Saturday, February 25, 2012

சேவிங் செய்த குரங்கு -7


இயற்கைக்கு இறைவன் அளவுக்கு கருணை கிடையாது .

எல்லா உயிர்களின் மேலேயும்  ( மனிதனையும் சேர்த்து ) ஒரு selective pressure இருந்து கொண்டே இருக்கும் . மாற்றங்களுக்கு தாக்கு பிடிக்காத உயிரினங்கள் வாழத்தகுதி அற்றவை.

இயற்கைக்கே கருணை இல்லாத பொது , வஞ்சகம் நிறைந்த மனிதனிடம் அதை எதிர்பார்ப்பது , தமிழ் சினிமாவில் வில்லன் ஹீரோவின் தங்கையை ரேப் செய்ய மாட்டார் என நம்புவதற்கு ஈடானது .
----------------------------------------------------------------------------------------

முந்தி எங்கும் கிரீச்சிடும் சத்தத்தால் நமது சித்தத்தை குளிர்வித்த சிட்டுக்குருவிகள் எங்கே போயின ?


     மனிதன் மங்கயருடன் மொக்கை போட கண்டுபிடித்த செல்பேசியின் டவரில் வரும் கண்ணுக்கு தெரியாத அலைகளினால் ,அவற்றின் இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன . கவலைப்படாதீர்கள் இன்னும் கொஞ்ச நாளில் மொக்கை போட்டே அவற்றை அழித்துவிடுவோம் .
----------------------------------------------------------------------------
    இதே போல தான் ஒரு வகையான moth ( வண்ணத்துபூச்சி போல இருக்குமே ) இன் வாழ்வாதாரத்திற்கு மனிதன் வேட்டு வைத்தான் .ஆனால் அவை அதிலிருந்து தப்பிக்கும் யுக்தியை கையாண்டு உலகில் இன்னும் வாழ்ந்து கொண்டு உள்ளன .

  முந்தி எல்லாம் இங்கிலாந்தில் peppered  moth  என்று ஒரு வகை  moth  இருந்தது , இதனை தின்ன வரும் பறவைகளிடம் இருந்து தப்பிபதற்காக அவை மரங்களின் மேல் வளரும் பூஞ்சயின் நிறத்தை  போல தோற்றம் அளித்தன .


  தொழில் புரட்ச்சிக்கு பின்னர் , காற்றில் கலந்த புகையால் பூஞ்சைகள் செத்து விட்டன ,மரங்களும் கருமையாக காட்சியளித்தன  , கருமை பின்னணியில் உள்ள வெள்ளை பூச்சிகளை பறவைகள் எளிதாக அடையாளம் கண்டு துரத்தி துரத்தி வேட்டையாடின .


என்ன ஆச்சரியம் திடீரென்று வெள்ளை இனங்கள் மறைந்து கருப்பு நிற பூச்சிகள் அந்த இடத்தை ஆக்கிரமிக்க தொடங்கின .

எப்படி இது சாத்தியம் ?
---------------------------------------------------------------------------------- 
   எனக்கும் சகோதரர் கார்பன் கூட்டாளிக்கும் நடந்த உரையாடலை ஒரு நிமிடம் பார்த்தீர்களானால் இதை எளிதாக புரிந்து கொள்ளலாம் .
// ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு ஏதோ ஒன்று தாவும் போது கீழே விழுந்து உயிர் போகுமா, இறக்கை துளிர் விடுமா?//

சிறப்பான கேள்வி . 

