Sunday, June 7, 2015

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்-இயற்கை நோக்குதல் 5


இந்த பட்டாம்பூச்சி ஏன் தலைகீழா உட்கார்ந்திருக்கு????


எதிரிகள் எப்பவுமே தலையைதான் குறி வச்சு  தாக்கும் . . அதுனால பொய் தலையை மேலே நீட்டிக்கிட்டு , நிஜ தலையை கீழே பாதுகாத்து வச்சுருக்கு இந்த பட்டாம்பூச்சி. 

why because...தலை முக்கியம் அமைச்சரே.

ஆனா, தாவரங்களுக்கு இது போல தலையைக்காப்பாற்றும் தந்திரம் தெரிந்திருக்கவில்லை :(
..........................................................................................................
அது வரை பூமியை ஆண்டு வந்த இருவித்திலை தாவரங்களுக்கு ஒரு வீக்னஸ் இருந்துச்சு. 

அத்தாவரங்களின் வளர்ச்சி நடக்கும் மொட்டுப்பகுதியானது 'பப்பரக்கா'வென்று மேலே நீட்டிக்கொண்டிருந்தது.
மேய்வன, மேலாப்ல மேஞ்சாலே அவை மர்கயா'வாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன‌.


இவ்வாறு பூமியில் மேய்வன பெருகத்தொடங்கிய காலகட்டத்தில் , survivalலுக்காக‌ தாவரங்கள் புதிய ஒரு உத்தியை கண்டுபிடிக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டன.

அடிவாங்குவதற்காகவே அளவெடுத்து செஞ்சது போல, மேய்வன மேய்வதற்காகவே உருவானது தான் ஒருவித்திலை தாவரங்கள்(eg.புற்கள்)அத்தாவரங்களின் வளர்ச்சி நடக்கும் மொட்டுப்பகுதியானது பாதுகாப்பாக கீழே இருக்கும் .

வயதாகி கீழே விழ வேண்டிய இலைகள் மேல் நோக்கிசெல்ல ,அவற்றை மேய்வன மேய்ந்து கொள்ளும். 

எப்பூடி...மேலாப்புல மேயப்பட்டாலும், கீழாப்புல என்றும் இளமை தான் :)

இப்படியாக சமவெளி எங்கும் அத்தாவரங்கள் வியாபிக்கத்தொடங்கியது.

---------------------------------------------------------------------------------------------------
ஹரஹர மஹா தேவஹி...

அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்துல, காடுகளையும் மலைகளையும் ஒரு ராஜாஹ் ஆண்டு வந்தானாம்...அவன் ரொம்ப கொடுமைக்கார ராஜாவாம்.

அவனுடைய கொடுமைஹ‌ளை சஹிக்க முடியாத மஹா உத்தமர் டாக்டர் டூலிட்டில், அவருடைய நெருங்கிய சஹஹ்ருதையரான உங்களையும் அவரோடே கூட்டிண்டு அவனின் எல்லையை விட்டு நீங்கி, அவனது ஆட்சிக்கப்பாலுள்ள‌ சமவெளிக்கு பயணமானாங்களாம்.

ரொம்பதூரம் பசியோட  பயணம் செஞ்ச அவுங்க கண்களுக்கு , அந்தப்புல்வெளியில் சில மான்க‌ள் தென்பட்டுச்சாம்.
''மான் 65''செஞ்சு சாப்ட்டு பசியாரலாம்ன்னு அந்த மான்கள் கிட்ட போனா ...

அந்த மான்க‌ள் எல்லாம் பின்னங்கால் பட்டக்சுல அடிக்க; தாவிக்குதிச்சு ஓடிருச்சுங்களாம்.
                                                                                    


இதுகாலும்  அடர்ந்த காட்டில் மறைந்திருந்து எளிதாய் வேட்டையாடிபழக்கப்பட்ட அவர்களுக்கு இச்சுழல் புதிதாய் இருந்துச்சு. 

