Friday, February 17, 2012

கத்தியின்றி ,பிளேடு இன்றி , சேவிங் ஒன்று நடந்தது ...

சேவிங் செய்த குரங்கு5

    ஆல் இந்தியா டூர் போகும் போது எனது நண்பன் ஒருவனை பொண்ணுங்க முன்னாடி செமையா கலாசிட்டேன் , அப்போதிருந்து  நண்பன் pin worm infection  வந்தவனாட்டம் ரியாக்சன் குடுத்துகிட்டு இருந்தான் .


       ஒரு ஸ்டாபிங்க்ல  ரயில் நின்னுச்சு ,.நான் ஒரு பனிக்குழம்பி  ( அதாங்க ஐஸ்கிரீம் ) வாங்கி தின்னுகிட்டு இருந்தேன் , எதிர்ல உட்கார்ந்திருந்த நண்பன் கிட்ட ஐஸ்கிரீம் வேணுமான்னு கேட்டேன் , அது அவன்  " ஒரு முடியும் வேணாம்ன்னு  சொன்னான் ",

பாவம் , எந்த நேரத்துல சொன்னானோ ?

அவன் இப்ப சொட்டயாயிட்டான் .
-------------------------------------------------------------------------------------------------------------
இப்படிதான் மனிதன் சேவிங் செஞ்ச கொரங்கா ஆனானா ?

 அது எப்புடி மனிதனை நீங்கள்  சேவிங் செய்த குரங்கு என்று கூப்பிடலாம் ?

மனிதனுக்கு எவ்ளவு இடங்களில் எவ்ளவோ முடி இருக்கு தெரியுமா ?மண்டையில் , அக்குளில் , நெஞ்சில் ,......

டேய் நிறுத்துநீ  அடுத்தது என்ன சொல்ல போறன்னு எனக்கு தெரியும் .

தாடியில் , மீசையில் இருப்பது எல்லாம் முடி இல்லையா ?


------------------------------------------------------------------------------------------------------------
      உண்மை தான், மனிதன் முழுதும் சேவிங் செய்த குரங்கு அல்ல தான் .
சரி  இந்த பதிவில் ஏன் சில இடங்களில் மட்டும் முடி மிச்சம் இருக்கு என்று பாப்போம் , அடுத்த பதிவில் மத்த முடி எல்லாம் எங்க போச்சுன்னு பாப்போம் .
-------------------------------------------------------------------------------------------------------------

         ஐஸ்வர்யா ராயே முறுக்கு மீசை , நெஞ்சு நிறைய முடியோடு வந்து உங்க கிட்ட ப்ரபோஸ் பண்ணுனா என்ன பண்ணுவீங்க   ?

பின்னங்கால் படக்சுல அடிக்க தெரிச்சு ஓடிரமாட்டீங்க ?

ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடி விஷயத்துல ஏன் இவ்ளோ வித்யாசம் ?

ஆண் மயிலுக்கு தோகை மாதிரி தான் இந்த மேட்டரும் .

     நெஞ்சில் மஞ்சா சோறு + முடியுடன் கூடிய ஆணை பெண்களும் , மொழுக்கென்று இருக்கும் பெண்களை ஆண்களும் instinct டாவே விரும்புவார்கள் .

    ஏன் என்றால் அவை ஆண்மை மற்றும் பெண்மையின் அளவை தெரிவிப்பன (hormonal level ).
 -------------------------------------------------------------------------------------------------------------
பிறக்கும்  முன்பு கருவில் குழந்தை முடியால் (lanugo எனும் மெல்லிய முடிகளால்) மூடப்பட்டிருக்கும்  .

ஆனால் பிறப்பதற்கு முன் கொட்டி விடும் .

   பிறந்த சிம்பன்சி குரங்குக்கும் சரி, மனித குழந்தைக்கும் சரி , பிறக்கும் போது  மண்டையில் மட்டும் தான் முடியோடு   இருக்கும் .அது neoteny மூலமாக தாமதம் ஆனால் கிட்டத்தட்ட மனிதன் போலவே  தோற்றம் அளிக்கும் .

     சிறுவயதில் நாம் அக்குளில் ஜாலியாக காற்று வாங்கிக்கொண்டு திரிவோம் , ஆனால் வயதுக்கு வந்து ஹார்மோன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது கண்ட இடங்களில் முடி வளர்த்து விடுகிறது .

