Tuesday, January 17, 2012

கற்றது வெட்னரி 5 - நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு


நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு , அவன் கிராஸ் ஆகும் வரை ,

அவன் பெயர் சங்கர சாமி - எங்களுக்கு அவன் ஒரு பயங்கர சாமி.

நாய்க்கு மூக்குல சுண்டி விட்டா ஒரு மாதிரி உர்ர்ன்னு லுக் விடுமே , அதே மாறி இருப்பான் .

ஒரு நல்ல சனிக்கிழமையா பாத்து கையில ரெண்டு Recordடோட
என் அரை கதவை தட்டினான் அவன் ,

டாய் இன்னைக்கு ராதிரிக்குள்ளார இந்த ரெகார்ட எழுதி வை நாளைக்கு வந்து வாங்கிக்குறேன் .

2 நாள் கழித்து:
உன்னோட கையெழுத்து எனக்கு புடிச்சு போச்சு படம் வேற நல்லா வரையிற , இந்த நாலு ரெகார்டையும் எழுதி வை ..

ஒரு வாரம் கழித்து வேறு இரண்டு சீனியர்கள் :.........,,,

ஏண்டா சங்கரனுக்கு மட்டும் தான் ரெகார்ட எழுதுவியா ?
இதையும் எழுது.

நான் : சார் ஒரு வாரத்துல எனக்கு பரீட்சை இருக்கு ........................



பேசாம வாங்கிட்டு வந்து எழுதியிரக்கலாமோ , என்று நினைத்துக்கொண்டே கன்னத்தில் விரல் தடம் ஏதும் பதிந்திருக்கிறதா என்று கண்ணாடியில் பார்த்தேன்,

அப்பாடா பர்சனாலிடிக்கு ஒன்னும் பாதிப்பு இல்லை .

அன்று  இரவு சங்கரசாமி தலைகாணி சைசுக்கு இருந்த பெத்தாலஜி ரெகார்டை என்னிடம் நீட்டினான் ,

நான் அவனிடம் …..

சார் ஏற்கனவே ரெண்டு சார் ரெகார்ட குடுத்துட்டு போய் இருக்காங்க....................................




இந்த முறை பர்சனாலிடிக்கு பயங்கர பாதிப்பு……
;
;
;
இதை இப்படியே விடக்கூடாது , இவனுக்கு எல்லாம் அவன் தான் சரி பட்டு வருவான் ,

அவனை எழுப்ப முடிவு செய்தேன் ,

நீண்ட நாட்களாக  கும்பகர்ணனை போல எனக்குள் தூங்கிக்கொண்டிருந்த டெரர் Dolittle ஒரு வில்லசிரிப்புடன் எழுந்தான் .


சங்கரா உனக்கு இனி சங்கு தாண்டா ....


Dolittle version 2 – the game starts now .

------------------------------------------------------------------------------------

அடுத்த நாள் , எனது dayscholar நண்பனிடம் சங்கரனின் ரெகார்டை குடுத்து , " மச்சி இத உன்னோட வீட்ல வச்சிருடா , நான் கேக்கும் போது தாஇந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும் ", என்று கூறி விட்டு விடுதிக்கு திரும்பினேன் .

-------------------------------------------------------------------------------------------------------------

அன்று இரவு :

ரெகார்டை கேட்ட சங்கரனிடம் ,

" சார் இங்க தான் டேபிள் மேல வச்சுருந்தேன் , எங்க போச்சுன்னே தெரியல ," என்றேன் .


அவன் பதறியபடி , டேய் நாளைக்கு எனக்கு practicals , நல்லா தேடுடா நாயே என்று சீறினான் .

அவன் பேசுமேன்ட்டு ஆட்டம் காண ஆரம்பித்து இருந்தது .

இன்னும் ஒரு மணி நேரத்துல வருவேன் ரெகார்ட் இங்க இருக்கணும் என்று உறுமினான் .

நான் மனசுக்குள்ளயே  நீ என்ன முக்குனாலும் நடக்காதுடா என்றேன் .

ஒரு மணி நேரம் கழித்து அவனது நண்பர்களோடு என் அறைக்குள் நுழைந்தான் ,


எனது பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டது , எனது நண்பர்களின் அறையும் சோதனை இடப்பட்டது .


சங்கரன் கிட்டத்தட்ட அழுது விடுவான் போலிருந்தான் .

என்னிடம் வந்து " தம்பி நல்லா யோசிச்சு பாருடா , இது என்னோட life matter , உனக்கே தெரியும் ஒரு பாடத்துல fail  ஆனாலும் ஒரு வருஷமே போயிரும்டா".

version 2 dolittle சொல்லியும் கேக்காமல் , நான் அந்த காரியத்தை செய்தேன் .

அடுத்தநாள் காலையில்   சங்கரனிடம் அவனது ரெகார்டை குடுத்தேன் .
-------------------------------------------------------------------------------------------------------------

பரீட்சை முடிந்த அடுத்த நாள் இரவு சங்கரன் சரக்கின் வாடை சரீரமெங்கும் வீச , தள்ளாடிய படி தனது நண்பர்களோடு எனது அறைக்கு வந்தான் .

கொத்தாக எனது சட்டையை பிடித்தான்

சொல்றா நாயே , வேணும்ன்னு தானே செஞ்ச .

சொல்றா.......................

என்னால் ஜீரணிக்க முடியாத ஒரு கெட்ட வார்த்தை அவன் வாயில் இருந்து வெளிப்பட்டது .


என்ன நடந்தது என்றே தெரியவில்லை ,


சங்கரனின் கன்னத்தில் எனது கைரேகைகள் ....

-------------------------------------------------------------------------------------------------------------

வீங்கி இருந்த உதடுகள் விம்மியபடி அப்பாவிடம் தொலை பேசியில்
இனிமேலும் என்னால் விடுதியில் இருக்க முடியாது என்றேன் .


அப்பாவின் நண்பர் உதவியோடு சூலை மேட்டில் ஒரு மேன்சனில் குடிபுகுந்தேன் ,

பக்கத்துக்கு அரை அண்ணனின் கணினியில் பல வண்ணப்படங்களை பார்த்தவாறு பொழுதை நன்றாக ஓட்டினேன் .


ஒரு நாள் நண்பன் ஒருவன் ஒரு நல்ல செய்தி சொன்னான் ," மச்சி சங்கரன hostel   விட்டு expel பண்ணிட்டாங்கடா ,"


எப்படி மச்சி?

நம்ம தனா கம்ப்ளைன் பண்ணிட்டான்டா.

சந்தோசமாக மேன்சனில் எனது அறைக்கு திரும்பினேன் .


எனது அறையில் மல்லாக்க படுத்து  விட்டதை வெறித்த படி கால்களை அகற்றி கைலிக்குள் காற்று வாங்கிக்கொண்டு இருந்தான் எனது புது room met   பயங்கர சாமி @ சங்கரசாமி.

2 comments:

  1. ம்... ..நல்லாத்தான் இருக்கு

    ReplyDelete
  2. என்ன ஒரு கொலைவெறி!

    ReplyDelete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...