Wednesday, June 6, 2012

கடகம்

Gaia  hypothesis என்று ஒரு தியரி உள்ளது , இதன் படி உலகம் என்பது நம்மை போல ஒரு உயிரினம் . அது  தன்னை தானே சரி செய்துகொள்ளவும் , evolve ஆகவும் வல்லது .நமக்கு உறுப்புகள் உள்ளது போல அதற்கும் உள்ளது , தோலாக ஓசோன் ... நுரை ஈரலாக காடுகள் ....
பூமித்தாய் - GAIA mother
தற்போது   பூமித்தாய்க்கு  காய்ச்சல் ( புவி வெப்பமயமாதல் ) . இது போல காய்ச்சலும் குளிர் சுரமும் பூமிக்கு புதிதல்ல . நாம் தான் குய்யோ முறையோ என கூக்குரலிடுகிறோம் ( ஏனென்றால்  இதனால் பூமி அழியாது ஆனால் நாம் அழிய வாய்ப்பு உள்ளது - ராட்சத பல்லிகள் அழிந்ததை போலவே ) .
..........................................................
உடலில் கிருமிகள் ஊடுருவினால் , அவற்றின் வளர்ச்சியை உடல் வெப்பம் அதிகரிப்பதன் மூலம் கட்டுப்படுத்துவதற்காக காய்ச்சல் வருகிறது . காய்ச்சல் வந்தால் சரி செய்து கொள்ளலாம் , கான்செர் வந்தால் ? 

பூமித்தாய்க்கு புவி வேப்பமயமாகும் காய்ச்சல் நோயைவிட தற்போது ஒரு கொடிய கான்செர் நோய் வந்துள்ளது , காய்ச்சலுக்கு காரணமே அந்த புற்று நோய் தான் ...
..............................................................................................................
புற்று நோய் - பெயர்க்காரணம் : பிளான் பண்ணி கட்டப்பட்ட கட்டிடம் அல்ல ஈசலின் புற்று , ஈசலின் எண்ணிக்கைக்கு தக்கவாறு அனைத்து பக்கங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கும் .

அதே போல , புற்று நோயும் விதிகளை மீறி வளரும் கட்டிடம் போல விரிவடைத்து கொண்டே இருக்கும் .


 பக்கவாட்டில் விரிவடைவதாலும் ,பல்வேறு உறுப்புகளை ரத்தகுழாய்களின் மூலம் பயணாமாகி தாக்கவல்லதாலும் கான்செர் என்று அழைக்கப்பட்டது ( நண்டு பக்கவாட்டில் பயணிக்கும் ) .

..................................................உடலில் காயம் ஏற்பட்டு தோல் பிய்த்துக்கொண்டு போய்விட்டால் , அந்த இடைவெளியை நிரப்ப அதே போன்ற தோல் செல்கள் மைட்டாசிஸ்   மூலம்  வேகமாக உற்பத்தியாகி அந்த இடைத்தை நிரப்பும் .


 அப்படி நிரப்பி முடித்த பின்அவற்றின் உற்பத்தி  நின்று விடும். அப்படி நிற்காமல் வளர்ந்து கொண்டே இருந்தால் கட்டியாக மாறி விடும் , அதே கட்டி மற்ற இடங்களுக்கும் பரவக்கூடிய அளவுக்கு புற்றுநோயாக மாற்றமடையலாம்  ..


ஒரு சின்ன காயத்துக்கு  இவ்ளோ பில்ட்அப்பா என்று நீங்கள் கேட்கலாம் ....
உண்மை தான் , இவ்வாறு நிகழ சாத்தியங்கள் மிக குறைவு . அதை பற்றி பின்னால் காண்போம் .
..................................................................................

உலகில் எல்லாவற்றிற்கும் ஒரு சமன்பாடு உள்ளது . ஒரு காட்டில் நூறு மான்களுக்கு ஐந்து சிங்கங்கள் ( அதில் ஒரு ஆண் , நான்கு பெண்) என்பது சமன்பாடு .
இதுவே நூறு சிங்கம் , ஐந்து மான்கள் ( ஐந்துமே ஆண்கள் ) என்று இருந்தால் ?

மானுக்கு பதிலாக ஒட்டகசிவிங்கி - அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க 

இந்த இயற்கையின் சமன்பாட்டை மீறும் எதுவும் , தான் அழிவுப்பாதையை நோக்கி செல்வதோடு மட்டும்மல்லாமல் , பூமிக்கும் நோயாக விளங்கும் .
.........................................................

