Flash back:
காணும் பொங்கல் ...
கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் ...
இடம் : வண்டலூர் உயிரியல் பூங்கா
எல்லாம் நல்லாத்தான் போயிகிட்டு இருந்துச்சு,
ஆனால் அடுத்தநாள் காலை....
பல கோடிகள் செலவு செய்து உயிரியல்
பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நீர்யானை ஒன்று இறந்து கிடந்தது.
பிணத்தை அறுத்து பார்த்ததில் அதன் மூச்சுக்குழாயில் ஒரு ரப்பர் பந்து
அடைத்துக்கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Cause of death : asphyxia due to
choke என்று பதிவு செய்யப்பட்டது
நடந்ததை யூகிப்பது பெரிய விஷயமில்லை .
நீர்யானைகள் வாயை பல சமயங்களில் திறந்து வைத்திருக்கும்,
தனது வீரத்தை பறை சாற்ற எண்ணிய ஒருவன் அதன் வாயில் விட்டெரிந்த பந்து ஒன்று
அதன் கதையை முடித்து விட்டது.
............................
இயற்கை நோக்குதல் ஒரு அற்புதமான விஷயம், காடுகளில் சென்று மிருங்கங்களை
காண்பது கடினம், அதனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது உயிரியல் பூங்காக்கள்.
ஆனால் வீரத்தை காட்ட எவ்வளவொ இடங்கள் இருக்கும் போது கூண்டில் அடைபட்ட
புலியிடம் கல்லை விட்டெரிந்து வீரம் காட்டுவது எவ்வளவு பேடித்தனம்?
கொடுக்கும் இருவது ரூவா காசுக்கு எல்லா மிருகங்களும் நமக்கு வந்து சலாம்
போடும் என்று எண்ணுவது எவ்வளவு மடத்தனம்?
........................................
உயிர்களை அது வாழும் சூழலில் நோக்குவதும், அதன் குணாதிசயங்களை செயல்பாடுகளை
அதை இருப்பிடத்திலே காண்பதும், ரஜினி சாரோட வீட்டுக்கே போய் அவரது ஸ்டைலை கண்டு
ரசிப்பதற்கு ஈடானது.
...........................................
இயற்கையை ரசிக்க பல அரிய வகை மூலிகைகள் இருக்கும் அமெசான் காடுகளுக்கு செல்ல
வேண்டிய அவசியம் இல்லை.
வீட்டாண்டயே ரசிக்கலாம்,
உங்களுக்கு தேவை எல்லாம் பொருமை மற்றும் ரசனை.
இயற்கையை ரசித்தல் என்பது காணுதற்கரிய உயிரினத்தை படம் புடிச்சு மூஞ்சிபுக்குல
அத போட்டு லைக்க அள்ளுரதுன்னு பல காலமா நான் நம்பி வந்தேன்.
இயற்கையை ரசித்தல் என்பது பற்றிய எனது புரிதலை ஒரு நண்பன் மாற்றியமைத்தான்.
அது பற்றி வேறஒரு பதிவில்....
.........................................
சில சூத்திரங்களை கொண்டு இயற்கை ரசித்தலை பின்பற்றினால் இயற்கையின் பல
ஆச்சர்யங்களை உணர்ந்து கொள்ளலாம்.
பறவை அல்லது விலங்குகளின் இருப்பிடத்தை மைபோட்டு பார்த்தது போல கூறிவிடலாம்.
பின்னர் பொறுமையாக அவற்றை ரசிக்கலாம்.
அந்த சூத்திரங்களை நான் சொல்லிக்கொடுக்கிறேன்.ஆனா அதுக்கு முன்னாடி நீங்க
அஞ்சு விதிகளை கடைபிடிக்க ஒத்துக்கணும்.
விதிகள்....
1) காட்டுக்குள்ள கால்நடையாகத்தான் போகோணும் ( கால்நடை= animals இல்ல walking )
2) காட்டை அசுத்தப்படுத்தக்கூடாது , ரெம்ப அவசரம்னா ஒன்னுக்கு வேணும்னா
போயிக்கலாம்.