   சரி மீசை , நெஞ்சில் முடி எல்லாம் ஆண்களுக்கு மட்டுமே உள்ளது , ஆனால் கண்ட இடங்களில் ( தப்பு, தப்பு ....... காணாத இடங்களில்--- சரி விடுங்க கண்டும் காணாத இடங்களில்  ) பெண்களுக்கும் ஆண்களுக்கும் முடி உள்ளதே ?.

மாட்டிகிட்டீங்களா ?மாட்டிகிட்டீங்களா ?

வெயிடீஸ் ப்ளீஸ் .

ஆடு மாடுகள் சில சமயம் ( " அந்த " சமயத்தில் ) மேல் உதட்டை மேலே உயர்த்தி எதையோ மோப்பம் பிடிப்பதை கண்டிருக்கலாம் ,

பாத்ததில்லையா ?

நாய் மோப்பம் பிடிப்பதை பார்த்திருப்பீர்களே ?


அது என்னத்தை மோப்பம் பிடிக்குது ?

பெண் வாசனை ( pheramone ) , அதனை மோப்பம் பிடித்து தான் பின்னர் கிளந்து எழும் .

இதே போல ஆண் வாசனையும் உண்டு .

    நமக்கு மோப்பசக்தி கம்மி , அதனால் அக்குளில் மற்றும் தொடை இடுக்குகளில் இருக்கும் pheramone சுரப்பிகளின்  வாசனையை பிடித்து வைத்து சிறுக சிறுக காற்றில் காலத்து விடும் வேலையை இந்த முடிகள் செய்கின்றன(scent trapping) , அதனால் தான் தலையில் இருக்கும் முடியை போல அல்லாமல் அதன் அமைப்பு ( புதர் போன்ற அமைப்பு ) வித்யாசமாக உள்ளது , முடியும் தடிமனாக , சுருளாக காணப்படும் .

  நாம என்னடான்னா என்றால்  அதை சிரைத்துவிட்டு , Axe அடித்து கரெக்ட் பண்ண முயன்று கொண்டுள்ளோம் .


  Andron என்று ஒரு சென்ட்டு உள்ளது , அது ஒரு அவுன்சுக்கு 275 டாலர் ( பணம் ) ,
என்னாத்துக்கு அது  அவ்ளோ ரூபாய் ?

  ஒன்னும் இல்ல , அதுல தவ்ளூண்டு pheramone கலந்து விட்டுருக்காய்ங்க .


-------------------------------------------------------------------------------------------------------------
சரி மனிதனுக்கு மட்டும் மண்டையில் எதற்கு இவ்ளோ முடி ?

   காட்டில் வாழும் எந்த குரங்குக்கும் மண்டையில் இவ்ளோ முடி இல்லை தான் , ஆனால் சில கொரில்லாகளுக்கும் ,சில சிம்பசிக்களுக்கும் ,ஒராங்குடான்களுக்கும்  zoo வில் வளர்க்கும் போது மண்டையில் நிறைய முடி வளர ஆரம்பித்து , நான் தான் உனது தாத்தா என்று சொல்லாமல் சொன்னது .


சரி மிச்ச முடியெல்லாம் எங்கே போச்சு ?

பொறுமையாய் பாப்போம்  .......
----------------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு :

மைசூர்  zoo ஒரு கொரங்கு இருக்கு , திடீர்னு உடம்பில் எல்லா முடியும் அதுக்கு கொட்டி போச்சு , இது மாதிரி நிறைய உலகம் முழுதும் கொரங்குக்கு நடந்து இருக்கு (cinder,ashes ).
இதோ உங்களுக்கு மிகவும் பரிச்சயமான அவைகளின் புகைப்படங்கள் .


----------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்வி :

உடம்பில் மயிரே இல்லாத நமக்கு எதுக்கு மயிர்  சிலிர்கிறது ?


பரிணாமத்தை எதிர்க்கும் நண்பர்களே ,இந்த ஒரு கேள்விக்கு பதில் (இறைவன்  செயல் என்னும்  பதிலை  தவிர  சரியான பதில் ) சொல்லிவிடுங்கள் , இனி பதிவு எழுதுவதையே விட்டு விட்டு நல்ல மாடுகளுக்கு ஒரு ஊசி போடுவதை மட்டும் செய்கிறேன் .
key words to search: arrector pili /erector pilus  - vestigial muscle  , goose flush , anger behavior in man and apes.

19 comments:

 1. முடியில ....இம்புட்டு விஷயமா..?

