நீங்க விரும்பும் பெண்ணுக்கு கண் தெரியாது , அவள் உங்களிடம் வர்ணங்கள் எப்படி இருக்கும் என கேட்கிறாள் , நீங்க அவளுக்கு எப்படி விளக்குவீங்க ?
ரொம்ப கஷ்டமல ?
நம்ப வாலி சார் விளக்குறார் பாருங்க ...
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ , மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ , நினைப்புல
வண்டு வந்து தீண்டுதம்மா , எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கு ஏத்தபடி வண்ணமெல்லாம் மாருதம்மா ..................
chance ஏ இல்லைங்க ...
ஓகே , இப்ப மேட்டர் க்கு வருவோம் ,
ரோஜா சிவப்பு நிறத்துல இருக்கு ,
எப்புடி அது சிவப்பு கலரா இருக்கு ?
அது VIBGYOR ல உள்ள எல்லா நிறத்தையும் உள்வாங்கிகிட்டு சிவப்பு நிறத்த மட்டும் வெளிய விடுது.
அத நம்ம கண்ணு பாக்கும் பொது வெளிய விடுற சிவப்பு மட்டும் தெரிஞ்சு , ரோஜா சிவப்பா காட்சி அளிக்கிறதா நாம நம்புறோம் .
என்னது நம்புறோமா ? அது தானே நிதர்சனம் .
மேல படிங்க சார் .....
ரோஜா உண்மையிலேயே சிவப்பா ?
இதே கேள்விய நாய்கிட்ட கேட்டுருந்தா அதோட பதில் ,
கருப்பு வெள்ளை
( நாய் , மாடு எல்லாம் நிறக்குருடு - மாடுக்கு சிவப்பு கலர் துணிக்கும் , பச்சை கலர் துணிக்கும் வித்யாசம் தெரியாது , எந்த துணிய ஆட்டுனாலும் டென்ஷன் ஆ இருந்தா வந்து முட்டும் ).
அப்ப கலர் உண்மை கிடையாதா ?
கலர் மட்டுமில்லைங்க நீங்க பாக்குற அந்த ரோஜாவே உண்மையானதான்னு எனக்கு ஒரு பெரிய சந்தேகம் ?
எப்புடி டாக்டர் ?
அதே ரோஜாவ பத்தி ஒரு கண் தெரியாத மாற்று திறனாளி கிட்ட கேட்டா , அவரோட பதில் என்னவா இருக்கும் ?
ரோஜா என்பது ஒரு ஸ்பரிசிப்பதர்க்கு மென்மையாகவும் , நல்ல மணத்தோடும் இருக்கும் என்பார் .
பூனை கண்ணா மூடிகிச்சுன்னா உலகமே இருண்டுருச்சுன்னு நினைசுக்குமாம் .
நாம் எல்லோரும் அப்படிதாங்க .
நமது பார்வையில் ஒரு மாதிரியாக தென்படும் ஒரு பொருளை , அது அப்படிதான் இருக்கும் , அது தான் நிதர்சனம் எனும் கருத்தை மாற்றுதிரனாளிகளிடம் திணிக்கின்றோம் .
அவர்களது உலகில் அந்த பொருளின் வர்ணம் , தோற்றம் எல்லாமே வேறு ,
நாங்கள் காணுவது தான் உண்மை , நீ ஊனமானவன் . அதனால் உனக்கு அந்த பொருள் குறைபாடாக தெரிகிறது என்று ஒரு கருத்தை அவர்களிடம் திணிக்கிறீர்கள் .என்ன கொடுமை இது ?.
நீங்கள் பார்க்கும் அதே ரத்த சிவப்பு ரோஜா உங்கள் தம்பிக்கு சற்றே அடர்த்தி குறைவாக சிவப்பு ரோஜாவாக தென்படலாம்.
மாற்று திறனாளிகளுக்கு அது தெரிவதில்லை , அவர்கள் அதை வேறு விதமாக உணர்கிறார்கள் , அவ்வளவுதான் .
