Wednesday, February 27, 2013

என்ன வளம் இல்லை:சதுப்பு நிலத்தில் உப்புத்தன்மை கடல் நீரின் உப்புத்தன்மையை விட இருமடங்கு அதிகமானது, மேலும் அதில் பிராணவாயுவின் அளவு மிகக்குறைவு, நீர் மட்டம் நிலையாக இருக்காது . இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இப்பகுதியில் ஒரு மரத்தின் விதை விழுந்தால் என்னவாகும்?

 ஏறி இறங்கும் நீர்மட்டத்தில் மூழ்கி, பிராணவாயுவின்றி, அதிகப்படியான உப்புச்சூழ்நிலையினால் விதையின் நீர்சத்து உறிஞ்சப்பட்டு விதை செத்துப்போகும்.


.................................................................
கீழே உள்ள படம் சுந்தரவனக்காட்டில் எடுக்கப்பட்டது....
 இந்த சதுப்பு நிலத்தில் எவ்வாறு இத்தனை மரங்கள் முளைத்தன?
.......

கங்காரு தனது வளர்ச்சிபெறாத குட்டியை  தன்னோடே வைத்து பாதுகாப்பது போல, தாய் மரதிலேயே விதைகள் முளைத்து ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்த உடன் தான் தாய்மரம் அதனை கீழே வளர அனுமதிக்கும்.


 அதாவது இது ஒரு அரிதான குட்டி போடும் வகை தாவரமாகும்.

நிற்க....

இது போன்றதொரு அசாதாரண சூழ்நிலையை கொண்டது தமிழகத்தின் வறட்சி மாவட்டங்கள்.

 தகிக்கும் வெயில், பாறை பூமி, களர் நிலம், இது பத்தாது என்று தமிழகதின் மூன்று புறமும் தண்ணீர் தர முடியாது என்று செக் வைத்து விட்டார்கள்.

இப்போது நமக்கு தண்ணீர் வருவதற்கான ஒரே வழி வானம் தான்.

மரங்கள் உள்ள இடங்களில் தான் மழை பொழியும் என்பது திண்ணம்.

 நமது தமிழகத்தில் உள்ள வறட்சி மாவட்டங்களின் காடுகளில் கோடை காலத்து வெயிலில் தாக்குப்பிடித்து நிற்பவை சில மரங்களே
அவற்றில் முக்கியமானவை மூன்று மரங்கள். அவை ஆலமரம் , அரச மற்றும் வேப்ப மரங்கள்.


.........................................

பாறைகள் செடிகளின் வளர்ச்சியை அனுமதிக்காது. பாறைகள், நுண்ணுயிரிகள் கூட வாழ கடினப்படும் இடம்.

ஆலம் மற்றும் அரச மரங்கள் Ficus இனத்தை சேர்ந்தவை .இவை பாறை நிலத்திலும் வளரும் தன்மை கொண்டவை. இதன் வேர்கள் பாறைகளை பிளந்து ஆழ ஊடுருவும் தன்மை கொண்டவை.

 இதன் மூலம் வேர்களுக்கும் பாறைக்குமான இடைவெளியில் உள்ள ஈரப்பதத்தில் வளரும் பூஞ்சைகள் பாறைகளில் உள்ள தாது உப்புக்களை வெளிக்கொணரும். வேர்களால் பொடி செய்யப்பட்ட பாறைகள்+பூஞ்சைகள் வெளிக்கொணர்ந்த தாது உப்புக்கள் + மரத்தின் செத்தைகள் சேர்ந்த கலவை உயிர்மண்ணை உருவாக்கும்.இந்த மண் பாறைகள் போல அல்லாமல் நீரை பிடித்து வைக்கும் தன்மை உடையவை. மரங்களில் இருந்து விழும் இலைகளின் கீழே மக்கிக்கொண்டு இருக்கும் இலைகள், பல புழு பூச்சி இனங்களை வசீகரிக்கும்.

 அதில் முக்கியமானவர் திருவாளர் மண்புழு.
மண்புழு ஒரு நிலத்தில் நுழைந்து விட்டால் நிலம் வியத்தகு அளவில் மாற்றமடையும். அவை ஏற்படுத்தும் துளைகள் மண்ணின் நீர்ப்பிடிப்புத்தன்மையை அதிகரிக்கின்றன, துளைகளின் மூலம் நிலம் சுவாசிக்கின்றது, மண்புழு மண்ணை செரித்து வெளியிடும் castகள் ஒரு முதல்தர உரம். இது பல வகை தாவரங்கள் வளர ஏற்ற சூழலை ஏற்படுத்துகிறது.