சிங்கங்கள் தேவைக்கு அதிகமாக மான்களை கொல்வதில்லை, யாராலும் வெல்ல முடியாவிட்டாலும் சிங்கங்கள் எண்ணிக்கையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பல்கி பெருகுவதுமில்லை , மேலும் அவற்றின் வாழும்  இடத்தை ( territory  )விட்டு வேறு இடங்களை  ஆக்கிரமிப்பதும் இல்லை .

உலகின் இந்த சமன்பாட்டை இரு உயிர்கள் உடைத்துள்ளன , அதில் ஒன்று உயிரினமா என இன்னும் வகைப்படுத்த முடியாத வைரஸகள் , 


மற்றொன்று................ வேறயாரு ?நாமதான் .

....................................................................

மனிதர்கள் பல்கிப்பெருகுகின்றனர் . இயற்கையால் சமமாகப்பிரித்தளிக்கப்பட்டுள்ள வளங்களை சுரண்டுகின்றனர் . வளமும் இடமும் தீர்ந்தால் .... அடுத்த இடங்களுக்கு வளங்களை சுரண்ட செல்கின்றனர். இவை அனைத்தும் புற்று நோயின் குணங்கள் .

 

ஒரு ஒட்டுண்ணி என்பது, தான் சார்ந்து  இருக்கும் உயிரினத்தை முழுவதும் அழிய விடாது . ஏனென்றால் அதை survival லுக்கு அது சார்ந்திருக்கும் உயிரினத்தின் survival அவசியம் . ஆனால் புற்று நோயும் சரி , மனிதர்களும் சரி ஒட்டுண்ணிகள்  அல்ல  ,.மனிதர்கள்  உலகின் ஒரு அங்கம் , புற்று நோய் செல்கள் சிறிதே  மாற்றம் அடைந்த நமது சொந்த செல்கள் , ஆனால் இருவருமே தனது வாழ்வாதாரமான உடலை / பூமியை அழிவுப்பாதைக்கு இட்டு செல்கிறார்கள் 
............................................................................

இவ்வாறு மனிதனையும் புற்று நோயையும் ஒப்பிட வேண்டிய அவசியம் ?

மனிதன் பரிணாமத்தின் எச்சம்  ...

மேலும் , உலகிலேயே evolution வேகமாக நடக்கும் இடம் - புற்று நோய் செல்களில் தான் .
...........................
இவ்வாறு தொடர்பு படுத்தி ஆராய்வது எளிய புரிதலுக்கு வழிவகுக்கும் .


மேலும் 


புற்று நோயின் பரிணாமத்தையும் , பரிணாமத்தால்  வந்த புற்று நோயையும் பற்றி பின்வரும் பதிவுகளில் விவாதிக்கலாம் . புற்று நோய்க்கான ஆராய்ச்சி பரிணாமரீதியில் அனுகப்பட்டால் , அதை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் .

.............................................................................................................

இந்த தொடர் பதிவின் நோக்கம் ...

1.நாம் புற்று நோயை பற்றி அடிப்படைகளை புரிந்து கொள்வது , 
2.எவ்வாறு அதை தவிர்க்கலாம் என அறிவது ,
3.ஒரு கால்நடை மருத்துவனாக எனது துறையில் நான் அறிந்த புற்று நோயை பற்றிய சில வெளிச்சத்திற்கு வராத தகவல்களை வெளியிட்டு அது human medicine நண்பர்களை சென்றடைய முயலுவது ,
4.மேலும் சில நண்பர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது ...
( eg . mutation rating பற்றி குறிப்பிட வில்லை?...).

.......................................................

தொடர்வோம் 19 comments:

 1. அருமை..நன்றாக விளக்கி உள்ளீர்....எதிர்பார்க்கிறேன் அடுத்த பாகத்தை...

  ReplyDelete
 2. மனிதன் ஒரு புற்று நோய்! செம மேட்டர் தம்பி.....சீக்கிரம் அடுத்த பாகம்......

  ReplyDelete
 3. அப்பாடா! டாக்குடர் உயிரோட தாம்பா இருக்காரு....

  ReplyDelete
 4. /////மனிதர்கள் பல்கிப்பெருகுகின்றனர் . இயற்கையால் சமமாகப்பிரித்தளிக்கப்பட்டுள்ள வளங்களை சுரண்டுகின்றனர் . வளமும் இடமும் தீர்ந்தால் .... அடுத்த இடங்களுக்கு வளங்களை சுரண்ட செல்கின்றனர். இவை அனைத்தும் புற்று நோயின் குணங்கள் .////

  நெத்தியடி நண்பா..... சிலதுங்க இருக்கு, தங்ககிட்ட வளம் இருந்தாலும் கூட அடுத்தவன் சுரண்டுற கூட்டம்.