  ReplyDelete
 2. இன்னும் நிறைய இருக்கு சார் , நேரம் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளலாம்

  ReplyDelete
 3. nice post... and also thanks for visiting to my blog sir.. :)

  ReplyDelete
 4. niraya visayangai pakirthu ullerkal.. nandri.. indre ellavarayum padikiren ... nandri..

  ReplyDelete
 5. ஏராளமான தகவல்கள், தொடருங்கள் டாக்டர், அனைத்தையும் படித்துக் கொண்டிருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. ஊக்கத்திற்கு நன்றி சார்

   Delete
 6. //பரிணாமத்தை எதிர்க்கும் நண்பர்களே ,இந்த ஒரு கேள்விக்கு பதில் (இறைவன் செயல் என்னும் பதிலை தவிர சரியான பதில் ) சொல்லிவிடுங்கள் , இனி பதிவு எழுதுவதையே விட்டு விட்டு நல்ல மாடுகளுக்கு ஒரு ஊசி போடுவதை மட்டும் செய்கிறேன் .//

  இதுவெல்லாம் தானாக வந்தது (இறைவன் இல்லை என்பதை) என்பதை நிரூபியுங்கள், நான் பதிவு எழுதுவதையே விட்டு விடுகிறேன்.

  //key words to search: arrector pili /erector pilus - vestigial muscle , goose flush , anger behavior in man and apes.//

  ஏற்கனவே vestigial organ என்று கூறிய அனைத்தும் தற்போது தேவையான உறுப்பு என்று ஆகியது, இப்ப புதுசா .??

  எதற்கெடுத்தாலும் பரிணாமத்தில் பொய் நிற்காமல் வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்றும் யோசியுங்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. //ஏற்கனவே vestigial organ என்று கூறிய அனைத்தும் தற்போது தேவையான உறுப்பு என்று ஆகியது, இப்ப புதுசா .?//

   அடுத்த பதிவு அது தான் நண்பா .

   //எதற்கெடுத்தாலும் பரிணாமத்தில் பொய் நிற்காமல் வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்றும் யோசியுங்கள் சகோ.//

   அறிவியல் தான் எனக்கு தெரிந்த ஒரே வழி , அதும் பரிணாமம் my subject of interest சகோ

   Delete
  2. //இதுவெல்லாம் தானாக வந்தது (இறைவன் இல்லை என்பதை) என்பதை நிரூபியுங்கள், நான் பதிவு எழுதுவதையே விட்டு விடுகிறேன்//

   உண்மை தான் அர்த்தம் இல்லாமல் தானாக எதுவும் இந்த உலகில் நடக்காது தான் , இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதும் அறிவியலால் (தற்போதைய நிலவரத்தின் படி ) எட்ட முடியாத ஒன்று தான் . ஆனால் பரிணாமம் என்பது உண்மை , அதை தாங்கள் நடக்கவே இல்லை எனும் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருவதால் தான் அதை எனது பதிவுகளின் மூலம் நிரூபிக்க முயற்சிக்கின்றேன் . உண்மையில் உங்களின் பதிவுகள் எனக்கு பிடித்தவை , நான் எழுதுவதை விட வாசிப்பதை தான் மிகவும் விரும்புவேன் ,உங்களின் இ . noolagam போன்ற நல்ல முயற்சியின் ரசிகன் நான் , ஆஷிக் அண்ணனின் சமூக அக்கறை அவரது பல பதிவுகளில் உள்ளதை என்னால் உணரமுடிந்தது(http://www.ethirkkural.com/2010/02/blog-post_24.html ,http://www.ethirkkural.com/2011/10/zoo.html ) , இருப்பினும் உங்கள் பதிவுகளில் நீங்கள் எல்லாவற்றையும் அருமையாக விளக்கி விட்டு ,சடாரென்று இறைவனை திணித்து ,தங்களின் அதீத அறிவாற்றலினாலும் , சிறந்த சொல்லாடலினாலும் அறிவியலின் அடிப்படையை அசைக்க முயற்சிப்பதால் தான் நான் பதிலுக்கு பதிவு எழுதுகிறேன் .

   Delete
 7. குரங்கிற்கு வேர்க்கிறது மனிதனுக்கும் வேர்க்கிறது, குரங்கு சாப்பிடுகிறது மனிதனும் சாப்பிடுகிறான் எதுவெல்லாம் காரணமா சகோ.

