Saturday, November 26, 2016

பேலியோ ... போலியோ ???

ஒரு நாள் , பசி  மிகுந்த மதிய  வேளையில் பாய் கடை பிரியாணியை ஒரு கை கவளம் நிறைய எடுத்து வாய்க்கு அருகே கொண்டு சென்றேன் .

அருகே இருந்த   நண்பன் டபார்ன்னு  சோத்த தட்டி விட்டுப்புட்டான் .

- அடப்பாவி ஏண்டா இப்புடி செஞ்ச ?

- சோறுங்றது விஷம் ...அத நீ திங்கப்படாது .

- விஷமா ? அத தானடா  காலங்காலமா தின்னுகிட்டு இருக்கோம் !!!

- தின்னுகிட்டு இருந்தோம்னு சொல்லு ...தின்னுகிட்டு இருக்கோம்ன்னு சொல்லாத ...எங்க தாத்தா நியாண்டரு சோறே தின்னதில்ல தெரியுமா ?

- எங்க தாத்தா அததானடா தின்னாரு !

- அதுனால தான் அவரு செத்துபோயிட்டாரு .

- பாவத்த....இது என்னடா புதுசா இருக்கு ?

- ஆமா புதுசு தான் ...அடேய்  டூலிட்டில் என்னை நன்றாகப்பார் ....


உத்து பாத்தேன் . ஆளு ஸ்லிம்மா ஆயிருந்தான் ."ஆமாண்டா ..ஆளே மாறிட்ட?

- ஆளு  மட்டுமா ...  எனக்கு இருந்த சுகர் பிரஷர் கொலஸ்ட்ரால் எல்லாம் போயே போச் .

- டே ... எப்பிட்றா ?

-மொதல்ல அந்த பிரியாணியை தூக்கி போடு .

- பிரியாணி போச்சே 
-----------------------------------------------------
ஊரெல்லாம் பேலியோ fever ............

எல்லாரும் சொல்றாங்க, இந்த பேலியோவை நாமளும் follow பண்ணி தான் பாப்போமே .
-----------------------------------------------------

நியாண்டர் செல்வனின் புக் வாங்கி படிச்சேன் ...face book க்ரூப்ல சேந்தேன் ...நிறைய படிச்சேன் ... நிறைய சந்தேகம் வந்துச்சு ... இருந்தாலும் பலர் ஏற்கனவே follow பண்ணி  பலன்  அடைஞ்சிருந்தாங்க that too without any side effects.

ஓகே.... ஒன்னும் பயப்பட  வேண்டியதில்லை ... பேலியோ கடல்ல குதிச்சிர வேண்டியது தான்னு முடிவு பண்ணி கைபுள்ளயாட்டம் குதிச்சாச்சு 
-----------------------------------------
 அல்சர், அப்பறம்  கடவாயில இருக்க ஒரு  சொத்தப்பல்ல தவிர நம்ம பாடில வேற எந்த பிரச்சனையும்  கிடையாது . கொஞ்சம் ஒபிஸ் ..அவ்ளோ தான் . அதால ப்ளாட் ரிப்போட்டலாம் ஒன்னும் எடுக்கல .

அசைவைம் இல்லா உணவு முழு உணவல்ல என்பது எனது கருத்தாயிருந்தாலும் சைவ முறையில் உண்ண வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் முட்டையை மட்டும் diet'ல் சேர்த்துக்கொண்டேன் .
-----------------------------------------------
எதோ carb flu வரும்னாங்க ...ஒன்னியும் வரல.

பதினஞ்சே நாள்ல அஞ்சு கிலோ குறைஞ்சுது ... ரொம்ப நாளா இருந்த அல்சர் எங்கயோ ஓடிருச்சு ...

எங்க.... இருக்க சொத்தப்பல்லும் விழுந்து புதுசா மொளைச்சிருமோன்னு தோனுற லெவலுக்கு ஆச்சரியமா போச்சு . 


ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் உறுத்திக்கிட்டே இருந்துச்சு ...அது..... 'மலச்சிக்கல்'
---------------------------------------------------------------

இந்த மலச்சிக்கல் இருக்கே இத பத்தி சொல்லியே ஆவனும் ...

காக்கா பறக்கும் போதே கக்கா போவுது ...மாடு நடக்கும் போதே சாணி போடுது ... இதுக எல்லாம் மத்த விசயங்களை செய்யும் போதே கக்கா போகுதே ...ஆனா மனுசங்களுக்கு  மட்டும் கக்கா போகனும்னு  நெனைச்சாலும்கக்கா போதல் கஷ்ட்டமா  இருக்கே, ஏன் ?

என்னைக்காவது கக்கூஸ் போக கஷ்ட்டப் பட்ட விலங்கினை நீங்கள் கண்டதுண்டா ?

-பாத்திருக்க மாட்டீங்க -.

ஆனா நா பாத்திருக்கேன் .ஒரு கால்நடை மருத்துவனாக எனது அனுபவத்தில் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் என்னன்னா  , எந்த ஒரு விலங்குக்கும் அதன் இயல்பு உணவு மாறும்போது ஒன்று கழியும் அல்லது கழிக்க கஷ்ட்டப்படும் . 
------------------------------------

சரி, பேலியோ எடுத்த நமக்கு மட்டும்தான் இப்புடியான்னு பாத்தா ...நெறைய பேர் இருந்தாங்க . 






