Sunday, February 5, 2012

சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா ...


சேவிங் செய்த குரங்கு 3 -கொரங்கு புத்தி  2

   

     கண்ணா பணம் , பதவி , தூக்கம் , விக்கலு , தும்மலு , கொட்டாவி இதெல்லாம் கேட்டு வராது , தானா வரும் . வந்தாலும்  ஏன்னு கேக்க முடியாது , போனாலும் தடுக்க முடியாது  .இது தலைவர் சொன்னது .

    அது போல தான் சில குணங்கள் நமது பிறவி குணங்களாக இருக்கும் ( inborn behavior )  ஏன் என்றால் அது கூடவே பிறந்தது .


     நீங்க என்ன தான் உங்க learned behavior கொண்டு கட்டு படுத்தினாலும் , அது ஒருநாள் பீரிட்டு உங்கள் சுயத்தினை வெளிப்படுத்தி விடும் .
-----------------------------------------------------------------------------------------------
   சில பேரை மட்டும் பார்த்த உடனே நமக்கு நம்மை அறியாமலேயே கடுப்பாவது ஏன் ?அவர்களை அடிக்க கைகள் பரபரப்பது ஏன் ?
------------------------------------------------------------------------------------------------------------
     தனக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் அழுவதை பார்த்தல் ஏன் பெண்கள் அழத்துவங்கி விடுகிறார்கள் ?

     ஏன் என்றால் பெண்கள் instinct கேட்டு நடப்பவர்கள் . ஆனால் ஆண்கள் learned behavior ரினால் உந்தப்பட்டு அட இதை விட     I am Sam இல் அந்த ஆளு சூப்பரா பண்ணியிருப்பானேப்பா என்று யோசிப்பார்கள் .
----------------------------------------------------------------------------------------------------------
அப்போது தான் பிறந்த குழந்தைக்கு பால் குடிக்க சொல்லி குடுத்தவர் யார் ?
----------------------------------------------------------------------------------------------------------
ஆச்சர்யப்படும் போது உங்கள் புருவம் உயர்வது ஏன் ?


அவை எல்லாமே inborn behavior .

every thing is genetically prewired பாஸ் .

நீங்க தலை எழுத்துன்னு சொல்ற எல்லாமே evolution னின் ஆதாரமாக  ஜீன்ல எழுதப்பட்டு  உள்ளது .

நீங்க evolution னை நம்புகின்றவரா   இருந்தாலும் சரி நம்பாதவரா இருந்தாலும் சரி , உங்கள் instinct டை உங்களால் எப்போதும் கட்டுபடுத்தி  வைக்க முடியாது .


அது என்றாவது உங்களை அறியாத சமத்தில் evolution னுக்கு ஆதாரமாக  வெளிப்பட்டு உங்கள் குணத்தை காட்டி விடும் .

        சிரிப்பு , அழுகை , கோபம் எல்லாமே instinct  தானுங்க .

இல்லை இல்லை இது எல்லாம் நமக்கு குரங்கு கிட்ட இருந்து வரலை , நாமளா அதை learned  behavior ரா வளத்துகிட்டோம்ன்னு  நண்பர்கள் வாதாடலாம் .
---------------------------------------------------------------------------------------------------------
ok இப்போ எடுத்துகாட்டாக நாம் புன்னகை அல்லது சிரிப்பை எடுத்து கொள்வோம்.

புன்னகைஉலகின் பொது மொழி , எல்லா கேள்விகளுக்கும் பதில் (except in interview and viva ) , பல அர்த்தங்களை உடையது , இடுக்கண் வருங்கால் சமயத்தில் கூட நகுக பண்ணுங்க .

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் .


தன்னை அறியாமல் வரும் சிரிப்பில் evolution காணலாம் .

