Sunday, February 19, 2012

அப்பன்டிக்ஸ்னா என்ன பெரிய அப்பாடக்கரா - பகுதி ஒன்று - ஆய் பையன்கள்



பாசம் மிகுந்த தாய் குழந்தைக்கு என்ன ஊட்டுவாள் ?

பால் சோறு ஊட்டுவாள் 

ஆனால் kaola கரடி தனது பையனுக்கு என்ன ஊட்டுவாள் தெரியுமா ?



மலம்.


அடக்கொடுமையே , இப்படியும் ஒரு கொடூரத்தாய் உலகில் இருப்பாளா ?

பதட்டப்படாதீர்கள்

அவள் அப்படி செய்யா விட்டால் அவளின்  குழந்தை செரிக்க முடியாமல் இறந்து விடும் .


உங்களுக்கு மிகவும் பிடித்த உணவு எது ?

பிரியாணி ?

உங்களை வாழ்க்கை முழுதும் வெறும் பிரியாணியே சாப்பிடச்சொன்னால் எப்படி இருக்கும் ?
;
;
;
KOALA கரடி என்னை போல சோம்பேறி , KOALA கரடி தனது வாழ்க்கை முழுவதும் தைல இலைகளை (eucalyptus ) மட்டுமே உண்டு உயிர் வாழும் , வாழ்க்கையில் தண்ணீர் கூட குடிக்காது ( பல்லியை போலவே ) .

அது எப்படி  eucalyptus இலையை   செரிக்க வைக்கிறது ?

நான் இந்த பதிவில் கூறியிருந்த படி --- 
மாடு எப்படி நுண்ணுயிரிகளின் துணையுடன் புல்லை செரிக்க வைக்கிறதோ , அது போல  KOALA கரடி  பெருங்குடலில் உள்ள caecum பையில் இருக்கும் நுண்ணுயிரிகளின் துணையுடன் செரிக்க வைக்கிறது .
------------------------------------------------------------------------------------
   அது ஏன் தனது மலத்தை தனது குழந்தைக்கு ஊட்ட வேண்டும்?

   அந்த தைல இலையை செரிக்க உதவும் , குறிப்பிட்ட அந்த நுண்ணுயிரிகளை தனது குழந்தையின் உணவுப்பாதையில் வளரவைக்கவே இவ்வாறு செய்கிறது .
------------------------------------------------------------------------
கோலா கரடி வயிற்றில் பை உடைய marsupials இனத்தை சேர்ந்தது .

இவளாவது பரவாஇல்லை ,

  முயல் , சில வகை தாவர உண்ணி குரங்குகள் தனது மலத்தையே தின்னும் பழக்கம் உள்ளவர்கள் ,

 ஏன்  ?

பெருங்குடலால் செரிக்கப்பட்ட உணவிலிருந்து சத்தை உறிஞ்ச முடியாது , சத்தை உறிஞ்சும் வேலை சிறுகுடலினுடயது ,அதனால் முயல் அதை திரும்ப சாப்பிட்டு செரித்த உணவின் சக்தியை சிறுகுடலினால் உறிஞ்ச வைக்கிறது .




மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்பது உறுதி செய்யப்பட கருத்து.

அவனது உணவுப்பழக்கம் மாறியதால் ( தாவரங்களை உண்ணாததால் ) caecum சுருங்கதொடங்கியது .

உபயோகமில்லாத உறுப்புகள் சுருங்குவதும் , அதிகம் உபயோகப்படுத்தப்படும் உறுப்புகள் வளர்ச்சியடைவதும் இயற்கை .

ஆதாரம் .?????

டம்பிள்ஸ் தூக்குபவர்களின் புஜம் பெருப்பது hypertrophy , அதையே அவர்கள் பரம்பரை பரம்பரையாக செய்தால் ஒட்டகச்சிவிங்கி கழுத்து நீண்டது போல , ஒரு புஜபலாக்கிரமசாலி  சந்ததி உருவாகிவிடும் ,

உபயோகப்படுத்தாத உறுப்புகள் நமது கால் சுண்டு விரல் போல சுருங்கிவிடும் .
சுருங்கிய caecum தற்போது அப்பன்டிக்சாக உள்ளது ,

அப்பன்டிக்ஸ்னா என்ன ?


குடல் வால் - அப்பன்டிக்சின் வாலாட்டம் இருக்கிறதே ...... அப்பப்பா .....

இவன் இருப்பிடம் எது ? இவனால் நன்மையா ? தீமையா ?
--------------------------------------------------------------------------------------------------------
முதலில் ஜீரண உறுப்புகளின் ஒரு high lights பார்த்து விடுவோம்


சிறுகுடலில் செரிக்க பட்ட உணவின் சக்திகள் உறிஞ்சப்பட்ட பின்னர் ஒரு கூழ் போல இருக்கும் (chyme ) .நமது பெருங்குடல் ஒரு கழிவு சுத்தீகரிப்பு நிலையம் போன்றது . அது அந்த கூழில் உள்ள நீர்சத்தை உறுஞ்சி மிச்சம் இருப்பதை மலமாக வெளியேற்றுகிறது .

 பெருங்குடல் இல்லாவிட்டால் நாம் அனைவரும் கழிந்து கொண்டு இருக்க வேண்டியது தான் .

இந்த பெருங்குடலில் தான் நமது முன்னோர்களின் caeccum சுருங்கி அப்பன்டிக்சாக உள்ளது .

அப்பன்டிக்ஸ் நம்மை தவிர முயல் ,எலி , பிரைமேட்டுகள் , கோலா போன்ற மர்சுபியல்கள் (groups that have an appendix are the Glires (rodents and rabbits), primates, monotremes, and some marsupials. ) ஆகியவற்றில் உள்ளது .




இந்த அப்பன்டிக்சினால் நன்மையா , தீமையா ?

இதை பற்றி ஆஷிக் அண்ணனும் , கார்பன் கூட்டாளியும் நமக்கு புரியும் வகையில் எளிதாக விளக்கி உள்ளார்கள்
இருப்பினும் எனக்கு இதில் சில மாற்று கருத்துகள் உள்ளன , வரும் பதிவில் அப்பன்டிக்ஸ் பற்றி ஒரு நடு நிலையான பார்வையை பார்ப்போம்.

1 comment:

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...