Sunday, January 1, 2012

பரிணாமமும் பறவைகளும்


தேவை தான் கண்டுபிடிப்புகளின் தாய்
அது போல," தேவை தான் evalution னின் தாயும் கூட ".

ஒரு சின்ன கதை ,
சாதுவான மக்கள் நிறைந்த ஒரு ஊர் , அந்த ஊர்ல பலசாலியான அர்னால்ட் போன்ற மக்களும் , Dr. Dolittle  போன்ற மிக அதிபயயங்கர வீரபராக்கிரமா   பலசாலிகளும் இருந்தனர் ,
திடீரென்று காட்டு விலங்குகள் அந்த ஊரை தாக்கின , கடைசியில் பலசாலிகள் மட்டும் பிழைத்தனர் .

இப்ப ஒரு உண்மைக்கதை :
நம்ம கொசு விரட்டும் கருவி உபயோகிரோமே அதில் ட்ரான்ஸ் fluthrin போன்ற பைரத்திராய்ட் காம்பவுண்டுகள் கொண்டு  ( முன்னர் இவற்றை சாமந்தி பூவிலிருந்து எடுத்து வந்தார்கள் )   கொசுக்களை விரட்டுகிறார்கள் .
நம்ம சின்ன பசங்களா இருக்கும் பொது சாதுவான (?) கொசுக்களை கொல்ல அத உபயோகிச்சாங்க ( ஒரு பேச்சுக்கு ஒரு சதவீத அளவுக்கு உபயோகிச்சாங்கன்னு வச்சுக்குவோம் ).
அப்ப எல்லா கொசுவும்  செத்துதா ?
இல்லையே , அர்னால்ட் ம் , Dr. Dolittle  போன்ற கொசுக்கள் ( அதாவது அந்த 1 % க்கு தாக்கு பிடிச்ச கொசுக்கள் ) உயிரோட இருந்துச்சு .அவை பல்கி பெருகுச்சு .
என்ன பண்ணலாம் ?
so இப்ப 2 % மருந்த குடுத்தாங்க .அப்ப எல்லா கொசுவும்  செத்துதா ?
Dr. Dolittle போன்ற அதிபயங்கர பலசாலிகள் பிழைதுக்கொண்டார்கள் .
அப்புறம் 3 %......................................

இப்புடி தான் ஒரு பலசாலி கொசுக்கூட்டம் evolve ஆச்சு  .

evolution இப்படியும் நடக்கலாம் , இல்ல ஒட்டகச்சிவிங்கி கழுத்து மாதிரி ஒரு தேவைக்காகவும் நடக்கலாம் , இல்ல இன்னும் பல காரணங்களின் மூலமாகவும் நடக்கலாம் .

 இப்ப எதுக்கு டாக்டர் இந்த தேவையில்லாத ஆணியெல்லாம் புடுங்குறீங்க , நீங்க என்ன பெரிய புடுங்கியான்னு  நீங்க கேக்கலாம் ... 

அதெல்லாம் ஒன்னும்  இல்ல , சகோதரர் கார்பன் கூட்டாளி "  பரிணாமவாதிகளின் வாதப்படி உடனே இறக்கை வந்திருக்காது எப்படியும் இரண்டு மில்லியன் (அப்பொழுது தான் யாராலும் கேள்வி கேட்க முடியாது அல்லவா!!) வருடத்தில் தான் இந்த இறக்கை முளைத்தது என்றால், பறவைக்கு கொஞ்சம் கொஞ்சமாவது இறக்கை முளைத்திருக்க வேண்டும் (இறக்கை திடிரென ஒரே நாளில் முளைத்தது என்று கூறினால் கூட அது ஒரு வாதத்திற்கு சரியாக இருந்திருக்கும்). முதலில் இறக்கை துளிர் விட்டிருக்கும் பிறகு ஒரு பகுதி இறக்கை உருவாகி இருக்கும் ஆனாலும் பறவையால் பறக்க முடியாது, எதற்காக ஒரு உபயோகம் இல்லாத இறக்கையை வைத்து கொண்டு பல மில்லியன் வருடங்கள் அந்த பறவைகள் வாழ வேண்டும். உபயோகம் இல்லாத இறக்கையை எதற்கு ஐயா அது வளர்க்க வேண்டும். 