சரி  இதுக்கு என்னதான் தீர்வுன்னு தெரிஞ்சுக்க பழைய போஸ்ட் எல்லாம் கிளறினா ... அதுக்கு தீர்வ சொன்னவர் , ரெண்டுநாளைக்கு  ஒருக்கா டாய்லெட் போனா போதும்னு சொல்லியிருந்தாரு .



சரி வாழைப்பழமாச்சும் சாப்பிடலாம்னு பாத்தா, கொய்யாக்கா தவிர வேறெதையும் சாப்புடக்கூடாதுன்னு சொல்லிருந்தாங்க . But கொய்யாக்கா ஓரளவுக்கு உதவுச்சுங்கிறதையும் மறுக்குறதுக்கு இல்ல . . 

ஆனா ஒரு பதிவுல நியாண்டர் ஆப்பிள் சாப்பிடுங்க'ன்னு மலசிக்கலுக்கு தீர்வு சொல்லிருந்தாரு .

 அவரே வேற ஒரு பதிவுல ஆப்பிள் சாப்பிட்டா பாவம்னும் சொல்லிருந்தாரு .


ஆத்தாடி ...இம்புட்டுகாண்டு பழத்த தின்னா பாவமா ? அப்புடி அந்த பழம்  என்ன தான் தப்பு பண்ணுச்சு ? கார்போஹைட்ரேட்ட தின்னு உயிர் வாழுற எந்த உயிரினமுமே இங்க இல்லையா .








பறவையும் நாமளும் ஒன்னா ? ன்னு நீங்க கேட்டது  எனக்கு கேட்ருச்சு .இதே தான் நியாண்டர் சாருக்கும் கேட்டிருக்கணும் .அதனால் அவர் நம்மோடு நெருங்கிய தொடர்புடைய , தற்போதைய உலகில் வசித்துவரும் ஒரு உயிரினத்தோடு மனிதனின் உணவு பழக்கத்தை ஒப்பிட்டு, நாம் கார்போஹைட்ரேட்டை உண்பது   பாவச் செயல் என விளக்குகிறார்  .




 இதிலிருந்து நாம் பெரும் செய்திகள் 

1. பழங்கள்,இலைகளில் உள்ள நார்சத்தை மட்டும் குரங்குகள்  உபயோகின்றன 
2. நார் சத்தை மனிதனால் உபயோகிக்க முடியாது .
3.மனிதன் மட்டுமே நார்சத்து அல்லாத கார்பை அதிக அளவில் உட்க்கொள்ளுபவன் 
4. இப்பதிவில் அவர் fructose ஐ பற்றி கூறவில்லை . அல்லது அத்தகவலை தவிர்த்திருக்கிறார் .

இதில் நமக்கு சந்தேகத்தை  அளிக்கக்கூடிய  விஷயம் ...


நமது ஜீனில் 96 % ஒத்துப்போகும் நமது நெருங்கிய உறவினரினனாகிய  chimpanzee யோடு ஒப்பிடாமல் , கொரில்லாவோடு நம்மை ஒப்பிடக்காரணம் என்ன ?என்பதே .

ஏன் என்றால் கொரில்லாக்களால் நார்ச்சத்தை செரிக்க முடியும் .

hind gut பெரிதாக உள்ள குரங்குகளால் நார்ச்சத்தை நுண்ணுயிரிகள் துணையோடு நொதிக்க வைக்க முடியும் . 

ஆனால் அந்த கொரில்லாவும் நாமும் உணவுப்பாதையின் அடிப்படையில் வேறுபடுகிறோம் .



//"The primary difference of the digestive system between gorillas and humans is found in the gastrointestinal tract. Gorillas are herbivores so they need to be able to break down cellulose. Gorillas are known to be colon fermenters, which is defined as the anaerobic breakdown of organic compounds. Gorillas have large colons and the large intestine is filled with microbes (bacterial) and enzymes indigenous to the colon of the host, which destroy pathogenic microorganisms that are harmful to the host. Within gorillas it is believed that these bacteria serve the purpose of fermenting, detoxifying food, and breaking down cellulose (Stevens and Hume, 1995)."// link


சரி பேலியோவில் நார்ச்சத்தை பற்றிய புரிதல்  என்ன ?

- நாலணா காசை முழுங்கினால்  அது எப்படி செரிக்காமல் வெளியேறுமோ அதுபோன்றது தான் நார்சத்து . அது உடலுக்கு தேவையில்லாத ஒன்று .





ஆக,  இலை  தழைகளில் உள்ள நார்ச்சத்தை,  குதிரையைப்போல் ஜீரணித்து  உயிர்வாழும் கொரில்லாக்களோடு நம்மை ஒப்பிடுவது தவறு என்பது புலனாகிறது .


சரி , அது போகட்டும் , அவர் ஒப்பிடத்தவறிய Chimpanzee யோடு நாம் மனிதனை ஒப்பிடுவோம் .

ஏன் Chimpanzee யோடு ஒப்பிட வேண்டும் 


அதாவது சில வகை ஜீன்கள்  உதாரணத்திற்கு, பேச்சுக்கு காரணமான ஜீன்கள் மட்டுமே நமக்கும் அவைக்கும் வேறுபடுகின்றன .

பேச்சுக்கு காரணமான ஜீன்கள் பற்றி சொல்லும்போது , திரு நியாண்டர் அவர்கள் கூறிய கருத்துக்கள் ஞ்யாபகத்திற்கு வருகின்றன .