இவ்வகை மரங்களின் பழங்களை அனைவரும் கவனித்திருப்போம், அத்திப்பழம் போல உள்ள இவற்றின் உள்ளே பூச்சி வைத்திருக்கும். அவை அனைத்தும் ஒரு வகை பெண் பூச்சிகள், இவைகளால் தான் இம்மரங்களின் மகரந்த சேர்க்கை நடைபெருகிறது, ficus இனங்களின் ஒவ்வொரு இனதிற்கும் மகரந்த சேர்க்கை நடத்தும் பூச்சியினம் மாறுபடும். ஆலமரம் மற்றும் அரச மரங்களின் மகரந்த சேர்க்கை நடத்தும் பூச்சியினம் தெற்காசியாவில் மட்டும் வாழ்வன, மற்ற நாடுகளில் இம்மரங்கள் வளராததற்கு இது ஒரு முக்கிய காரணம். 

ஆலமரம் மற்றும் அரச மரங்கள் நமது நாட்டிற்கு கிடைத்த கொடை.

அடுத்து வேப்ப மரம்,
இதை பற்றி சொல்லத்தேவையே இல்லை...
காய்ந்து கிடக்கும் கோடையிலும் கால்நடைகளின் பசியை தணிக்க கை குடுக்கும் ஒரே மரம்.

..........................................................................................
ஆனால்....

இவற்றை நட்டு மரமாக மாற்றுவது அவ்வளவு சுலபமில்லை,
நடப்பட்ட கன்றுகளுக்கு தினமும் பராமரிப்பு தேவை, அப்படியே பராமரித்தாலும் மரமாய் அவை வளர ஆண்டுகள் பல ஆகும்.

நம் நாட்டில் தண்ணீர் வளம் வற்றி பஞ்சம் வர ஆரம்பித்த காலம் அது, வறட்சி மாவட்டங்களை மேம்படுத்த அரசு மெக்சிக்கோவின் பாலை நிலங்களில் வளரும் சீமைக்கருவை விதைகளை வறண்ட நிலங்களில் தூவிவிட்டன. பராமரிப்பு ஏதும் இன்றி கிட்டத்தட்ட 165 மீட்டர் ஆழம் வரை வேர்களை ஊடுருவவிட்டு வளரும் தன்மை கொண்ட செடிகள் அவை. அவற்றின் முட்க்கள் மற்றும் கசப்பு தன்மையினால் கால்நடைகள் தங்களை மேயும் தொல்லை இன்றி பரவி வளர ஆரம்பித்தன.

பல வறட்சி மாவட்ட மக்கள் தங்களின் நிலங்களில் இவற்றை வளர விட்டு, அவ்வப்போது அவற்றை கரியாக்கி, அதை விற்பனை செய்து பொருளீட்டுகின்றனர்.

மேலும் இவற்றின் காய்கள் புரதச்சத்து நிறைந்தவை , கால்நடை மருத்துவர்களால் கால்நடைகளுக்கு பறிந்துரைக்கப்படுகின்றது.

இருப்பினும்,
இவற்றின் மேல் வைக்கைப்படும் குற்றச்சாட்டுகள்...

1)    நிலத்தடி நீர்மட்டதை குறைக்கின்றது.
2)    தனதருகில் மற்ற வகை செடிகளை வளரவிடுவதில்லை

இவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.
நிலத்தில் உதிரும் இவற்றின் உதிர்ந்த இலைகளில் இருந்து வெளிப்படும் வேதியியல் பொருட்க்கள் மற்ற செடிகளின் முளைக்கும் தன்மையை பாதிக்கின்றது.

ஒரு நல்ல செடியானது தான் இருக்கும் ecosystem த்தின் ஒரு அங்கமாக இருந்து வளர்வது மட்டும் அல்லாமல் அந்த ecosystem த்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களின் வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும்.

நான் கண்டவரை சீமைக்கருவை தனதருகில் எந்த செடியையும் வளர அனுமதித்ததில்லை.நாம் ( நான்) சிறுவயதில் மாடு என்று அழைக்கும் Tree Hopper
எனும் ஒரு வகை பூச்சி, கல்யாணமுருங்கை போன்ற முள் மரம் / முள் செடிகளில் தன்னை முள்ளை போல் காட்டிக்கொண்டு அந்த மரம்/செடியின் சாற்றை உண்டு வாழும் சாது.