3) சவுண்டு விடக்கூடாது, சத்தமாக பாடல் கேட்க்கக்கூடாது,உயிரினங்களைதொந்தரவு பண்ணப்படாது.
4)ஃபோட்டோ எடுக்கலாம் , ஆனா ஃப்ளாஷ் பயன்படுத்தக்கூடாது.
5) எந்த பொருளயும் சேதப்படுத்தக்கூடாது, எதயும் காட்டிலிருந்து எடுத்துட்டு
போகக்கூடாது.
இந்த அஞ்சு விதிகளையும் கடைபிடிக்கிறதா இருந்தா மேற்கொண்டு படிங்க இல்லாட்டி that மீட்டிங்க மறந்துடுங்க.
.............................................
அல்லாரும் இயற்கை ரசிக்கிறேன்னு கால்டாக்சி புடிப்பாங்க,காட்டுக்கு போறேன்னு
கொடைக்கானல் போவாங்க, தண்ணில குளிப்பாங்க, பிறகு “தண்ணில” குளிப்பாங்க, மசாஜ்
பண்ணுவாங்க, மல்லாக்க கிடப்பாங்க.
நாம அதுமாரி செய்யப்போறது இல்ல,
ஊரோடு ஒத்து வாழுதல் என்பது எனக்கு பீரோடு சத்து மாவு சாப்பிடுவது போல
அலர்ஜியான விசயம்.
நாம கொஞ்சம் வித்யாசமா இதை அணுகலாம்.
காட்டுக்குள்ள போனோமா காட்டெருமையை
பாத்தோமான்னு இல்லாம, அதன் சூழ்நிலையினை
அலசும் வித்தையை அறிவொம்.
அதனால் என்ன பயன்? அதனை எப்டி செய்வது?
ஒரு உதாரண களத்தினை எடுத்துக்கொண்டு களப்பணி
செய்வோம். பின்னர் அடுத்த பதிவில் நாமே அதனை அடிப்படையாகக்கொண்டு சூத்திரங்களை
வகுக்கலாம்.
..................................
முதலில் தலைநகரில் இருந்து ஆரம்பிப்போம்.
இடம்: சென்னை, வேளச்சேரி அருகே உள்ள இடம்.
இது சிலரால் சதுப்பு நிலம் என்றும், பலரால் “16th Alphabet” காடு என்றும் அழைக்கப்படுகிறது.
இதை நான் தேர்தெடுத்தக்காரணம், இங்கே குறைந்த
பட்சம் பத்து வகையான நீர்ப்பறவைகளை நான் கண்டேன். இவற்றை வைத்து கொண்டு ஒரு பதிவை
தேத்திடலாம்ன்னு தான் அங்கே போனேன்.
அந்த அழகுப்பறவைகளை விட என்னை சிலர் ரெம்பவே
கவர்ந்துட்டானுங்க.
..........................................................
நேரம்: மதிய நேரம்,காலம்: வெய்யிற்காலம்.
அந்த சதுப்புநிலக்கரையில் இருந்த எல்லாசெடிகளும்
வாடியிருந்தன, ஒருத்தனைத்தவிர...
அவன் எருக்கஞ்செடி.
வெய்யில்காலத்திலும் succulent இலைகள், அப்டி இருந்தும் இது எப்டி கால்நடைகளின் ஜொள்ளுக்கு எப்படி
தப்புகிறது?
இலைகளில் உள்ள விஷப்பால்!!!
இவன் ஒரு பரிணாம உச்சம் கண்டவன்.
ஒரு கணுவில் நேருக்கு நேராக அமையப்பெற்ற இரு
இலைகள், அடுத்த கணுவில் 90 டிகிரி oppositடாக இரு இலைகள். சூரிய வெளிச்சம் முழுதும் இலைகளில்
படுமாறு ஒரு பக்காவான அமைப்பு.
எல்லாம் சரி, இங்க ஒரு வித்யாசத்தை கவனிச்சீங்களா?