அப்போ நியாண்டர் அவர்கள் , தனது புத்தகத்தில் நமது ஜீன் கடந்த பத்தாயிரம் வருடங்களாக 0.01% தான் மாற்றம் அடைந்துள்ளதாகவும்  அதனால் தான் carbபை ஜீரணிப்பதில் சிக்கல் என்று கூறியுள்ளாரே ?ஆனால் இங்கே புது ஜீன் உருவாகிறது என்று கூறியுள்ளாரே ?

//மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பித்து அரிசி, பருப்பு, பீன்ஸ், கோதுமையைச் சாப்பிட ஆரம்பித்தது 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே.
இது குறித்து ஆராயும் பரிணாமவியல் விஞ்ஞானிகள் கூறுவது - மனிதனின் 99.99% ஜீன்கள் நாம் விவசாயம் செய்வதற்கு முன்பே உருவாகிவிட்டன என்பதே. விவசாயம் பிறந்தபின் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் நம் ஜீன்களில் வெறும் 0.01% மாற்றமே நிகழ்ந்துள்ளது//

அதைப்பற்றி அவரே விளக்குகிறார் .....




கிமு பத்தாயிரமாவது ஆண்டுவாக்கில் எப்படி லேக்டோஸை செரிக்க முடிந்ததோ ....அதே போல் தான் நமக்கு carb பை செரிக்கத்தேவையான அமைலேஸும் உருவானது .ஆனால் அதைப்பற்றி  அவர்  கூறவில்லை .ஏனென்றால் அவரின் கருத்துப்படி carb உடலுக்கு எதிரி .

-----------------------------------------------------------------------------------
சரி இப்போது chimpanzee பற்றி பார்ப்போம் 


 

அதுமட்டுமா ?



chimpanzee கள்பழ உண்ணிகள் .,இவற்றிற்கு இலை முக்கிய உணவு கிடையாது . 

அப்படியானால் //பாலூட்டிகளில் அதிக அளவு ஆற்றலை கார்ப் மூலம் அடையும் ஒரே பிராணி மனிதன் மட்டுமே // என்ற வாதம் இங்கே அடிபட்டுப்போகிறது . 

 அவரது கொள்கையை நிறுவ, வேறு  சில விஷயங்களை வேண்டுமென்றே மறைந்திருக்கலாம் என்கிற சந்தேகமும்  இக்காரணத்தினால்வலுக்கிறது .

எந்த கொள்கையை நிறுவுவதற்காக ?

பல ஆயிரம் ஆண்டுளாக  நாம் உண்டு வந்த fructose, நமக்கு ஆகாது எனும் கொள்கையை நிறுவுவதற்காக.
...................
carb நமக்கு நல்லவனா கெட்டவனா எனும் தீர்வுக்கு , நம்மிடமுள்ள அறிவியல் தரவுகள் அடிப்படையில் முடிவுக்கு வருவது தவறு .

 ஏன்னா ... அறிவியல் carb ஜீரணத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை . 


இதை எல்லாம் சிந்தித்தபடியே கடைத்தெருவில் நடந்து சென்ற எனது நாசியெங்கும் சுகந்தம் .

 அது என்ன என்று பார்க்கக்கூட தேவையின்றி , அது மாம்பழத்தின் நறுமணம் என்று மூளை  அறிந்து கொண்டது .

--------------------------------

கீழ் காணும் மரத்திலுள்ள மாங்காய்களை கண்டு பிடியுங்கள் பார்ப்போம் .


கஷ்ட்டமா இருக்குல்ல ?

ஏன் மாங்கா, இலையைப்போலவே பச்சை கலர்ல இருக்கு ? 
ஏன் மாங்காய்ல இருந்து வாசம் வரல ? 

மாங்கா ஏன் தன்னை வெளிப்படுத்திக்க மாட்டேங்குது ?

இதுவே மாம்பழமா இருந்தா... இலைகளுக்கு நடுவே வசீகரிக்கும் பளீர் வர்ணத்தில் தெரியுமல்லவா ? கண் தெரியாத மாற்றுத்திறனாளி கூட வாசனை கொண்டு அதனை அடையாளம் காணமுடியுமல்லவா ?

காயைப்போல் அல்லாமல் பழம் மட்டும் ஏன்   இவ்வாறு இருக்க வேண்டும் ?

"கிட்ட வாங்களேன் , உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன் ."

தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பும் எந்த ஒன்றும் ,  வாசனை திரவியங்களையும் பளீர் வர்ணங்களையுமே தேர்ந்தெடுக்கும் .( மனிதர்கள் உட்பட :P )


இவ்வாறு பழத்தை  வெளிப்படுத்தவதால்  மரத்திற்கு என்ன லாபம் ?

பழத்தை உண்ட குரங்கு விதைப்பரவலுக்கு உதவுகிறதல்லவா ?

----------------------------------
சரி அத விடுங்க ... பழுக்காத காய்களை உடைய தாவரம்தனை  எங்கேனும் நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ?

தெரியலையா ???

நானே சொல்றேன் ..

"ஊமத்தை "

இந்த செடியில, இதோட காய்கள் எங்கே இருக்கு  ?

அவ்ளோ சீக்கிரம் வெளிய தெரியாது ... கீழ குனிஞ்சு பாருங்க ...தெரியும் .