அது வெளியிடும் ஒரு வகை திரவம் எரும்புகளுக்கு உற்சாக டானிக். இவை தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாத இடங்களில் எறும்புகளின் பாதுகாப்பில் வாழ்ந்து பதிலுக்கு எரும்புகளுக்கு டானிக் கொடுக்கும்.(நாம் பால் மாடு வளர்ப்பதைப்போல).

இந்த மாடுகள் தற்போது சீமைக்கருவைகளை (வேறு வழியில்லாமல்) இருப்பிடமாக கொள்ள ஆரம்பித்துள்ளன. அவற்றை பின்தொடர்ந்து  எறும்புகளும் வந்துட்டன.


மேலும் சில வகை கூட்டுப்புழுக்கள் தங்களின் இருப்பை மறைத்துக்கொண்டு வாழ ஏதுவாக இருப்பதால், சீமைக்கருவையில் வாழவும் , அவற்றை உணவாகக்கொள்ளவும் பழகிக்கொண்டன.

இந்த ஒணானைப்போல், புழு பூச்சிகளைத்தேடி வரும் சில வேட்டைக்கார்கள் இங்கே உலாவுவதுண்டு.

நமது தமிழகத்தின் செடி/ மரங்களுக்கு ஏற்ப பரிணமித்த நம் மண்ணின் உயிரினங்கள், இந்த அயல்நாட்டு செடியோடு இந்த அளவில் வாழப்பழகியதே சாதனை தான். இவற்றைத்தவிர காக்கைகளைக்கூட நான் இவ்விடங்களில் கண்டது இல்லை.


.....................................
இப்போது என்னக்கு ஒரு சந்தேகம்...
இதே மண்ணில் தான் ஐய்யாயிரம் ஆண்டுகளாக ஒரு இனம் சங்கம் வைத்து, கடாரம் வென்று, செழிப்போடு வாழ்ந்து வந்தது. அவர்களை இந்த வறட்சி தாக்கவில்லையா? அவர்கள் எவ்வாரு இதை தாக்குப்பிடித்து வாழ்ந்தனர்?
........................................
சிறிய இடைவேளை...

இப்படிப்பட்ட ஒரு வறண்ட மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லும் சிறார்களின் ஒரு புகைப்படம் தங்களின் பார்வைக்கு...இக்குழந்தைகளின் கள்ளம் இல்லா தோற்றம் கவிதை எழுத தூண்டுகிறதா?

கவிதை எழுத அமரும் முன், நடுவில் இருக்கும் சிறுவனின் புத்தகப்பையில் இருக்கும் தண்ணீர் பாட்டிலைப்பாருங்கள்.
நாம் துவைப்பதற்கு கூட உபயோகப்படுத்தத்தயங்கும் நீரைத்தான் இச்சிறுவர்கள் பருகிவருகின்றனர்.

இச்சிறுவர்களுக்கே தண்ணீர் இல்லாத போது காட்டு விலங்குகளின் தாகத்தை பற்றிக்கவலை கொள்ள நமக்கேது அவகாசம்?
......................................
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது.

மரங்கள் பல நடலாம்,

ஆனால் நம் கண்முன்னே இருக்கும் சவால்கள் பல....
.....................................
மரங்களின் விதைகள் கடினமான தோலினால் சூழப்பட்டிருக்கும்.
இவற்றை முளைக்க வைக்க பல முறைகள் உண்டு.
-    கொதிக்கும் நீரிலே ஐந்து நிமிடம் வைத்துவிட்டு பின்னர் குளிர் நீரில் இரவுமுழுதும் ஊர வைத்துவிட்டு, அடுத்த நாளில் உலர் மண்ணோடு சேர்த்து உலர்த்தி விட்டு விதை நட வேண்டும்.
-    இல்லை எனில் அமிலத்தில் விதையைக்கழுவியும் கடினதோல்பகுதியை கரைக்கலாம்.
......................................
இப்போது நமக்கு தோன்றும் சந்தேகம், இவை எப்படி இயற்கையாக முளைக்கின்றன என்று?

விடை: பழம் விழுங்கிகள்.

பழம் விழுங்கிகள் பழத்தின் தோலை பதமாக நீக்கிவிட்டு, பழத்தை தான் உண்டு, வயிற்றின் அமிலத்திலும், உடல் சூட்டிலும், நொதிகளின் செரிமானத்திலும் விதையை நேர்த்தி செய்கின்றன.