நடு இரவில் பவர் போய்விட்டது , டார்ச் லைட்டை எப்படி தேடுவீர்கள் , குழாய் போன்ற ஒரு பொருளை தடவி தடவி தேடுவீர்கள் தானே . ஆனால் வெளிச்சத்தில் அந்த ஸ்பரிசத்தின் அறிவு உங்களுக்கு தேவையில்லை .
கண்ணால் அடையாளம் கண்டு கொள்வீர்கள் .
கண்ணால் அடையாளம் கண்டு கொள்வீர்கள் .
உண்மைய சொல்ல போனா நம்ம கண்ணு total வேஸ்ட்டுங்க .
உங்களால இருட்டுல அடுத்தவன அடையாளம் காண முடியுமா ?
உங்கள யாராவது போக விட்டு பொற மண்டையில அடிச்சா , அடிச்சவன உங்களால அடையாளம் காண முடியுமா ?
உங்கள சுத்தி இருப்பவர்கள உங்களால உணரமுடியுமா ?
இதெல்லாம் யாருனாலையும் முடியாதுன்னு நினைக்காதீங்க ..........
நம்மை விட திறமைசாலிகள் இந்த உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள் .
ஒலிகளை கொண்டு நிறைய மிருகங்கள் பார்க்குது ,
காதினால் பார்க்கும் உயிரினங்கள் பல இருக்கின்றன ,
காதினால் பார்த்து இரையை வேட்டையாடும் அளவுக்கு திறமை கொண்டவர்கள் இவர்கள் , இவற்றை echo location என்று கூறுவார்கள் .
Sperm Whale (இதில் இருந்து தான் குளுகுளு spereceti wax ஐ முன்னர் எடுத்தார்கள் ) and killer whale,Dolphin..
நமது காதினால் உணரமுடியாத அளவு decibal இல் ஒலியை விட்டு , அது பொருட்கள் மேல் பட்டு எதிரொலிப்பதை காதினால் பார்த்து உணரும் சக்தி கொண்டவை இவை .
காதால் மட்டும் தான் பார்க்க முடியுமா ?
அவனுக்கு பாம்புக்காது எனும் சொலவடை ஒன்று உண்டு ( ஏன் ஆம வடை இல்லையா ).அனால் பாம்புக்கு உண்மையிலேயே மொக்க காது , அதுமட்டும் அல்ல பாம்புக்கு கிட்ட பார்வையும் கூட .அப்புறம் எப்புடி அது வேட்டை ஆடுது ?
பாம்பு நாவால் பாக்கும் திறன் பெற்றது .
பாம்புக்கு பிளவுபட்ட இரட்டை நாக்கு , காத்தில் வரும் இரையின் வாடையை மோப்பம் புடிச்சு அத மேல் அன்னதுல இருக்க organ of Jacobson க்கு update பண்ணிகிட்டே இருக்கும் , பிளவு பட்ட நாக்குல எந்த நாக்கு சைடுல அதிக இரை வாடை அடிக்குதோ பாம்பு அந்த பக்கம் நகரும் . (இப்ப புரிஞ்சிருக்குமே , ஏன் பாம்பு நாக்க அடிக்கடி நீட்டுதுன்னு- ஸ்நேக் பாபுஊஊ ..... லபலபலாபா ) .
உங்க உடம்பு சூட்ட வச்சு உங்கள இருட்டுல கூட பாக்கலாம் ( predator , சக்திமான் ல எல்லாம் அந்த ஜந்து கூட பாக்குமே ).அதுக்கு காரணம் infra red rays ,
pit viper பாம்ப கண்ண கட்டி விட்டுட்டாலும் , அது இரையை சரியா வேட்டையாடிவிடும் ,
எப்புடி ?
அது எப்புடி லைட்ட அணைச்ச பின்னாலும் கொசு நம்மள அடையாளம் கண்டு பிடிக்குது ?
