நாய் ஏன் மரத்துல ஒன்னுக்கு அடிக்கிது ?
நீங்க ஏன் பஸ்சுல துண்டு போடுறீங்க ?
எல்லாருக்கும் தங்களின் இடத்தை யாருக்கும் விட்டுக்குடுக்க மனம் இல்லை .
..................................................................................................................................................................
நமது அடிப்படை தேவைகள் உணவு , (பல சமயங்களில் )உடை , உறைவிடம் .
.....................................................................................
நம்மளோட இடத்தை நாம் பாதுகாத்துக்கொள்வதில் நமக்கு ரொம்ப அக்கறை .
இதுக்கு பேருதான் Territorial behavior .
நம்ம இடத்தில அடுத்தவன் நுழையாம இருக்க நாம என்ன பண்ணுவோம் ?
காம்பவுண்டு கட்டுவோம் , அதுல யாரும் விளம்பரம் எழுதகூடாதுன்னு நாமளே பெருசா எழுதி வைப்போம் .
நம்ம இடத்துல யார் நுழைந்தாலும் நமக்கு கோவம் வரும் தான் .
நாடுகள் லெவல்ல பாத்தோம்னா இதுக்கு தீர்வு துப்பாக்கி .
தனிமனித அளவில் பாத்தோம்னா இதுக்கு நாம் கையில் எடுப்பது கையில் கிடைக்கும் ஆயுதம் .
இந்த இடச்சண்டை இவ்வாறு ரத்தகளறியாக நடக்கலாம் , இல்லை என்றால் கண்ணுக்கு தெரியாத அளவும் நடக்கலாம் .
..................................................................
கோரல் reef கள் ஆழ்கடலில் மெதுவாக வளரும் , அவை நன்றாக வளர ஒரு பிடிமானம் தேவை , அப்படிப்பட்ட நல்ல பிடிமானமுள்ள இடத்தில பல வகை கோரல்கள் வளரும் .
அந்த இடத்தை முழுதும் ஆக்கிரமிப்பதில் அவற்றுக்குள் போட்டி நடக்கும் . பார்க்க வெளியில் ஒன்றும் தெரியாது . ஆனால் மெதுவாக ஒன்றை ஒன்று கபளீகரம் செய்ய முயற்சிக்கும் .
யார் யாரை வேகமாய் தின்று தீர்க்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி . அந்த இடம் அவர்களுக்கு சொந்தமாகிவிடும் .
..........................................
சில வகை பூஞ்சைகள் , நுண்ணுயிரிகள் தங்களை சுற்றி மற்ற உயிரினங்கள் வளரக்கூடாது என்பதற்காக சில வகை பொருட்களை உற்பத்தி செய்யும் .
Louis Pasteur மற்றும் Robert Koch 1877 இல் ஆந்த்ராக்ஸ் கிருமிகளின் வளர்ச்சியை வேறு சில கிருமிகள் தடுப்பதை கண்டறிந்தனர் .
1928 இல் Alexander Fleming Penicillium எனும் பூஞ்சை தன்னை சுற்றி பாக்டீரியாக்கள் வளருவதை தடுப்பதற்காக ஒரு பொருளை உற்பத்தி செய்வதை கண்டறிந்தார் , அதற்கு பெனிசிலின் என்று பேர் வைத்தார் .
இதை பின்பற்றி பல்வேறு பூஞ்சைகள் மற்றும் கிருமிகளில் இருந்து ஆன்டிபயாடிக் மற்றும் antimicrobial களை உருவாக்கினர் .
.......................................................................................
antibiosis, meaning "against
life," - அதாவது உயிர்களுக்கு எதிரான என்று பொருள் .
ஆன்டிபயாடிக் என்பது....
"any
substance produced by a microorganism that is antagonistic to the growth of
other microorganisms in high dilution ."
அதாவது இன்னொரு நுண்ணுயிரியினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருள் ,
அதன் நோக்கம் அதை சுற்றி மற்ற நுண்ணுயிரிகள் வளராமல் தடுப்பதற்காகஅதனால் கையாளப்படும் ஒரு தந்திரம் .
"An
antibacterial is a compound or substance that kills or slows down the growth of
bacteria.The term is often used synonymously with the term antibiotic(s)".
.....................................................................................................
