Saturday, May 12, 2012

என்ன படிக்கலாம் ?

தொழிற்படிப்புகளுக்கு என்னைக்குமே மவுசு தான் . பனிரெண்டாம் வகுப்புக்கு பின்னர் எல்லோருடைய கனவும் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பாக இருக்கும் . என்னுடைய கனவும் அதுபோல தான் இருந்தது , மருத்தவம் பயில வேண்டும் என்பதே எனது கனவு .ஆனால் மருத்துவம் சேர்வதற்கு ஒன்றரை மதிப்பெண் குறைவு , நல்ல வேலை கால்நடை மருத்துவத்திற்கு விண்ணப்பிதிருன்தேன். கால்நடை முதுவப்பணியினை தற்போது செவ்வவனே செய்து வருகிறேன் .

தற்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.கால்நடை மருத்துவம், மீன் வளம், உணவுத் தொழில்நுட்பம் மற்றும் கோழி உற்பத்தித் தொழில்நுட்ப இளநிலை பட்டப் படிப்புகளில், இந்தக் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள், நாளை மறுநாள் முதல் வினியோகிக்கப்பட உள்ளது.விண்ணப்பங்களை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இது குறித்த விவரங்களை, பல்கலைக் கழக இணைய தளத்தில் (www.tanuvas.ac.in) தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


கால்நடை மருத்துவப்படிப்பு பற்றிய சில தகவல்களும் எனது அனுபவங்களும் ....

இது ஐந்து வருட படிப்பு ,படிப்பு செலவு மிகவும் கம்மி ,(வருடத்திற்கு பதினைந்தாயிரதிற்கு மேல் செலவு கிடையாது , அதுவும் நிறைய ஸ்காலர்ஷிப் இருக்கு ( எங்க பாட்ச்சில் என்னையும் சேர்த்து மொத்தம் ஆறு பேரு தான் ஸ்காலர் இல்லாம படித்தோம் ), இரண்டு கல்லூரிகள் சென்னை , நாமக்கல் ( இன்னும் இரண்டு இடங்களில் வரப்போகின்றன ),பெண்களையும் படிக்கவைக்கலாம் ( எங்கள் பாட்ச்சில் பெண்கள் நாற்பது சதவீதம் - அனைவருக்கும் தற்போது அரசாங்க வேலை கிடைத்து விட்டது,


  , வெட்னரி படித்தால் மாட்டு வைத்தியம் மட்டுமல்ல ,ஆராய்ச்சி , சிவில் செர்விஸ் ( veterinary option  ஒன்றே civils இல் தனியாக உள்ளது  , போன முறை எனது சீனியர்கள் மூவர் சிவில் கிளியர் செய்துள்ளனர் ), GRE  , TOFL கிளியர் செய்து வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்கலாம் , யார் கீழயும்  வேலை செய்ய பிடிக்காதவர்கள் கிளினிக் வைக்கலாம் .


மேலும்  இது ஒரு , 

போட்டியே இல்லாத துறை .மனநிறைவான தொழில் .

இவ்வளவு குறைந்த கட்டணத்தில் மருத்துவ பட்டம் உலகில் வேறு எங்குமே கிடைக்காது .

so chose the road which is less traveled by 


பின்குறிப்பு :
NRI க்களுக்கு கோட்டா இருக்கிறது . 

மேலும் விவரங்களுக்கு  ..

13 comments:

  1. நல்ல பதிவு டாக்டரே..யாராவது பிளஸ் டூ முடித்தவங்க இருந்தா இதை சொல்லுங்க அப்பு,,,

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா ... நீங்களும் சொல்லுங்க sir

      Delete
  2. நல்ல பதிவு..

    நான் எஞ்ஜினியரிஙகில சேர்ந்து ஒரு வாரம் கழிச்சு BVSC கவுண்ஸ்லிங் கார்டு வந்தது.. ஏற்கனவே ஃபீஸ் கட்டி காலேஜ்ல சேர்ந்துட்டதால அத அட்டெண்ட் பண்ணவே இல்ல... :)

    ReplyDelete
    Replies
    1. ச்சே.. கால்நடை மருத்துவம் ஒரு நல்ல டாக்டரை இழந்துவிட்டதே

      Delete
  3. இலங்கையில் இருந்து கொண்டு , இந்த பதிவுக்கு என்ன பின்னூட்டம் போடலாம்ன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன், ஏதாச்சும் சிக்கினா போடுறேன்.. ஓகேவா.....?

    ReplyDelete
    Replies
    1. கிஷோர் பாரின் மக்களுக்கு அஞ்சு சீட் இருக்கு , தம்பிய சேர்த்து விட்டுரலாம் . ஓகே

      Delete
    2. அம்புட்டுக்கும் பணம் வேணுமே மச்சி... அந்த அஞ்சு சீட்டும் அப்பிடியே இருக்கட்டும்.

      Delete
    3. one semester fee is 6-7 thousand only nanba

      Delete
    4. இலங்கை பணத்தில் 21 ஆயிரம் ஆகுதே நண்பா, அதுபோக பூவாக்கு என்ன பண்றது?

      Delete
  4. hello dr...!!!

    very good information... i will forward this to some of my friends....

    keep it up...

    ReplyDelete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...