நீங்க காத்துல விடுற கார்பன் டை ஆக்சைட ( சுவாசம் மூலமாக விடுற ) மோப்பம் பிடிச்சு கரீட்டா டெங்கு லட்சுமி உங்கள கண்டு பிடிச்சிடும் . உங்கள் உருவத்தை பார்க்க வேண்டிய அவசியம் அதுக்கு கிடையாது .
Artic turn பறவை (இது ஒரு வருஷத்துல உலகத்தயே ரவுண்டு அடிசிடும்ங்க ), Salmon மீன்கள் , சில வகை நுண்ணுயிரிகள் பூமியின் magnetic field ஐயே அடையாளம் (பார்க்க கூடியவை ) காணக்கூடியவை .
ஐம்புலன்களையும் இன்னதுன்னு நாமளா வரையறுத்துகிட்டோம் . ஆனால் ஒவ்வொரு புலனிலும் மற்றொரு புலனுக்கான வல்லமை இருக்கிறது .(ஒன்று தூக்கலாக மற்றொன்று குறைவாக ).
எடுத்து காட்டு ?
கண்ணால பாக்க மட்டும் தான் முடியுமா ?
அப்புறம் ஏன் கண்ண குத்துனா வலிக்கிறது ?
so கண்ணுக்கு தொடு உணர்ச்சியும் உண்டு , ஆனால் தோல் அளவுக்கு இல்லை .
so தேவை படும் பொது தோலால் பார்க்க வைக்கவும் , கண்ணால் உணரவைக்கவும் உயிரினங்களால் முடியும் .
அதை evolution மூலமாக நடக்க வைக்கலாம் , இல்லை ஆறாம் அறிவின் துணை கொண்டும் சாத்தியப்படுத்தலாம் .
இதே உலகில் தான் கண் இல்லாத மாற்று திறனாளி ஒருவர் கைகளை தட்டி ஒலி எழுப்பி , echo location மூலம் பார்க்க கற்றுக்கொண்டார் என்பதை நீங்கள் நம்புவீர்களா ?
இசையை சுவைத்து (உண்மையிலேயே சுவைத்து ) சுருதி தவறினால் இசை கசப்பதாக உணரும் பெண் இருப்பதை நீங்கள் நம்புவீர்களா ?
இப்போது கூறுங்கள் யார் மாற்று திறனாளி ?
நிறைய புது விஷயங்கள் கத்துகிட்டேன். முக்கியமா கொசு நம்மை எப்படி கண்டுபுடிக்குத்துன்னு இத்தனை நாளும் எனக்குத் தெரியாது. நம் உடம்புல இருக்கும் இரத்த வாசனை எப்படியோ கொசுவுக்குப் போகுதுன்னுதான் இத்தனை நாளும் நினைச்சிருந்தேன், இப்பத்தான் உண்மை புரியுது. ஆனாலும், நம்ம கண்ணே வேஸ்டுன்னு நீங்க சொன்னதை ஏத்துக்க முடியல. பத்து நாளைக்கு கண்களை துணியை கட்டிக் கொண்டு இருந்து பாருங்க அப்புறம் விளங்கும்.
ReplyDeleteநன்றி சார் ,
Delete//ஆனாலும், நம்ம கண்ணே வேஸ்டுன்னு நீங்க சொன்னதை ஏத்துக்க முடியல. பத்து நாளைக்கு கண்களை துணியை கட்டிக் கொண்டு இருந்து பாருங்க அப்புறம் விளங்கும்.//
மற்ற உயிரினங்கள் உலகை பார்க்க / உணர உபயோகப்படுத்தும் உறுப்புகளை ஒப்பு நோக்கும் போது நமது கண்கள் வேஸ்ட் எனும் கருத்தை முன்வைத்திருந்தேன் . அந்த வாக்கியம் அந்த இடத்தில மிகையாகத்தான் தோன்றுகிறது .நன்றி