வடநாட்டில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு வந்தது , நல்ல கல்லூரி , இயற்கை எழில் கொஞ்சும் இடம் , ஆனால் பாஷை புரியாது ,வாயினால் வில்லுவண்டி ஓட்டும் எனக்கு டிகே'வையும் துமாரா நாம் க்யா ஹை' யையும் வைத்து கொண்டு வடநாட்டில் டயர் வண்டி கூட ஓட்ட முடியாத அவல நிலை.
தெரிந்த பாஷையோ தமிழும் ஆங்கிலமும் மட்டும் தான் , சிறு வயதில் நிறைய நாய்கள் வளர்த்தால் நாய் பாஷை தெரியும் .
வந்து சேர்ந்த முதல் நாளே பலத்த மழை. கிஷோருக்கு எப்படி குஷ்பு இடுப்பு பிடிக்குமோ , அது போல எனக்கு மழை மிகவும் பிடிக்கும் .
மொபைலில் செவ்வானம் பன்னிர் தூவும் பொன் நேரம் என பாடிக்கொண்டிருக்க , ஒரு கில்மாடிக்ஸ்சான மூட் create ஆகிகொண்டிருந்தது . அப்போது வெளியே, " ஆடி காத்துல டவுசர் கிழியுது , இவனுக்கு சிச்சுவேசன் சாங் ஒன்னு தான் கொறச்சல் ", என்று பேசிக்கொள்ளும் குரல் கேட்டது .
நான் பதிலுக்கு " டவுசரே போடாத நாய்ங்க எல்லாம் இத பத்தி பேசுதுங்க , எல்லாம் கலி காலம் ", என்றேன் .
தங்களின் பாஷையை அடையாளம் கண்டு கொண்டதை எண்ணி அதிர்ச்சியில் பயத்தோடு என்னை பார்த்தனர் சில்பியும் , கருவாந்தியும் .
இவளுக எப்பவுமே இப்புடித்தான் தம்பி ஊர்வம்பு வளப்பாளுக , தெரியாம பண்ணிட்டளுங்க மன்னிச்சு விட்ருங்க தம்பி என்று என்ட்ரி கொடுத்தாள் அவர்களின் அன்னை தாய்க்கிழவி .
நானும் ரொம்ப நல்லவன் ஆதலால் , அவர்களை பெருந்தன்மையோடும் , கருணையோடும் , அன்போடும் , பெரியமனுசதனத்தோடும் மேலும் இன்ன பிற"தோடுகளோடும் " மன்னித்து விட்டுவிட்டேன் .
தாய்க்கிழவி , நான் ஒரு கால்நடை மருத்துவன் என கூறியதும் சந்தோசப்பட்டாள் , ரொம்ப நாட்களாக ஒரு பக்க இடுப்பு வலிப்பதாக கூறினாள் .
நான் அவளிடம் வயதுக்கு தகுந்தவாறு ஒழுங்காக நடந்து கொண்டால் இது போன்ற வலிகளை தவிர்க்கலாம் என்றேன் . கடுப்பாகி என்னை முறைத்தாள்.
உண்மை கசக்கத்தானே செய்யும்.
பிறகு நான் அவர்களின் வாழ்க்கை முறையை பற்றி விசாரித்தேன் .
கல்லூரியில் வலது பகுதிக்கு சோப்ராஜ் தலைவனாக உள்ளான் என்றும் , இடது பகுதில் மைகேல் ஆட்சி நடப்பதாகவும், ஆனால் இருவரும் நண்பர்கள் என்றும் , இருவரும் முரடர்கள் என்றும் , அவர்களிடம் இருந்து தனது இரண்டு பெண்களையும் காப்பாற்றுவதற்காக ஈசானி மூலைக்கு குடி வந்துவிட்டதாகவும் கூறினாள்.
ஆனால் இவளின் இந்த கவலையை சில்பியும் , கருவாந்தியும் லட்சியம் செய்ததாக தோன்றவில்லை .
பின்னர் மழை நின்றதும் தாய்கிழவி தனக்கு முக்கியமான வேலை ஒன்று இருப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டாள் . போகும் பொது நான் அவளிடம் இடுப்பு பத்திரம் என்றேன் . திரும்பவும் முறைத்து விட்டு சென்றாள்.
தாய்க்கிழவி சென்ற பின்னர் . சில்பியும் கருவாதியும் என்னிடம் பெர்சனலாக மன்னிப்பு கேட்டனர் . நான் நல்லவனாதலால் அதை அப்பவே மறந்து விட்டேன் என்றேன் . உன்னை பார்த்தால் நல்லவன் போல தெரியவில்லையே என்றார்கள் . நான் நல்லவன் என்று நிரூபிக்கும் கட்டாயத்திற்கு ஆளான காரணத்தினால் அவர்கள் இருவரையும் கட்டையால் அடிக்காமல் விட்டு விட்டேன் .
