Monday, December 26, 2011

பரிணாமத்துக்கும் பாசத்துக்கும் என்ன சம்பந்தம் ?

 ஏன் ஹிட்லர் அப்புடி மிருகதனமானவனா இருந்தார்?


ஏன் காந்தி , டாக்டர் doolittle (!)  போன்றோர் நல்லவர்களாக இருக்கிறார்கள் ?
(ஒரு வகைல பாத்தா காந்தியும் ஹிட்லரும் பரந்த மனசு கொண்ட பெரியவர்கள் தான் , எப்புடி ? பதில் கடைசியில்)

மயிலு ஏன் டான்ஸ் ஆடுது ? மார்கழி மாசத்துல நாய்கள்  ஏன் அடிச்சுக்குது ? மின்மினி பூச்சிக்கு ஏன் படக்சுல பல்பு எரியுது ?

 ஏன் டாக்டர் நீங்க இப்புடி பதிவு எழுதுறேன்னு உயிரை வாங்குறீங்க ?

 எல்லாத்துக்கும் ஒரே  பதில் ------- மேட்டர்.

இந்த பதில் காமடியா ( காமநெடியா ) இருக்கலாம் , ஆனா அது தான் அப்பட்டமான உண்மை.


................................................................
நீங்க ஒரே கைல  பத்து பேர அடிக்குற அப்பாடக்கரா இருக்கீங்க , ஆனா உங்களால மேட்டர் பண்ண முடியாது , அப்ப என்ன பயன்? , நீங்க செத்த பின்ன உங்க அப்பாடக்கர் ஜீன் இந்த உலகத்த  விட்டே மறைஞ்சிடும் .

சோ பில்டிங்கு ஸ்ட்ராங்கா இருந்தா மட்டும் பத்தாது , பேசுமேன்ட்டும் ஸ்ட்ராங்கா இருக்கணும்.
...................................................................
ஒவ்வொரு உயிரினமும் தனது ஜீன இந்த உலகத்துல நிலை நிறுத்த கடுமையா முயற்சிக்கும் .,
........................................................................................
spider  man  படம் ….

வில்லன்: ஹஹஹா இப்ப நீ figure காப்பாத்த போறியா? இல்ல இந்த உலகத்த காப்பாத்த போறியா ?

இந்த கேள்விய என்கிட்ட கேட்ருந்தா ( உங்க கிட்டயும் தான் ) - பதில் : figure 
எரியிற வீட்ல இருந்து உங்க பையன முதல்ல காப்பாதுவீங்களா ? இல்ல பக்கத்துக்கு வீட்டு பையன காப்பாதுவீங்களா? உங்க பையன தானே ?
ஏன் இப்புடி எல்லாரும் சுயநலமா இருக்கோம் ?

நம்ம ஜீன இந்த உலகத்துல நிலை நிறுத்தான் இந்த ஆட்டம் எல்லாம்.
அப்ப இந்த உலகமே சுயநலம் நிறைஞ்சதா ? இந்த நட்பும் பாசமும் எங்கிருந்து வந்துச்சு ?


..............................................................................
டென்ஷன் ஆவாதீங்க , வாங்க evalution படிக்கலாம்.

முதல்ல நமக்கு நம்ம உயிர் முக்கியம் ,


 எடுத்து காட்டு : புலிகிட்ட இருந்து மான் தப்பிகிறது etc  etc..

அடுத்து  நம்ம  வாரிச  காப்பாத்துதல் ( அவன் கிட்ட தானே நம்ம  ஜீன் இருக்கு).

அடுத்து சொந்தக்காரன்...ஒரு மந்தையில் இருக்கும் மற்ற பெண் யானைகள் குட்டி யானையை காப்பாத்துறது ( சொந்தகாரங்களும் நம்ம ரத்தம் தானே).

ஆப்ரிக்கன் ஆலிவ் பபூன் குரங்கை ஒரு சிறுத்தை தாக்கினால் அதை முன்பின் அறியாத மற்றொரு குரங்கு அதை காப்பாத்தும் ( (எனக்கு ஒன்னுனா நீ வா , உனக்கு ஒன்னுனா நான் வருவேன் பாலிசி ).
இந்த வரிசையில் அடுத்து வரும் உறவுகளை தான் நாம் நட்பு என்று அழைக்கிறோம்

சம்பந்தமே நம்ம கோபியும் இறாலும் நட்பா இருக்குரானுங்கன்னா அதுக்கு அடிப்படை காரணம் அவனுங்களோட survival .