அப்படியெனில் பறவையின் ஒவ்வொரு சந்ததிக்கும் அது சொல்லி கொடுத்ததோ, இன்னும் ஐநூறு தலைமுறையில் நமக்கு இறக்கை என்ற ஒரு பொருள் வரும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இறக்கையை வளர்த்து கொண்டு கடைசியில் பறக்கலாம் என்று!! 

சில வகையான பறவைகள் முழுமையான இறக்கை முளைக்காமல் பாதி இறக்கையுடன் தளர்ந்து பிறகு மரத்தில் ஏறி ஏறி கை முளைத்து மற்றொரு உயிரினமாக மாறியது என்பது இவர்களின் கதைகளின் தொடர்ச்சி. இந்த அடிப்படை இல்லாத கதைகளை நம்புபவர்களை என்னவென்று கூறுவது?    " இவ்வாறு கூறியிருந்தார் .http://carbonfriend.blogspot.com/2010/08/5.html

 அப்ப அவருக்கூட நீங்க சண்ட போட போறீங்க ?

இல்லைங்க , சகோதரர் தான் " பரிணாமம் என்பது ஒரு கட்டுக்கதை என்பதை நம்முடைய கட்டுரையின் வாயிலாக சொல்லி வருகிறோம், நாம் ஆதாரம் இல்லாத கருத்துக்களையோ மனதில் பட்டவைகளையோ பதியாமல் உறுதி செய்த பிறகே பதிகிறோம். நம்முடைய கருத்து தவறு என்று தகுந்த ஆதாரத்துடன் நிருபிப்பார்கலானால் அதை ஏற்று கொள்ளவும் தயாராக இருக்கிறோம்  "        கூறியிருந்தார் .

இதோ சில ஆதாரங்கள்,

"பரிணாமவாதிகளின் வாதப்படி உடனே இறக்கை வந்திருக்காது எப்படியும் இரண்டு மில்லியன் (அப்பொழுது தான் யாராலும் கேள்வி கேட்க முடியாது அல்லவா!!) வருடத்தில் தான் இந்த இறக்கை முளைத்தது என்றால், பறவைக்கு கொஞ்சம் கொஞ்சமாவது இறக்கை முளைத்திருக்க வேண்டும் (இறக்கை திடிரென ஒரே நாளில் முளைத்தது என்று கூறினால் கூட அது ஒரு வாதத்திற்கு சரியாக இருந்திருக்கும்"

உண்மையிலயே கொஞ்ச கொஞ்சமாக மில்லியன் வருடக்கணக்கில் உருவானது தான் இறக்கை .

ஓகே ... இன்னொரு கதை ,
 காட்டுல உங்கள ஒரு சிங்கக்கூட்டம் துரத்துது ( தலைவர் சொல்ற மாதிரி சிங்கம் சிங்கிளா  எல்லாம் வராது  , கூட்டமா தான் வரும் ), என்ன பண்ணுவீங்க?
பக்கத்துல எதாச்சும் மரம் இருந்தா ஏறிடுவீங்க தானே ?
மரத்துல லெபார்ட் ( lepord ) இருக்குமே என்ன பண்ணுவீங்க ?
அடுத்த மரத்துக்கு தாவிட வேண்டியது தான் .
 so  பறப்பதற்கான தேவை எப்புடி வந்திருக்கலாம் ?
உணவு ?
எதிரிகளிடம் இருந்து தப்பிக்க ?
கூடு கட்டுவர்தற்கு பாதுகாப்பான இடம் ? etc etc .........
 அது எப்புடி உடனே பறந்துச்சு ?
அது முதல்ல பறக்கல , காத்துல சருக்குச்சு (  Gliding )
இப்ப இந்த அணில பாருங்களேன்இதுக்கு ரெக்கை இல்ல , ஆனாலும் காத்துல பறக்குது  . இத யார் இதுக்கு சொல்லி குடுத்தா ?
நான் சொல்ற மாதிரி சிந்திச்சு பாருங்களேன் ,
இதோட முன்னோர் அணிலுக்கு அக்குளுக்குள்ள (axilla region ) மத்த அணிலவிட கொஞ்சம் கூடுதல் தோல் இருந்திருக்கலாம் (இந்த வகைல அது கூட்டதிலயே பலசாலி அணில் ?) .