Rules இன் படி கீழே இருக்கும் இலைகள் தானே முதலில் பழுத்து விழ வேண்டும்?
சம் திங் ராங்கு. வாங்க பாஸ் கிட்ட போய் பாக்கலாம்.
.....................................
நல்ல வாயன் சம்பாரிச்சத, நாற வாயன் தின்பதுதானே உலக
நியதி????
இந்த இலைகளின் தோற்றத்தை பார்க்கும் போது ஒரு
விஷயம் கன்ஃபார்ம் .இங்கே தின்பது நாற வாயனுங்க இல்ல.
ரம்ப வாயனுங்க ( ரம்பா வாயனுங்கன்னு படிச்சா
கம்பேனி பொறுப்பாகாது).
ஆனால் நமக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி....
இந்த இலைகளின் சேதார தோற்றத்தை பாருங்களேன்,
இது
ரம்ப வாயனுங்க வேலை மாதிரி தெரியலையே , இது ISI முத்திரை பெற்ற நாற
வாயனுங்க வேலை.
Ok Baba game starts now,
இங்க ஒரு கொள்ளைக்கார குருப்பு ஒளிஞ்சு இருக்கு,
வாங்க மக்களே அவங்கள கண்டு பிடிக்கலாம்.
.......................................................
ஒருத்தன் அல்வா திருடுரான்னா அவன் எங்கே
திருடுவான்?
அல்வா கடைல .
பில் குல் சஹி ஜவாப்.
அப்ப நாம அவனுங்கள தேட வேண்டிய இடம் , வேரெங்க ?
எருக்கஞ்செடி தான்.
.........................................................
சிந்தையை கவரும் பட்டாம்பூச்சியை யாரச்சும்
கொல்லுவாங்களா?
பசி வந்தால் 100-90 ம் பறந்து போயிடும் தானே?
பல பறவைகளுக்கு பட்டாம்பூச்சி தான் சுவைமிகுந்த Breakfast.
அப்ப சுவைமிகுந்த Breakfast ட்டா மாறாம இருக்க சுவையில்லா Breakfastட்டா மாற வேண்டியது தான்
ஒரே வழி.
ஷிவ்தத் உடம்புல தாரா, பாம்பு விஷத்த உரு ஏத்துன
மாரி ( சந்த்ரகாந்த்தா ! ), சில பட்டாம் பூச்சிகள் தங்கள் உடம்பில் எருக்க விஷத்த
உரு ஏத்தும்.
எப்டி? எப்டி ? எப்டி ?
பையன் பேரு Common tiger நாம இவனை குட்டிப்புலின்னு கூப்பிடலாமா?
இந்த குட்டிப்புலி இருக்கானே இவன் குட்டியா
இருக்கும்போதே எருக்கஞ்செடி இலையை தின்னு வளர்ந்தவன். அதுனால பட்டாம்பூச்கியா
மாறின பின்னாடியும் உடம்புல அந்த விஷம் இருக்கும். அதுனால பறவைகள் இவனை தின்பது
இல்லை.
குட்டிபுலி ஜோடி ஜோடியா இங்க சுத்திகினு இருந்தான்,
எப்டியும் எருக்கஞ்செடில தான் முட்டை போட வந்தாவனும்ன்னு காத்திருந்தேன். பையன்
செம ஸ்ட்ராங் , ரொம்ப நேரம் வெளாண்டுட்டு இருந்தான். ஏதோ சின்னஞ்சிருசுகள் தனியா
இருக்கட்டுமேன்னு விட்டுட்டு வந்துட்டேன்.
இது நம்ப குட்டிப்புலியோட க்லோஸப் படம் ( எடுத்த
இடம் பொன்பரப்பி)
இது அவனமாதிரியே இருக்க புலிப்பாண்டி படம் ( Danid egg fly - இடம் சோழன்மாதேவி)
புலிப்பாண்டி எதுக்கு குட்டிப்புலி மாதிரி வேஷம் போடனும்?
அவந்தான் இவன்னு நினைச்சு இவனயும் திங்காம
விட்டுருவானுங்க பாருங்க, அதான்.
