Saturday, January 14, 2012

கற்றது வெட்னரி-அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்


தொடர்ந்து நாலு நாள் விடுமுறை , அப்பாடா வீட்டுக்கு ஓடிரலாம், வீட்ல போய் என்ன பண்ணலாம் ?

வீட்டில் :

அப்பா : என்னடா எங்க bag உம் கையுமா எங்க  கிளம்பிட்ட   ?

நான் : veterinary  ஆஸ்பத்திரி போறேன்ப்பா.

அப்பா : எதுக்கு ?

நான் : தொழில் கத்துக்க.

ஆஸ்பத்திரில் நீண்ட வரிசையில் கையில் கோழி , நாய் , ஆடுகளோடு மக்கள் நின்று கொண்டிருந்தார்கள் , அந்த வரிசையில் நானும் ஒரு கையில் shoulder bag கோடு நின்றேன் , பைக்குள் பாம்பு வைத்திருப்பானோ என்றபடி எல்லோரும் என்னை ஒரு ரேஞ்சாக பார்த்தனர் .

வானத்தை வெறித்தபடி தாடையை சொரிந்து கொண்டு நின்றேன்
எனது முறை வந்தது .டாக்டர் என்னையும் எனது bag யும்  ஒரு மாதிரியாக பார்த்தார்.

டாக்டர் : தம்பி பையில என்ன கொண்டு வந்துருகீக ? அணிலா ?

நான் : அனாடமி புஸ்தகம் சார் .

டாக்டர் : நாங்க அதுக்கு எல்லாம் வைத்தியம் பாக்குறது இல்ல .

அந்த ஜோக்குக்கு (?) என்ன தவிர எல்லோரும் சிரித்து என்னை அவமானத்தின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றார்கள்   .

டாக்டர் : தம்பி என்ன வேணும் ?

நான் : Fist Year வெட்னரி படிக்கிறேன் சார் .

டாக்டர் உடனே அட்டன்டரை நோக்கி : கிருஷ்ணா டாக்டருக்கு ஒரு சேர் கொண்டு வந்து போடுப்பா .

ஆகா ………………" டாக்டர் " ………..அந்த சொல்லால் என்னை முதன் முதலில் கூப்பிட்டது அவர் தான் . என்னை பாத்து ஐஸ்வர்யா ராய் I love u ன்னு சொல்லிருந்தா கூட அவ்ளோ சந்தோஷ பட்டுருக்க மாட்டேன் ..............

நானும் மதுரக்காரந்தான்டான்னு எல்லோரும் படத்துல சொல்ற மாதிரி , மனசுக்குலயே நானும் டாக்டர் தாண்டான்னு பெருமிதமா சொல்லி பாத்துக்கிட்டேன் .

டாக்டர் : டாக்டர் நம்ம காலேஜு எப்புடி இருக்கு ?

சும்மாவே நான் லொட லொடன்னு பேசுவேன் , பேசுடான்னு ஒரு பெரிய மனுஷன் நாம்மள பாத்து கேட்டுட்டாரு , விடுவனா ?

மாடு ஒன்றுடன் நின்றிந்த விவசாயி ஒருவர் ,காலையிலேயே வந்து வேல நேரத்துல இந்த ஆமவாயன்  உயிரை எடுக்குரானே ,என்பது போல என்னை முறைத்து கொண்டே இருந்தார் .

அதை கண்ட டாக்டர் ' தம்பி நாம பொறுமையா பேசுவோம் ', என்று கையில் கிளவுஸை மாட்டினார்.

நான் உடனே அவரை பார்த்து , சார் எனக்கும் ஒரு கிளவுஸ் தாங்களேன் , நானும் கத்துகிறேன் ,'என்றேன் .

திரும்ப அந்த பெரியவர் என்னை பார்த்து முறைத்தார் ,

அதை கண்ட டாக்டர் சிரித்துக்கொண்டே ," தம்பி ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல , சரி Per Rectal Examination பத்தி கொஞ்சம் படிச்சுட்டு வாங்க, நாளைக்கு சொல்லி தரேன் '.

மாடு வைத்திருந்த பெரியவர் நிம்மதிப்பெருமூச்சு விட்டார் .