இங்கு தான் survival of fittest வருகிறது , கீழே விழுந்து உயிர் போன உயிரினங்கள் gliding வித்தை கைவராதவர்கள் , அவர்களால் போட்டியை சமாளிக்க முடியவில்லை , gliding ங்குக்கு பொருத்தமான உடலமைப்பு கொண்ட உயிரினங்கள் மட்டும் போட்டியில் மிஞ்சும் , அவற்றில் சிறந்தவர்கள் இறக்கை துளிர் விட்டு பறக்க ஆரம்பித்தனர்.
சிறகு துளிர் விட்டதை பற்றி இங்கே கூறியிருக்கிறேன்,

---------------------------------------------------------------------------------------------------

வெள்ளை மற்றும் கருப்பு பூச்சிகள்இரண்டுமே peppered moth தான்(  Biston betularia f. typica, the white-bodied peppered moth , Biston betularia f. carbonaria, the black-bodied peppered moth.) இருப்பினும் வெவ்வேறு சூழலில் இருந்தால் வெவ்வேறு விதமாக பரிணாமம் அடையும் என்பதற்கு இது ஒரு உதாரணம் .
----------------------------------------------------------------------------------- 
இதே போல வெவ்வேறு சம்பந்தமே இல்லாத இடங்களில் , ஆனால் ஓரே விதமான சூழலில் வளர்க்கப்படும் உயிரினங்கள் ஒரே போன்று பரிணாமம் அடைந்து ஒரே விதமாக காட்சியளிக்கும் .

மேலே காட்டப்பட்ட இரண்டு உயிரினங்களும் ஒன்றா ?

இல்லை ,

ஒன்று ஆஸ்திரேலியாவில் காணப்படும் wombat , மற்றொன்று அமெரிக்காவில் காணப்படும் wood  chuck . இவை இரண்டும் இரு வெவ்வேறு விலங்குகள் , வெவ்வேறு கண்டங்களில் வாழ்பவை ,

   இருப்பினும் அவை வளர்ந்த சூழல் , அவற்றின் பழக்கங்கள் ஒன்று எனவே அவை  ஒரே  போல பரிணாமம் அடைந்து ஒரே போல தோற்றம் அளிக்கின்றன .

-----------------------------------------------------------------------------------------------------
இனி கேள்விகளுக்கு பதில்களை பார்ப்போம் ,

சிவப்பு கலரில் இருப்பது இந்த இடத்தில் இருக்கும்,

ஆஷிக் அண்ணனின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது.

--------------------------------------------------------------------------------------------------------------------------
நியாண்டர்தல்கள்மனிதர்களுக்கு முன்வந்தவர்கள் என்றால் அல்லது குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்ட உயிரினங்கள் என்றால்எப்படி ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்க முடியும்?....இது முதல் அதிர்ச்சி....


அதிர்ச்சி அடைவதற்கு இதில் ஒன்றுமே இல்லை ,ஒரே உயிரினத்தில் இரு உயிர்களை வெவ்வேறு சுற்றுசூழலில் வளர்த்தால் அது  வெவ்வேறு  வகையில் பரிணாமம் அடையும். அதே மாதிரி  ஒரே மாதிரியான சுற்றுசூழலில்  வாழும் வெவ்வேறு   வகையான உயிரினங்கள் ஒரே மாதிரி பரிணாமம் அடைந்து ஒன்று போல காட்சி அளிக்கும் . குரங்கிலிருந்து வந்தவர்கள் தான் இருவரும் , ஆனால் அவர்கள் ஏன் வெவ்வேறு மாதிரி பரிணாமம் அடைந்தனர் எப்படி ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்தனர் என்பதற்கான பதில் , மேற்சொன்ன காரணங்களினால் தெளிவாகி இருக்கும் என நம்புகிறேன் .
அது ஏன் தற்காலத்திய ஆப்ரிக்கர்களிடம் நியாண்டர்தல்களின் மரபணுக்கள் காணப்படவில்லை?..

நீங்கள் கூறிய கருத்துக்கள்  6th May 2010. இல் வெளியானது , தற்போது வெளியான ஆய்வு கட்டுரை என்ன கூறுகிறது என்றால்…
The histogram shows that Asian and European genomes have significantly more Neandertal derived SNP alleles than do the African genomes. The averages for the Asian and European samples are around 3% higher than the average for the African samples. Whatever gave Africans some degree of similarity to Neandertals, non-Africans seem to have gotten around 3% more of it.

