//உடலில் காயம் ஏற்பட்டு தோல் பிய்த்துக்கொண்டு போய்விட்டால் , அந்த இடைவெளியை நிரப்ப அதே போன்ற தோல் செல்கள் மைட்டாசிஸ் மூலம் வேகமாக உற்பத்தியாகி அந்த இடைத்தை நிரப்பும் .//
என்று போனமுறை கூறியிருந்தேன் .
முதலில் மைட்டாசிஸ் பற்றி பார்த்து விடுவோம் .
nucleus உள்ள அனைத்து eukaryotic செல்லும் தன்னை போல இன்னொரு செல்லை உருவாக்கும் முறை தான் மைட்டாசிஸ் . அதாவது தன்னை போல இன்னொரு செல்லை பிரதி எடுத்தல் . இவ்வாறு ஒரே போல உள்ள செல்கள் ( இங்கே காயத்தை நிரப்பும் தோல் செல்கள் ) பல செல்களாய் பிரிந்து அந்த இடைத்தை நிரப்பும்.
அந்த இடைவெளியை நிரப்பிய பின்னரும் அவை கட்டுக்கடங்காமல் வளர்ந்தால் .... கான்செர் கட்டி என்று அழைக்கப்படும் ( benign ), இது சாது ,அங்கேயே தேமே என்று இருக்கும் , ஆனால் அது மற்ற இடங்களுக்கு பரவும் படி மாறினால் ? malignant . அப்புறம் கஷ்டம் தான் .
...........................................................................................................................................
இப்போது நம் மனதில் எழும் கேள்விகள் ....
செல்களின் இவ்வாறான பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் கட்டுக்கோப்பு எவ்வாறு உருவானது ?
இந்த கட்டுக்கோப்பை உடைத்து கான்சர் எவ்வாறு உருவாகிறது .?
முதல் கேள்விக்கு விடை தெரிந்தால் இரண்டாவது கேள்வியை எளிதாக எதிர் கொள்ளலாம் .
............................
இப்போது நாம் பார்க்கும் இடம் எண்ணூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தய பூமி ,
இப்போ பூமி புதிதாக வயதுக்கு வந்த புது பெண் ,
பூமி முழுதும் ஒரு செல் உயிரினங்கள் மட்டுமே வாழ்ந்து வந்த கால கட்டம் , இங்கே ஒரே ஒரு சட்டம் தான் ...
"எனக்கு நானே" சட்டம் ....
"a single cell for itself "
இந்த சட்டத்தின் படி புற்று நோய் போல செல்கள் கட்டுக்கடங்காமல் பல்கி பெருகுவது தவறு கிடையாது ,
சொல்லப்போனால் அவ்வாறு பல்கிப்பெருகும செல்கள் தான் அவர்களின் இனம் தழைத்து நிற்க போட்டியிடும் போட்டியில் வெற்றி பெற முடியும் .
இந்த போட்டி நூறு மில்லியன் ஆண்டுகள் தொடர்ந்தன ...
சிலரால் போட்டியை சமாளிக்க முடியவில்லை ,
போட்டியை தனித்து சமாளிக்க இயலாதவர்கள் என்ன செய்வார்கள் ?
கூட்டணி தான் .
இனிதே ஆரம்பித்தது metazoan களின் கூட்டணி ஆட்சி .
ஆட்சி மலர்ந்ததும் கூட்டணிக்கு என்று சில சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டன , இங்கே எனக்கு நானே சட்டம் வேலைக்காவாது , இது மக்களாட்சி , நாட்டுக்காக மக்கள் மக்களுக்காக நாடு என்பது போல .
அந்த metazoan கள் ஒட்டிவைத்த தெர்மாகோல் பந்துகளை போல காட்சி அளித்தன .
கூட்டாக வாழ்வதில்பல சவுகரியங்கள் ...........
பல trial and error க்கு வழிவகுத்து பல வடிவங்கள் சாத்தியபட்டன .
வேலை பகிர்ந்தளிக்கப்பட்டன ...
இரையை பிடிக்க ஒரு கூட்டம் , அவற்றை செரிக்க ஒரு கூட்டம் , இவற்றை எல்லாம் கட்டுப்படுத்த ஒரு கூட்டம் ,,,.....
கூட்டங்கள் உறுப்புகளாக வளர்ச்சி பெற்றன .
ஆம் நம் உடலே ஒரு அரசாங்கம் ( அப்ப புற்று நோய் செல்கள் தனியாட்சி கேட்கும் மாவோயிஸ்டுகள் என்று வைத்துக்கொள்ளலாமா ?) , மூளை தான் தலைமை செயலகம் ( நன்றி சுஜாதா சார் ).
ஆனால் உடல் ஒழுங்காக செயல் பட ஒவ்வொரு செல்லும் தலைமையை மதிக்க வேண்டும் , தேவையான பொது தான் பெருக வேண்டும் , தன்னிச்சையாக செயல் படக்கூடாது , சுயநலம் கூடவே கூடாது . இது தான் கூட்டணி தர்மம் .
இருந்தும் போதிதர்மனின் நினைவுகள் DNA விலிருந்து பீரிட்டு கிளம்பியதை போல , சில செல்கள் தனது எண்ணூறு மில்லியன் ஆண்டு பழைய சுயநல வாழ்க்கை முறை நினைவுகள் திரும்பவரப்பெற்று தனிராஜியம் துவங்க போர்க்கொடி பிடிக்கின்றனர் . அவற்றை மருத்துவம் கூறும் நல்லுலகம் கான்சர் என்று அழைக்கின்றனர் .
............................................................................
யாருப்பா அது , அவனின் நினைவுகளை கிளறி விட்டது ?
mutation
mutation என்றால் என்ன ?
