கண் தெரியாத மாற்று திறநாளிகள் யானையை அடையாளம் கண்ட கதை தெரியும் தானே?
அத அப்புடியே mind ல வச்சுக்குங்க , பின்னாடி use ஆகும் .
அம்மணமா போற ஊர்ல Darwin முத முதல்ல கோமணம் கட்டுனாரு .
நாம எல்லோரும் காத்து வாங்கிகிட்டு போகும் பொது இவன் மட்டும் எப்புடி கவர் பண்ணிட்டு போகலாம்னு எல்லாருக்கும் ஒரே காண்டு .
Darwin தன்னோட தியரிய 1859 ல வெளியிட்டு , " எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி ", ன்னு மக்கள் முன்னாடி பாவமா நின்னாரு .
மக்கள் : நீ சொல்றதுக்கு என்னடா ஆதாரம் ?
Darwin : finches பறவை இருக்குங்க .
மக்கள் : செல்லாது செல்லாது .
Richard oven : தாத்தா நா பாத்தேன் .
மக்கள் : என்றா கண்ணு பாத்த?
Richard ஓவன்: இந்த Archaeopteryx fossil பறவை மாதிரியே இருக்கு பாருங்க , இதுலேருந்து தான் பறவைங்க எல்லாம் வந்துச்சு .
Darvin theory publish ஆன அடுத்த வருஷம் Archaeopteryx இன் fossilai கண்டுபிடித்தார்கள் .
மக்கள் கொஞ்ச கொஞ்சமாக evolution ஐ நம்ப ஆரம்பித்தனர் .
யானை கதைல வரும் குருடர்கள் போல் , நம் அப்போது அறிவியலின் வெளிச்சம் படாமல் குருடர்கள் போல ஆதாரங்களை ( யானையை ) தடவி தடவி தேடிக்கொண்டு இருந்தோம் .
அப்போது தான் பறவை மாதிரி ஒருத்தன் கிடைச்சுட்டான்னு ஜேர்மனிக்காரன் ( Richard oven ) அவுங்க ஜேர்மனி மொழியில முதல் பறவைன்னு பேரு வச்சாங்க (named by Hermann von Meyer ).
(இந்த உயிரினத்துக்கு ஜெர்மனில் "யுர்வோகெல் (Urvogel)" என்று பெயர் சூட்டினார்கள். இதற்கு "முதல் பறவை" என்று அர்த்தம். )
சிவப்பு கலர்ல இருப்பதெல்லாம் இங்கிருந்து எடுக்கப்பட்டது
நாள் செல்ல செல்ல அறிவியல் ஆதவனின் கதிர்கள் விழ விழ மக்களின் அறிவுக்கண் திறந்து , மக்களுக்கு கண்தெரிய ஆரம்பித்தது .
அப்ப தான் மக்களுக்கு இவன் முதல் பறவை இல்லை , பறவை போல இறக்கை கொண்ட பல்லி என்று உணர்ந்து இவனுக்கு புராண ( பழங்கால ) இறகு என்று பேர் வைத்தனர்.
(ஆங்கிலத்தில் இதற்கு "அர்கீயாப்டெரிக்ஸ் (Archaeopteryx)" என்று பெயர் சூட்டினார்கள். இந்த பெயர் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு "பழங்கால இறகு (Ancient wing or feather)" என்று அர்த்தம். )
இது ஆங்கில பேர் இல்லை , scientific name .
(ஆக, டைனாசர்களின் தன்மைகளும் பறவைகளின் தன்மைகளும் ஒருசேர கலந்திருந்ததால், உலகின் முதல் பறவை டைனாசர்களில் இருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டுமென்று நம்பப்பட்டது. அதற்கு ஆதாரமாக அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது.
டார்வினின் புத்தகம் வெளியாகி இரண்டு ஆண்டுகளில் நடந்த இந்த நிகழ்வு மிகப்பெரிய பாதிப்பை அறிவியல் உலகில் நிகழ்த்தியது. உயிரினங்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக வேறொன்றாக மாறுகின்றன என்று டார்வின் சொன்னது சரிதான் என்று நம்பப்பட்டது.
சிறிய அளவிலான டைனாசர்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக (தொடக்க நிலை பறவையான) அர்கீயாப்டெரிக்ஸ்சாக மாறி பின்னர் அவற்றிலிருந்து பறவைகள் வந்தன என்று பரிணாமம் விளக்கப்பட்டது.
பரிணாம கோட்பாட்டிற்கு என்ன ஆதாரம் என்று கேட்டவர்களுக்கு, இதோ ஆதாரம் என்று அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது.
