Sunday, January 15, 2012

புல்லு குடுத்தா பாலு குடுக்கும் உன்னால முடியாது தம்பி .


கிருஷ்ணரும் சரி ஏசுவும் சரி தங்கள் வாழ்நாளில் பெரும் பகுதியை மாடுகளோடு செலவிட்டு இருந்தார்கள் .


ராமராஜன்ல  இருந்து தலைவர் ரஜினிகாந்த் வரை மாட்டை பற்றி போற்றி நிறைய பேர் பாடி இருக்காங்க .




இப்ப கூட கொல வெறி பாட்டு எப்புடி ஹிட் ஆச்சு , அதுல cowu cowu holy cowu i want u here nowu ன்னு கோமாதாவ புகழ்ந்து பாடினதால தான் .
......................................................................................
ஒரு வீட்டில் மாடு வளர்பதால் என்னென்ன நன்மைகள் ?

புல்லு குடுத்தா பாலு குடுக்கும் :
இந்த காலத்துல ஆளாக்குன அப்பாவ முதியோர் இல்லத்துல சேக்குறது பேசன் ஆயிடிச்சு , ஆனா மாடு அப்படி இல்லை , தனது தாய்மையின் ஒரு பகுதியான பாலை தன்னை வளர்தவனுக்கு தருது.

சாணம் விழுந்தா உரம் பாரு :
மாட்டு சாணம் தான் இப்ப ஹாட் டாபிக், அப்ராட்ல ரசாயன உரம் போட்ட காய்கறி பாத்து ரூவா ன்னா இயற்கை உரம் போட்ட  காய்கறி  நூறு ரூவா .
சும்மாவா நம்ம தாத்தாக்கள் எல்லாம் சாணி போட்டு மெழுகின வீட்ல குடியிருந்தாங்க..(ஒரு தடவ சாணி மெழுகின தரைல தூங்கிட்டு டைல்ஸ் போட்ட தரைல தூங்கி பாருங்க ,  u ll feel the difference )

எருவ எரிச்சா திருநீறு :
திருநீறு மட்டும் இல்லைங்க , கரேண்டே இல்லாத கிராமங்கள்ளையும் விளக்கெரிய வக்கிர அற்புத சக்தி சாணதுக்கு இருக்குங்க ,  biogas plant implant பண்ண வீடுங்கள்ல யாரும் ஆற்காடு வீராசாமிய திட்டுனதா சரித்திரமே கிடையாது.
பேசாம கூடங்குளத்  இழுத்து மூடிட்டு  , மக்களுக்கு மாடுங்கள இலவசமா குடுங்கப்பா , மத்தத மாட்டு டாக்டருங்க பாத்துக்குவாங்க  .

பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய்ப்பாலா நம்பி :
ஒரு லிட்டர் தண்ணி பாட்டிலோட ஒரு லிட்டர் பால் விலை கம்மி ,
இன்னும் நாம நாட்டுல ஊட்ட சத்து குறைவால நிறைய குழைந்தைங்க செத்துகிட்டு இருக்கு ,

நிலாவுல தண்ணி இருக்கா இல்லையான்னு அமெரிக்கா காரன் பாத்துக்குவான் , புள்ளைங்க குடிக்க  பால் இருக்கா இல்லையான்னு முதல்ல பாருங்கப்பா .

1–8 வயது வரை இருக்கும் குழந்தைகள் ரெண்டு கப் பால கட்டாயம் குடிச்சே ஆக வேண்டும் ( daily ICMR  recomendation - 250 gms milk ) , குழைந்தைகள் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் சத்து பாலில் நிறைய இருக்கு.

தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக றப்பது பசுவோட வேலையப்பா:

ஒரு லிட்டர் பால் உற்பத்தி பண்றதுக்கு  மாடு 400 to 500 லிட்டர் ரத்தத்த மடிக்கு சுழற்சி முறையில் அனுப்ப வேண்டியிருக்கு ( இருபது சதவிகித ரத்தம் பாலுக்காக மடிக்கு செல்கிறது ) .

பெத்த தாய்க்கு அடுத்த படியா உங்கள கவனிச்சுக்க மாடு," மாடு மாதிரி " கஷ்ட்டப்படுது , நீங்க என்னன்னா கேரளாவுக்கு அடிமாடா அத அனுப்பிட்டு எல்லோரும் பாரினுக்கு கிளம்பிறீங்க  .

பத்தாயிரம் ரூபா போட்டு pug  நாய வாங்குறதுக்கு  ஒரு நல்ல மாடா வாங்கி வீட்ல வளங்க ( கோபாலபுரதுலயே மாடு வளக்குற பணக்காரங்க இருக்காங்க தெரியுமா ?).மாடு உங்களுக்கு பாலோட சேத்து பாசத்தையும் தருமுங்க .

ஏண்ணே கோவமா இருக்கியா ? ஒரு கப் டீ சாப்ட்டுட்டு  போண்ணே  , வேணுமுன்னா ஒட்டக பால்ல டீ போட்டு தரவா ?

Dr.Dolittle : அதெல்லாம் ஒன்னும் வேணாம் , நல்ல பசும்பாலுல டீ போடுப்பா , மாதா ஊட்டாத பால மாடு ஊட்டும்பா .


‘Happy மாட்டு பொங்கல்நண்பர்களே.

டிஸ்கி : (நன்றி  - ICMR SITE and onlysuperstar site  )

100  கிராமில் பாலில் இருக்கும் ஊட்ட சத்துக்கள்
Nutritional value per 100 g (3.5 oz)
252 kJ (60 kcal)
5.26 g
- Sugars
5.26 g
  - Lactose
5.26 g
3.25 g
1.865 g
0.812 g
0.195 g
3.22 g
0.075 g
0.143 g
0.165 g
0.265 g
- Lysine
0.140 g
0.075 g
0.017 g
0.147 g
0.152 g
- Valine
0.192 g
0.075 g
0.075 g
0.103 g
0.237 g
0.648 g
0.075 g
0.342 g
- Serine
0.107 g
88.32 g
Vitamin A equiv.
28 μg (4%)
0.044 mg (4%)
0.183 mg (15%)
0.44 μg (18%)
40 IU (7%)
113 mg (11%)
10 mg (3%)
143 mg (3%)
43 mg (3%)
100 mL corresponds to 103 g.[58]




6 comments:

  1. என்ன Boss... எங்க தல ராமராஜன் டவுசரோட நிக்கிர ஒரு photo போட்டா கொறைஞ்சா போயிருவீங்க? :)

    ReplyDelete
  2. அரசியல் பேசாதீர்கள் அப்படின்னு போர்டு மாட்டனும் போல இருக்கே! வழக்கம்போல மனசு விட்டு சிரிச்சேன்! மனசு விட்டு பாராட்டுறேன்! சூப்பர் தலைவா!!

    ReplyDelete
  3. அண்ணே இது அரசியல் இல்ல அறிவியல் (அண்ணே நான் உங்க தம்பி மாதிரி , என்ன போய் தலைவான்னு கூப்பிட்டு கிட்டு )

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி டாக்டரே அப்படியே....வோர்ட் verification நீக்குங்கள்

    ReplyDelete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...