......................................................................................................
நாட்களை இன்பமாக கழித்தனர் சில்பியும் கருவாந்தியும் .
விதி அவர்களை நோக்கி புன்னகைத்தது ...
ஒரு நல்ல நாளில் மைக்கேலும் சோப்ராஜும் ஈசானி மூலைக்கு விஜயம் செய்தனர் .
தொடரும்...........
//// கிஷோருக்கு எப்படி குஷ்பு இடுப்பு பிடிக்குமோ , அது போல எனக்கு மழை மிகவும் பிடிக்கும் .///////
ReplyDeleteயோவ் டாக்டரே! ஊசி போடுறதோட மட்டும் நிறுத்திக்க, இந்த கோத்து விடுற வேலையெல்லாம் நம்பல் கிட்ட வச்சுக்காத ஆமா.... அதுசரி குஷ்புவோட உடம்பில இடுப்ப எங்கடா ராமா தேடுறது? கன்டுபிடிச்சு கிள்ளினவனுக்கு அவார்டு குடுங்கடா டேய்!
////கில்மாடிக்ஸ்சான மூட் /////
ReplyDeleteசெம்மொழி தமிழுக்கு மேலும் ஒரு புதிய வார்த்தை, நோட் பண்ணுங்கப்பா.....நோட் பண்ணுங்கப்பா...
////இன்ன பிற"தோடுகளோடும்////
ReplyDeleteடாக்டரு தமிழ்ல வெளையாடுராருப்பா......
////வயதுக்கு தகுந்தவாறு ஒழுங்காக நடந்து கொண்டால் இது போன்ற வலிகளை தவிர்க்கலாம் என்றேன் ////
ReplyDeleteமழை காலம் ! குளிர் வேற, அதுங்க ஏதோ பண்ணிட்டு போதுங்க, அது ஏன் ஓய் உமக்கு வலிக்குது? காதலுக்கு வயதில்லை டாக்டரே!
காதலுக்கு
Delete////சில்பியும் , கருவாந்தியும் ./////
ReplyDeleteஅழகான தமிழ் பெயர்! அப்படியே ரெண்டு குழந்தைகளுக்கு வைக்கலாம், இந்த பெயர்களின் உரிமத்தை நான் வாங்கி கொள்கிறேன்.
இதுக்கே இப்புடியா ? மெயின் கேரக்டர் பேர சொன்னேன்னு வச்சுக்க , அப்டியே ஷாக் ஆயிடுவ
Delete////ஒரு நல்ல நாளில் மைக்கேலும் சோப்ராஜும் ஈசானி மூலைக்கு விஜயம் செய்தனர் ./////
ReplyDeleteஆ! இப்பதாய்யா டாக்டர் மெயின் மேட்டருக்கே வந்திருக்காரு! மேல சொல்லுங்க...... அட.... ஏய், இருங்கடா..... போய்யா யோவ்! நீர் கோலங்கள் திருமுருகனை விட கெட்ட ஆளுய்யா! பொறுத்த நேரத்தில் தொடரும் போட்டுட்டேளே!
பிளாக் எழுத நேரம் இருக்கும் உமக்கு ஆன் லைன் வரத்தான் நேரம் கெடையாது....... கெட்ட டாக்டரே!
ReplyDeleteலொள் ..லொள்...நான் என்ன சொன்னேன் சொல்லுங்க...ஹி ஹி ஹி
ReplyDeleteஅண்ணே கோவை நேரம் அண்ணே! நம்ம டாக்டர நீங்க கெட்ட வார்த்தல திட்டுறீங்க, எனக்கு புரிஞ்சு போச்சு அது என்ன வார்த்தன்னு மட்டும் என்னய கேட்டுப்புடாதிக.....
Deleteகோவை நேரம் சார் நீங்க என்னைய பாராட்டி சொல்லியிருக்கீங்கன்னு மட்டும் தெரியிது ( இந்த கிஷோகர் பையனோட சேராதீங்க , உங்க நல்லதுக்கு சொல்றேன் ). any way லொள் லொள் ( நன்றி என்று அர்த்தம் கொள்க ).
Deleteடாக்டரு நம்ம குஷ்பு கிஷோகருதான் உங்களய அறிமுகப்படுத்தின பயபுள்ள. தொடர்ந்து வருவேன் :)
ReplyDeletevaanga thalaivaa
Deleteநல்லா இருக்கு
ReplyDelete