Saturday, April 7, 2012

சக்கை டாக்டரின் மொக்கை கவிதைகள்


pit புகைப்பட போட்டிக்கு படம் அனுப்பலாம்னு யோசிச்சேன் , நாம எடுத்ததுலயே சிறப்பான போட்டா எதுன்னா , மயில் பறக்குற போட்டா தான்

http://walkingdoctorcom.blogspot.in/2012/03/drdolittle.html

அந்த படம் நம்ம நண்பர்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தாலும் , அதை போட்டிக்கு அனுப்பினால் நடுவர்கள் கடுப்பாகி விடும் அபாயம் இருப்பதால் , வேற ஒரு போட்டா போட்டிருக்கேன் ,

தலைப்பு ?

வழி நடத்தும் கோடுகள்' (Leading Lines)இது எப்புடி இருக்கு ?


....................................................................................................................

கம்பிகளில் மாறி மாறி அமர்கின்றன மைனாக்கள் ...


கோடுபோட்ட நோட்டில் அழித்து அழித்து எழுதப்பழகும் குழந்தை போலவே ...


------------------------------------------------------------------------------------------------------

மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி ...

( கர்டசி - வைரமுத்து )

ஆனால் ...

புதிதாக போட்ட ரோட்டையே முட்டி முட்டி முளைப்பது காணக்கிடைக்காத அரிய காட்சி ...

11 comments:

 1. //காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு ஓர் நற்செய்தி :
  எனது ப்ளாக்இல் நான் இடும் அறிவியல் பதிப்புகளை (மட்டும் ) உங்க ப்ளாக்ல போட்டுக்க அனுமதிக்கின்றேன் . நீங்கள் எனது பேரை courtesy யாக போட தேவையில்லை .நீங்களாக எழுதியதா சொல்லிக்கலாம் .அறிவியல் கருத்துக்கள் மற்ற நண்பர்களை சென்றடைந்தால் சந்தோசம் .Dr . Dolittle. // இத எடுத்துடலாமே... இது கொஞ்சம் அசிங்கமாவும், கொஞ்சம் "அதிகமா"வும் தெரியிற மாதிரி இருக்கு... தப்பா எடுத்துக்க வேண்டாம்.. என்னுடைய கருத்து...

  ReplyDelete
  Replies
  1. நான் அந்த கோணத்துல யோசிக்கவே இல்லை அண்ணா , பின்னர் தான் எனக்கு அது உரைத்தது , ( actual லா யார் வேணும்னாலும் எனது கருத்துக்களை பிறருடன் பகிந்து கொள்ளலாம் என்றே இவ்வாறு செய்தேன் , ஏன் என்றால் நானே பல ஆங்கில அறிவியல் புத்தகங்களில் இருந்து தான் கருத்துக்களை சுடுகிறேன் ). அதை இப்போதே எடுத்து விடுகிறேன் .தங்களுக்கு என்னை கண்டிக்க உரிமை உண்டு , மேலும் நான் ஏதாவது அறியாமல் தவாறாக ஏதாவது செய்தாலும் உரிமையோடு எடுத்துரையுங்கள் அண்ணா .

   Delete
  2. மிக்க நன்றி. கண்டிப்பாக தவறென படுவதை தங்களிடம் சுட்டிக்காட்டுவேன்... தங்கள் பதிவுகள் வித்யாசமாகம், நல்ல தரத்துடனும் உள்ளன... தொடரவும்...

   Delete
 2. புது ரோட்டை முட்டி மொளைக்குதா? உண்மைய சொல்லு, என்னைத்தானே நக்கல் அடிச்ச? (நான் ரோட் கன்ஸ்டிரக்ஷன்ல வேலை பார்க்குறேன்னு உனக்கு தெரியும்ல?)

  ReplyDelete
  Replies
  1. அண்ணே நீங்க போடுற ரோடு துபாய் ரோடு மாதிரி பளபளன்னு இருக்கும் , இது வேற யாரோ தொழில் தெரியாதவுங்க போட்ட ரோடு

   Delete
 3. மயக்கம் என்ன தனுஷ் ஆயிடனும் என்று முன்னொரு பதிவில் நீங்கள் விளையாட்டாக சொன்னீர்கள் என்றல்லவா நினைத்தேன்!

  ReplyDelete
  Replies
  1. இது தான் வெளயாட்டு வினையாகும் என்பார்கள்

   Delete
 4. //காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு ஓர் நற்செய்தி :
  எனது ப்ளாக்இல் நான் இடும் அறிவியல் பதிப்புகளை (மட்டும் ) உங்க ப்ளாக்ல போட்டுக்க அனுமதிக்கின்றேன் . நீங்கள் எனது பேரை courtesy யாக போட தேவையில்லை .நீங்களாக எழுதியதா சொல்லிக்கலாம் .அறிவியல் கருத்துக்கள் மற்ற நண்பர்களை சென்றடைந்தால் சந்தோசம் .Dr . Dolittle. //

  இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இங்கு எது "அதிகமாகவும்", "அசிங்கமாகவும்" இருப்பதாக தெரிகிறது நண்பர் முத்துசிவாவுக்கு?

  அது போக இதில் என்ன பிழை இருப்பதாக புரிந்து கொண்டு அந்த வாக்கியங்களை தூக்கிவிட்டீர்கள் டாக்டர் நண்பரே?

  ReplyDelete
  Replies
  1. நாமே ஆங்கில புத்தகங்களில் இருந்து காபி அடிக்கிறோம் , எதுக்கு அது மாறி வாக்கியம் இருக்க வேண்டும் என்று என் நண்பன் கூட சொன்னான் , அதுவும் முத்து சிவா அண்ணனுக்கு நான் விசிறி வேற . அண்ணன் சொன்னால் சரி என்று தூக்கி விட்டேன் நண்பா

   Delete
  2. நாமே ஆங்கில புத்தகங்களில் இருந்து காபி அடிக்கிறோம் , எதுக்கு அது மாறி வாக்கியம் இருக்க வேண்டும் என்று என் நண்பன் கூட சொன்னான் , அதுவும் முத்து சிவா அண்ணனுக்கு நான் விசிறி வேற . அண்ணன் சொன்னால் சரி என்று தூக்கி விட்டேன் நண்பா

   Delete
  3. @கிஷோகர்:
   நண்பா.. நாம் வலைப்பதிவில் copy rights இல்லாமல் வெளியிடும் அனைத்து
   பதிவுகளுமே அனைவருக்கும் பொதுவானவையே... மற்றவர்கள் அதை உபயோகித்தாலும் நாம் அதை தடுக்க முடியாது.//காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு ஓர் நற்செய்தி // என்று போடுவது சில பேரை
   வெறுப்படைய செய்யலாம்.. இது இல்லாமல் இருந்தால் கூட நல்ல பதிவுகளை
   நான்கு பேர்களுக்கு தெரியப்படுத்த நினைப்பார்கள்.. இதனை படித்தால்
   அதனை அறவே செய்யத் தோன்றாது.. மேலும் பதிவுலகில் நண்பர்களை சம்பாதிக்க
   அது ஒரு தடையாக இருக்க்லாம்..

   என் கருத்தில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும்

   Delete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...