..........................................................................................
அதெல்லாம் ஓகே டாக்டர் , அது எப்புடி காந்தியும் ஹிட்லரும் ஒன்னு ?
காந்தி தனது இந்திய மக்கள் தழைத்து ஓங்க வெள்ளையனை விரட்டினார்,
ஹிட்லர் தனது ஆரிய ஜீன் தழைத்து ஓங்க யூதர்களை போட்டு தள்ளினார். 

ஆனா காந்தி அதுக்கு அஹிம்சைய கைல எடுத்தாரு ( ஏன்னா அவரோட ஆறாம் அறிவு விழிப்பு நிலைல இருந்துச்சு ), ஆனா ஹிட்லர் பயபுள்ளைக்கு மிருகத்தனமான  அஞ்சாம் அறிவு தான் வேலை செஞ்சிருக்கு . இருந்தாலும் ரெண்டு பேருமே தனது இனம் தழைக்கவே
பாடு பட்டிருக்கிறார்கள் ,அந்த விஷயத்தில் ரெண்டு பெரும் ஒண்ணுதானே?
............................................................................................................
அடுத்து தாய் பாசம் , என்னதான் தாய் பாசம் என்பது தன்னோட வாரிசுகள ( தன்னோட ஜீன )  காப்பாத்த இயற்கை கையாண்ட வழி போல தெரிஞ்சாலும், என்ன கேட்டா அது ஒரு விதிவிலக்கான பண்புன்னு தான் சொல்வேன் .ஆனா சயின்ஸ் அதையும் ஒரு evalution பண்பா தான் பாக்குது , (இது என்னோட தனிப்பட்ட கருத்து).
இப்ப நான் சொல்லப்போற கதைய கேட்டு அழுக கூடாது , சரியா…
கீழ இருக்க படத்த பாருங்க , 


இந்த தேளும் சரி , அந்த குரங்கும் சரி என்னதான் எதிரிகள் சூழ்ந்து இருந்தாலும் தன்னோட குழந்தையை எதிரிகள் கையில் பட்டு விடாமல் தன் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் போகும் இடங்களுக்கு எல்லாம் குழந்தையை தாங்கி செல்லும்.

 அழுகையே   வரலயே, …. கொஞ்சம் வெயிடீஸ்..

Amaurobius  terrestris  ன்னு ஒரு சிலந்தி , குழி அமைத்து அதில் முட்டையிடும் , குட்டி சிலந்திகள் தாய் தரும் இரையை சமத்தாக சாப்பிட்டு கொண்டு  இருக்கும் , ஆனால் குளிர்காலத்தில் இரை கிடைப்பது கடினம் , அப்ப குட்டிகள் ? தான் உண்ணாமல் குளிரில் வாடி இருக்கும் சிலந்தி ,குட்டிகள் பசிக்காக தனது  உடலையே கொடுத்து விடும்.

Amphiporus incubator (ribbon worm ) ன்னு ஒரு புழு , இது ஒரு விதமான குழகுழப்பான திரவத்தை தன்னை சுற்றி உருவாக்கி  அதில் முட்டையிடும் , அதில் இருந்து வரும் குட்டி புழுக்கள் தாயை தின்று வளரும்.


...........................................................................
தாய்பாசம் என்ற உணர்ச்சிக்கு கண் கிடையாது ( காதலுக்கு தானே  கண் கிடையாது ? ன்னு குறுக்கு கேள்வி கேக்கப்படாது )

--- கீழ உள்ள படத்த பாருங்க


என்ன இன்னும் அழுகை வரலையா ? அப்ப உங்களுக்கும் அஞ்சாவது அறிவு வரைதான் வேல செய்யிதுன்னு அர்த்தம்.

5 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு.. keep posting..

    ReplyDelete
  2. சூப்பர் பட்டய கிளப்புரிங்க ... கலக்குங்க...

    ReplyDelete
  3. // இருந்தாலும் ரெண்டு பேருமே தனது இனம் தழைக்கவே
    பாடு பட்டிருக்கிறார்கள் ,அந்த விஷயத்தில் ரெண்டு பெரும் ஒண்ணுதானே?// எங்கயோ போயீட்டீங்க தலைவா!.
    நிஜமாகவே என் மனைவி அந்த தாய்மார்கள் பால் கொடுக்கும் பாடம் பார்த்து அழுது விட்டாள்!

    ReplyDelete
  4. பரிணாமத்தையும்,பாசத்தையும் பத்தி எளிமையா சொல்லிட்டிங்க டாக்டர்..!! டெரர் கும்மி விருதுக்கு வாழ்த்துகள்..!!

    ReplyDelete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...