ஊமத்தை , விதைகளை ....வெடித்து பரவ விடும்,மேலும் இதன் விதைகள் நீரிலே மிதக்க வல்லவை .அதன் விதை பரவலுக்கு விலங்குகள் தேவையில்லை...அதனால் அது தனது காய்களை வெளிப்படுத்திக்கொள்ள வில்லை .

பசியோடு அலையும் விலங்குகள்  காய்களை கண்டுகொள்ளும் வாய்ப்பு இருப்பினும், அக்காய்களை கண்டுகொண்ட விலங்குகளை, முட்கள் கொண்டு எச்சரிக்கிறது ஊமத்தை . அதையும் மீறி சாப்பிட்டால் , அடுத்த முறை அக்காயை சாப்பிட அந்த விலங்கு உயிரோடு இருக்காது .

ஆனால் இங்கே இன்னொன்றை கவனித்திர்களா ? ஊமத்தை பூக்கள் எவ்வளவு அழகாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்றன?

 ஏனெனில் அவற்றின் மகரந்த சேர்க்கைக்கு உதவும்  பூச்சிகளை சுண்டியிழுக்க வேண்டுமல்லவா ?

மகரந்த சேர்க்கை செய்ய உதவும் தேனீக்களுக்கு பேலியோ டயட் பற்றியெல்லாம் தெரியாது . அவற்றின் ஒரே உணவு 'தேன் '. தனது இனம் தழைக்க தேனீக்கள் அவசியம் என்பதால் , தேனீக்களுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தையும் பூக்களே வழங்கிவிடுகின்றன .

இதே போலத்தான் பழங்களும் . அதனால் தான் chimpanzeeக்கள்உணவில் பெரும்பான்மை பழங்களாய் உள்ளன .
இதை பற்றி நியாண்டர் சாரே சிறப்பாய் கூறியுள்ளார் .



செடிகள் நமக்கு உண்ணத்தக்க பொருளையும் உண்ணத்தகாத பொருட்களையும் தங்களது விருப்பத்தின் பேரில் தருகின்றன . அவற்றை விலங்குகள் எளிதாக கண்டு கொண்டு தங்களது உணவு முறையை அதற்கேற்றவாறு அமைத்துக்கொள்கின்றன . அறிவியலால் அறியப்படாத பல நன்மை பயக்கும் மூலக்கூறுகளை செடிகள் தந்த வண்ணம் இருக்கின்றன .



--------------------------------------

இவ்ளோ தெரிஞ்சுக்கிட்டும் இந்த மாம்பழத்தை சாப்பிடாம விட்றதா ?

ம்ஹும் .

மாம்பழம் ஒன்றை வாங்கி ஒரு கடி கடித்தேன் .

ஆஹா ... அந்த அனுபவத்தை எங்கனம் விவரிப்பேன் ?

பறந்துகொண்டிருந்த  பறவைகள் நின்றன ...அசைந்து கொண்டிருந்த செடிகள் உறைந்தன ...

லலலலா...லலலலா ...லலலலா ...

இதுகாறும் கார்பைக்காணாமல் தவித்துக் கிடந்த செல்களனைத்தும், சில்லறையைக்கண்ட கண்டக்கடராய் மகிழ்ந்தன . 
--------------------------------------------------

ஆமா இதை சாப்புட்டா சுகரு ஏறிருமே ?அந்த சுகர் கொழுப்பா போயி ஒக்காந்துக்குமே , அப்புறம் ஹார்ட் அட்டாக் .... மாரியாத்தா காப்பாத்து !!!!


கவலைப்படாதீங்க "சுகரு ஏறாது".

எப்புடி ?

மாம்பழத்தின் நார்ச்சத்தானது கார்ப்பை பிடித்துவைத்துக்கொண்டு  உங்கள் உடம்பில் அக் கார்ப்பை மெதுவாக ரிலீஸ் செய்யும். சொல்லப்போனா இந்த நார்சத்து உங்கள் டயாபடிஸ்க்கு மற்றும் இதய நோய்க்கு ஒரு நல்ல தீர்வு .மேலும் நார் சத்தால் மலம் எளிதாக வெளியேறுகிறது,இது நச்சுக்களை வெளியேற்றுகிறது மற்றும் சில கேன்சரை தவிர்க்க உதவுகிறது.  இதனால் சில பல விட்டமின்கள் மற்றும் இதர சத்துக்களும் உங்களுக்கு கிடைக்கின்றன.உடல் இளைக்கவும் உதவுகிறது  .

சரி அத விடுங்க ... அரிசி சாப்ட்டா சுகர் வரும்ங்கிறாங்களே ?

நாம அரிசியை பாலிஷ் பண்ணிட்டு நார்ச்சத்தை நீக்கிட்டு சாப்டா சுகர் வராம சுஷ்மிதா சென்னா வரும் ?

சரி அரிசியின் நார்ச்சத்தை பற்றி நியாண்டர் என்ன கூறுகிறார் ?


அளவான கார்ப் எரிக்கப்படும் பொது பிரச்சனை இல்லை ... அளவுக்கதிகமான கார்ப் உடலில் தேங்குவதால் தான் பிரச்சனை . அதிலும் சுகருக்கு பேலியோ ஒரு நல்ல "பத்திய" முறை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை .
.............................................
மேலும் அவரை நன்கு வாசிக்கையில் , நமது 'மாங்கா ஊமத்தை' கருத்துக்கு வலு சேர்க்குமாறு சில கருத்துக்களை கூறுகிறார் .



