சிறகில் இருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் தனது கதையை எழுதி செல்கிறது - பேர் தெரியாத கவிஞன்
நாம் உயிருக்கு குடுக்கிற மதிப்பை முடிக்கு குடுப்பது இல்லை.
ஆனா evolution பத்தி படிக்கிறவங்களுக்கு தான் மயிரின் அருமை தெரியும்.
உடம்பிலேயே பெரிய உறுப்பு எது ?
ஈரல் ?
இல்லவே இல்லை ,
பின்னே எது ?
தோல் .
தோல் தான் உங்க உடம்பின் கவசம் .
தோல் பல அடுக்குகளால் ஆனது , அதில் கடைசி இரண்டு அடுக்குகள் இறந்து போன செல்களால் ஆனது.
தோலில் பலது காணப்படும் , என்னென்ன ?
வியர்வை சுரப்பி,மயிர் கால்கள் etc etc...
மயிரும் சிறகும் நெருங்கிய பந்தம் கொண்டவை .
ஆதி காலத்தில் ( அப்போது ஊர்வன உலகை ஆண்டு கொண்டிருந்தன ) பல்லிகளுக்கு எல்லாம் செதில்களே இருந்தன .
நீங்க எப்பவுமே ஊர்ந்து போற மாதிரி ஆண்டவன் உங்களை படைத்தது இருந்தால் என்ன ஆகும் ?
வயித்துல இருக்க தோல் உறிஞ்சு போயிடாது ?
அதுனால் தான் ஊர்வனவற்றிர்க்கு செதில்கள் (உரிந்த பின் செதில்கள் வந்து கொண்டே இருக்கும் )
பின்னர் ஊர்வன பறக்க ஆரம்பித்த பிறகு அவற்றிற்கு செதில்கள் தேவை படவில்லை .
தேவை பட்டது ………………………………………………………………
சிறகுகள் .
சிறகுகள் .
(பாலூட்டிகள் ஊர்வது இல்லை , மேலும் பனி யுகதினால் அதற்கு மயிரும் fur உம் தேவை பட்டன - எடுத்துகாட்டு iceage mamooth யானை ).
(ஊர்வனவற்றிக்கு moulting -தோல் உரிக்கும் பழக்கம் இருக்கு , பறவைகளிலும் moulting உண்டு - சிறகு உதிர்தல் )
சிறகின் தேவை என்ன ?
முதல்ல பறத்தல் : ஏன் தோலோடயே glide பண்ண கூடாதா ?
பறபதற்கு எடை குறைவான சிறகே உகந்தது , தடித்த தோல் கொண்டு சில தூரம் glide செய்வதே பெரிய விஷயம் .( பறவைகள் பறப்பதற்காக தங்களின் உடலமைப்பை மாற்றிய விதம் பெரிய கதை - விரும்பினால் கூற ரெடியா இருக்கேன் )
ரெண்டாவது thermoregulation : வெயில் குளி ரில் இருந்து பாதுகாத்து கொள்ள
(ஏன் வேர்வை மூலம் thermoregulation பண்ணக்கூடாதா ?- பறவைகளுக்கு வேர்வை சுரப்பி இல்ல பாஸ் ).
மூணாவது diving : நீரில் செல்வதற்கு ஏற்றவாறு முளைத்த சிறகுகள் .
சிறகு , மயிர் , செதில்கள் எல்லாமே plecode ( மொட்டு என்று அழைக்கலாமா ? ) என்று ஒரு மொட்டிலிருந்து வளர்ந்தவை .
எளிதாக சொல்ல வேண்டும் என்றால் மொட்டு நீண்டு மயிராகியது , மொட்டு பிரிந்து சிறகாகியது .
நான் ஒரு வரியில இத சொல்லிட்டேன் , ஆனால் சிறகை அடைய பறவைகள் செய்த evolution ,"வா குவாட்டர் கட்டிங் ",படத்தில் சிவா குவாட்டரக்காக பட்ட கஷ்டத்தை விட சிக்கலானது .
முதலில் சிறகு எப்புடி இருக்கும் ? சிறகுகளின் வகைகள் என்ன ?