அன்று இரவு நான் ," uterus is two horned strucutre ......follicule is fluid filled soft...........luteal cyst............,"


அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் ,


திரும்பவும் அதே பெரியவர் வேறு ஒரு மாட்டை பிடித்து கொண்டு , அதே உஷ்ண முறைப்பை என்னை நோக்கி வீசிக்கொண்டே இருந்தார் .
கொஞ்சம் லேட்டா போய்ட்டேன் , டாக்டர் மாட்டுக்கு சினை ஊசி போட ஆரம்பித்து இருந்தார் .


டாக்டர் : என்ன டாக்டர் எதாச்சும் படிசீங்களா ?

நான் விறைப்பாக : yes sir .

டாக்டர் : என்ன படிச்சீங்க ?

நான் :uterus is two horned strucutre ......follicule is fluid filled soft...........luteal cyst............,

பெரியவர் அதிர்ச்சியாகி , இவ்ளோ நேரம் நல்லா தானேப்பா இருந்தான் என்பத போல ஒரு வித்யாசமான பார்வையை பார்த்தார் .

நான் அதை கண்டும் காணாதது போல luteal cyst  is ,,,.............

டாக்டர் : கிருஷ்ணா டாக்டருக்கு ஒரு கிளவுஸ்   குடுப்பா .

ஆர்வமாய் கிளவுஸை மாட்டிகொண்டு மாட்டின் பின்னால் போய் நின்றேன் ,

பெரியவர் என்னை பார்த்து ,இவன் உள்ள என்னத்த அத்து விடப்போரானோ  என்று நினைத்த படி  ஒரு பயம் கலந்த பார்வையை காட்டினார் .
அதை கண்டும் காணாதவாறு நான் பின்னால் கை விட்டேன் .


டாக்டர் : தம்பி உள்ள என்ன தெரியிது ?

நான், ஒன்னுமே புரியலயே , இருட்டு அறையில எப்பிடி கருப்பு பூனையை  தேடுரதுன்னு குழம்பி நின்னேன் .

டாக்டர் : தம்பி உங்களைதான் ,உள்ள என்ன தெரியிது ?

அந்த பெரியவர் வேற , என்ன வெறும் வாயி  தான் வேல செய்யிது ங்குற மாதிரி என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்,

எதையாவது சொல்லி சமாளிடா dolittle ….

நான் :உள்ள ஒரு Solid  Mass  தெரியிது சார் .

டாக்டர் : டாக்டர் அதுக்கு பேருதான் சாணி , அத முதல்ல வாரி வெளிய போடுங்க .

பெரியவர் ,அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் ,ரேஞ்சில் வாய் விட்டு சிரித்தார்  .


ஒரு விஷயம் அன்று எனக்கு தெளிவாக புரிந்தது , " ஏட்டு சுரைக்காயை வைத்து BURGER செய்ய முடியாது ".

8 comments:

 1. ஓஹோ...மாட்டு டாக்டரா/////

  ReplyDelete
 2. yes anna , for all maadu ayyaa thaan doctor

  ReplyDelete
 3. ஆமா! அந்த மாட்டுக்கு என்னத்தான் பிரச்சினை? கண்டுபிடிச்சீங்களா இல்லையா? சாணி இருந்தது ஓகே! வேற என்ன இருந்தது?

  ReplyDelete
 4. அண்ணே இப்ப விட்டா கண்டுபிடுச்சுடுவேன் , ஆனா அப்ப ஒன்னுமே தெரியல

  ReplyDelete
 5. ஏம்பா டூலிட்டில்! எங்க வீட்டு நிம்மிக்கு இந்த solid mass ப்ராப்ளம் இருக்குப்பா கொஞ்சம் வாரி வெளிய போட்டுடுறியா?

  ReplyDelete
 6. ஒரே பேதிமாதிரை , all mass out

  ReplyDelete
  Replies
  1. நோ.. எனக்கு நீங்க கையவுட்டு தான் எடுக்கணும். நீங்க தான் கைராசியான டாக்டராமே....

   Delete
  2. பீஸ் நிறைய ஆகுமே

   Delete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...