என்னது  குரங்கு பீன்ஸ் சாப்புடாதா ????



சரி குரங்கை விட்ருவோம் ... நாம ஏன் பீன்ஸ் சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாரு ?

அதற்கு அவர் நல்கும் விடை ... phytic acid.


ஆகா .. இம்புட்டு பண்ணுதா இந்த பைட்டிக் அமிலம் . இது எந்தெந்த உணவுல இருக்கோ அத அம்புட்டையும் தொடவே கூடாதுன்னு அத பத்தி சர்ச் பண்ணி பாத்தேன் ...


ஆத்தி ... இதே flaxseed ஐ தானே நம்ம பேலியோ காரங்க திங்க சொல்றாங்க . phytic acid acts as an antioxidant... உடம்புக்கு நல்லதுன்னு  வேற போட்ருக்கானே ...ஒரே கொழப்பமா இருக்கே ...


அட வெளக்கெண்ண ...அவரு தான் அத முளைகட்டி திங்க சொல்றாருல்ல ... அப்புடி தின்னு .

ஆமா முளை கட்டின பயிறு நெம்ப நல்லது , சினை பிடிக்காத மாடுகளுக்கு கூட கொடுப்போம் . நல்ல result தரும் .

 ஓகே முளை கட்டி அத தின்கிறோம் .... வெய்ட்ட கொறைக்கிறோம் .

நியாண்டர் அவர்கள் அங்கேயும் ஒரு செக் வைக்கிறார் .


என்னடா இது சோதனை ? புதுசா  லெக்டின் ன்னு ஒன்ன  இந்த பதிவுல சொல்றாரு ? இத திங்கலாமா? திங்கப்படாதா ?

அப்டியே அந்த பதிவ  உத்து பாத்தா ....அதே பதிவுல விவரமான ஒருத்தர் வந்து விவரமா ஒரு கேள்வி  கேட்டு நியாண்டரையே மடக்குராப்டி . ..




நியாண்டர் சாரும் தவற ஒத்துக்கொள்கிறார்  .

சரி இந்த லெக்டின்' ங்கிறவன்  யாரு ? எந்தெந்த உணவுல அவன் இருக்கான் ?

பாவத்த ... இதே நட்ஸ தானே பேலியோல தின்கிறோம் . 

அட பதரே ... அதுனால தான் அத ஊறவெச்சு தின்கிறோம்.

அப்ப பயிரையும் ஊற வெச்சு திங்கலாமா பாஸ் ?
------------------------------------------------------------------

உண்மை என்னென்னா ? நாம சாப்பிடற முக்காவாசி இயற்கைசார் உணவுகள்ல லெக்டின் இருக்கு . அதை தவிர்க்க வேண்டி , ஒரு காரியத்தை நாகரிக மனிதன் செய்தான் . அது தான் சமைத்தல் .அந்த சமைத்தல் தான் நம்மை கற்கால மனிதனிடம் இருந்து வேறுபடுத்துகிறது .



 அப்போ paleolithic  மனிதர்களை விட நாம் முன்னேறியவர்கள் தானே ...அப்போ  நாம அப்புடியே சாப்பிடலாமே!!!

இவ்வாதம் பேலியோவிற்கு எதிரான காரணத்தினால் ... அப்புடி சாப்பிட்டால் உங்கள் இனம் அழிந்துவிடும் என நியாண்டர் அவர்கள் நம்மை எச்சரிக்கிறார் .




சரி ...அவரது வாதத்தின்படி அதை உண்பவர்கள் அழிந்து போவார்கள் என்றால் . நாகரிக மனிதர்கள் இந்த உலகில் இல்லாமல் போயிருக்க வேண்டும் . மேலும்  நியாண்டர்கள், காட்டு  யானையின் கபாலத்தை பிளந்து தின்றவாறு இப்புவியில் உலவிக்கொண்டிருந்திருக்க வேண்டுமல்லவா ?

ஆனா அவனுங்கள பூமில காங்கலயே ? அவிங்க எங்க போனாய்ங்க ?

"அழிஞ்சு போயிட்டாய்ங்க ."

எப்புடி அழிஞ்சு போனாய்ங்க ?

அவர்களின் உணவுப்பழக்கத்தால அழிஞ்சு போனதா.... நாஞ்சொல்லல .... ஆர்டிகிள் சொல்லுது 

மனிதர்கள் chimpanzee போல உணவு வழக்கமுடையவர்கள் ஆனால் நியாண்டர்கள் மாமிசத்தையே பெரும்பாலும் சார்ந்திருந்தனர் .



அவர்களை சொல்லி குற்றமில்லை ...காரணம் அவர்கள் இருந்த யுகம் அப்படி .அதனால் கிட்டத்தட்ட வாரியார் பேலியோ வாழ்வு வாழ்ந்து வந்தனர் . 

--------------------------------------------
சரி உங்ககிட்ட ஒரு கேள்வி ?

வெயில் காலத்துல நம்மூர்ல கிடைக்கிற பழங்கள் பேரெல்லாம் சொல்லுங்க பாப்போம் ?

"தர்பூசணி , வெள்ளரி பழம் , கிர்ணி பழம் ...."

அடுத்த கேள்வி ... வறண்ட வெய்யிலில் அலையும் ஒரு குரங்குக்கு என்ன தேவை ?

