என்னோட நண்பனை ஒரு மொக்கை figure ரோட வச்சு ஓட்டுவோம், அவள பத்தி பேசுனாலேயே நண்பனுக்கு B.P ஏறிடும் . ஒரு நல்ல ஞாயித்து கிழமை அன்று காலையிலேயே நாலு கரண்டி பொங்கலும் , நாலு வடையும் தின்னுட்டு (திணிச்சிட்டு), சாப்ட்டது செரிக்காம மலை பாம்பு மாதிரி நெளிஞ்சிகிட்டு இருந்தோம் . வெறும் வாய்க்கு அவலா வந்து மாட்டுனான் நண்பன் , நாலு பேரு சேர்ந்து அவனை அந்த மொக்க பீசொட சேத்து வச்சு ஓட்டோ ஓட்டுன்னு ஒட்டுனோம் . செம்ம காண்டாயிட்டான் நண்பன் . திடீர்ன்னு கைல கட்டி இருந்த fast track வாட்சை கழட்டி சிதறு தேங்காய் உடைக்கிற மாதிரி தரையில விட்டு எறிஞ்சான் . எங்களால எதுவும் பேச முடியல , அவன் எங்களை அடிக்கலை , திட்டலை , முறைக்க கூட இல்லை , ஆனா வாழ்கையில் இனிமே அவனை ஓட்டாத படி ஒரு கிலியை ஏற்படுத்தி சென்று விட்டான் .
அந்த மொக்க பீசுக்கு fast trak வாட்ச் கொஞ்சம் ( ரொம்பவே) ஓவர் .
இருந்தும் அவன் ஏன் அப்புடி செஞ்சான் ?
அவனுடைய குரங்கு புத்தி எங்கேயிருந்து வந்தது ?
தப்பு அவன் பேர்ல இல்லை , எல்லாம் evalution னோட வேலை (ஆரம்பிச்சுட்டான்டா ).
சண்டைன்னா நாம முதல்லயே களம் இறங்கிவிடுகிறோமா என்ன ?
1.முதலில் கோபப்படுவோம்,
2.பிறகு பலத்தை காட்டுவோம்
3.பின்னர் ஒருத்தர் கை உயர மற்றொருவர் பணிவோம்
4.எதுவுமே வேலைக்காவாத பட்சத்தில் சண்டைதான் சரி என களத்தில் குதிப்போம்
இந்த புத்தி நமக்கு learned behavior அல்ல , instinct .
சரி அந்த instinct யாருக்கிட்டே இருந்து வந்துச்சு ?
முதலில் , கோபப்படுதல் :
அடை காக்குற பறவையை கடுபேத்துனா அது என்ன பண்ணும் ?
மூச்சை உள்ள இழுத்து , புஸ்ஸுன்னு உடம்பை பெரிதா காட்டி , கோபமா ஒரு பார்வை பார்க்கும் .
கொரில்லா குரங்கு போன்ற ape கள் நல்லா மூச்சை உள்ள இழுத்து உடம்பை பெருசா காட்டும் (கிங்காங் படம் பாத்துருக்கீங்களா?அதுல கூட வருமே ). வாயை திறந்து தனது கூரான பற்களை காட்டும் .
எல்லா உயிரினங்களும் இது போல தான் கோபம் அடையும் ..
சேவிங் செஞ்ச குரங்காகிய நாம் கோபம் வரும் போது மூச்சை நல்லா உள்ள இழுத்து நெஞ்ங்சாகூட்டை விரித்து , புருவத்தை நெரித்து , கோப பார்வை பார்ப்போம் ...,
இல்லை இது போல நடிப்புக்காகவும் ( learned behaviuor )ராவும் செய்வோம்.
அது எப்புடி கோபத்தை காட்டும் ?
கோபத்தை முதலில் நேராக காட்டாமல் தன்னை திருப்பி தாக்காத ஒன்றன் மீது காட்டும் , ஆனால் அதில் கோவத்தின் அளவை தெரியபடுத்தி விடும்.
நாயா இருந்தா மண்ணை காலால பிராண்டும்.