மேய்வன எல்லாம் பாய்வனவாய் இருக்குதேன்னு ரொம்ப ஃபீல் பண்ணாங்களாம்.


இங்கு பிழைத்திருப்பதற்கான சாத்தியமே இல்லைன்னு முடிவுக்கு வந்த நண்பனை கையமர்த்திவிட்டு, அச்சூழியலை உற்று நோக்க ஆரம்பித்தார் டூலிட்டில்.

அங்கே...மேதகு டூலிட்டில்....மலை பெற்றெடுத்த நீர், நதியாக சமவெளிதனில் பாயக்கண்டார் . அச்சமவெளியெங்கும் புல்வெளி விரவியிருக்ககண்டார்.
                                                           
                                                                      அங்கே...............
புல் உண்ணும்   பூச்சி கண்டார்...


           அப்பூச்சியை  உண்ணும்  வானம்பாடி கண்டார்...
                                      

                                              தாவியோடும் அணிலைக்கண்டார்...


அவற்றை நாடும் பாம்பு கண்டார்...


பாம்பு நோக்கும் கருடன் கண்டார்...
பல்வகை மிருகம் கண்டார்...


அஞ்சறிவு கொண்ட இதுங்களே இங்க அசால்ட்டா பிழைதிருக்கும் போது ...so called ஆறாவது அறிவுள்ளவன் இங்கே பிழைக்க முடியாதா என்ன ?
---------------------------------------------

மனிதனால் புல்லைத்தின்ன முடியாது..... இங்கே வேட்டையாடவும் கஷ்ட்டமா இருக்கு .

அடர்ந்த காட்டில் பல்வகை மரங்கள் இருந்துச்சு, அங்கே பழமாச்சும் பறிச்சு சாப்டலாம் . இங்க புல்லத்தவிற ஒரு எழவும் இல்லையே.

 வேற என்னத்தத்தான் திங்கிறது ?
'
'
'
'
'

திரும்பவும் இயற்கை நோக்க ஆரம்பித்தார் டூலிட்டில்...
தானியங்கள் !!!!!

புற்கள் , மரங்களைப்போல் பழங்கள் நல்குவதில்லை. ஆனால் அவற்றின் வித்துகள்... சத்துக்கள் நிறம்பியவை. 


ok....
தானியங்களை சாப்டலாம் தான் ... ஆனா அவற்றை ஒவ்வொரு செடியா போய் சேகரிக்க நெம்ப நாழியாவுமே...its practically impossible you know?
.
.
.
திரும்பவும் நோக்கினார் இயற்கையை!
//////////////////
எறும்புகள் தானியங்களை சேர்க்கக்கண்டார், அத்தானியங்கள் நீர் பட்டு முளைக்கக்கண்டார்!!!

ஐடியா !!!! தானியங்களை நாமே விளைவித்தால் என்ன?

இந்த எடத்துல பல வகையான புல் இருக்கு , அதுல வித்தியாச வித்யாசமா தானியம் முளைக்குது . இதுல எத திங்கலாம்??  
'
'
'
அந்த சூழலில் இருந்த அனைத்து தானியத்தையும் புடுங்கினார் டூலிட்டில் . 

இதுக்கு  மேலயும் புடுங்கினா , தன்னை 'பெரிய புடுங்கி', என உலகம் அழைத்துவிடும் என்று அச்சப்பட்ட டூலிட்டில் புடுங்குவதை நிறுத்திவிட்டு ஏற்கனவே  புடிங்கிய தானியங்களை உற்று நோக்கினார்  .


வலது ஓரத்தில் இருந்த அந்த தானியம் , பருமனாகவும் ,அளவில் நிறையவும் இருந்ததால் , அதையே பயிரிடலாம் என முடிவு செய்தார் . 

அந்த தானியத்துக்கு என்ன பெயர் வைப்பது என யோசித்த போது , அவரது கனவுக்கன்னியான அரசியின் பெயரை வைக்கலாம் என முடிவு செய்தார் . ஆனால் விஷயம் வெளியே தெரியாமல்  இருக்க Tacticsaa  "அரிசி" என்று பெயர் வைத்தார் .