"வேர்வையினால் இழக்கப்பட்ட உப்புச்சத்தும் நீர்ச்சத்தும் தேவை ."

பில்குல் சஹி ஜவாப் .இப்பழங்களில் இச்சத்துக்களே நிரம்பி உள்ளன .

தாவரங்களும் நாமும் ஒன்றாகவே பரிணமித்தவர்கள் . நமக்கு எந்த காலநிலையில், எந்த புவிப்பரப்பில், என்னென்ன தேவை என்பதை அறிந்து , அச்சத்துக்களை நமக்கு அளிப்பதன் மூலம் , அதன் இருப்பையும் நமது இருப்பையும் தாவரங்கள்  உறுதி செய்து கொள்கிறது .

இதனால் நாம் பெறப்படும் செய்தி யாதெனில் ... உங்கள் சுற்றுப்புறத்தில், ஒவ்வொரு காலநிலையில் விளையும் தாவரங்கள் தரும் உணவு உங்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது . 

அது உங்களுக்கு நன்மை செய்யுமே ஒழிய தீமை செய்யாது .


------------------------------
அப்ப , இந்த பயிறுகளை சாப்டா அலர்ஜி வரும்ங்கிறாங்களே ...

இந்த அலர்ஜிங்குறது ஆளுக்கு ஆள் வேறுபடும். உதாரணத்துக்கு முட்டைய எடுத்துக்குங்க , குழந்தைகளுக்கு வர்ற அலர்ஜி முட்டையால கூட வரலாம்  .
---------------------------------------------------

// விதைகளை உண்ணக்கூடாது // !!!!!
பாதாம் பருப்பு விதை தான்  , வால்நட்டு விதைதான் , அவ்ளோ ஏன் முட்டைங்கிறதே கோழியோட விதை தான் . 


அப்ப முட்டை மட்டும் இவர்களின் வாதப்படி, தன்னை தின்பவனை எதிர்க்காதா ?

இதைப்பற்றி நியாண்டர் என்ன கூறுகிறார் என்றால் பச்சை முட்டை குடிப்பது தவறில்லை , //இது அனைத்து ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ஆண்டவன் அளித்த லன்ச் bag // என்கிறார் .. .



முட்டையையும் ஒரு விதையாக எடுத்துக்கொண்டால் , நியாண்டரின் கருத்தின் படி lectin மற்றும்  பைட்டிக் அமிலம் போல் முட்டையிலும் anti nutritional factor இருக்க வேண்டுமே ?

இருக்கிறது , அதன் பெயர் அவிடின் .

அப்ப முட்டையையும் திங்க கூடாதா ?

கவலை வேண்டாம் ... பேலியோலிதிக் மனிதர்களல்ல நாம்,

நாம் நாகரிக மனிதர்கள் ... சமைத்து உண்ணத்தெரிந்தவர்கள் ...வேக வச்சு சாப்புடுங்க ...ஒன்னியும் ஆவாது .

இப்ப இப்ப என்ன பிரச்சனைனா ... நியாண்டர் அவர்கள் முட்டையை குடிச்சுட்டு, நா சாவல பாத்தீங்களா ?'ன்னு சொல்ற மாதிரி , எல்லாவற்றிலும்  immediate effect ட்ட மட்டுமே பாக்குறார் .  ஒரு உணவு முறையை வாழ்நாள் முழுக்க பின்பற்றுவதற்கு முன்னர் அவ்வுணவு முறை வாழ்வுமுறையாகுமா என்பதை அறுதியிட்ட பின்னரே முடிவெடுக்க வேண்டும் . 


சரி , எவ்வாறு அதை முடிவெடுப்பது ?

1. அறிவியல் தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் .

அல்லது 

2. அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் .


----------------------------
அறிவியல் தரவுகள் பற்றி நியாண்டர் அவர்களின் கருத்து என்ன ?



அறிவியல் தரவுகளின் அடிப்படையில் //ஒரு உணவுப்பொருள் நமக்கு நல்லதா கெட்டதா என தெரிய 10 - 30 வருடம் ஆகும்// என்கிறார் . 

இதன் அடிப்படையில் பார்த்தால் பேலியோவை பின்பற்ற முடியாது .

ஏன் என்றால் பேலியோவை மக்கள் பரவலாக பின்பற்றியது சமீப  காலத்தில் தான் . உடலுக்கு  அது ஏற்படுத்தும்  'நீண்ட நாள் .விளைவுகள்' பற்றிய ஆய்வுகள் இனி தான் வெளிவர வேண்டும் .
//The idea of a Paleolithic diet can be traced to a 1975 book by gastroenterologist Walter Voegtlin,[4]:41 which in 1985 was further developed by Stanley Boyd Eaton and Melvin Konner, and popularized by Loren Cordain in his 2002 book The Paleo Diet.[5] The terms caveman diet and stone-age diet are also used,[11] as is Paleo Diettrademarkedby Cordain.[12]
In 2012 the Paleolithic diet was described as being one of the "latest trends" in diets, based on the popularity of diet books about it;[13] in 2013 the diet was Google's most searched-for weight-loss method.[14]//


---------------------------------------
அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் என்றால், நீண்ட நெடிய வரலாற்று பின்புலம் கொண்ட நமது உணவு முறை தான் சிறந்ததும் , பாதுகாப்பானதுமாகத் தோன்றுகிறது .( தற்போது பெருகிவரும் வாழ்வுமுறை சார்ந்த நோய்களுக்கு காரணம், பட்டை திட்டிய அரிசி, ஜங்க் உணவு , ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட எண்ணை என்பது திண்ணம்  )

ஆனால் நியாண்டர் அவர்களின் கூற்றுப்படி பழந்தமிழரின் உணவு முறை "பேலியோ ".