எதிரிங்க யாரவது வரும் போது "குதிடா   கைப்புள்ள " ன்னு மரத்துலேர்ந்து குதிச்சு , glide பண்ண பழகி , அந்த ஐடியா work out  ஆகி , அப்புடியே evolve ஆகியிருக்கும் . ( எல்லாமே hypothesis தானா , எதையுமே நிரூபிக்கலையா? - வெயிடீஸ் ப்ளீஸ் , பின்னாடி சொல்றேன் ) .
நம்ம வௌவால் , இந்த பாம்புஅந்த மீன் எல்லாரும் கிளைடிங் பண்ற கண்கொள்ளா காட்சிய பாருங்களேன் .

இதெல்லாம் ஓகே . ரெக்கை எங்க இருந்து வந்துச்சு ,

evolution is an continuous process ,

இதற்க்கு அடுத்த கட்டம் தான் ரெக்கை .

 இந்த பல்லிய பாருங்களேன் , பாக்க பறவை மாதிரி இருக்குல்ல ,
ஆனா இது பல்லிக்கும் பறவைக்கும் நடுவுல இருந்த சந்ததியோட வாரிசு
எப்புடி ?
பையனை நல்லா உத்து பாருங்க  , Microraptor gui ன்னு பேரு,

அவன் வாயில பல்லு விளக்காத பல்லுங்க இருக்கா ?( கோழிக்கு பல்லு கிடையாது ).
பின்காலுளையும் சிறகுகள் இருக்கா ?(கோழிக்கு பின் காலில் சிறகுகள் கிடையாது ).
நீண்ட வாலை உடையவன்
கோழிகளி போல் அல்லாமல் வலு மிகுந்த எலும்புகளை  கொண்டவன் 
{anatomical இன்னும் பல ஆதாரங்கள் இருக்கு , நண்பர்கள் விரும்பினால் அதை அப்புறம் சொல்றேன் .}

இந்த fossil லை கொண்டு விஞ்ஞானிகள் ஒரு பொம்மை உருவாக்கி அதை சோதனை செய்து பார்த்ததில், இவன் ஒரு கிளைடர் என்பது சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டது .(Scientists at the University of Kansas and China's Northeastern University collaborated to build gliding models based on the hawk-sized Microraptor gui, which lived 120 million years ago.....
They said this supports the "tree-down" model for the origin of flight in feathered dinosaurs and birds, which suggests that tree-dwelling dinosaurs glided from branch to branch, leading to the evolution of flight. ).

இது ஒரு மரத்தில் வாழும் உயிரினம் , மரத்துக்கு மரம் ,காத்துல காலம் காலமாக சறுக்கி சறுக்கி , அடுத்த கட்டமான "பறத்தலை" அடைந்தது .

இவனுக்கு அடுத்து வந்தவன் தான் Archaeopteryx  , இவனுக்கு பறவையின் பல பண்புகள் வந்து  விட்டன , இருந்தாலும் பல்லு , மற்ற சில பள்ளியின் பண்புகள்  மிச்சம் இருந்தன.

அப்ப பறவை  மாதிரி ஒன்னும் இல்லையா?

அப்படி பட்ட ஒரு பல்லி fossil லை கண்டுபிடித்து விட்டார்கள் .
இவன் பறவைகளுக்கு நெருங்கிய உறவினன் . Confuciusornis, ன்னு பேரு .
 இவனுக்கு பறவைகள போல வெய்ட்டு குறைவான எலும்புகள் , பறவையை ஒத்த  அலகு, நீளம் குறைந்த வால் போன்றவை இருந்தன . இருந்தாலும் பல்லிகளின் சிலபன்புகள் காணப்பட்டன .

இவனை பாருங்கள் , இவன் பேரு Hesperornis.இவனுக்கு கிட்டத்தட்ட நம்ம பறவை பண்புகள் எல்லாம் வந்து விட்டது .

