எனக்கும் , எங்க அண்ணனுக்கும் விலங்குகள் மேல சின்ன வயசுல இருந்தே பிரியம் ஜாஸ்தி
1.நானும் அவனும் சேர்த்து கிட்ட தட்ட 20 நாய்கள் வளர்த்து இருக்கோம்
( ரோட்ல போற ஒரு குட்டி நாயையும் விட மாட்டோம் )
மேலும் நாங்கள் வளர்த்த மிருகங்களின் பட்டியல் ...
2 கிளி , நிறைய கோழிகள் ,ஒரு அணில் ,வீடு நிறைய பல்லி, வீட்டுக்கு பின்னாடி எறும்பு புத்து,வீட்டு சந்துல கரப்பான் பூச்சி , சாக்கடைல தவள , புதர்ல ஓணான் ...........
2.எங்க அம்மா ஒரு zoology டீச்சர்
எனக்கு நல்ல எஞ்சினரிங் காலேஜ்ல நல்ல சீட்டு கிடச்சுது , எங்க அப்பா , அண்ணன் எல்லோரோட எதிர்ப்பையும் மீறி வெட்னரி சேர்த்தேன்.
சோ மேல சொன்ன காரணங்களால ,நம்ம டாக்டர் மிருகங்கள காப்பாத்தனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு வெட்னரி சேர்த்து இருக்காருன்னு நீங்க நினைக்கலாம்.
அப்புடி எல்லாம் ஒன்னும் இல்ல,
எனக்கும் கணக்குக்கும் ஆவாது , சோ இன்ஜினியரிங் - வேலைக்காவது மச்சி
எப்புடியாவது ஸ்டெத் மாட்டணும்னு ஆசை , மெடிக்கல் சீட் ஜஸ்ட் மிஸ்ஸு , வேற வழி இல்ல அதுனால சேர்ந்தேன்.
வெ . மு ( வெட்னரிக்கு முன் ) என்னோட மறுபக்கம் :
நான் வளர்த்த நாய் எங்கயாச்சும் லாக் ஆகி நின்னா , கட்டயாலயே ஒரு போடு போட்டு பிரிச்சு விட்டுருக்கேன்,
கிளிய பேச சொல்லி torture பண்ணி இருக்கேன்,
ஓணானுக்கு பீடி குடிக்க சொல்லி பிள்ளையாருக்கு அது பண்ணுன பாவத்துக்கு ரிவென்ச் எடுத்துருக்கேன் ,
கரப்பான் பூச்சிய ஓட விட்டு மிதிச்சிருக்கேன்,
தவளைய தாவ விட்டு அடிச்சுருக்கேன்,
எறும்பு புத்துல லட்சுமி வெடிய சொருகி வெடிச்சுருக்கேன்.
வெ. பி ( வெட்னரிக்கு பின் ):
நான் : தம்பி , ஓணான கல்லை விட்டு அடிக்கப்படாதுடா ராஜா
அவன் : உனக்கு தெரியாது சார் , அது பிள்ளையாருக்கு கொட்டாங்குச்சியில ஒன்னுக்கு அடிச்சு குடுத்துருக்கு , தெரியுமா ?
நான் மனதுக்குள்ளயே : ( இதே கதைய எத்தன பேருடா சொல்லுவீங்க , ஹ்ம்ம் அடுத்த வெட்னரியன் உருவாகிட்டான்டா ) என்று எண்ணிய படி இடத்தை காலி செய்தேன்.
சின்ன வயசுல நான் நல்லா படிச்சு வகுப்புல முதல் மதிப்பெண் எடுப்பேன் , ஆனா எங்க அண்ணன் எனக்கு ஆப்போசிட் , அவன மிரட்ட எங்க அப்பா ," கண்ணா தம்பிய பாரூ எப்புடி படிக்ரான்னு , அவன் நல்ல வைட் காலர் ஜாபுக்கு போவான் ,நீ இப்புடியே படிச்சன்னு வச்சுக்கோ அப்புறாம் சாணி அள்ள தான் போகணும் " அப்புடின்னு சொல்வாரு . எங்க அம்மாவோ " ஆணி போய் ஆடி வந்தா அவன் டாப்பா வருவான்னு " சொல்வாங்க.
ஆனா இப்போ எங்க அண்ணன் ஒரு NRI , நான் சாணி அள்ரேன் ( ஒரு ரைமுக்கு தான் அப்டி சொன்னேன் ,ஆனா எங்க தொழில்ல சாணி தான் எங்களுக்கு அச்சாணி ).
சரி , வெட்னரி சேரப்போறோம் , நமக்கு வெட்னரியப்பதின knowledge என்ன ?
மாட்டு டாக்டர்னா மாட்டு பின்னாடி கைய விட்டு ஏதோ செய்வாங்க
ஆமா..... மாடு எப்புடி இருக்கும் ?
நாலு காலு, ஒரு வாலு, ரெண்டு கொம்பு
புல்லு குடுத்தா பாலு குடுக்கும் ( அப்டியா ?) , உன்னால முடியாது தம்பி
“மகனே என்ன யோசிச்சுகிட்டு இருக்க ? நாளைக்கு காலேஜ்ல நீ சேரனும் , போய் தூங்கு "' இது எங்க அப்பா .
அடுத்த நாள் காலை ....
ஆகா அந்த காட்சிய என் வார்த்தைகளால எப்புடி விவரிப்பேன் ,
தில்லி செங்கோட்டாய போல கம்பீரமா வரவேற்றது என்னோட காலேஜ்…
வாங்க நண்பர்களே எங்க வாழ்கையையும் , என்னோட காலேஜையும் தமாசா சுத்தி காட்டுறேன் ,
நண்பர்களே எங்களின் டைரியின் பக்கங்கள் உங்களுக்காக .....