ஹீரோ மேல அணுக்கழிவின் கதிர்கள் படும் , உடனே அவருக்கு ரெக்கை முளைக்கும் , கையில கத்தி வரும் , கண்ணுல தீ வரும் ......
இவை படங்களில் மட்டுமே சாத்தியம் , அப்ப உண்மையில் mutation என்றால் என்ன .
ஒரு செல் இரண்டாக ஆவது பற்றி மைட்டாசிஸ்சில் பார்த்தோம் .
மைடாசிசின் போது DNA இரண்டு செட்டாக இரு குரோமோசோம் பைகளில் திணிக்கப்பட்டு இரு செல்களுக்கு அளிக்கப்படும்.
DNA காப்பி ஆகும் போது அதில் சில தவறுகள் நேரலாம் . அந்த தவறை சரி செய்ய சில மெக்கானிசம்கள் உள்ளன , இவற்றையும் மீறி ஏற்படும் தவறுகளே
mutation.
மைடாசிசின் நோக்கம் செல்களின் பெருக்கம் அல்ல , இறந்த செல்களை replace செய்வது .
நிறைய முறை மைட்டாசிஸ் நடக்கும் இடத்தில் DNA காப்பி செய்வதில் ஏற்படும் தவறுகளுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன.
ஐந்து பைசா திருடிகள் திருடித்திருடி , ஐந்து கோடி திருட்டாக மாறி அந்நியனிடம் கும்பிபாகம் பெருவது போல,
ஒவ்வொரு முறையும் மைட்டாசிஸ் நடக்கும் போது , mutation னுக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன ,
அதிகப்படியான mutation கான்சருக்கு வழிவகுக்கும் .
.......................................................
நமது உடலில் 30 ட்ரில்லியன் செல்கள் உள்ளன ( மூனுக்கு பக்கத்தில் எத்தனை முட்டையோ ) , நமது வாழ்நாளில் நடக்கும் செல் division ளின் எண்ணிக்கை 10 ட்ரில்லியன். ( எல்லாம் தோராய கணக்கு தான் , ஒன்னு ரெண்டு கூட குறைய இருக்கலாம் ).
தோலிலும் குடலிலும் தினமும் செல்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன ., அவற்றை replace செய்ய புது செல்கள் மைடாசிசின் மூலம் முளைக்கின்றன .
நிறைய மைட்டாசிஸ் ,mutation னுக்கான
நிறைய சாத்தியக்கூறுகள் ....
அதனால் தான் தோலிலும் குடலிலும் புற்று நோய் அதிகம் வருகின்றன .(அங்கே செல்கள் தினமும் உதிர்கின்றன ),
இதய செல்கள் பிறப்பிலிருந்தே அவ்வாறே இருக்கும் , அதனால் தான் இதய கான்சர் என்று ஒன்றை நாம் கேள்விபட்டது இல்லை .
--------------------------------------------------------------------------------------------------
மனிதனின் ஒரு செல் கான்செர் செல்லாக மாற கிட்டத்தட்ட 12 mutation கள் நடக்க வேண்டும் .
6 என்பது எல்லைக்கோடு { அதாவது pre cancerous செல் ( கான்செருக்கும் நல்ல செல்லுக்கும் இடைப்பட்ட செல் வகையறா) கான்சர் செல் ஆவதற்கு முந்தின பருவம் }.
ஆறுக்கு மேல் நடக்கும் ஒவ்வொரு மரபு மாற்றமும் இந்த கடவுள் பாதி மிருகம் பாதி செல்லை முழுவதும் மிருகமாக மாற்றமடைய செய்யும் .
----------------------------------------------------------------------------------------------------
இப்போது ஒரு நல்ல செய்தி , ஒரு கெட்ட செய்தி .....
முதலில் நல்ல செய்தி .
ஒரு நல்ல செல் இந்த ஆறை எட்டுவதற்கான சாத்தியங்கள் மிக மிக மிக குறைவு .
கெட்ட செய்தி
சிகரெட்டில் இருக்கும் நிகொடினில் ஆரம்பித்து , தமிழ் சினிமா வில்லன் பயன் படுத்தும் அனைத்து லாகிரி வஸ்துக்களிலும் இருக்கும் பொருட்கள் ஆறை எளிதில் அடைய துணை போக வல்லது .
"சிகரெட் பிடிக்கும் அனைவரும் புகையோடு தனக்கான சங்கையும் சேர்த்தே ஊதுகின்றனர். "
எனது வட இந்திய நண்பர் ஒருவர் வாயில் மாவாவை எந்நேரமும் அதக்கி வைத்துக்கொண்டு இருப்பார் . மாவாவின் கெமிக்கல்கள் அவரது உதட்டின் செல்களில் mutation நை தூண்டி விட்டு ஆறு மற்றும் பனிரெண்டை வேகமாக அடைய ச்செய்து கட்டி உண்டாக்கியது ,.தாடையையே அகற்றும் நிலைமை . அந்தோ பரிதாபம் , தாடையை அகற்றியும் புற்று செல்கள் உடல் முழுதும் பரவியதால் மரணத்தை தழுவினார் .
............................................................................
போதையின் hellucination னை மழலையின் சிரிப்பிலும் ,அன்னையின் முத்தத்திலும் ,காதலியின் அரவைணைப்பிலும் வரும் endorphin வெள்ளத்தினால் எளிதில் அடையலாமே .
.............................................................................
பின்னர் எப்படித்தான் இந்த mutation ரேட்டை குறைப்பது ?
, வறுத்த பண்டங்களை தவிர்த்து பச்சை காய்கறிகள், நார்சத்து உணவுகள் நிறைய சாப்பிடுங்கள் .
அடுத்த பதிவில் , இன்னும் பல தகவல்களை பகிர்ந்து கொள்ளாலாம் ........