Tuesday, January 31, 2012

சும்மா இருப்பதே சுகம்


சம்பாரிக்கிறவன் "சம்பாரி " , அப்போ சும்மா   இருக்குறவன் "சோம்பேறி " ( இந்த "றி" தானே வரும் ?) .

ஆங்கிலத்தில் lazy fellow ( shoe  "லேஸ்" அவுந்து shoe  " " ன்னு இளிச்சா கூட , அதை சரிசெய்யாததால் "லேசீ " பெல்லோன்னு கூப்புடுறாங்க ). 

இந்த உலகம் , ஒன்றும் அறியாத அப்பாவிகளான சோம்பேறிகளை சாதா சோம்பேறி , வாழைபழ சோம்பேறி , சோம்பேறி மூக்கன் என பலவாறு வகை படுத்தி உள்ளது .

சோம்பேறிகளை உலகம் திட்டலாம் , ஆனா எல்லாம் தெரிஞ்ச என் அப்பாவே என்னை சோம்பேறின்னு திட்டிட்டாரு . :-(

நான் அப்புடி என்ன பண்ணிட்டேன் ?

train போய்கிட்டு இருந்தம்போது லைட் சுட்ச off பண்ண சொன்னாரு , நான் சுவிட்ச் கால் பக்கத்துல இருந்ததால , காலால off பண்ணுனேன் , இது ஒரு குத்தமா ?

சோம்பேறிகள் என்றால் சோமபானம் குடித்து விட்டு குப்புற படுத்து தூங்குபவர்கள் மட்டும் தான் உங்கள் கண்ணுக்கு தெரிவார்கள் , 

ஆனால் சோம்பேறிகளால தான் இந்த உலகமே உருவாசுன்னா அது மிகை அல்ல .



உலகின் ஒவ்வொரு புது idea வும் சோம்பேறிகளாலேயே கண்டுபிடிக்க படுகிறது,



எந்தரிச்சு போய் Tv அமத்த கஷ்டப்பட்டதால தான் remote கண்டுபிடிச்சாங்க .



கற்காலத்துல நடந்து போக கஷ்டபட்டதுனால தான் குதிரை மேல போக ஆரம்பிச்சாங்க , அடுத்த category சோம்பேறிகள் சக்கரம் கண்டுபிடுச்சு , வண்டி கண்டுபிடிச்சு , இப்ப கார் வரை கண்டுபிடிச்சுட்டாங்க .

நீங்க உண்மையான உழைப்பாளியா இருந்தா கடல்ல நீந்தி போக வேண்டியது தானே , ஏன் கப்பல்ல போறீங்க ?


















evolution நடந்ததே சோம்பேறி த்தனத்தாலதான்  ,

தரையில் போட்டியை சமாளிக்க முடியாத பல்லிகள் பறக்க ஆரம்பித்தன ,
சந்ததிய சுமக்க சோம்பேறித்தனம் பட்டதால தான் ஆண் பெண் பிரிவே உருவானது .

நீங்க உண்மையான உழைப்பாளியா இருந்தா உங்க ஆடையை நீங்களே நெய்துகொள்ள வேண்டியது தானே , உங்க அரிசிய நீங்களே பயிர் பண்ண வேண்டியது தானே ?

சோம்பேறிகள் தான் "நான் எனக்கு எளிதாக படுகிற ஆடை நெய்தலை செய்கிறேன் , நீ உனக்கு எளிதாக படுகிற வயல் வேலையை செய் ", என்று சமுதாய அமைப்பை உருவாக்கினார்கள் .

சோம்பேறிகள் தான் "நீ வீட்டுல புள்ளைங்கள பாத்துக்க , நான் போய் வெளி வேலை செய்ரேன்னு ," குடும்ப அமைப்பை உருவாக்கினாங்க .

சோம்பேறிகள் தான் உலகிலேயே உண்மையின் புதல்வர்கள் .

வெறும் உண்மையை பேசிகிட்டு இருந்தால் யோசிச்சு கஷ்டப்பட தேவை இல்லை ,

ஒருத்தரு உங்ககிட்ட உங்களோட பேர கேக்குறாரு , நீங்க அவருகிட்ட உங்களோட பேரு டக்லஸ் அண்ணேன்னு பொய் சொல்றீங்க ன்னு வச்சுக்குவோம் , அதுக்கப்புறம் அவரு உங்கள தூக்கத்துல டக்லஸ் அண்ணேன்னு கூப்பிட்டா கூட நம்பள தான் கூபிடுராருன்னு , தூக்கத்துல கூட விழிப்பா இருந்து கரெக்டா எந்திரிக்கனும் .வேற யாரவது அவரு முன்னாடி  உங்களோட உண்மையான பேரை சொல்லி கூப்பிட்டா கூட , அது என்னோட இன்னொரு பேருன்னு சொல்லி சமாளிக்கணும் .

சோ , உண்மையை உள்ளவாறு கூறிவிட்டால் இவ்ளோ கஷ்டம் தேவையில்லை .

இதனால் தாங்கள் கூற விரும்புவது ?
 
யோசிச்சு கஷ்டப்பட கஷ்டப்படுற சோம்பேறிகள் தான் உண்மையயே பேசுவார்கள் .

உலகில் உள்ள ஒவ்வொரு உண்மையானவனும் ஒரு வகையில் சோம்பேறி தான்

இனி யாராவது உங்களை சோம்பேறின்னு திட்டினா நெஞ்சை நிமித்தி பெருமையா சொல்லுங்க ," ஆமாம் நான் சோம்பேறிதான் " என்று ( அப்பாவா இருந்தா மட்டும்  விட்டுருங்க ).


சும்மா இருப்பதே சுகம்..............

1 comment:

  1. நீங்க உண்மையான உழைப்பாளியா இருந்தா கடல்ல நீந்தி போக வேண்டியது தானே , ஏன் கப்பல்ல போறீங்க ?good question

    ReplyDelete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...