ஒருவனை திரும்ப திரும்ப அறைந்தால் அவனுக்கு தோல் தடித்து அந்த அறை உரைக்காத அளவுக்கு சுரணை அற்று போய்விடும் அல்லவா
அதுபோல தான் ஆன்டிபயாடிக் மருந்துகளை தேவையில்லாமலும் , தவறான முறைகளிலும் உபயோகப்படுத்துவதினால் அவற்றிக்கு எதிராக, பாக்டீரியாக்கள் தடுப்பாற்றலை வளர்த்துக்கொண்டன .
..........................................................
ஆனால் சிலரை அடிப்பதும் ஜெயிப்பதும் ரொம்ப கடினம் .
அது போல தான் சில பாக்டீரியாக்கள் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதற்கு ஏற்ப பரிணாமத்தின் துணை கொண்டு இந்த ஆன்டிபயாடிக்கினை எதிர்த்து வளரும் சக்தியினை கைவரப்பெற்றிருக்கும் .
.........................................................................................
Vancomycin என்பது Amycolatopsis
orientalis எனும் கிருமியினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஆன்டிபயாடிக்,
அந்த Amycolatopsis orientalis கிருமி பழங்காலதிலிருந்தே இருந்து வருகிறது , அந்த காலத்தில் அதனை எதிர்த்து வளரும் சக்தி படைத்த ஒரு கிருமியினை தற்போது கண்டு பிடித்து உள்ளார்கள் .
இந்த செய்தியை கேட்ட நமது நண்பர்கள் அது எப்புடி சில வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆன்டிபயாடிக் மருந்துக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கிருமி எதிர்ப்பாற்றலை கொண்டிருக்க முடியும் ? எனவே பரிணாமம் சுத்தப்பொய் எனும் முடிவுக்கு வந்துள்ளனர் .
http://www.ethirkkural.com/2012/04/blog-post.html
Vancomycin சில வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாடிக்.
அதாவது discovered , invented அல்ல .
பல்லாயிரம் வருடத்திற்கு முன்பே இருந்து வந்ததை இப்போது வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்கள் .
அந்த Amycolatopsis orientalis கிருமி பழங்காலதிலிருந்தே இருந்து வருகிறது , அந்த காலத்தில் அதனை எதிர்த்து வளரும் சக்தி படைத்த ஒரு கிருமியினை தற்போது கண்டு பிடித்து உள்ளார்கள் .
இந்த செய்தியை கேட்ட நமது நண்பர்கள் அது எப்புடி சில வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆன்டிபயாடிக் மருந்துக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கிருமி எதிர்ப்பாற்றலை கொண்டிருக்க முடியும் ? எனவே பரிணாமம் சுத்தப்பொய் எனும் முடிவுக்கு வந்துள்ளனர் .
http://www.ethirkkural.com/2012/04/blog-post.html
Vancomycin சில வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாடிக்.
அதாவது discovered , invented அல்ல .
பல்லாயிரம் வருடத்திற்கு முன்பே இருந்து வந்ததை இப்போது வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்கள் .
..............................................................................
"பரிணாமம் இல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்து வராது"
இப்படியாக சிலபலர் கூறுவதை நாம் பார்த்திருக்கலாம். இம்மாதிரியான வாசகம் எனக்கு குழப்பத்தையே தந்துள்ளது.
2)உண்மை என்னவென்றால், பரிணாமம் இல்லையென்றாலும் கூட உயிரியல் அறிவுக்கு ஒத்துவரக்கூடியதாகவே இருக்கும்.
என்னை பொறுத்த வரை சில தீர்வே இல்லாத நோய்களுக்கு பரிணாமம் தான் தீர்வு .
அப்படிப்பட்ட நோய்களுக்கு human மெடிசின்காரர்கள் பரிணாம வழியாக அணுகினால் எளிதில் தீர்வு காணலாம் என எனது veterinary அறிவு கூறுகிறது .
ஆனால் ஏனோ அந்த நோய்க்கு என்னென்னமோ வழிகளில் ஆராய்ச்சி செய்தாலும் , நான் யோசித்து வைத்திருக்கும் வழிமுறையில் ஆராய்ச்சிகள் அரிதின் அரிதாகவே நடை பெற்று வருகிறது .
அதை பற்றி மிக விரைவில் ( அதாவது 2 மாதம் கழித்து) பதிவிடுகிறேன் , அது யாராவது ஆராய்ச்சியாளர் கண்ணில் பட்டு ஏதாவது நல்லது நடந்தால் சரி .
அந்த நோய் ......................................
கடகம் @ cancer .