Sunday, September 20, 2026

கபம்

 கபம்:

‘வளி’யாக உள் செல்லும் காற்று, கணையத்தின் மற்றும் ஈரலின் நொதிகள் துணையுடன் உணவை எரித்து வெப்பம் எனும் ஆற்றலைப் பெறுகிறது (அழல் அல்லது பித்தம்). நிலம் போன்ற இந்த உடலில் நீரானது நதிவழியாகச் சென்று நிலத்தை வளப்படுத்துவது போல நீர்த்திருக்கும் உடல்தாதுவான இரத்தம் உடலை செயல் பட வைக்கிறது.  மேலும் உடல் எனும் மண்ணானது நீரால் குளிர்விக்கப் படுகிறது, தவிற இது நெய்ப்புத்தன்மையையும் உண்டாக்குகிறது. இந்த நெய்ப்புத்தன்மை வழங்கும் நீர் தோஷத்தை ஐயம், கபம் அல்லது சிலேட்டுமம் எனக்குறிப்பிட்டனர்.

ஐயம் உடலுக்கும் மூட்டுகளுக்கும் வலிமையை வழங்குகிறது. தோலுக்கு பளபளப்பையும், கண்ணுக்குக் குளிர்ச்சியையும் தருகிறது. தோல், மலம், சிறுநீர் போன்றவற்றிற்கு நிறம் தருதல், உடலுக்கு மென்மை, வளமை, பெருமை தருதல், நாவுக்கு இனிப்புச் சுவை தோன்றல் போன்ற செயல்களையும் செய்கிறது.

சுருங்கக் கூறின், நிலம் எனும் உடலானது, நீர் மூலம் செயல்பட்டு, காற்றின் துணைகொண்டு நெருப்பு எனும் ஆற்றலைப் பெற்று, ஆகாயம் எனும் சிந்தனையை மேற்கொள்கிறது. இவை வளி, அழல் மற்றும் ஐயத்தின் துணையால் சமநிலையில் இயங்குகிறது. இந்த மூன்று குற்றங்களும் மிகுந்தாலும் குறைந்தாலும் உடலின் சமநிலை பாதிப்படைந்து நோயாகும் என எண்ணியிருந்தனர் தமிழர்கள்.

உயிர்த்‌ தாதுகள்‌ உடலில்‌ செயல்படும்போது மலங்கள்‌ உண்டாகின்றன. இம்மலங்கள்‌ சரிவர வெளித்தள்ளப்படாமல்‌ மிகுந்தும்‌ குறைந்தும்‌ உடலில்‌ தங்‌கினால்‌ உயிர்த்தாதுக்கள்‌ குற்றமுறுன்றன. வாதம்‌ குற்றமுற்றபோது குடைச்சல்‌, வலி, வலிப்பு போன்ற மலங்கள்‌ தோன்றும்‌. பித்தம்‌ குற்றமுற்றபோது உடற்‌ சாங்கை அதிகரித்தல்‌ (சுரம்‌), எரிச்சல்‌, கோபம்‌ போன்ற மலங்கள்‌ தோன்றும்‌. கபம்‌ _ குற்றமுற்றபோது மநீதம்‌, சோம்பல்‌, பிசுபிசுப்பான்‌ சளி போன்ற ' மலம்‌ 'தோன்றும்‌.

இதில் வாத நோய்கள் தான் அதிகப்படி, அடுத்தது பித்த நோய்கள். பனிக்காலத்தில் உடலில் கபம் மிகும், கப விருத்தி காலத்தில்‌ உடலில்‌ கபம்‌ பிறழ்ந்து நடக்குமேயானால்‌ வாத விருத்தியாகும்‌ சுவையுள்ள பொருள்களை எடுத்துக்கொண்டால் கபத்தை நல்லநிலைக்கு கொண்டுவரமுடியும்.  இதுபோல பொழுதுக்குமான உணவுக்கூறுகளையும் சித்தமருத்துவம் கொண்டிருக்கிறது.




 வாத தோஷம் கொண்ட உடலானது ஊட்டம் இல்லாத நிலம் போன்றது.  ஊட்டமில்லா நிலத்தைக் கொத்தி கிளறி வளப்படுத்துவது போல எண்ணை கொண்டு தடவி அதை சரி செய்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

வெயில் காரணமாக பயிர்கள் வாட ஆரம்பித்தலை அழல் எனும்  பித்தத்தோடு ஒப்பிடலாம் . வாடிய பயிர் கருகுவதற்குமுன் அதற்கு நீர் பாய்ச்ச வேண்டுமல்லவா? அது போல பித்தம் அதிகரிக்கையில் குளிர்ச்சி உண்டாக்கும் மருந்துகள் கொண்டு உடலை குளிர்வித்தலை  செய்கின்றனர் மருத்துவர்கள்.