  ReplyDelete
 5. ////புற்று நோய் செல்கள் சிறிதே மாற்றம் அடைந்த நமது சொந்த செல்கள் , ////

  இந்த பதிவோட நோக்கம் பத்தியெல்லாம் எனக்கு கவல இல்ல, ஆனா எனக்கு இதுவரை காலமும் புற்று நோய் பத்தி இருந்த பயம் இந்த வரிகளை படிச்சது இலாம போயிடுச்சு....... இவனுக எல்லாம் நம்ம செல்லுங்க தானா? ராஸ்கல்ஸ்... "பச்ச கொழந்தையுன்னு பாலூட்டி வளத்தேன் ... பால குடிச்சுப்புட்டு பாம்பாக கொத்துதடி..."

  ReplyDelete
 6. ////புற்று நோய்க்கான ஆராய்ச்சி பரிணாமரீதியில் அனுகப்பட்டால் , அதை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் .///////

  நீங்க என்னமாதிரியும் அணுகுங்கோ... ஆனா இந்த பதிவ படிச்சதுக்கு அப்புறமா எனக்கு ஒரு நம்பிக்க வந்திருக்கு, புற்று நோய்ங்கிறது சும்ம ஜிஜீபி மாமா, சீக்கிரம் மருந்து கண்டுபிடிச்சிருவாய்ங்க‌ன்னு....

  ReplyDelete
 7. /////ஒரு கால்நடை மருத்துவனாக எனது துறையில் நான் அறிந்த புற்று நோயை பற்றிய சில வெளிச்சத்திற்கு வராத தகவல்களை வெளியிட்டு அது human medicine நண்பர்களை சென்றடைய முயலுவது ,/////

  உன்னோட ஐடியாவ ஃபாலோ பண்ணி புத்து நோய்க்கு மருந்து கண்டுபிடிச்சதுக்கு அப்புறமா, நீயி டி.வி ல எல்லாம் வருவ, பேட்டி எல்லாம் குடுப்ப, உனக்கு நோபல் பரிசு எல்லாம் குடுப்பாய்ங்க, ஒபாமா வூட்ல ஒண்னுக்கு போவ, கேத் மிடில்டனுக்கு பொண்ணு பொறந்தா அந்த பொண்ண கட்டிக்குவ, டைம்ஸ் பத்திரிக்கைல எல்லாம் உன்னொட போட்டொ மொதல் பக்கத்தில வரும், உனக்கு ராஜ்ய சபா மந்திரி பதவி குடுப்பாய்ங்க, அப்புறம் , பிரதமர் ஆயிடுவ அதுக்கு அப்புறமா ஐ.நா சபைக்கு அதிபர் ஆயிடுவ, அம்பானி மாதிரி வாழுவ..... அப்போ எப்பயாச்சும் இந்த நண்பன நினைச்சு பாரு நண்பா.... அது போதும்.... அது போதும்....... (கண்கங்குகிறேன்).

  ReplyDelete
  Replies
  1. ஒத்த பதிவுல உலகநாயகன் ஆக்கிடுவ போலயே?

   Delete
  2. இல்லயா பின்ன ? கிஷோகரோட நண்பன்னு சொன்னாலே அதுவே வேர்ல்டு ஃபேமஸ் தான் மச்சி! ( # கொஞ்சம் ஓவராதான் போறமோ?)

   Delete
 8. ரொமப நல்ல பதிவு நண்பா, உண்மையில் மனரீதியாக புற்று நோய் தொடர்பான ஒரு பயம் சற்று நீங்கியிருக்கிறது. நீண்ட நாளுக்கு அப்புறம் உங்களோட பதிவ படிச்சது சந்தோசம், இனியாவது வாரத்து ஒருமுறையாவது எழுதுங்கோ....

  ReplyDelete
 9. ஆமா அந்த "பாபா" கவுண்டிங் என்னாச்சு?

  ReplyDelete
  Replies
  1. போய்யா... நீரும் உம்மட கவுண்டிங்கும்

   Delete
 10. கிஷோர் @ அறியாமையின் காரணமாக ,புற்று நோயினால் எனது தாயை இழந்தவன் நண்பா நான் , எதோ என்னால் முடிந்தது

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சாரி நண்பா........ எனக்கு தெரியாது.அவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன். :(

   Delete
 11. muthu siva, Ganesan அண்ணன் மற்றும் கோவை நேரம் சார் நிச்சயம் பல விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம்

  ReplyDelete
  Replies
  1. super ram....., thodarthu eluthugal .....,

   Delete
 12. என்னா ஒரு ரைட்டிங்...? நல்ல இருக்கு டாக்டர்...

  ReplyDelete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...