நமக்கு நம்ம பொருட்களை பாதுகாப்பதில் ரொம்ப அக்கறை,
என்னதான் நாம வில்லத்தனமா யோசிச்சு நம்ம பொருட்களை பாதுகாக்க முயற்சி செய்தாலும் , திருடர்களிடம் அவை தப்புவதில்லை,
இருந்தாலும் நாம் முயற்சியை கைவிடுவதில்லை,
எங்கேயிருந்து மனிதனுக்கு இந்த திருட்டு புத்தி வந்தது ?
இதுக்கு என்னோட பதில் என்னவா இருக்கும்ன்னு உங்களுக்கே தெரியும் ,
ஆம் இதுவும் ஒரு குரங்கு புத்தி தான் .
-----------------------------------------------------------------------------------------------------
Desmond morris ஒரு tv show க்காக the great banana theft and egg omelet ன்னு ஒரு சீரியல் பண்ணுனாரு .
அவரு ரூம்ல வாழைப்பழம் டின்னோட திருடு போய்டுச்சு , அவரு ரூமுக்கு அவர் ஆராய்ச்சிக்காக வைத்திருந்த குரங்குகள் வந்து போகும் , அவருக்கு அந்த குரங்குகள் மீது சந்தேகம் . யாரு இந்த தப்ப சரியா கண்டுபிடிப்பாங்கன்னு யோசிச்சாரு . வாசிம் கானா இருந்தா விஜயகாந்த் கண்டுபிடிச்சுடுவாரு , ஆனா திருடினது குரங்காச்சே ,
வேற வழியே இல்லைன்னு அவரு scotland yard க்கு கம்ப்ளைன் பண்ணாரு .
scotland yard லேருந்து ரிடையர் ஆனா cheif சுப்ரிண்டன்ட் Bob cherryl ன்னு ஒரு பெரிய கை இந்த கேச விசாரிச்சாரு . வாழைப்பழ டின்இல் இருந்த குற்றவாளியின் கை ரேகையை ,எல்லா குரங்குகளின் கைரேகையோடு ஒப்பிட்டு பார்த்தார் .
கடைசியில் Annabelle என்கின்ற பேராசை பிடித்த ஒரு குண்டு ஒரான்கூடான் கைரேகையோடு கச்சிதமாக போருந்திப்போவதை கண்டுபிடித்தார் .
குண்டு Annabelle வாழைப்பழமும் கையுமாக பிடிபட்டாள்?
இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் :
குரங்குகளுக்கும் நம்மை போல கைரேகை உண்டு ( மாடுகளுக்கு கூட மூக்கு ரேகை ஒன்றுக்கு ஒன்று மாறுபடும் -muzzle ).
இது குரங்கிலிருந்து evolve ஆகி வந்த வந்த எனது கைரேகையும் ,ஒரு குரங்கின் கைரேகையும்(indian macaque monkey) - பாருங்கள் இருவருக்கும் ஒரே போல அமைப்பு இருப்பதை .
இரண்டாவது : நமது திருட்டு புத்தியும் குரங்கிலிருந்து வந்தது தான்.
பின்குறிப்பு :
இன்னும் பல குரங்கு புத்திகள் உள்ளன நம்மிடம் , அதற்கான ஆதாரங்களும் நிறைய , இருப்பினும் இது போதும் என்று நினைக்கிறேன் ,
அடுத்து எப்படி மனிதன் சேவிங் செய்த குரங்கு ஆனான் , அவனது முடி எங்கே போயிற்று என்பதற்கான விடைகளை பார்க்கலாம் நண்பர்களே.
கைகொடுக்கும் கை :
அதான் குரங்கும் மனிதனும் ஒண்ணு என்று சொன்னார்களோ...
ReplyDeleteஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் குரங்கு புத்தி உள்ளது சார்
Delete