Thursday, January 5, 2012

கற்றது வெட்னரி -போடுங்கம்மா கோட்டு


நான் புது பிரஷ் வாங்குனாலே , அது மத்தியான நேரமா இருந்தாலும் விளக்கி பாத்து சந்தோஷ படுற ஆளு ( அந்த சமயம் மட்டும் தான் பல்லு விளக்குவேன் , மத்த படி பேஸ்ட்ட தின்னுட்டு வாய் கொப்புளிச்சுட்டு வந்துடுவேன் ).

   டாக்டர் கோட்  மாட்டனும்ன்னு நெடு நாள் கனவு .....
நானும் எங்க அப்பாவும் கடை கடையா ஏறி எறங்கி ஒரு சூப்பர் கோட்ட வாங்கினோம் ,

காலேஜ்  துவங்கி இரண்டு நாட்களே ஆகியிருந்தது , அன்று  விடுதி வாசலில் notice board இவ்வாறு அறிவித்தது  ,” முதல் கிளாஸ் , அனாடமி ப்ராக்டிகல்ஸ் அனைவரும் தவறாமல் வர வேண்டும் , வரும் போது shoe  மற்றும் கோட் கட்டாயம் அணிந்து வர வேண்டும் ".
நான் பொங்கலுக்கே வெடி வெடிக்கிற ஆளு தீபாவளி வந்தா விடுவனா ?
புது கோட்டா இருந்தாலும் , மடித்து வைத்த இடத்தில , லைட்டா அழுக்கு படிந்திருந்தது ,

விடுவனா ?

கரை நல்லதுங்குற வேலை எல்லாம் என்கிட்ட ஆவாது , போய் நல்லா surf exel போட்டு தொவச்சேன் .

ரூம்ல நைட் பூரா கோட்ட போட்டுபாகுறதும் கழட்டுரதுமா  இருந்தேன் , எத்தன தடவ அந்த கோட்ட இஸ்திரி போட்டேன்னு எனக்கே தெரியாது .
இதை கவனித்து கொண்டிருந்த என்னோட புது ரூம் மெட் ரெண்டுபேரும் நல்ல கிறுக்கன் கிட்ட மாட்டிகிட்டோம்டா என்று mind voice சில் பேசியது எனக்கு கேட்காமலில்லை , இருந்தாலும் ," கோட் முக்கியம் அமைச்சரே"....
அதுவும் அனாடமி table ல ஆறு ஆறு பேரா உட்கார வைப்பாங்க , attendance order  படி எனக்கு முன்னாடியும் பின்னாடியும் பொண்ணுங்க ( எப்புடி இருப்பாங்களோ தெரியலயே),

எப்படா விடியும்ன்னு நினச்சபடி உறங்கிப்போனேன் .

 அடுத்த நாள் ...........

கையில கோட்டு , காலுல புது shoe , பாக்கெட்ல அப்பா வாங்கி கொடுத்த புது camelin  பேனா கலக்குரே dolittle ன்னு எனக்கு நானே சொல்லிக்கொண்டு , தலைவரின் வெற்றி கோடி கட்டு பாடலை மனசுக்குள் ஓடவிட்ட படி காலேஜ் நோக்கி விடுதியில் இருந்து கால்கள் வேகமாக புறப்பட்டது .
சீனியர் ரெண்டுபேர் :


சீனியர் 1 : மச்சி வார்டுக்கு ஏண்டா அழுக்கு கோட்ட போட்டுட்டு போற , அங்க பாரு ஒருத்தன் புது கோட்ட போட்டுட்டு போறான் ,

சீனியர் 2 : டாய் first year இங்க வா .

next சீன் , அனாடமி lab  வாசல் :


அனாடமி புரபசர் என்னை நோக்கி  : முதல் நாளே அழுக்கு கோட் , ஓட்ட பேனா ( மை டியர் camelin உன்னையும் சுட்டு டானுங்களே ) , இதெல்லாம் படிக்க வருதா , பாத்ரூம் கழுவ வருதான்னே தெரியல , நம்ம உசுர எடுக்கரதுக்குனே வருவானுங்க , உள்ள போய் தொல ...
சுற்றி இருந்த பெண்களின் கேவலாமான பார்வையை  அலட்சியம் செய்த படி உள்ளே சென்றேன் .( போங்கடி எத்தன பாத்துருக்கோம் இதுமாதிரி ) .


நான் பல்லி செத்து கிடந்தாலே பாத்ரூம் போய்டுவேன் ,

உள்ளே நான் கண்ட காட்சி….


என் நண்பன் : என்னப்பா  யானையெல்லாம் செத்து கிடக்கு .

நான் :        அது யானையில்ல முகேஷா , எருமை .

 குதிரை , மாடு , குரங்கு எல்லாத்தையும் நான் உசுரோடயே ஒழுங்கா பாத்தது  இல்ல , எல்லாம் என் கண்ணு முன்னாடி எலும்புகூடா நிக்குதுங்க .
ஐயோ நான் இல்லீங் ....  


( பேசுமேன்ட்டு  வீக்கா இருந்தாலும் பில்டிங்க ஸ்ட்ராங்காக்கிகிட்டு ஒரு கெத்தான பார்வையை முன்னால் அமர்திருந்த பெண்களுக்கு வீசினேன் ).


எனது காலேஜ் வாழ்கையின் final  இயர் :


என் நண்பன் : மச்சி வார்டுக்கு ஏண்டா அழுக்கு கோட்ட போட்டுட்டு போற?

நான் :           இந்த கருமத்த எவன்டா துவைப்பான் ?

 என் நண்பன் : மச்சி அங்க பாரு ஒருத்தன் புது கோட்ட போட்டுட்டு போறான்.

நான் ( மனசுக்குலயே ): எவ்ளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா ?

4 comments:

  1. எவ்ளோ பண்ணினாலும் உங்க அலும்பலை நிறுத்த முடியலையே! ஆமா, //டோட்டு தில்லோனுகா இலாஜு ஹே அஞ்சும்// அப்படின்னா என்ன?

    ReplyDelete
  2. ///நான் பொங்கலுக்கே வெடி வெடிக்கிற ஆளு தீபாவளி வந்தா விடுவனா ?///

    ஒரே அருவியா கொட்டுது போங்கோ! சிரிச்சு முடியல!

    ReplyDelete
  3. // எப்புடி இருப்பாங்களோ தெரியலயே///

    அந்த களோபரத்திலும் ஒரு கிளு கிளுப்பு!

    ReplyDelete
  4. //எவ்ளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா ?//

    இவந்தாண்டா சீனியரு!

    ReplyDelete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...