சிரிப்பில் பலவகை உண்டு ,

                        கள்ளம் இல்லா புன்சிரிப்பு


                             அப்பாவிச்சிரிப்பு

                        நக்கல் சிரிப்பு

                          வில்ல சிரிப்பு

                        காதல் சிரிப்பு

                       தெய்வீக சிரிப்பு
---------------------------------------------------------------------------------------------------------------------------------
     அழையா விருந்தாளிகள் வீட்டுக்கு வந்தால் வராதவுக வந்துருகீங்களே  வாங்க வாங்க என்று  learned behavior ரின் துணையோடு ஒரு சிரிப்பை   உதிர்ப்போம் ( மனதுக்குள் கரிதுக்கொட்டியபடி ).

     ஆனால் அடுத்தவேளை உணவுக்கு வாடும் ஒரு ஏழைக்கு உணவளித்த பின்பு அவன்  முகத்தில் நன்றிப்பெருக்கோடு தோன்றும் புன்னகையை  learned behavior என்று சொன்னால்  , உங்களுக்கு கும்பிபாகம் confirm .


     
 --------------------------------------------------------------------------------------------
     இது எல்லாத்தையும்  விட்ருவோம் , புன்னகை  learned behavior இல்லை instict தான் என்று அறிவியல் பூர்வமாக எப்படி நிரூபிப்பது ?

பிறந்த குழந்தைக்கு யாரும் சிரிக்க சொல்லி தருவது இல்லை , பின்னர் எப்படி அது சிரிக்குது ?


அது ஏன்   அவுங்க அம்மா அப்பா சிரிக்கிறதா பார்த்து பழகி இருக்கக் கூடாதா ( learned behavior )?

நியாயமான கேள்வி .

அப்புறம் எப்புடி கண் தெரியாத , காது கேட்காத மாற்று திறனாளிகள் சிரிக்கிறார்கள் ?


எல்லாம் இங்கே இருந்து தான் வந்துருக்கு .



மாற்று திறனாளிகளின் அந்த ஒரு சிரிப்பு evolution இன் ஆதாரமாக ஒலித்துக்கொண்டே இருக்கும் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------
அதே போல தான் அழுகையும் , யார் சொல்லி கொடுத்ததும் வருவதில்லை .

அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது .


----------------------------------------------------------------------------------------
இன்னொரு முக்கியமான ஆதாரம்   ஒன்னு இருக்கு , அதை இந்த சீரிஸின் கடைசி பதிவில் பார்ப்போம் .

அப்புடி என்ன ஆதாரம் அது ?

அதுவும் சொல்லி தெரிவதில்லை category தான் .

ஐயோ பெருமாளே , நேக்கு வெக்க  வெக்கக்கமா வருதே ....




பின் குறிப்பு : 

இந்த பதிவில் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் கண்ட இடத்துல இருந்து சுட்டது .நண்பர்கள் என்னை மன்னிச்சுடுங்க . நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்லை என்று எண்ணியே நான் அவ்வாறு செய்தேன் .

4 comments:

  1. எல்லாமே சிரிகுதுன்ன ஒன்றிலிருந்து தான் ஒன்று வந்தது என்பதற்கு ஆதரமா?

    இது தலைமுறையாக கடத்த படுகிறது என்பது உண்மைதான், இது குரங்கிலிருந்து தான் கடத்தபடுகிறது என்று யார் கூறியது.??????????

    ReplyDelete
  2. check out these articles friend
    1}1998 Oct;51(4):351-4.
    The neurology and evolution of humor, laughter, and smiling: the false alarm theory.
    Ramachandran VS.
    2}Commun Integr Biol. 2010 Mar;3(2):191-4.
    The evolution of laughter in great apes and humans.
    Ross MD, Owren MJ, Zimmermann E.

    not satisfied ?
    i ll suggest u a nice book related to this issue

    ReplyDelete
  3. தயவுசெய்து உன்னோட போஸ்ட் எல்லாத்தையும் எனக்கு மெயிலுக்கு அனுப்பி வச்சிருப்பா! எப்போ போஸ்ட் போடுறன்னே தெரியல!!!! உங்க மதினி கூட சண்டை போடுறப்ப எல்லாம் உன்னோட கட்டுரைய படிச்சித்தான் ரிலாக்ஸ் ஆகுறேன்!

    ReplyDelete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...