(taken from –

Neandertal introgression, 1000 Genomes style
Sat, 2011-12-10 18:16 -- John Hawks)

ஆபரிகர்களிடமும் நியாண்டர்தல்கள் ஜீன் உள்ளது ஆனால்  ஆசியர்களிடமும் , ஐரோபியர்களிடமும் 3 % க்கும் அதிகமாக உள்ளது என்று  , அது ஏன் என்று நீங்களே விளக்கி விட்டீர்கள்.
மரபணு சோதனைகள் ஆரம்ப காலகட்டங்களில் இருப்பதால் பொறுத்திருந்து தான் இவை இன்னும் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும்.

இந்த கருத்தை  நானும் வழிமொழிகிறேன் , கிட்டத்தட்ட விடைகளை நெருங்கி விட்டார்கள் (Neanderthal Genome DecodedVolume 63 Number 4, July/August 2010
by Zach Zorich-Paleogenetics shows our ancient cousins aren’t so extinct)
இதற்கு பின்னர் எல்லாம் தெளிவாகி விடும் என நம்பலாம் .நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களாக இருந்ததால் மறைந்து விட்டார்கள் என்ற கோட்பாட்டிற்கு மற்றொரு அடியாக விழுந்துள்ளது பிரிட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு. மனிதர்கள் உபயோகப்படுத்திய ஆரம்ப கால கருவி யுக்திகள், நியாண்டர்தல்கள் உபயோகப்படுத்திய யுக்திகளோடு ஒப்பிடும் போது சிறந்ததாக இல்லை என்று இந்த ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது --- (Extract from the original quote of) New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008.   )


உண்மை தான் அவர்களும் அறிவாற்றலில் நம்மை போன்றவர்கள் தான் , ஆனால் அவர்கள் மறைந்ததற்கான காரணம் அதுவல்ல ….


Over generations of genetic mixing, the Neanderthal genome would have dissolved, absorbed into the Homo sapiens population, which was much larger. If you increase the mobility of the groups in the places where they live, you end up increasing the gene flow between the two different populations, until eventually one population disappears as a clearly defined group," said study co-author C. Michael Barton, an archaeologst at Arizona State University's School of Human Evolution and Social Change.
(taken from –

Brian Handwerk
Published November 25, 2011
NEW YORK TIMES February 15, 2005
For Neanderthals and Homo Sapiens, Was It De-Lovely?
By JOHN NOBLE WILFORD)


மனிதர்களோடு  அவர்கள் உறவு கொண்டதால் தான் அவர்கள் மறைத்ததாக கூறுகின்றனர் ..எண்ணிக்கையில் நிறைய இருந்த Homo sapiens சோடு எண்ணிக்கையில் குறைந்த Neanderthal கள் கலந்ததால் அவர்களின் இனம் நம்முள்ளே கரைந்து விட்டது .
எடுத்துக்காட்டாக பத்து  குள்ள குதிரைகளை நூறு உயரகுதிரைகளோடு சேர்த்து விட்டால் , குள்ள குதிரைகளது ஜீன் உயரகுதிரைகளோடு சேர்ந்து கரைந்து  விடும் , அதன் சந்ததிகள் அனைத்தும் உயரகுதிரைகளாக இருக்கும் ( உயரம் - dominant trait ) ஆனால் குள்ள குதிரையின் ஜீன் உயரகுதிரை வாரிசின் ஜீனில் கலந்து இருக்கும்.கடைசியாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது:

நமது முன்னோர்கள் குரங்கிலிருந்து தோன்றியவர்கள்,

மனிதனுக்குள் நியாண்டர்தால்கள் ஜீன் உள்ளது , அதுவும் நமது இத்தகைய அறிவுக்கு பங்களித்து உள்ளது.


இனி யாரும் உங்களிடம் வந்து நமது முன்னோர்கள் யார் என்று கேட்டால் குரங்குகள் தான் என்று சொல்லுங்கள் , எதிர்த்து வாதிட்டால் ஆய்வு முடிவுகளை எடுத்துக் காட்டி விளக்கம் கொடுங்கள்அவர்களுடைய எண்ணம் தவறு என்று நிரூபிக்கப்பட்டு விட்டதாக எடுத்து கூறுங்கள்.

