச்சு அடிக்கிறாங்கப்பா... ஆனாலும் ஒரு தடவை நானும் எனது நண்பனும் எனது மூன்று சீனியர்களை பொரட்டி எடுத்தது என் வாழ் நாள் சாதனை!

    ReplyDelete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...