மாடா இருந்தா நிலத்தை கால் குளம்புகளால அடிக்கும் , கொம்பால மண்ணை குத்தும்.
சிம்பன்சி குரங்கு கையில் கிடைக்கும் பொருட்களையும் கிளைகளையும் மரங்களின் மீதும் , பூமியிலும் விட்டு எரியும் ( சில குரங்குகள் தனது கழிவை விட்டு எரியும் - இதை நான் கண்கூடாக பார்த்துள்ளேன் ).
சேவிங் செஞ்ச குரங்கு என் நண்பனை போல fast track வாட்ச் போன்ற கையில் கிடைத்த பொருட்களை வீசி எறியும் .
இந்த சிக்னலுக்கு எதிரி பணிஞ்சுட்டா .....
நாயா இருந்தா கூனி குறுகி , பம்மி , வாலை பின் கால்களுக்கு இடையில் விட்டு ஆட்டும் ,
இது நான் எடுத்த படம் ( இந்த பாடலை பாடியவர் உங்கள் சிவா - இதை போடுமாறு அவர் கேட்டுக்கொண்டார் ) .
சில நாய்கள் ஒரு படி மேலே போய் மல்லாக்க படுத்து கால்களை விரித்து surrender ஆயிடும் .
குரங்குகள் பணியும் போது முதலில் ஒரு grimace ஐ ( இளிப்பு அல்லது வழிதல் ? ) உதிர்க்கும் ,
நீங்க கூட உங்க பாஸ் திட்டும் போது செய்வீங்களே அதேதான் .
அந்த இளிப்பும் எதிரியை ( இப்போ அடிபணிஞ்சதால அவன் தலைவன் நிலைக்கு உயர்த்து விட்டான் ) சமாதானப்படுதவில்லை என்றால் குனித்து , பணிந்து , மடங்கி , மண்டியிட்டு , படுத்து என்னென்னமோ பண்ணி தாஜா பண்ண பாக்கும் .
இதனால் தான் அணைத்து மதங்களும் இறைவனுக்கு முன் மண்டி இட சொல்கின்றன , ஏன் என்றால் அவன் தான் தலைவனுக்கு தலைவன் என்ற எண்ணத்தினால் . இதுவும் instinct ஆவே வந்த பழக்கம் தானுங்க .
1.இதுல சமாதானம் ஆன வெற்றிபெற்ற தலைவர் ( chimpanzee தலைவர் ) கைகளை அகட்டி உள்ளங்கையை காட்டும் .இல்லை ஆசிவதிப்பது போல காட்டும் .
2. இல்லை என்றால் கைகளை குலுக்கி கொள்ளும் ( similar to hand shaking in man ) .
3 . Jane Godall என்ற ஆய்வாளர் ஒரு சிறப்பான chimpanzee இன் உடல் மொழியை பதிவு செய்துள்ளார் ,பணிந்த குரங்குகள் தலைவனின் புறங்கையை முத்தமிட்டு செல்லுமாம் .(என்ன பாட்சா படம் ஞாபகம் வருதா நண்பர்களே - அது தான் தலைவரின் சிறப்பு ).
நாம அணுகுண்டு வெடிச்சா எதுக்கு பாகிஸ்தான் காரனும் "தம்பி நாங்களும் குண்டு வச்சுருக்கோம் , நாங்களும் வெடிப்போம் " , ன்னு வெடிக்கிறான் , நாம எதுக்கு பரேடுன்குற பேருல குடியரசு தினத்துக்கு எல்லா ஆயுதங்களையும் , படை பலத்தையும் காட்டுறோம் ?
எல்லாம் instinct தான் , கொரங்கு புத்தி தான் .
கொரங்கு கிட்ட இருந்து தான் இதெல்லாம் வந்துச்சுன்னு சொன்னா காமடியா தெரியும் , ஆனா அது தான் உண்மை
நாம அணுகுண்டு வெடிச்சா எதுக்கு பாகிஸ்தான் காரனும் "தம்பி நாங்களும் குண்டு வச்சுருக்கோம் , நாங்களும் வெடிப்போம் " , ன்னு வெடிக்கிறான் , நாம எதுக்கு பரேடுன்குற பேருல குடியரசு தினத்துக்கு எல்லா ஆயுதங்களையும் , படை பலத்தையும் காட்டுறோம் ?