 அதிகப்படியான நீர் விளைநிலத்திலிருந்தால் பயிர்கள் அழுகிவிடுமல்லவா? அதைத் தவிர்க்க நாம் அந்த நீரை நிலத்திலிருந்து வெளியேற்றுவோமல்லவா? 

அதுபோல, கபம் அதிகரிக்கையில் அதிகப்படியான கபத்தை உடலில் வெளியேற்றுவதனால் உடல் சீர்பெறுகின்றது.

வளி என்பது படைப்பாற்றலையும்‌, ( Creative force) அழல்‌ என்பது நிலைப்பாற்றலையும்‌, ( maintanance force ) ஐயம்‌ என்பது சிதைப்பாற்றலையும்‌ (Degenerative force) கொண்டவை. இவற்றை 'உயிர்த்தாதுக்கள்‌' என்பர்‌. உடலியக்கத்தின்‌ இயல்பான நிலையில்‌ இவை மூன்றும்‌ முறையே 4:2:1 என்ற விகித அடிப்படையில்‌ செயல்படும்‌; செயல்படவேண்டும்‌.

சித்த மருத்துவத்தைப் போல ஆயுர்வேதத்தின் அடிப்படையும் இதே மூன்று தோஷங்கள் தான். சரக சமித நூலை எழுதிய சரகர் தான் ஆயுர்வேத முன்னோடி. கிபி 300 அவரது காலம். புத்தமத நூல்களும் ஆயுர்வேதமும் முக்குற்றத்தைத் தான் அடிப்படையாகக் கொண்ட வைத்தியமுறையை கொண்டிருக்கின்றன. மேலும் சேர நாட்டின் வர்ம மருத்துவத்திற்கும் சீனாவின் அக்குபிரஷர் மருத்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

சித்தமருத்துவத்தின் தொடக்கம் அகஸ்தியர் என்பவரிடம் இருந்து ஆரம்பிப்பதாக நூல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மருத்துவத்தின் அங்கமாகிய சித்த யோக மருத்துவ முறைகளைத் தோற்றுவித்தவர் ஆதிநாதர் என்று “ஹடயோக பிரதீபிகை” குறிப்பிடுகிறது. ஆதிநாதர், ரிஷபதேவர் எனும் பெயர்கள் ஆதி தீர்த்தங்கரின் பெயர் என ஆசீவக சமண சமயமும் ஜைன சமயமும் குறிப்பிடுகின்றன.

வாதம், பித்தம் கபம் ஆகியன பலவகைப்பாதைகள் வழி உடலில் பயணிப்பதைப் பற்றி நாம் பார்த்தோம். இப்பாதையில் அடைப்போ, பிணக்கோ ஏற்பட்டால் அவை தாதுக்களில் குற்றம் ஏற்படுத்துகின்றன. அதை நாம் உணர முடியும். வாத குற்றத்தில் களிமண் நிற கசப்புப் படலம் நாவைச் சூழும். பித்தத்தில் புளிப்புச் சுவை கொண்ட மஞ்சள் படலம் நாவை சுற்றிப்படரும். கபத்தில் வெள்ளை நிற இனிப்புச்சுவை படலம் தோன்றும். இவற்றை நீக்க ஒரு எளிய வழிமுறை இருக்கிறது. அந்த எளிய முறைதான் ஆயுர்வேதத்தின் அடிப்படை மருத்துவம்.

அதை ‘லங்கணம் பரம ஒளடதம்’ எனக்குறிப்பிடுகின்றனர்.

நோய்க்குக்‌ காரணமான தவறான உணவு முறைகளை நீக்கி, உடல்‌ வன்மைக்கும்‌ கால மாறுபாடுகளுக்கேற்பவும்‌, முன்‌ உண்ட உணவு செரித்த பின்னும்‌ உண்ண வேண்டும்‌ என்பதையும்‌ திருவள்ளுவர்‌, ‘OT OUT டில்லைத உண்டி மறுத்தூண்ணின்‌ ஊறுயா டில்லை உயிர்க்கு: என்றும்‌, (குதன்‌) மருந்தெஸ வேண்டாவாம்‌ யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்‌: என்றும்‌ கூறியுள்ளார்‌. 

அனைவரும் எதைச் சாப்பிட்டு தம் உடம்பை சரி செய்து கொள்வது என்று தேடுவதிலேயே தங்கள் வாழ்க்கையை செலவிட்டு கொண்டிருக்கின்றனர்.