............................................
பெண் குட்டிப்புலி எல்லாம் முடிஞ்சதுக்கு அப்பால
எருக்கஞ்செடில முட்டையிடும். குட்டிப்புலியோட வாரிசுகள் புழுக்களா வெளியவந்த பிறகு
ரம்ப வாய் கொண்டு இலையை கடிக்கும் .
![]() |
இது சுட்ட படம் |
அந்தோ பரிதாபம், பொங்கிவழியும் பாலில் மூழ்கியும் ,
வாய் ஒட்டிக்கொண்டும் உயிரை விடும்.
இதிலிருந்து மூனில் ஒரு பங்கு பாய்ஸ் தான் தப்பிப்பானுங்க.
.................................
Now its their turn.
சில தில்லாலங்கடி குட்டிப்புலியோட குட்டிகள் இப்போ
பாலில் மூழ்காத அளவு வளந்தாச்சு, இன்னும் சகோதரர்கள கொன்ன எருக்கஞ்செடிய பழிவாங்க
வேண்டியதுதான் பாக்கி.
டெக்கினிக்கு என்னன்னா ? பால் சப்ளை பண்ற மெயின்
நரம்ப வெட்டி விட்டுரணும், பால் வடிஞ்ச பின்னாடி இலையை ஒரு வெட்டு வெட்டலாம்.
இன்னோரு ப்யூட்டி என்னனா? இவனுங்க எதிரிகளை தலை எது
வால் எதுன்னு குழப்பிவிட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவானுங்க.
ஆனா சில காம்ப்ளான் பாய்ஸ் இங்க இருக்கானுங்க,
அப்டியே சாப்பிடுவேன் மம்மின்னு இலையை ஒரே கல்ப்புல கறைச்சுடுவானுங்க.
இந்த வெட்டுக்கிளிகள் ஆகட்டும், நம்ப
குட்டிப்புலியோட குட்டிகள் ஆகட்டும், ஒரு ஓற்றுமையை கவனிச்சீங்களா?
ரெண்டு பேர் உடம்பிலும் பளீர் வர்ண நிறங்கள். இவை
அல்லாருக்கும் தெரிவிக்கும் சேதி என்னான்னா?
நான் ஒரு விஷப்பையன், சாக்கிரதை!!!
மேய்வன இருந்தால் மேய்வனவற்றை மேய்வன இருக்கணும்
தானே?
இங்கே சில முட்டைகளை கண்டேன்,
நாவாய் பூச்சிக்கு கிழே இருக்கும் முட்டைகள் |
இவன் அவனே தான்.
வாங்க பாஸ் அவனை தேடி போவோம்...
இங்க ஏதாவது தெர்தா?
வாங்க ஸூம் போவோம்.
பையன் பேரு preying mantis @தயிர் சிலுப்பி@
பெருமாள் பூச்சி.
இவன் நால்வகை வேட்டையர்களில் வித்யாசமானவனன். ( நால்வகை
வேட்டயர்கள் பத்தி அப்புறம் ஒரு பதிவுல பாக்கலாம்).
இவன் ஒரு ambush predator, அதாவது சூழ்நிலையை ஒத்து வேடமிட்டு , இரை வரும் வரை காத்திருந்து
வேட்டையாடுவான்.
...................................................
இவனோட சாதிக்காரனுங்க சிலருக்கு இவன் அளவுக்கு இரை
வரும் வரை பொறுமை கிடையாது.
சில நெக்ட்டார் விரும்பி எரும்புகள் இங்கே
உலாத்துவதுண்டு
இவர்கள் ரம்ப வாயனுங்களை உண்பதில்லை , அதுனால ரம்ப வாயனுங்க இவனுங்களை
கண்டா ஓட மாட்டானுங்க .
இன்னும் சொல்லப்போனா இவ்வகை எரும்புகள் சில
கூட்டுப்புழுக்களையும், சில வகை பூச்சிகளையும் பால்மாடு போல வளர்க்கும். அதற்கு
எடுத்துக்காட்டாக சில எரும்புகளை அருகில் உள்ள செடிகளில் கண்டேன்.