அது ஏன் பறக்கணும் , தண்ணியில ஓட  வேண்டியதுதானே ,
ஒடுரானுன்களே , இவன் பேரு basilisk, water strider

ரொம்பவே பெரிய டிஸ்கி :
கல்யாணம் ஆகி குழந்தை பிறக்குது
அது fact ...
எப்ப வரை அது fact ன்னா, இது சாமி குடுத்த வரம்ன்னு மக்கள் நம்பிய காலத்தில் ,
ஆனா இப்போ விந்தும் அண்டமும் சேரதுனால  தான் குழந்தை பிறக்குதுன்னு அறிவியலால மாற்று கருத்துக்கு  இடம் இன்றி நிரூபிக்கப்பட்டு விட்டது ,
so it is no more a fact, now its is a natures 'LAW'.
fact ங்குற  கட்டத்த தாண்டி அது இயற்கையின் விதியாக ஒத்துக்கொள்ளப்பட்டு  விட்டது ,
அது மாதிரி தான் நீங்க சொல்ற பறவை matter  உம்.
பறவை பறப்பது நிதர்சனமான fact , அது எப்பவோ இயற்கையின் விதியாக ஏற்று கொள்ளப்பட்டு  விட்டது ,
மேலும் நீங்கள் பல கேள்விகள் எழுப்பி இருந்தீர்கள் , அதில் பல இன்னும் fact stage இல்  தான் இருக்கின்றன ( சொல்லப்போனா கடவுள் கூட இப்பவும் fact stage இல் தான் இருக்கார் - அறிவியலை பொறுத்த வரை )
அறிவியல் மூலமா விளக்கின பின்னாடி எல்லாம் இயற்கை விதி ஆவாங்க .
அதுவரை கேள்வி எழுப்புறதும் தில் தேடுரதுமா நாம தொடர வேண்டியது தான் .
 நட்புடன் 
             Dr . Dolittle 

8 comments:

 1. நல்ல ஆரம்பம் .. தொடருங்கள்.

  வாழ்த்தும் நன்றியும்

  ReplyDelete
 2. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தமிழில் இன்னொரு அறிவியல் வலைப்பதிவைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 3. தானாக ஓடியது, தாவியது, பறந்தது என்பதெல்லாம் பழைய கதை சகோ.

  அறிவியல் ஆய்விதழான nature ல் Archaeopteryx முதல் பறவை அல்ல என்று செய்தி வெளியிட்டதை தாங்கள் அறியவில்லையா?

  இதை பற்றி சகோ. ஆஷிக் அஹ்மத் வெளியிட்ட கட்டுரைகளை படித்தால் மேலும் அறிந்து கொள்ளலாம்.

  http://www.ethirkkural.com/2011/08/bye-bye-birdie.html

  ReplyDelete
 4. http://www.ndsu.edu/pubweb/~ashworth/webpages/g491/2003presentations/justin%20costarica/Seminar.htmMicroraptor gui: Bird or Dinosaur
  A look into the therapod dinosaur-bird evolution debate
  Justin Costa Rica
  2.^ Norell, Mark, Ji, Qiang, Gao, Keqin, Yuan, Chongxi, Zhao, Yibin, Wang, Lixia. (2002). "'Modern' feathers on a non-avian dinosaur". Nature, 416: pp. 36. 7 March 2002.
  3.Clarke, Julia A., Zhou, Zhonghe, Zhang, Fucheng. (2006) "Insight into the evolution of avian flight from a new clade of Early Cretaceous ornithurines from China and the morphology of Yixianornis grabaui" "Journal of Anatomy" 208:287–308.
  4.Narrow Primary Feather Rachises in Confuciusornis and Archaeopteryx Suggest Poor Flight Ability
  Robert L. Nudds1,* and Gareth J. Dyke2
  5.Confuciusornis Sanctus - Plumage Of The First Birds 120 Million Years Ago Revealed
  By News Staff | June 30th 2011 05:28 PM | Print | E-mail | Track Comments
  6.Birds of a Feather
  For 140 years, scientists argued over the link between modern birds and dinosaurs. The final, feathery piece of the puzzle fell into place two years ago when farmers in China unearthed the "fuzzy raptor." This 124-million-year-old fossil has the bones of a dinosaur and the feathers of a bird. Now it's flown to Europe...
  Read more: http://www.time.com/time/specials/packages/article/0,28804,2029779_2029777_2029766,00.html #ixzz1jz0tulWz
  6.Hesperornis regalis Marsh 1872