இப்படியாக உலகின் முதல் விவசாயம் துடங்கியது .
...............................................................
புது நிலத்தில் முதல் விளைச்சல் மும்தாஜைப்போல் கும்மென இருக்க,அடுத்த விளைச்சல் அசினைப்போல் இளைக்கக்கண்டார்.
///
ஐயையோ... களை மண்டிப்போச்சே... நிலத்தோட சத்து கொறஞ்சிடுச்சே...இப்ப என்ன பண்றது ???

ஒன்னு ...வேற எடத்துல வெவசாயம் செய்யனும் ... இல்லன்னா இதே எடத்துல புது மண்ண போட்டு நிறப்பி வெவசாயம் செய்யனும்.
///
'
'
'
வேற வழியே இல்ல ...நோக்குடா இயற்கையை .

வராகமானது, புதிய பூமியை கோரைப்பற்களுக்கிடையில் மேலே கொண்டு வரக்கண்டார்!

கலப்பையொன்றை செய்து, பலங்கொண்டு களம்கண்டார்.

(யோவ்... வாய் இருக்குங்குறதுக்காக நீ பாட்டுக்கு கத விட்டுட்டே போவ நா கேக்கனுமா?

டங்சனாவாதீங்க பாஸ் ...

காட்டுப்பன்றியின் முக அமைப்பை வைத்து நவீன கலப்பையை நம்ம ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்காங்க . அதோட efficiencyய பாத்து தெரிஞ்சிக்குங்க )

மேலும்...


என்பிலதாம் மண்புழு... குடைந்த வழி வழியே , நிலம் சுவாசிக்கக்கண்டார்


அவைதாம் உழவுக்கு நண்பன் என்று புரிந்துகொண்டார் .

மேலும்....பாய்வன'வாயிருந்த மேய்வன எல்லாம் இப்போ புல்லுக்காக அவுங்கள நாடி வந்துருச்சாம்.

மேய்வன சொத்தென இடும் சாணி  , நிலத்தின் சத்தென அறிந்துகொண்டார்   .
                                   
 அச்சாணியை உழவுக்கு அச்சாணி ஆக்கிக்கொண்டார் .
--------------------------------------------------------------------------------------பயிர்களை அழிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த , பறவைகளும் பூச்சிகளும் துணைபுரியக்கண்டார் . அவற்றையும் தனது நண்பர்களாக  பாவித்தார் .


இப்படியாக "விவசாயம்" எனும் அகிம்சையான வாழியல் முறையை Dolittle உருவாக்கினார் .


-----------------------------------------------------------------------------------

இதான் சார் தமிழன் உருவாக்கிய மருதத்திணை :)கடவுள்வேந்தன் (இந்திரன்)
மக்கள்மள்ளர், ஊரன், மகிழ்நன்,கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
புள்வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா.
விலங்குஎருமை, நீர்நாய்
ஊர்பேரூர், மூதூர்
நீர்ஆற்று நீர், கிணற்று நீர்
பூதாமரை, கழுனீர்
மரம்காஞ்சி, வஞ்சி, மருதம்

தொழில்விழாச்செய்தல், வயற்களைகட்டல், நெல் அரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல்

-------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------

அப்படியாப்பட்ட ஒரு மருத நிலத்தில் / ஒரு நெல் வயலில் , பயிர்களை பாதுகாக்கும் விவசாயியின்  நண்பர்களை ,தேடித்திரிஞ்சு போட்டோ புடிச்சுருகேன்   பாருங்களேன் .


இவ்ளோ பேரு தீய பூச்சிகளை அழிக்க  நமக்காக உதவி செஞ்சுகிட்டு இருக்க சொல்ல , நாம என்ன பண்றோம்???  பூச்சி மருந்து பயன்படுத்தி நமக்கு நாமே ஆப்படிச்சிட்டு இருக்கோம் 
காத்துல  72% நைட்ரஜன் இருக்கு , அத பல வழிகள் மூலமா நிலத்துக்கு கொண்டு வரலாம் .