நீங்கள் விடைபெறுவதற்கு முன்னால் இதையும் கேட்டுவிட்டு செல்லுங்கள்.குரங்கு போன்ற ஒன்றிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக நிமிர்ந்து தற்காலத்திய மனிதன் வந்ததாக படம் போட்டு காண்பிப்பார்களே...அதுவெல்லாம் surf excel pottu துவைததற்கு நிகரான  சுத்த உண்மை .


பின்குறிப்பு:

ஆஷிக் அண்ணன் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்திருந்தார் ,

"குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் இன்னும் ஏன் குரங்குகள் இருக்கின்றன?"

அப்பாவில் இருந்துதானே பையன் வந்தான் , அப்புறம் எப்புடி அப்பா உசுரோட இருக்காரு?


பின் பின் குறிப்பு :


சகோதரர் கார்பன் கூட்டாளி "குரோமோசோம்களின் எண்ணிக்கை பரிணாமத்தை மெய்பிக்குமா?" எனும் தனது பதிவில்


"மனிதனும் சிம்பன்ஜியும் ஒரு வழிதோன்றங்கள் என்பதற்கு குரோமோசோம்களை ஆதாரமாக கொள்வார்களானால் மனிதனுக்கு 46  குரோமோசோம்கள் அதேபோல Reevees’s Muntjac  மற்றும் Sable Antelope போன்ற விலங்கினத்திற்கும் 46 குரோமோசோம்கள் தான்ஆக மனிதனும்  அவ்விலங்குகளும் ஒன்று தான் என்று ஆகுமா?" என கேட்டிருந்தார் ,

அடுத்த பதிவில் பல ஆதாரங்களுடன் உங்களை சந்திக்கிறேன் ....

----------------------------------------------------------------------------------------------

பேசாம எனக்கும் சேவிங் செஞ்சுடுங்க சார் :5 comments:

 1. நல்ல விளக்கங்கள்..

  ReplyDelete
 2. குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்றால் இப்போதைய குரங்குகளிடமிருந்து ஏன் மனிதன் தோன்றுவதில்லை என்ற ஒரு கேள்விக்கு ..

  மனிதன் குரங்கில் இருந்து வரவில்லை, குரங்கு மற்றும் மனிதன் ஆகியோர் ஒரு மூதாதையிலிருந்து வந்திருக்கின்றன என்று ஒரு விஞ்ஞானியின் ஆய்வுக்கட்டுரை ஒன்றில். படித்து இருக்கிறேன்.(துரதிஷ்ட வசமாக அந்த விஞ்ஞானி மற்றும் ஆய்வின் பெயரை மறந்து விட்டேன்)

  இந்த விஞ்ஞானியின் பதில் உங்களது
  //இனி யாரும் உங்களிடம் வந்து நமது முன்னோர்கள் யார் என்று கேட்டால் குரங்குகள் தான் என்று சொல்லுங்கள்//

  கூற்றோடு சற்று முரண்படுவதாக தெரிகிறது. அறிவியலில் நிறைய தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் அளவிற்கு , மண்டையில் அறிவியல் மசாலா துளியும் இல்லாத எனக்கு கொஞ்சம் விளக்க முடியுமா?

  எனது கேள்வி மனிதன் குரங்கில் இருந்து வந்தானா? அல்லது குரங்கு இனம் மற்றும் மனித இனம் இரண்டும் ஒரே மூதாதையிலிருந்து தோன்றியனவா?

  ReplyDelete
  Replies
  1. சில ஆவ்யு கட்டுரைகள் நீங்கள் கூறியது போலவும் உள்ளது இதை பற்றி நிச்சயம் ஒரு பதிவு இடுகிறேன் நண்பரே

   Delete
  2. அட்ராசக்க...! அட்ராசக்க...!அட்ராசக்க...! சீக்கிரம் தாருங்கள் ! ஆவலாய் உள்ளேன்

   Delete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...