மொத்தத்தில், உலகின் முதல் பறவையாகவும், பரிணாம கோட்பாட்டிற்கான வலிமையான ஆதாரமாகவும் அர்கீயாப்டெரிக்ஸ் கொண்டாடப்பட்டது.
எப்படி காலங்கள் செல்லச் செல்ல பரிணாமத்தின் மற்ற உயிரினப்படிம ஆதாரங்கள் ஒன்றுமில்லாமல் சிதைந்தனவோ அதுப்போலவே அர்கீயாப்டெரிக்ஸ்சின் நிலையும் ஆனது.
கடந்த சிலபல ஆண்டுகளாகவே மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது அர்கீயாப்டெரிக்ஸ். இதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து கண்டுப்பிடிக்கபடும் (அர்கீயாப்டெரிக்ஸ் போன்ற) இறகுகள் கொண்ட டைனாசர்களின் (feathered dinosaurs) உயிரினப்படிமங்கள். இறகுகள் இருந்தாலும் இவை பறக்க தகுதி இல்லாதவை. குறிப்பாக சீனாவில் இருந்து மட்டும் மிக அதிக அளவிலான 'இறகுகள் கொண்ட டைசானர்' படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. )
சரிதான் .
இப்ப சில உண்மைகள் :
அப்பவே இவன Saurischia (lizard-hipped dinosaurs) ஆர்டர்ல சேத்துட்டாங்க.
அதாவது இவன் ஒரு பல்லி இடுப்பு கொண்ட டைனோசார் .
இருந்தாலும் இவன் பறக்க கூடியவன்னு ஒரு சாரார் நம்பிக்கிட்டு இருந்தனர் .
சில gliding models அ வச்சு பார்த்தும் , சீனாவில் கிடைத்த Archaeopteryx ஐ போன்ற இறக்கை கொண்ட பல்லியினை ஒப்பிட்டு பாத்தும் இவனுக்கு பறக்க தெரியாது , மரத்தை விட்டு மரத்திற்கு காத்தில் சறுக்க ( gliding)தான் தெரியும் என முடிவுக்கு வந்தனர் .
இதை பற்றி மேலும் அறிய,
இவன் ஏன் முதல் பறவை இல்லை ?
இவனிடம் பறவைகளுக்கான பண்பை விட பல்லியின் பண்புகளே நிறைய இருந்தன .
பறவையின் பண்புகள் :
1)இறக்கை
2)பறவை போன்ற அலகு
( ஆனால் அதில் பல் இருந்தது , இருப்பினும் சில பறவைகளுக்கு இப்போதும் பல் உண்டு ,
எடுத்து காட்டு : வாத்து
-- அப்பாடா தலைப்பை பிடிச்சாச்சு )
3)wish bone.
பல்லியின் பண்புகள் :
1)அலகு ( பறவைகளுக்கு அலகு epidermis layer ஆல் மூடியிருக்கும் , இவனுக்கு அப்படி இல்லை )
2)பல்லியை போன்ற பெரிய பாதங்கள் ( big toe )
3)நீண்ட வால்
3)இறக்கையில் மூன்று விரல்கள்
4)இன்னும் அனடாமிகாலா நிறைய ஆதாரங்கள் .
இவற்றை ஆதாரமாக கொண்டு ஒரு முடிவுக்கு வந்தனர் ,
என்ன முடிவு ?
Archaeopteryx no longer first bird - Matt Kaplan, Nature news, 27th July 2011.
இனி (உலகின்) முதல் பறவையல்ல அர்கீயாப்டெரிக்ஸ் - (Extract from the original quote of) Matt Kaplan, Nature news, 27th July 2011.
An icon knocked from its perch - Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.
ஒரு முக்கிய சின்னம் (அர்கீயாப்டெரிக்ஸ்) தன்னுடைய இருப்பிடத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டது - (extract from the original quote of) Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.
கடைசியாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் :
இவனோட பேரு முதல் பறவை கிடையாது , இவனோட பேரு "புராண / பழமையான சிறகு ".
இவன் பறவை அல்ல , பறவை உருவான பரிணாம படிக்கட்டில் ஒரு முக்கிய படி
அவ்ளோதான் .பறவை மாதிரியான நிறைய fossil ஐ கண்டுபிடித்து விட்டார்கள்.
பின்னர் ஏன் இவனுக்கு இவளோ முக்கியத்துவம் ?
darvin theory வெளியிட்ட அடுத்த வருடமே , அவர் கருத்துக்கு வலு சேர்ப்பது போல இவன் கண்டு பிடிக்க பட்டதினால் தான் , athukku பிறகு நிறைய கண்டு பிடித்து விட்டார்கள் .
BYE BYE BIRDIE ......now ur relatives are Dinos ...அப்புடின்னு நாட்டாமை தீர்ப்ப மாத்தி
சொல்லிட்டாரு .