சாமியார் வேடத்தில் உள்ள கொள்ளயனைப்போல, ஒரு
தயிர்சிலுப்பி இங்கே எரும்பு வேடத்தில் உலாத்திக்கொண்டு இருந்தான். எரும்பு தானே
என அசால்ட்டா இருப்பவர்களை அசால்ட் பண்ணிடுவான் இவன்.
என்னை பார்ப்பதற்கு முன்னாடி வரை நல்லா ஆர்ம்ஸ்
காட்டிகிட்டு படத்த போட்டுகிட்டு இருந்தான்.
நான் கவனிக்கிறேன்னு தெரிஞ்ச பின்னாடி அர்ம்ஸ
அடக்கிகிட்டு ,
சாரி பாஸ். நீங்க தேடிவந்த ஆள் நான் இல்லை, ஐயாம் அ
ஆடினரி எரும்பு ஃபெல்லோவ்னு பாவமா நின்னான்.
கண்ணா எரும்புக்கு ஆறு கால் , உனக்கு ரெண்டு சோடி
கால் தானே இருக்கு ?
நான் கில்லாடிம்மான்னு சொல்லிட்டு இடத்தை காலி
செஞ்சேன்.
......................................................
இவ்ளோ பேருகிட்ட கடி வாங்கணும்ன்னு எருக்கனுக்கு
தலை எழுத்தா என்ன?
பூச்சிகள் இல்லாட்டி மகரந்தச்செர்க்கை இல்லையே,
நாலைக்கே குட்டிப்புலி பெரிசாகி நெக்டார நக்க இங்க வருவான், அப்புறம் என்ன
பாலினேசன் தான், இனப்பெருக்கம் தான்.
நெக்டார் விரும்பிகள் பலர் இங்கே வருவார்கள்.
அவர்களை நம்பி கடை விரித்துள்ளான் இந்த
முள்சிலந்தி.
கடக சிலந்தி
மேலும் இங்க நிறைய பேர பாத்தேன்,
அதுல இந்த
கரப்பானுங்களுக்கு இங்க என்ன வேலைன்னு தெரியல ?
பயிற்சி போதவில்லையோ?
...........................................
எல்லாஞ்சரி.... ஒருத்தன நாம இன்னும் சந்திக்கவே
இல்லையே.
Mr.நாற வாயன்
நாற வாயா .... நீ எங்கடா இருக்க?
மாட்டிகினான் !!!
அவன் பேரு தெரியல , அதுனால நாம அவன வண்டு முருகன்னு
கூப்பிடலாம். வேணாம் வேணாம்... அவனுக்கு தும்பிக்கை இருக்கு .
அதனால் இன்று முதல் வண்டு கணேசன் என்று அன்போடு
அழைக்கப்படுவாய்.
...................................................
பாலில் ஆஸிட் ஊத்தினா என்னாவும் ?
திரிஞ்சிடும் இல்லையா?
வண்டு கணேசனுக்கு அந்த விசயம் தெரியும் போல.
ஆஸிட் மூத்திரத்த எருக்க இலையில் அடிச்சு விட்டு பால
திரிச்சு எடுத்துட்டு, இலையை தும்பிக்கைல உறிஞ்சிடுரான்.
எருக்க இலைக்கு ஏத்தாப்போல இவனுக்கு உடலமைப்பு வேற.
வண்டு கணேசா! உன்னோட பரிணாமத்தக்கண்டு நான்
வியக்கேன்.என்ன வறம் வேண்டுமோ கேள் என்றேன். வரத்துக்கு ஸ்பெல்லிங்க்
தெரியாதவனுங்ககிட்ட எல்லாம் நான் வரம் வாங்குறது இல்ல, கிளம்பு காத்து வரட்டும்
என்றான். அது ஒரு நல்ல டீலிங்காக எனக்கு பட்டதால் பட்டென கிளம்பி விட்டேன்.
......................................