எல்லாம் instinct தான் , கொரங்கு புத்தி தான் .
கொரங்கு கிட்ட இருந்து தான் இதெல்லாம் வந்துச்சுன்னு சொன்னா காமடியா தெரியும் , ஆனா அது தான் உண்மை
சரி இதெல்லாம் ஒத்து வராத பட்சத்தில் ,
மண்டையை பொளந்து மாவெளக்கு வச்சிடும் .
எங்கெங்கோ சுத்தி இங்கே வந்துட்டேன்:)
ReplyDeleteஉங்க அதிர்ஷ்டம் நல்ல மாட்டுக்கு ஒரே ஊசி போடுறீங்க:)
அப்புறம் கோபத்தில் நாளங்கள் விரிவதை பல விதத்தில் விளக்கியும் விஜயகாந்த்து கோந்து மாதிரி ஒட்டிகிச்சு:)
It is too good to say your wits are good.Thanks.
போகலாம்ன்னு நினைச்சப்ப உங்க பதிவை லிங்க் செய்துக்குறேன்.
ReplyDeleteநன்றி.
thanks bro, my pleasure :-)
Deleteநீங்க தமிழ் மணத்தில் இணைந்திருக்கிறீர்களா?
ReplyDeleteதமிழ்மணம் உதவிப்பக்கம் உங்களின் பதிவுகளை இணைக்க உதவக்கூடும்.சுட்டி கீழே:
ReplyDeletehttp://blog.thamizmanam.com/archives/387
thanks brother , i ll make it soon
Deleteபாஸ் உங்க பதிவு எல்லாமே அருமை...
ReplyDeleteஉங்க blog பேரயும் description nayum பாத்த உடனே நா உங்க fan ஆயிட்டேன்.... :)
தொடர்ந்து எழுதுங்க...
ஆமா உங்க blog ku மேலும் அழகு சேர்த்த அந்த அண்ணாமலை தலைவர் ஸ்டில்ல எதுக்கு தூக்கிட்டீங்க? :)
with ur permission , உங்கள மாதிரியே blog title design பண்ணியிருக்கேன்
Deletewith your permission intha post larunthu oru image ah ennoda facebook la upload pannikkiren..
ReplyDeleteellaamae ungalukku thaan annae
Delete//with ur permission , உங்கள மாதிரியே blog title design பண்ணியிருக்கேன்//கலக்குங்க.. தலைவர் கூட இருந்தா எல்லாமே வெற்றி தான்...
ReplyDeleteயாரக் கேட்டு Rey Mysterio படத்த போட்ட? உங்க மதினிக்கு உன் மேல பயங்கர கோபம்! அவளுக்கு rey mysterio ரொம்ப பிடிக்கும்! அவரப்போயி நீ குரங்கோட ஒப்பிட்டு சொல்லிட்டேன்னு பயங்கர கடுப்பாயிட்டாள்! பார்த்து நடந்துக்கோ!
ReplyDeleteஅண்ணே அவரு யாருன்னே எனக்கு தெரியாது .... மன்னிச்சு .....
Deleteஉங்கள் பதிவுகள் அனைத்தும் படிச்ச நல்ல பொழுது போகுதுங்க .அதலையும் நல்ல காமிடியா எழுதுரிங்க சார்.தொடர்ந்து பல பதிவுகளை இதுபோல் எழுதி தள்ளுமாறு கேட்டு கொள்ளுகிறேன்.
ReplyDeleteஇந்த ஒரு வார்த்தைக்காகவே ( இல்ல இல்ல இருவது வார்த்தைகளுக்காகவே ) பதிவா எழுதி தள்ளுவோம் சார் , நீங்களும் நிறைய கேள்வி கேளுங்க , அப்ப தான் நாம ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய தெரிஞ்சுக்கலாம் .
Delete