 ஆனா நாமயூரியாவத்தான பயன்படுத்துவோம் !!!

அந்த யூரியா எல்லாம் தண்ணில அடிச்சிட்டு நீர் நிலைக்கு போயி , அந்த நீர் நிலைகளில் உள்ள ஆல்கேக்கள் அபரிமித வளர்ச்சி அடைந்து , நீரின் மேல் போர்வையா மூடி, நீரின் உள்ளே ஆக்சிஜன் கரையாம; நீர் நிலைகள எல்லாம் மற்ற  உயிரினங்கள்  பயன்படுத்தா வண்ணம் நாசமா போகுது .
தாவரங்களும் மற்ற உயிரினங்களும் ஒன்றாக பரிணாமம் அடைந்து வந்தவை . அவை சிலவமயங்களில்  ஒன்றை ஒன்று எதிர்கின்றன , சிலவமயங்களில் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன . அவற்றை நன்கறிந்து பயன்படுத்திக்கொண்டாலே எளிதான இலாபகரமான விவசாயத்தை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு செய்யலாம்.
எங்கோ உள்ள சூரியனில் நடந்த ஒரு Nuclear fission இன் மூலம் வெளிப்பட்ட  ஆற்றலை தாவரங்கள் பிடித்து வைக்கும் கலையை  கற்றன . அந்த ஆற்றல் உணவுச்சங்கிலியின் வழியாக நம்மால் உபயோகிக்கக்கூடிய மூலக்கூறுகளின் மூலம்  நமக்கு  பயன்படுகிறது. நாம மண்டைய போட்டபின்னர் இருக்கும் நம்ம உடலையும் , நமது அன்றாடக்கழிவுகளையும் வேஸ்ட் ஆக்காமல் தாவரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன .இதெல்லாம் ஒரு சைக்கிள் பாஸ் .

அதுனால என்ன பண்ணனும்னா ... எங்கோ வேஸ்ட்டா விழற கழிவுகள , நமக்கு தேவையான  இடத்துல விழ வச்சா , விளைச்சல் பட்டாசா இருக்கும்ங்றேன் . 
என்ன சார் லூசு மாதிரி பேசுறீங்க ... நாட்டுல எவ்ளோ ஹெக்டேர் நிலம் இருக்கு , அதுல எல்லாம் ஆட்ட அடைச்சு ஆய் போக வைக்க முடியுமா?

உன்னோட Blogகுங்குறத்துக்காக நீ என்ன வேணாலும் எழுதுவியா ?
--------------------
நியாயமான கேள்வி !

அவ்ளோ ஆடுங்க நம்மகிட்ட இல்ல தான் :(

சரி கோவப்படாதீங்க .

நீங்களே சொல்லுங்க ...உங்களுக்கு தெரிஞ்சு எப்பப்பாத்தாலும் ஆய் போய்ட்டே இருக்குர வேற எதாவது ஒரு உயிரினம் இருக்கா சார்?

இருக்கு சார்...எனக்கு தெரிஞ்சு ஒரு உயிரினம் ,பொறந்ததுலேருந்தே வயித்தால போயிட்டு இருக்கு சார்.

அந்த உயிரினம் பேரு "பாம்பா"? இந்த மொக்க ஜோக்கல்லாம் எங்கிட்ட வச்சுக்காத. வாய்குள்ளார கத்திய விட்டு சுத்திப்புடுவேன்.
/////////////////////////////////
Jokes apart .... இன்னோரு ஒரு உயிரினம் ஒன்னு இருக்கு . அதுங்களோட முக்கியமான வேலையே திங்கிறதும் அடுத்த நாள் காலைல வண்டி வண்டியா போறதும் தான்.இது ஃபாரின் கணக்கு .
 அங்க இருக்கவனுங்க எல்லாம் கறி சாப்பாடு சாப்ட்டுட்டு கொஞ்சமா போறவனுங்க .