பூச்சிகள் இருந்தால், புள்ளினங்களுக்கு குறைவேது?
இங்கே நான் கண்ட புள்ளி ராசாக்கள்,
கரிச்சான் மாமா,
ஹாக் குக்கூ, காகம்.
மேலும் சில ஒடக்காய்கள்(ஓணான்கள்)
........................................
நிச்சயம் அருகி வரும் கான்க்ரீட் காடுகள் ஒரு நாள்
இந்த 16th Alphabet காட்டை கபளீகரம் செய்து விடும். இருந்தும் save Earth T-shirt அணிந்த சென்னைக்காரர்கள் பசுமையை பாதுகாக்க கலர் கலர் க்ரோட்டன்ஸ் வைப்பார்கள்.
ஆனா எருக்கன்செடியிலயே ஆயிரக்கணக்கான ஆண்டு
வாழ்ந்து பழகிவிட்ட வண்டுகணேசனால அதுல வாழமுடியுமா?
..................................
வீடுக்கு வந்து விட்டத்தை வெரித்தபடி யோசித்தவாறு
இருந்தேன்.
அப்பா: என்னடா யோசனை?
நான்: அப்பா வீட்டுல எருக்கஞ்செடியை வளர்க்கலாமா?
அப்பா: “ வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே-மூதேவி
பாதாள மூலி படருமே-மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே” னு பாட்டுலயே எழுதி வச்சுருக்கங்கடா, எருக்கு
வீட்டுக்கு ஆவாது.
அப்ப அன்வர்???
அவ்ளவது தான்.
பின் குறிப்பு : இந்த எருக்கன் செடி ., வேம்பு , ரேடியோ பூ செடி (ipomea sp .) போன்ற பால் சுரக்கும் விஷசெடிகளை நமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்ததால் தான் அவற்றை பயிர்செய்யும் முன் நிலத்தில் இட்டு , அதன் மூலம் வளரும் செடிகளில் களைகொல்லித்தன்மையை புகுத்தினர் . அதுவும் ரேடியோ பூ செடி (ipomea sp .) நிலத்தின் நைட்ரஜன் சத்தை கூட்டக்கூடியது என்று நம்மாழ்வார் கூறியுள்ளார்
தல செம தல... வழமை போல உன்னோட கலக்கலான காமடி எழுத்தில் அறிவு பூர்வமான தகவல்கள். தம்மாத்தூண்டு வண்ணாத்துபூச்சி இம்மாம் பெரிய கில்மாலக்கடி வேல எல்லாம் பண்ணுமா?? அடங்கொன்னியா...
ReplyDeleteஇந்த பதிவையே மூணு பதிவா தேத்தியிருக்கலாம். என்னைய விட்ட ஐஞ்சி பதிவே தேத்தியிருப்பேன்.
ஐயா ஒருத்தன் கமெண்ட் பண்ணிட்டான்
Deleteகானகத்தில் காட்டு பூச்சி - தலைப்பு பொருந்துமாக இருந்திருக்கும் தம்பி. அருமையான பதிவு.
ReplyDeleteஹலோ டாக்டர் ரொம்ப நாள் கழிச்சி வந்தாலும், செம கலக்கலான பதிவு. நெறைய தகவல்கள். இடைவெளி விடாம தொடருங்க.
ReplyDeletethanks kovam nallathu bro and prakash sir
ReplyDeleteவண்டு கணேசன் உண்மையான பேரு -weevil
ReplyDeleteதங்களின் சேவை மென்மேலும் தொடர இறைவன் அருளட்டுமாக...
ReplyDeleteமிக அருமையான ரசனை (இயற்கை + இன்றைய மொழி)
ReplyDeleteஅழகிய புகைப்படங்கள்
ReplyDeleteதெளிவான உரை
அறிந்திறா தகவல்கள்
இளம் வயதினர்
அவசியம் அறிந்திட வேண்டிய
தகவல் பொக்கிஷம்
படைத்தவனுக்கு
கோடி
வணக்கங்கள்
வாழ்க என்றும் வளமுடனே .