face book ல ஒரு மயில்
பறக்குற போட்டோ போட்டுருந்தாங்க , அதுக்கு
பல லைக் , பல share ,
அடப்பாவிங்களா
மயில் பறக்குறத பாத்ததே இல்லையா ?
போட்டா
என்னமோ நல்லா தான்
இருந்திச்சு , அதோட கமென்ட்ட பாத்தா , பொண்ணுங்க எல்லாம் "ஐயோ so cute ", பசங்க எல்லாம் "wide angle camera ல long shot வச்சு
strite drive ல close up வச்சு
எடுக்க பட்ட அருமையான படம் ",அப்பிடின்னு
பொண்ணுங்க கமென்ட்டுக்கு கீழயே பயங்கரமா அளந்து
விட்டுருந்தானுங்க ( அப்ப தானே அந்த
புள்ள அதை படிக்கும்ன்னு ஒரு
நப்பாசை ---- தம்பி சூது என்னன்னு
எங்களுக்கும் தெரியும் ).
............................................................................................................................................
............................................................................................................................................
அன்னைக்கு
நான் சில முடிவுகள் எடுத்தேன்
....
நான் தங்கியிருந்த farm அ சுத்தி மான் ,மயில்ன்னு நிறைய இருக்கும் ,நாமளும்
அதே மாதிரி ( அதை விட சூப்பரா)
மயில் பறக்குறத போட்டா புடிக்குறோம் , FB ல
போடுறோம் , ஓவர் நைட்டுல பேமஸ்
ஆகுறோம் .
நாங்கல்லாம்
யாரு ?
மூணாவது
படிக்கும் போதே முனிவர் வேஷம்
போட்டவங்ய , தெரியும்ல
?
........................................................................................................................................................
........................................................................................................................................................
மயில் நல்லா பறக்குது , ஓகே
...
போட்டா
புடிக்க நான் இருக்கேன் ,ஓகே
...
எதோ ஒன்னு மிஸ் ஆகுதே
?
ஆங் !கேமரா ......
....................................................................................................................................................
இடம் :
கேமரா , மொபைல் விற்கும் அங்காடி
என்னென்னமோ
எடுத்து காமிச்சான் , பன்னண்டு , பதினாறுன்னு மெகா பிக்சல் கணக்கு
சொன்னான் , நல்லா தான் இருந்துச்சு
...
விலையை
கேட்டேன்
.............................................
சரி மயில் பாட்டுக்கே பறந்துட்டு
போவுதுன்னு முடிவுக்கு வந்தேன் .
கடைக்காரன்
: சார் பேசாம இந்த கேமரா
போன் வாங்கிக்குங்க அஞ்சு மெகா பிக்சல்
கேமிராவுல போட்டா புடிக்கலாம் , பாட்டு
கேக்கலாம் , கேம்ஸ் ஆடலாம் , போன்
பேசலாம் , அலாரம் வைக்கலாம் , காப்பி
குடிக்கலாம் , கல்யாணம் பண்ணலாம் .....
நான் :
மயில் பறக்குறத போட்டா புடிக்கலாமா ?
கடைக்காரன் : மயில் என்ன சார்
, மஸ்கிட்டோ பறக்குறதயே படம் புடிக்கலாம் .
என்னை படம் புடித்து டெமோ
வேறு காட்டினான் .
சார் போட்டாவுல எப்புடி MGR கலருல மின்னுறீங்க பாருங்க என்றான் .
சார் போட்டாவுல எப்புடி MGR கலருல மின்னுறீங்க பாருங்க என்றான் .
அழகா தான் இருக்கோமோ ?
ச்சே இருக்காதா பின்னே ?
.....................................................................................................................
ச்சே இருக்காதா பின்னே ?
.....................................................................................................................
அடுத்த
நாள் கிளினிக்குல ஒரு ascites ( தமிழில் வயிறு வீக்க
நோய் ?) கேசு நாய் ஒன்னு
வந்துச்சு . சரி வித்யாசமா ஒரு
கேஸ் வந்துருக்கு , மருத்துவத்துக்கு முன் மருத்துவத்துக்கு பின்னுன்னு
வழுக்கதலை add மாதிரி போர்டு போட்டு
பட்டய கெளப்பிட வேண்டியதுதான்னு முடிவு
பண்ணி owner அம்மா கிட்ட நாய போஸ் குடுக்க
சொன்னேன் .
பந்தாவா
போஸ் குடுக்க
அது என்ன பாவனாவா ?
நானும்
போட்ட புடிக்கிற பட்டன அமுக்குனேன்,
புது கேமரா இல்லையா , அப்பிடிதான்
இருக்கும் . பழக பழக எல்லாம்
சரியா போயிடும் ( அவ்வ்வ்வ் ).
............................................................................................................................
............................................................................................................................
அந்த பொன்னான நாளும் வந்தது
, காட்டுக்குள்ளார இருக்குற அந்த farm ல மூணு நாள்
டூட்டி போட்டாங்க .
அஞ்சு மெகா பிக்சல் கேமரா
...
சொய்ங்க்னு
மயில் பறக்க ...
டைமிங்கா
அத நான் போட்டா புடிக்க
.....
அத FB ல அப்லோட் பண்ண
...
பொண்ணுங்க
லைக்கோ லைக்கா குடுக்க ...
ஒரே நாளில் பேமஸ் + தாய்மார்கள்
ஆதரவு ....
தேர்தல்
....
முதல்வர்
....
க்கா ….க்கா ...சதக்
… ப்ளிச்
…
நல்ல வேலை.