நாம அப்புடியா ? 

அன்லிமிட்டட் மீல்ஸ்ச பாத்திகட்டி அடிச்சிட்டு , அடுத்தநாள் காலைல அரைலோடு அசால்ட்டா போறவய்ங்க‌. 

அது அம்புட்டும் உரம் சார் !!!

ஆறரைகோடி மக்களின் உரமும் ஒரு ப்ரயோஜனமும் இல்லாம மக்கிப்போகுது'ங்குற வருத்தம் உங்க யாருக்காச்சும் இருக்கா?. 

ராமநாதபுரம் பக்கம் திருப்பிவிட்டா முப்போகமும் விளையுமே !!!

இதுவும் ஆர்கானிக் உரம் தான் பாஸ் . இதக்கொண்டு செய்யப்படும் விவசாயம் பல நாட்ல நடைமுறைல இருக்குது .


அதும் நம்ம ஊர்லயே அதுலேருந்து கரண்ட்டல்லாம் எடுக்குறாய்ங்க‌.இதுனால மகாராஷ்ட்ரால பல கிராமங்கள் பயனடைந்து கொண்டு இருப்பது உங்களுக்கு தெரியுமா ?

UNICEF அறிக்கையின் படி இந்தியாவில் 50 சதவிகித மக்கள் வெட்டவெளியில் கக்கா போகின்றனர் . இதுனால ஏராளமான ப்ரச்சனை. 

இதையும் படிங்க .

நா சொல்றத ஃபாலோ பண்ணீங்கனா . டாய்லட் வச்சுருக்குற ஒவ்வொருத்தனும் ,"எங்க‌ வீட்லயும் ஒரு டாய்லட் இருக்கு ... புடிச்சிருந்தா போய் பாருங்க , இல்லன்னா ஃப்ரென்ட்ஸாவே இருப்போம்"ன்னு சொல்வாய்ங்க. தமிழகமும் மின் மிகை மாநிலமா மாறிடும்.

கரண்ட்டல்லாம் எடுத்துட்டு மிச்சம் இருக்குற ஸ்லர்ரிய  உரமா பயன்படுத்தலாம் . ஒரே கக்கூஸ்ல ரெண்டு மாங்கா :)
--------------------------------------------------------------------------------------------------------------
ஐயகோ ...ஏதோ ஒரு நாய் இருந்த ஆயினால் விளைந்த காய் எனது வாய்க்குள் போவதா ? ஒருகாலும் முடியாது 'ன்னு feel பண்றிங்களா?

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ?
Statistically, at least one molecule in every glass of water you drink has passed through a dinosaur

அதாகப்பட்டது, நாம் பருகும் ஒவ்வொரு லோட்டா தண்ணீரிலும் , ஒரு மாலிக்யூல் தண்ணீரானது டைனோஸாருடைய மூத்திரத்திலிருந்து வந்ததாகும் .

பில் கேட்ஸ் குடிக்கிறாரே ...இந்த தண்ணி மனிதக்கழிவிலிருந்து எடுத்தது தான் பாஸ் .so நல்லா யோசிச்சு பாருங்க , நாஞ்சொல்றது உண்மைன்னு புரியும் .

------------------------------------------------------------------------------------------------

:)))


--------------------------------------------------------------------------------------------------

நன்றி : திரு கோவிந்தராஜன்

Monday, January 5, 2015

டிசம்பர் மாத PIT Photography contest ல் வெற்றி

 எனது புகைப்படமும் டிசம்பர் மாத PIT Photography contest ல் வெற்றி பெற்றுள்ளது.

அதில் எப்படி பேர் சேர்ப்பது என்று தெரியாததால் பெயரிலியாகிவிட்டேன். இருந்தாலும் ஒரு அங்கீகாரம் பெற்றதால் மகிழ்ச்சியே.

தேர்வுக்குழுவுக்கு நன்றிகள்

படத்தை காண‌
Related Posts Plugin for WordPress, Blogger...