சிறகு என்பது ஒரு நீண்ட மூங்கில் குச்சியை போன்றது , நடூல பெரிய தண்டு , தண்டில் நிறைய கணுக்கள் , அதில் இருந்து சைடு குச்சிகள், சைடு குச்சிக்கு ரெண்டு பக்கம் இருந்தும் சின்ன சைடு குச்சிகள் .
சிறகுகளில் நிறைய வகை இருக்கு , பறப்பதற்கு உதவும் சிறகு , வாலில் இருக்கும் சிறகு , அழகுக்காக இருக்கும் சிறகு இப்படி பலவாறாக ...
நமக்கு தேவையான சில வகைகள பாப்போம்.
ஒரு நார்மல் சிறகு முந்தி நான் விவரித்து போல இருக்கும் .
குஞ்சுகள் பிறந்த உடனே முளைக்கும் சிறகை பார்த்திருப்பீர்கள் , அது down சிறகு என்று அழைக்கப்படுகிறது , இது குஞ்சுல ( கோழி குஞ்சுல ) மட்டும் அல்லாமல் பெரிய பறவைகள்ளையும் இருக்கும் ( வயிற்றுக்கு பக்கத்தில் ... )
இதன் முக்கிய பங்கு குளிரில் இருந்து பாதுகாப்பது .
சிறகின் evolution:
1.முதலில் மொட்டு நீண்டது .
2.பின்னர் அது பிரிந்து பல filament ஆகியது - இதன் பெயர் proto feather .
( இப்போ அது கிட்டத்தட்ட down feather ஆகிவிட்டது - antogeny phylogeny யை recaptulate செய்கிறது பாருங்கள் ).
3.அதில் கிளைகள் முளைத்தன
இதன் பின்னர் சில பிலமென்ட் கள் கூடி நடு தண்டை உருவாக்கின.
4.இதன் பின்னர் கிளைகளிலிருந்து சைடு கிளைகள் உருவாகி சிறகு முளைத்தது .
என்ன கத விடுறியா ? என்று கவுண்டர் ஸ்டைலில் நீங்க கேட்பது எனக்கு கேட்கிறது .
இப்போ ஆதாரங்களுக்கு வருவோம் ,
amber (பிசின் ) பாடம் (baadam) :
எல்லோரும் ஜுராசிக் பார்க் படம் பார்த்திருப்பீர்கள் , அந்த படத்தின் அடிநாதமே , பல்லிகளின் காலத்தில் அவற்றை கடித்த ஒரு கொசு பிசினில் மாட்டிகொண்டு பாடமாகியிருக்கும் , அதில் இருந்து பல்லியின் DNA வை எடுத்து புது பல்லி செய்வார்கள் .
அதில் பல்லி எலும்புகளை தோண்டி எடுப்பதையும் காட்டுவார்கள் .
இவை எல்லாம் fossil என்று அழைக்கப்படும் .
இதில் பிசின் பாடத்தில் அது உயிரோடு இருந்த காலத்தில் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே அது காணப்படும் .(3d effect).
இது Beipiaosaurus பல்லியோட பாடங்கள் - இதற்கு மொட்டு நீண்டு முதல் stage சிறகு சிறகு போல காணப்பட்டது .
Sinosauropteryx prima - இதற்கு proto feather இருந்தது
Dromaeosaurid (Microraptor) (போன பதிவில் பாத்தோமே -glider ) -இதற்கு கிளைகள் முளைத்த சிறகு
இதில் என்ன ஒரு beauty ன்னா , போன பதிவில் கூறியபடி ,எவ்வாறு நான் கூறிய வரிசையில் கொஞ்ச கொஞ்சமாக gliding இல் இருந்து பறக்க தோன்றியதோ, அதே வரிசையில் இதன் சிறகு வளர்ந்த வரிசையும் இருக்கிறது ( இவற்றை எல்லாம் carbon dating மூலம் வயதை கணக்கிட்டு வரிசை படுத்தினார்கள் ).
இதை விட evolution க்கு என்ன ஆதாரம் வேணும் ?
அடுத்த முறை சிறகு கொண்டு காது குடையும் முன் இவற்றையும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நண்பர்களே.
No comments:
Post a Comment
டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...