 
நேர்த்தி செய்யப்பட்ட விதையானது உலகிலேயே உயர் தரமான உரமான எச்சத்தோடு வெளியிடப்படுகிறது, அதுவும் பறவைகளின் எச்சம் மிருகங்களின் கழிவை விட தரத்தில் உயர்ந்தது. காரணம் பறவைகள் சிறுநீரையும் மலத்தையும் சேர்த்து வெளியேற்றுவதால் அதன் கழிவில் நைட்ரஜன் சத்து மிகுந்து இருக்கும்.
வேறென்ன வேண்டும் ஒரு விதையை முளைக்க வைக்க?
:
:
:
இது மட்டும் பத்தாது boss...

வேர் பிடித்து வளர ஒரு பிடிமானமுள்ள ஈரப்பதம் தேவயான அளவில் உள்ள இடம் தேவை.
....................
இம்மாவட்ட மக்களின் முதுகெலும்பே அவர்கள் வளர்க்கும் கால்நடைகள் தான்.

இவை நிலத்தில் தென்படும் சிறு பச்சை இலைகளையும் விட்டுவைப்பதில்லை.

..............................................
பிறகு என்னதான் செய்வது?

நமது தமிழக மண்ணில் நமது சீதோஷ்ண நிலையை தாங்கி பல்கிபெருகும் ஒரு மரவகை உள்ளது.

Ø  அதன் இலைகளின் சொரசொரப்பும் கடினமான நரம்புகளோடு கூடிய தன்மையும் கால்நடைகளின் இலக்குக்கு அவை ஆளாகாமல் தப்பிக்க வைக்கின்றன.

Ø  பறவைகளின் செல்லமான watch tower அது.

Ø  நமது முன்னோர்களால் கற்பகத்தரு என்று அழைக்கப்பட்டது அது.

விதை நேர்த்தி செய்து பறவைகள் பாத்ரூம் போவது பெரும்பாலும் இங்கே தான்.

Ø  அளவான ஈரப்பதத்தோடு வேர்கள் கிளை பரப்ப வசதியாக பின்னல் போன்ற கருக்குகள்... மனிதனால் கூட தயாரிக்க முடியாத அழகான பூந்தொட்டி.


Ø  கால்நடைகளுக்கு எட்டாத உயரத்தில் அபார வளர்ச்சி.


Ø  தகுந்த வளர்ச்சி அடைந்த உடன், குழந்தைகளை கீழே இறக்கிவிட்டு விடுவாள் இந்தத்தாய்.


Ø  பெரியவனானதும் தாய்க்கு அரணாகும் குழந்தைகள்.  

Ø  திராவிடர்களின் குடும்பக்கலாச்சாரம் அவர்களின் மண்ணின் ஒவ்வொரு உயிரிலும் எதிரொலிப்பது என்னே விந்தை?
..............................
விதைகள் கருக்குத்தொட்டிகளில் விழுந்தால் தான் முளைக்கும் என்று கிடையாது, அருகில் விழுந்தாலும் முளைக்கும்.காரணம்,
1.இது மற்ற மரங்களைப்போல் நிழல் பரப்பி சூரிய வெளிச்சத்தை
தடை செய்வது இல்லை.
2. மேலும் மரத்தை சுற்றி உள்ள பூமி, எச்சங்களால் உரமேற்றப்பட்ட பகுதி.
இது எந்த அளவுக்கு எச்சம் சூழ் இடம் என்பதற்கு எடுத்துக்காட்டு...
ஆஸ்த்திரேலியாவில் bird dropping spider எனும் ஒரு சிலந்தி வகை பறவை எச்சம் நிறைந்த பகுதிகளில் எச்சத்தை போலவே வேடம் பூண்டு வலை பரப்பி அங்கு வரும் பூச்சிகளை வேட்டையாடும்.
.....................................


மேலே உள்ள படத்தில் உள்ள இலைகளில் பறவை எச்சங்கள் நிறைந்து உள்ளதை காணலாம். அந்த எச்சத்தை போல வலை பறப்பி உள்ள சிலந்தியை கீழே காணலாம்.