எதையும் சாப்பிடாமல் இருந்தாலே உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும்.

//உற்ற சுரத்துக்கும் உறுதியாம் வாய்வுக்கும் அற்றே வருமட்டும் அன்னத்தைக் காட்டாதே//. அதாவது சுரத்திற்கும் புளிப்பு மிகுதியால் வரும் வாத ரோகத்திற்கும்  விரதமே தீர்வு.

ஆனால் புலன்களின் மூலம் மணமாகவும், சுவையாகவும் அறுசுவை உணவுகள் நம்மை ஈர்த்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் சுவை ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சத்துக்களை கணக்கில் கொள்ளாமல் செயற்கை சுவையூட்டிகளால் சமைக்கப்பட்ட உணவை உண்ணும் வழக்கத்தை; நாம் நகரத்திணையில் பின்பற்றிக்கொண்டிருக்கின்றோம். அதனால் We no longer depend upon taste by nutrient sensor and early-warning system as it is originally served.

சுவை அதிகமாக இருக்க வேண்டும், அது உடலுக்கு நல்லது செய்யும் சத்தான உணவாகவும் இருக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

“அப்போ சத்துள்ள பண்டங்களை சுவையூட்டிகள் கொண்டு சுவைப்படுத்தலாமா?”

சத்துள்ள ஆகாரத்தை மிகவும் சுவையாக ஆக்கக்கூடிய ஒரு சுவையூட்டியை நாம் தயக்கமின்றி பயன்படுத்தலாம், அது உலகின் ஆகச்சிறந்த சுவையூட்டியாகும். அந்த ஒற்றை சுவையூட்டியால் எந்த வகை உணவாக இருந்தாலும் மிகவும் சுவைக்கும்.

அந்த சுவையூட்டியின் பெயர் ‘பசி’.

 உடலை பசிக்கவிட்டு புசிப்பதே நம் வழக்கம். மூன்று வேளை உணவு என்பது மில்லியன் ஆண்டுகளாக நம் உடல் அனுபவிக்காத ஒன்று.

“Hunger is the first element of self-discipline. If you can control what you eat and drink, you can control everything else.”

பசியை கட்டுப்படுத்துவது என்பது சுய ஒழுக்கத்தின் முதல் படி. “நீங்கள் சாப்பிடுவதை கட்டுப்படுத்த முடிந்தால், மற்ற அனைத்தையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்” என்பது டாக்டர் உமர் ஃபாரூக் அப்துல்லாஹ்வின் புகழ்பெற்ற மேற்கோள்.

பசியின் போதுதான் மூளையானது சூழலை நன்கு உள்வாங்க ஆரம்பிக்கும். அதனால் தான் இறைவனை அடைவதற்கான அல்லது உணர்வதற்கான வழியாக விரதத்தை அனைத்து சமயத்தினரும் முன்னிருத்தினர்.

உதாரணத்திற்கு ரிஷபதேவர் 400 நாட்களுக்கு உண்ணா நோன்பு இருந்தவர். அவரைப் பின்பற்றி ஜைனர்களும் அச்சாதனையை செய்துள்ளனர்.

“என்னால் பசியை எளிதில் கட்டுப்படுத்த முடியாதே, நான் என்ன செய்ய?”

 ஓசை செல்லாவின் ‘ஓ டயட்’ எனும் புத்தகத்தை வாங்கிப் படித்துப்பாருங்கள். பசியையும் தணித்து விரத்தின் பயன்களையும் பெறும் நமது பாரம்பரிய வழிமுறையினை அனைவரும் எளிதில் பின்பற்றும்படி எடுத்துக் கூறியிருக்கிறார் அவர்.

டயட்டுகளாகட்டும், மூச்சுப்பயிற்சிகளாகட்டும், மருத்துவமுறைகளாகட்டும்… இவை அனைத்தையும் நாம் பின்பற்றுவதன் காரணம் உயிரை உடலில் நிலைநிறுத்துவதற்காகத்தான்.

“ஆமாம்… இந்த உயிர் என்றால் என்ன?”


---------------

Picture courtesy:Tamil traditional medicinal system - siddha: an indigenous health practice in the international perspectives Kaliyaperumal Karunamoorthi

No comments:

Post a Comment

கபம்

  கபம்: ‘வளி’யாக உள் செல்லும் காற்று, கணையத்தின் மற்றும் ஈரலின் நொதிகள் துணையுடன் உணவை எரித்து வெப்பம் எனும் ஆற்றலைப் பெறுகிறது (அழல் அல்ல...