  Marine birds with teeth in the Late Cretaceous seas

  Copyright © 2000-2011 by Mike Everhart
  7.Marsh, Othniel Charles (1880): Odontornithes, a Monograph on the Extinct Toothed Birds of North America. Government Printing Office, Washington DC.
  8.Green Basilisk Lizard Basiliscus plumifrons- National geography web site .
  அறிவியல் ஆய்விதழான nature ல் Archaeopteryx முதல் பறவை அல்ல என்று செய்தி வெளியிட்டதை தாங்கள் அறியவில்லையா?
  wait for my next post bro.

  ReplyDelete
 5. //முதலில் இறக்கை துளிர் விட்டிருக்கும் பிறகு ஒரு பகுதி இறக்கை உருவாகி இருக்கும் ஆனாலும் பறவையால் பறக்க முடியாது, எதற்காக ஒரு உபயோகம் இல்லாத இறக்கையை வைத்து கொண்டு பல மில்லியன் வருடங்கள் அந்த பறவைகள் வாழ வேண்டும். உபயோகம் இல்லாத இறக்கையை எதற்கு ஐயா அது வளர்க்க வேண்டும். //

  /சில வகையான பறவைகள் முழுமையான இறக்கை முளைக்காமல் பாதி இறக்கையுடன் தளர்ந்து பிறகு மரத்தில் ஏறி ஏறி கை முளைத்து மற்றொரு உயிரினமாக மாறியது என்பது இவர்களின் கதைகளின் தொடர்ச்சி. இந்த அடிப்படை இல்லாத கதைகளை நம்புபவர்களை என்னவென்று கூறுவது? //

  அர்த்தம் இல்லாமல் எதற்கு பறக்க வேண்டும். எங்கு போவதற்கு இறக்கை முளைத்தது. ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு ஏதோ ஒன்று தாவும் போது கீழே விழுந்து உயிர் போகுமா, இறக்கை துளிர் விடுமா?

  ReplyDelete
 6. //அர்த்தம் இல்லாமல் எதற்கு பறக்க வேண்டும்.//

  எந்த ஒரு காரியமும் இயற்கையில் அர்த்தம் இல்லாமல் நடை பெறாது ,
  போட்டியில்லாத உணவு ,எதிரிகளிடம் இருந்து தப்பிக்க ,கூடு கட்டுவதற்கு பாதுகாப்பான இடம் etc etc .
  //எங்கு போவதற்கு இறக்கை முளைத்தது?//

  ஓரறிவான தாவரங்கள் நகர்வது இல்லை ( with some exceptions) , locomotion ( நகர்தல் ) பரிணாமத்தின் முக்கிய தூண்டுகோல் , நகர்வதற்கான தேவைகள் பல உண்டு ,இதற்கும் மேலே சொன்ன பதில் ஒத்துப்போகும் , இந்த ஒரு கேள்விக்கே பத்து பதிவுகள் எழுதலாம் .

  // ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு ஏதோ ஒன்று தாவும் போது கீழே விழுந்து உயிர் போகுமா, இறக்கை துளிர் விடுமா?//

  சிறப்பான கேள்வி .

  இங்கு தான் survival of fittest வருகிறது , கீழே விழுந்து உயிர் போன உயிரினங்கள் gliding வித்தை கைவராதவர்கள் , அவர்களால் போட்டியை சமாளிக்க முடியவில்லை , gliding ங்குக்கு பொருத்தமான உடலமைப்பு கொண்ட உயிரினங்கள் மட்டும் போட்டியில் மிஞ்சும் , அவற்றில் சிறந்தவர்கள் இறக்கை துளிர் விட்டு பறக்க ஆரம்பித்தனர்.
  சிறகு துளிர் விட்டதை பற்றி இங்கே கூறியிருக்கிறேன்,
  http://walkingdoctorcom.blogspot.in/2012/01/blog-post_07.html

  ReplyDelete
 7. first bird ?
  http://walkingdoctorcom.blogspot.in/2012/01/blog-post_23.html

  ReplyDelete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...