அப்போ யானை கொண்டு போரடித்தவர்கள் சோழர்கள் இல்லையா ?

தஞ்சை பெரிய கோவிலில் கூலியாக நெல் கொடுக்கப்பட்டதாக கல்வெட்டில் உள்ளதெல்லாம் பொய்யா ?

அப்போ லெக் பீஸை எல்லாம் அவ்வையிடம் கொடுத்துவிட்டு, குஸ்காவை மட்டும் அதியமான் தின்றது எல்லாம் கட்டுக்கதையா ?


-----------------------------------------------------
மாற்று மருத்துவ முறைகள் பற்றி நியாண்டர் அவர்களின் பார்வை என்ன ?



ஆயுர்வேதம் சித்தாவை தான்  இவர் நம்புவதாகத்தெரிகிறது .

தமிழரின் பாரம்பரிய அறுசுவை உணவைபற்றிய இவரது பார்வை தெளிவாக உள்ளது .


அறுசுவை பற்றியும் அவற்றால் உடலுக்கு நேரும் விளைவுகள் பற்றியும் சித்தா என்ன கூறுகிறது என கூகுலிட்ட போது கிடைத்த விடைகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தது . 


இனிப்பின் தாது தசை !!! wow!!!
//Glycogen is a multibranched polysaccharide of glucose that serves as a form of energy storage in animals[2] and fungi. The polysaccharide structure represents the main storage form of glucose in the body.
In humans, glycogen is made and stored primarily in the cells of the liver and the muscles, hydrated with three or four parts of water//

அதிகமானால் வரும் நோய் நீரிழிவு !!!

carb குறைவதால் வரும் 'நோய்'???? ...........உடல் மெலிவு 
-------------------------------------------
அப்போ கொழுப்பு என்ன வகை சுவை ?

ஓ புளிப்பா ?

அது அதிகமான என்ன நோய் வரும்?

ஓ ... மலச்சிக்கலா? 

வந்துருச்சே .



இந்த பாரிச வாயுல்லாம் என்னன்னே தெரியாது . 

இதுல பெரிய அளவுக்கு பாண்டித்யம் இல்லாததால் இத அப்புடியே விட்ருவோம் .

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்லமுடியும். மலச்சிக்கலை பற்றி சித்தமருத்துவத்தின் கருத்து .

''மலசிக்கல் உடலில் பலசிக்கல் ''.

சரி நியாண்டர் அவர்களின் கீழ் வரும் பதிவை படியுங்களேன் 



வெளியேற்றாமல் அடக்கப்பட்ட காற்று, எவ்வாறு உடலில் கலந்து உபாதைகளை ஏற்படுத்துமோ .... அதே உபாதைகளை, கழிக்கப்படாத மலமும் ஏற்படுத்துமல்லவா ?
-------------------------------------------------------------
தான் நம்பும் பேலியோவை ஆதரிக்கும் விதமாக ஆவர் முன்வைக்கும் ஒவ்வொரு கருத்துக்களும் ஆயாசத்தை ஏற்படுத்துகின்றன .


தாய்ப்பாலில் இருக்கும் கொழுப்பையும் கார்ப் ' பையும் பாருங்கள் ... இது எங்கனம் பேலியோவாகும் ?

----------------------------------------------------------------------------------------------------

அவரது கருதுகோள்களிலும் கொள்கையிலும் ஒரு ஸ்திரத்தன்மை இல்லை .

நடைபயணம் தான் சிறந்தது . நாம் காட்டில் ஓட வில்லை என தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார் .

ஆனால் ஆதிமனிதன் ஒட்டத்தில் வல்லான் எனவும் ஒரு பதிவில்  குறிப்பிடுகிறார் .


-------------------------------------------------------------------------


நியாண்டர் அவர்கள் ஒரு வழிமுறையை பின்பற்றுகிறார் ... அதில் பலனில்லாமல் இல்லை ...ஆனால் அது சிறந்த முறையும் இல்லை .

பேலியோவும் மற்றுமொரு fad டயட்டே .

உதாரணத்திற்கு GM டயட்டை எடுத்துக்கொள்வோம் .

GM டயட்டை பற்றிய paleo குழுவில் நடந்த விவாதம் ஒன்றை  பாருங்கள்  

 பழம் மட்டும் சாப்பிடும் க்ரூப்பு ஒன்னு இருக்கு .


ஆனால் அவர்களுக்கு புரதம் கிடைப்பதில்லை 

ஆனா பேலியோவில் புரதமும் எனர்ஜியும் குறையாமல் பார்த்துக்கொள்கிறோமே ...குறையும் ஊட்டச்சத்துக்களை சரி கட்ட ஒமேகா, கபிர் , விட்டமின்  டி என எடுத்துக்கொள்கிறோமே .

