தலைவர் பாட்சாவுல ஒரு டயலாக சொல்லுவாரு , ஞாபகம் இருக்கா ?
எல்லா உயிரும் தனது செயலை ஒன்று இதயத்தை ( instinct ) கேட்டு செய்கிறது , இல்லை மூளையை (learned behavior) கேட்டு செய்கிறது.
அது இன்னாப்பா instinct ,learned behavior ?
learned behavior - பட்டறிவு அல்லது அனுபவ அறிவு:
உங்க பாஸ் ஒரு மொக்க ஜோக் சொல்றாரு , மனசுக்குள்ள கடியா இருந்தாலும் , அந்த நாயால நமக்கு நிறைய காரியம் ஆக வேண்டிஉள்ளது , அதுக்காக சிரிச்சு ( சோப்பு போட்டு ) வைப்போம் ன்னு micro second குள்ள உங்க அனுபவ அறிவின் (learned behavior )துணையோடு , செம்மை ஜோக் சார் , எப்புடி உங்களால மட்டும் இப்புடின்னு சொல்றீங்களே அது தான் learned behavior.
instinct - உள்ளுணர்வு அல்லது உள்ளறிவு:
அதே பாஸ் வழுக்கி விழுந்தா உங்களையும் அறியாம வாய் விட்டு சிரிப்பீங்களே , அது தான் instinct , அது தான் உங்க originality .
நாம எல்லாம் நம்ம instinct ட்ட மறைச்சுட்டு learned behavior ஐ வெளியே காட்டிகிட்டு திரியிறோம் .
ஆனா மிருகங்கள் எல்லாம் அப்புடி இல்லை , முக்கா வாசிக்கும் மேல ( around 95 % )instinct டை மட்டுமே நம்பி வாழ்வன.இதயத்துல என்ன தோணுதோ அத கேட்டு பட்டுன்னு செஞ்சிடும் ..
ஒற்றுமை , சகோதர பாசம் , தாயன்பு எல்லாமே அதுக்கு instinct தான் .ஆனா நாம learned behavior ல தான் வண்டி ஓட்டிகிட்டு இருக்கோம் .
-------------------------------------------------------------------------------------------------------------
சிறுத்தை தான் உலகிலேயே வேகமா ஓடக்கூடியது , (ஆனா பத்து நிமிஷம் வரை தான் வேகத்தை மெயின்டெயின் பண்ணும் ),
அது ஒரு இம்பாலா மானை குறி வச்சு துரத்த ஆரம்பிக்குது , சேசிங்கின் போது இம்பாலா டயர்டு ஆகி சிறுத்தை கிட்ட மாட்டும் சமயம் வரும் போது , அதை காணும் சகோதர இம்பாலா , இப்புடியே போனா நம்ம அண்ணனை போட்டுருவாங்கன்னு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க காரியத்தை செய்யும் .
சிறுத்தையோட பக்கமா ஓடி அதோட கவனத்தை தன் பக்கமா திருப்பும் ( அழுவாதீங்க ப்ளீஸ் ) , சிறுத்தையோட stamina அதுக்குள்ள கொறஞ்சிருக்கும் , அதுனால இம்பாலா முக்காவாசி தப்பிச்சிடும் .
அப்புடி என்ன இம்பாலா தனது உயிரை பணயம் வச்சு அண்ணன் காப்பாத்தனும் ?
இதுனால இம்பாலா வுக்கு என்ன நன்மை ?
ஒன்னும் பெருசா இல்லை பாஸ் , அண்ணன் தனது ஜீனை பகிர்ந்தவன் , தனது ஜீனை உலகில் நிலை நிறுத்தவே இந்த கஷ்டம் எல்லாம் .
ஓடிப்போய் இதை ஒரு தடவை படிச்சிட்டு வாங்க பாப்போம் .
----------------------------------------------------------------------------------------------------------
survival லுக்காக உயிரினங்கள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக உதவிக்கொள்ளும் .
சரி , உதவியை வாங்கிகிட்டு , திரும்ப உதவி செய்யாமல் ஏமாற்றினால் ?
அப்படிப்பட்ட எமாற்றுகாரர்களும் உண்டு ,
அதுவும் ஒரு particular உயிரினத்தில் இது ரொம்பவும் காமன் (சரியா வாசி).
அந்த உயிரினம் Homo sapiens என்று அழைக்கப்படும் சேவிங் செய்த குரங்குகள் .
the naked ape , தமிழில் மனிதன் என்று அழைப்பார்கள் .
அவனுடைய குரங்கு புத்தி எங்கேயிருந்து வந்தது ?
ஏன் அவன் சேவிங் செஞ்ச குரங்கு மாதிரி இருக்கான் ?
பின் குறிப்பு :
இந்த பதிவில் desmond morris அவர்கள் எழுதிய the naked ape இல் இருந்தும் + எனது அனுபவங்களும் + நான் அறிந்த ,படித்த மற்றும் பார்த்த விலங்குகளின் பழக்க வழக்கங்களும் + ஆஷிக் அண்ணனின் இந்த கேள்விகளுக்கான பதில்களாகவும் (குரங்கு -> நியாண்டர்தல் (Neandertals or Neanderthals) -> மனிதன்?
http://www.ethirkkural.com/2010/10/evolution-stheory-harry-potter-stories.html ) , ஒரு மாதிரி கலந்து கட்டி காரக்குழம்பு மாறி எழுத உள்ளேன் .
வாங்க பழகலாம் ....
ஆஷிக் அண்ணனுக்கு :
ஆஷிக் அண்ணே இது குறிஞ்ச பட்சம் அஞ்சு பதிவாவது எடுக்கும் , இந்த சீரிசை முடித்த பிறகு மாற்று கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் வாதிடலாம் .
இரண்டாம் பகுதிதான் முதலில் படிச்சேன்.அது இதயத்தில் சிரிச்சது.
ReplyDeleteஇந்த பின்னூட்டம் மூளை சார்ந்தது:)
:-)
Deleteநல்ல ஆரம்பம் தம்பி! நீ போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு! நான் அப்பப்போ வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்!
ReplyDeleteநன்றி அண்ணா
Delete