ஜஸ்ட்டு
மிஸ்ஸு ,
காக்கையின் கழிவு கனவை கலைத்த சோகத்துடன் அந்த
இடத்தை விட்டு நகர்ந்தேன் .
............................................................................................................................
farm ல
வேலை எல்லாம் முடித்து விட்டு
, சாயங்காலம் கையில் கையில் கேமராவோட
( மொபைல் என்று வாசிக்க ) போட்டா
புடிக்க கிளம்பினேன் .கொஞ்சம் லேட்டா போயிட்டேன்
போல , எல்லா மயிலும் மரத்துல
செட்டில் ஆகி தூங்க ஆரம்பிச்சுடுச்சுங்க .
விடுவனா
?
மயிலே மயிலே போட்டா புடிக்கணும்
. பறந்து போ’ ன்னா போகாதுங்க .
நாமதான்
மரத்த ஆட்டி விடனும் !!!
ஆட்டி விட்டேன் .....
எல்லா மயிலும் பரப்பிக்கிட்டு பறக்க
ஆரம்பிச்சுங்க .
க்ளிக்
.... பட்டன அமுக்கி பத்து நிமிஷம்
கழிச்சு இந்த சத்தம் வந்துச்சு
.
அதுக்குள்ளே மயிலுங்க
எல்லாம் வேற மரத்துல செட்டில்
ஆயிடுச்சுங்க .
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி
... கடைசியா போட்டா புடிச்சோம்ல ... வரலாற்றில் இடம்
பிடிக்க போகும் அந்த போட்டா
தங்கள் பார்வைக்கு ...
சத்தியமா இது
மயிலு தாங்க ...
அட நம்புங்க ...
அரிதின் அரிதாக
grey horn bill ஒன்றையும்
படம் பிடித்துள்ளேன் ,
அதோ அந்த மரத்தின் உச்சியில் ஒன்று பறந்து கொண்டிருக்கிறதே , அதே தான் .
அதோ அந்த மரத்தின் உச்சியில் ஒன்று பறந்து கொண்டிருக்கிறதே , அதே தான் .
என்னது
தெரியலையா ?
சீக்கிரம் நேத்ராலயாவுக்கு கிளம்புங்க .கடைய மூடிற போறாய்ங்க .
................................................................................................................................
சீக்கிரம் நேத்ராலயாவுக்கு கிளம்புங்க .கடைய மூடிற போறாய்ங்க .
................................................................................................................................
இதெல்லாம்
வேலைக்காவதுன்னு நான் ஒரு முடிவுக்கு
வந்தேன் .
அனிமல்ஸ்சே தான் படம் புடிக்கனுமா ? ( பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ?) , அனிமல்ஸ நாமளே கற்பனை பண்ணி பாக்கலாமே ?
அனிமல்ஸ்சே தான் படம் புடிக்கனுமா ? ( பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ?) , அனிமல்ஸ நாமளே கற்பனை பண்ணி பாக்கலாமே ?
எப்புடி
?
மயிலே மயிலே! ப்ளீஸ் என் தம்பிக்கு ஒரு போஸ் குடேன்! பாவம்பா அவன்! ப்ளீஸ்! புரிஞ்சிக்கோ! நல்லவங்கள ஆண்டவன்(கேமரா என்று வாசிக்கவும்) சோதிப்பான். ஆனா கைவிட மாட்டான்!
ReplyDeleteகவலைப்படாதீங்க அண்ணே , கூடிய விரைவில் மயக்கம் என்ன தனுஷ் வாங்குன போட்டா புடிக்கிற அவார்ட நாமளும் வாங்குறோம் .
DeleteGreat Dr.DoLittle,பெரிய புகைப்படக் கலைஞர் ஆக வாழ்த்துக்கள்..
ReplyDeleteதங்கள் இ-மெயில் ஐ.டி. யை எனக்கு அனுப்பி வைக்கவும்->madhu.sukhi@gmail.com
ReplyDeleteரொம்ப காமிடியா இருக்குது பதிவு
ReplyDeleteடாக்டரு நல்லவர் தாம்பா! ஆனா இந்த கடைகார பயபுள்ள தான் iphone அப்டீன்னு சைனா ஃபோன தலையில கட்டிட்டான் போல... சரி நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!சத்தியமா டாக்டர நான் மாடு எண்டு சொல்லவே இல்ல!ha ha ha ha ha ha !
ReplyDelete:-) மாடுன்னாலும் நான் நல்ல மாடு அல்லவா , அதை நீங்களே சொல்லிட்டீங்களே .
Deleteஅட சும்மா ஜாலிக்கு பண்ணினண்ணே! கடுப்பாகி மாட்டு ஊசி எடுத்து எனக்கு மாட்டி விட்டுறாதிங்க!
Deleteகவலைப்படாதீங்க ஊசி நல்ல மாட்டுக்கு மட்டும் தான் ( சும்மாச்சுக்கும் )
Deleteதங்களது எழுத்து நடையில் உள்ள நகைச்சுவை இங்கே இலங்கை வரைக்கும் மணக்கிறது. வாழ்த்துக்கள்!
ReplyDeleteபோங்க நீங்க என்னை ரொம்ப புகழ்றீங்க
Deleteஅட உண்மைய சொன்னன் சார்! ரொம்ப வெக்கப்படுறீங்களே!
Delete:-)
DeleteArif .A sir and சமுத்ரா sir -- நன்றி சார்
ReplyDeleteதங்களது எழுத்து நடையில் உள்ள நகைச்சுவை kuwait, மணக்கிறது. வாழ்த்துக்கள்!
ReplyDelete