ஊட்டச்சத்துக்களை மாத்திரை வடிவில் எடுக்கும் உணவுமுறை, நிச்சயம் சரிவிகித உணவாக இருக்காது. மேலும் இன்ன ஊட்ட சத்துதான் நமக்கு தேவை அது இன்ன வடிவில் தான் தேவை என அறிவியல் இன்னும் அறுதியிட்டு கூறவில்லை . phytochemical போன்ற நாம் கண்டறியா எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளன என்பதையும் மனதில் கொள்ளுங்கள் .

மேலும் இவ்வாறு கணக்கிட்டு ஊட்டச்சத்துக்களை வழங்கும் முறை  நம் நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல . 

உதாரணம், விவசாயப்புரட்சி .

விவசாயப்புரட்சி என்ற பெயரில் NPK வை கணக்கிட்டு பயிர்களுக்கு வழங்கும் முறை அதீத பலனை உடனடியாக தந்தது . ஆனால் விளைவு ?
------------------------------------------------------------
இப்பதிவு ஒரு தனிமனித தாக்குதல் போல் அமைந்து விட்டதற்கு எனது வருத்தங்கள் .

நியாண்டர் அவர்கள் ,  பல்லாயிரம் பயணிகள் பயணிக்கும் வண்டியின் ஓட்டுநர் இருக்கையில்  அமர்ந்துள்ளார் . அவர் போகும் பாதை சரியில்லாவிட்டால் அதை அவரிடம் தான் கூறுவது முறை .


தமிழ் முறைக்கேற்ப பேலியோ முறையை வடிவமைத்ததாக நியாண்டர் கூறுகிறார் . ஆனால் பழங்கள் முதல் கைக்குத்தல் அரிசி ,முளை கட்டிய பயிறு வரை மேல்நாட்டினர் கூறிய காரணங்களை நியாயப்படுத்தியே பேசுகிறார் .

paleo வின் அடிப்படையான 50g / day கார்பை இவற்றைக்கொண்டும் பின்பற்ற முடியும் . என்னால் முடிந்திருக்கிறது . என்ன ? 15 நாளில் 5 கிலோ குறைத்த என்னால், இம்முறையில் 40 நாளுக்கு 3 கிலோ தான் குறைக்க முடிந்தது . அது என்னுடைய தவறான 50g / day கணக்கினால் கூட இருக்கலாம். 

முன்பு ஒருமுறை மாதம் 10000 சம்பளம் வாங்கும் ஒருவர், தான் எவ்வாறு 100 பாதாம்  / day உணவைக்கொண்ட பேலியோவை பின்பற்றுவது என வருந்தியது தன்னை மிகவும் பாதித்ததாக நியாண்டர் கூறியிருந்தார் . 

நியாண்டர் sir, அதற்கு பதில் நான் எழுப்பிய கேள்விகளில் தான் உள்ளது .
-------------------------------------------------------
கடைசியா ஒரு வேண்டுகோள் .

முன்பு  பேலியோவை பற்றிய எதிர் வாதங்களை ஒருவர் எழுப்பி வந்தார் 

அவரது பதிவில் இது போல பலர் அருள்வாக்கு கூறியிருந்தார்கள் .


அதுபோல அருள்வாக்கை எல்லாம் தாங்கும் சக்தி எனக்கில்லைசாமியோவ்  .

ஒன்றை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள் ....சீசரின் மனைவி போல பேலியோ ஒன்றும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதல்ல. 

 மெய்பொருளை  காண்பது தான் அறிவு .பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே .

அதுனால மோஷன கட்டுப்படுத்தாதீங்க ... உங்க எமோசனை கட்டுப்படுத்துங்க .


அதுமட்டுமில்ல , இது மாறி, பெரியவுங்க சொன்னா பெருமாள் சொன்ன மாறின்னு குருட்டுத்தனமான எதையுமே  நம்பாதீங்க .
---------------------------------------------------------
டிஸ்கி 1:
  அடிப்படை வாதிகளிடம் மட்டும் தான், நா இந்த மாறி வாதம் பண்ணி பழக்கம். என்ன செய்ய? உங்க fatட்டும் என்னோட fateட்டும் இப்புடி சக பரிணாமவாதிகளோட வாதம் பண்ண வச்சுருச்சு . 

டிஸ்கி 2:

அடேய் முகத்தை காட்டாம கூவாதாடா, என பொங்கும் அன்பர்களுக்கு .

எனது ஒரிஜினல் முகத்தோடு நியண்டர் அவர்களிடம் சென்று அனுமதி வாங்கிய பின்னரே இப்பதிவு எழுதப்பட்டது .
------------------------------------------------

நன்றி. வணக்கம் .

4 comments:

  1. ஆரோக்கியமான விவாதம் நன்மைக்கே,

    ReplyDelete
  2. செல்வன் சொல்லும் பேலியோவில் காய்கறிகளை நிறைய எடுக்க சொல்கிறாரே. நார் சத்துள்ள காய்களையும், தினம் சிறிது ஆழி விதை பொடியையும் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் வராது.

    ReplyDelete
    Replies
    1. காய்களையும் பழங்களையும் மம்மூத் யானை வேட்டையாடிகள் சாப்பிட வில்லை என்பது நியாண்டரின் வாதம் அல்லவா . பேலியோ ஆரோக்கியமான உணவு முறை தான் (பலருக்கு) . அதற்காக இட்டுக்கட்டப் படுபவையில் தான் எனக்கு இடிக்கிறது

      Delete
  3. பேலியோவை உருப்படியாக விமர்சிக்கும் உமக்கு வாழ்த்துகள்

    ReplyDelete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...