................................
ஆல அரச மரங்களின் பழதில் உள்ளே இருக்கும் பெண் பூச்சியினை ஆண்பூச்சிகள் பழத்தை துளைத்து வெளியே கொண்டு வரும். அப்போது பழத்தின் வாசனை காடு முழுதும் பரவும், இது பல பறவைகளை வசீகரிக்கும். பல்லிகள் கூட பூச்சியோடு கூடிய பழத்தை லபக்கிவிடும்.பல்லிகளை வேட்டையாட வரும் வேட்டைக்காரர்களில் வில்லேந்திரன் கழுகு முக்கியமானவர். காரணம் அவரது favorite perching spot….  பனைமரம். இந்த கழுகின் எச்சம் secondary seed dispersal முறையில் விதைகளை பரப்பும்.

...................................
வறண்ட மாவட்டங்களின் முதல் வித்து பனை தான். பனையை அடித்தளமாகக்கொண்டதே நமது ecosystem .இந்தியாவில் உள்ள மொத்த பனை மரங்களில் பாதி தமிழகத்தில் உள்ளது.
பனைமர வாசிகளின் எண்னிக்கை கணக்கில் அடங்காதது...


.....................................................
திராவிடர்கள் தங்கள் கிராமத்து நீர்நிலைகளுக்கு அருகில் ஆல, அரச மற்
றும் வேப்ப மரங்களை combination இல் நட்டுவைத்து வளர்த்துவந்தனர். அவற்றின் அருகில் பிள்ளையாரை வைத்தனர். 
திராவிடர்கள் வணங்கியது மரங்களைத்தான், பிள்ளையார் ஜஸ்ட் மரத்துக்கு காவல்.( க்ரானைட் மலைகளுக்கு குமரக்கடவுள் காவல்).
பழம் விழுங்கிகளை பித்ருக்களாக போற்றி உவளித்து வந்தனர்.


நீர்நிலைகளுக்கு அருகில் இருந்ததால் செழித்து வளர்ந்த மரங்களின் விதைகளை பறவைகள் பரவச்செய்தன.
.........................................


மழைநீரை சேகரிக்க ருக்கு நடுவே குளம் அமைத்தனர்.
அந்த நீர் சரியாக சேகரிக்கப்படுவதற்காக சரியான பாதை வகுத்து வைத்தனர்.

இந்த வசதிகளை நாம் சரியாக பயன்படுத்திக்கொண்டாலே போதும்.நீர்நீலைகளை உயர்த்திவிடலாம்.

பனையின் துணையோடு மரங்களை பெருக்கலாம்

..................................


 நாம் இப்பொது செய்ய வேண்டியது என்ன?
காலி இடங்கள் , ரோடுகளின் இருமங்கிலும் பனை மரங்கள் நட்டு வைக்கலாம்.
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டthதின் மூலம் அரச ஆல and வேப்ப மரங்களை நடலாம்.
நமது வீடுகளில் பறவைகளுக்கு இடம் ஒதுக்கலாம்.
அவை பருக தண்ணீர் வைக்கலாம்.

வீடு கட்டுபவர்கள் இத்தனை சதுர அடிக்கு இத்தனை மரங்கள் நட வேண்டும் என்று சட்டம் இயற்றலாம்.

நிறைய மரம் வைதிருப்பவர்களுக்கு வருமானவரி போndraவற்றில் சலுகை அளிக்கலாம்.

மேலும் வீட்டில் இரண்டு மாடுகள் வைத்திருந்தால் அவற்றின் சாணத்தின் மூலம் மாதம் ஒன்றிக்கு 2 சிலிண்டர்/450 கிலொ விரகுக்கு சம்மான எரிவாயு பெறலாம்  

..........................................
தலைவர் பன்ச் இல்லாமல் முடித்தால் எப்படி?
நான் சொன்ன மாதிரி கேட்டீங்கன்னா , இப்படி இருக்குர உங்க க்ராமம் இப்படி ஆயிரும்.

டிஸ்கி: தம்பி கிஷொகரிடம் இலங்கை பனைகளை படம் பிடித்து அனுப்ப சொல்லி இருந்தேன் . அதுக்கு தம்பி கருத்தா ஒரு பதில் சொன்னாப்புல...
“ எல்லா பனை மரமும் ஒரே மாதிரி தானே இருக்கும், இண்டியா பனை மரத்துக்கு மட்டும் கிளைகள் இருக்கா என்ன?”
......

நக்கீரா கண்களை நன்றாக திந்து பார்..


 thanks to Ramesh, Dinesh , kishoker , senoirs prakash , senthil and Natarajan

சுட்ட படங்கள் :
Related Posts Plugin for WordPress, Blogger...