  பறவை உடம்பும் செல்கலால் ஆனது மனித உடம்பும் செல்களால் ஆனது அதனால் அதிலிருந்து இது வந்தது என்று கூறுவீர்கள் போல. அனைத்திற்கும் அடிப்படை ஒன்று தான், அதை காரணமாக காட்டாதீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. //குரங்கிற்கு வேர்க்கிறது மனிதனுக்கும் வேர்க்கிறது, குரங்கு சாப்பிடுகிறது மனிதனும் சாப்பிடுகிறான் எதுவெல்லாம் காரணமா சகோ.//

   பின்னே இல்லை என்பீர்களா ?

   குரங்கிற்கு வேர்க்கிறது மனிதனுக்கும் வேர்க்கிறது

   (Eccrine sweat glands are found only in primates and reach their greatest development in humans. They are distributed all over the body (except for the lips, tip of penis and clitoris) although their density varies from region to region. Humans utilize eccrine sweat glands as primary form of cooling. The human thermal eccrine system has evolved in concert with bipedalism and development of smooth hairless skin .
   The evolution of sweat glands.
   Folk GE Jr, Semken HA Jr.
   Mammals have two kinds of sweat glands, apocrine and eccrine, which provide for thermal cooling. In this paper we describe the distribution and characteristics of these glands in selected mammals, especially primates, and reject the suggested development of the eccrine gland from the apocrine gland during the Tertiary geological period. The evidence strongly suggests that the two glands, depending on the presence or absence of fur, have equal and similar functions among mammals; apocrine glands are not primitive. However, there is a unique and remarkable thermal eccrine system in humans; we suggest that this system evolved in concert with bipedalism and a smooth hairless skin.)

   உங்களுக்கு தெரியுமா mammary gland ஏ ஒரு வகையான மாற்றம் அடைந்த வியர்வை சுரப்பி தான் .

   Delete
  2. //குரங்கு சாப்பிடுகிறது மனிதனும் சாப்பிடுகிறான் எதுவெல்லாம் காரணமா சகோ.//
   organ of prehension , feeding , masticating , digestive enzymes இதை பற்றி பல பதிவுகள் எழுதலாம் , இதை பற்றி நாம் appendix பற்றி எழுத இருக்கும் பதிவுகளில் விவாதிப்போம் சகோ .

   Delete
  3. //பறவை உடம்பும் செல்கலால் ஆனது மனித உடம்பும் செல்களால் ஆனது அதனால் அதிலிருந்து இது வந்தது என்று கூறுவீர்கள் போல. அனைத்திற்கும் அடிப்படை ஒன்று தான், அதை காரணமாக காட்டாதீர்கள்.//


   இல்லை சகோ அது தான் ஒரு முக்கிய ஆதாரம் ,
   செல் லெவெலில் எழுத எனக்கும் ஆசை தான் , அதுவும் மைட்டோகான்றியா நமது செல்லுக்குள் புகுந்ததிலிருந்து -Endosymbiosis and The Origin of Eukaryotes(http://users.rcn.com/jkimball.ma.ultranet/BiologyPages/E/Endosymbiosis.html ), DNA அளவில் பல ஆதாரங்கள் இருக்கு , நீங்கள் கூட அதை பற்றி ஒரு பதிவில் சிறப்பாக விளக்கி இருந்தீர்கள் ( கோவேறு கழுதை பற்றிய பதிவு ) , எனக்கு முதலில் நான் ஆசைப்பட்ட ஒரு நிலையான வேலை கிடைக்கட்டும் , பொறுமையாக விவாதிப்போம் .

   Delete
 8. கண்டிப்பாக வேலை கிடைக்கும் தம்பி! அந்த நாள் வெகு தொலைவில் இல்லை! சரி! சரி! பார்ட்டி எப்போ?

  ReplyDelete
  Replies
  1. கிட்ட தட்ட கிடைச்சிடுச்சு அண்ணா . பார்ட்டி தானே ,,, பட்டய கிளப்பிடலாம்

   Delete
 9. hair less maonkey gor very good arms.. Excersice pannumo?

  ReplyDelete
  Replies
  1. அந்த mysore குரங்கு ஊசி போட்ட ஒரு டாக்டரையே முதுகு டிஸ்க் நழுவுற அளவுக்கு பவர் காட்டியிருக்கு சார்

   Delete
 10. Thanks for the informative news, backed with interesting photography. You deserve one Vitamin Injection FREE.

  ReplyDelete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...