Saturday, June 16, 2012

கடகம் 2 - புற்றின் மூலம்


//உடலில் காயம் ஏற்பட்டு தோல் பிய்த்துக்கொண்டு போய்விட்டால் , அந்த இடைவெளியை நிரப்ப அதே போன்ற தோல் செல்கள் மைட்டாசிஸ்   மூலம்  வேகமாக உற்பத்தியாகி அந்த இடைத்தை நிரப்பும் .//
என்று போனமுறை கூறியிருந்தேன் .

 முதலில் மைட்டாசிஸ் பற்றி பார்த்து விடுவோம் .

          nucleus உள்ள அனைத்து  eukaryotic செல்லும்  தன்னை போல இன்னொரு செல்லை உருவாக்கும் முறை தான் மைட்டாசிஸ் . அதாவது தன்னை போல இன்னொரு செல்லை பிரதி எடுத்தல் . இவ்வாறு ஒரே போல உள்ள செல்கள் ( இங்கே காயத்தை நிரப்பும் தோல் செல்கள் ) பல செல்களாய் பிரிந்து அந்த இடைத்தை நிரப்பும்.




அந்த இடைவெளியை நிரப்பிய பின்னரும் அவை கட்டுக்கடங்காமல் வளர்ந்தால் .... கான்செர் கட்டி என்று அழைக்கப்படும் ( benign ), இது சாது ,அங்கேயே தேமே என்று இருக்கும் , ஆனால் அது மற்ற இடங்களுக்கு பரவும் படி மாறினால் ? malignant . அப்புறம் கஷ்டம் தான் .

...........................................................................................................................................
                இப்போது நம் மனதில் எழும் கேள்விகள் ....

       செல்களின் இவ்வாறான பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் கட்டுக்கோப்பு எவ்வாறு உருவானது ?

இந்த கட்டுக்கோப்பை உடைத்து கான்சர் எவ்வாறு உருவாகிறது .?

முதல் கேள்விக்கு விடை தெரிந்தால் இரண்டாவது   கேள்வியை எளிதாக எதிர் கொள்ளலாம் .

............................

              இப்போது நாம் பார்க்கும் இடம் எண்ணூறு  மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தய  பூமி ,

இப்போ பூமி புதிதாக வயதுக்கு வந்த புது பெண் ,

பூமி முழுதும் ஒரு செல் உயிரினங்கள் மட்டுமே வாழ்ந்து வந்த கால கட்டம் , இங்கே ஒரே ஒரு சட்டம் தான் ...




                                               "எனக்கு நானே" சட்டம் ....

                                            "a single cell for itself "

இந்த சட்டத்தின் படி புற்று நோய் போல செல்கள் கட்டுக்கடங்காமல் பல்கி பெருகுவது தவறு கிடையாது  ,

சொல்லப்போனால் அவ்வாறு பல்கிப்பெருகும செல்கள் தான் அவர்களின் இனம் தழைத்து நிற்க போட்டியிடும் போட்டியில் வெற்றி பெற முடியும் .


இந்த போட்டி நூறு மில்லியன்  ஆண்டுகள் தொடர்ந்தன ...

சிலரால் போட்டியை சமாளிக்க முடியவில்லை ,

போட்டியை தனித்து சமாளிக்க இயலாதவர்கள் என்ன செய்வார்கள் ?


                                                      கூட்டணி தான் .

இனிதே ஆரம்பித்தது metazoan களின் கூட்டணி ஆட்சி . 

ஆட்சி மலர்ந்ததும் கூட்டணிக்கு என்று சில சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டன , இங்கே எனக்கு நானே சட்டம் வேலைக்காவாது , இது மக்களாட்சி , நாட்டுக்காக மக்கள் மக்களுக்காக நாடு என்பது போல .

அந்த metazoan கள் ஒட்டிவைத்த தெர்மாகோல் பந்துகளை போல காட்சி அளித்தன .




                                       கூட்டாக வாழ்வதில்பல சவுகரியங்கள் ...........


பல trial  and error க்கு வழிவகுத்து பல வடிவங்கள் சாத்தியபட்டன .

வேலை பகிர்ந்தளிக்கப்பட்டன ...

இரையை  பிடிக்க ஒரு கூட்டம் , அவற்றை செரிக்க ஒரு கூட்டம் , இவற்றை எல்லாம் கட்டுப்படுத்த ஒரு கூட்டம் ,,,.....

கூட்டங்கள் உறுப்புகளாக வளர்ச்சி பெற்றன .

ஆம் நம் உடலே ஒரு அரசாங்கம் ( அப்ப புற்று நோய் செல்கள் தனியாட்சி கேட்கும் மாவோயிஸ்டுகள் என்று வைத்துக்கொள்ளலாமா ?) , மூளை தான் தலைமை செயலகம் ( நன்றி சுஜாதா சார் ).

ஆனால் உடல் ஒழுங்காக செயல் பட ஒவ்வொரு செல்லும் தலைமையை மதிக்க வேண்டும் , தேவையான பொது தான் பெருக வேண்டும் , தன்னிச்சையாக செயல் படக்கூடாது , சுயநலம் கூடவே கூடாது . இது தான் கூட்டணி தர்மம் .

இருந்தும் போதிதர்மனின் நினைவுகள் DNA  விலிருந்து   பீரிட்டு கிளம்பியதை போல , சில செல்கள்  தனது எண்ணூறு மில்லியன் ஆண்டு பழைய சுயநல வாழ்க்கை முறை நினைவுகள் திரும்பவரப்பெற்று தனிராஜியம் துவங்க போர்க்கொடி பிடிக்கின்றனர் . அவற்றை மருத்துவம் கூறும் நல்லுலகம் கான்சர் என்று அழைக்கின்றனர் .

............................................................................
யாருப்பா அது , அவனின் நினைவுகளை கிளறி விட்டது ? 

mutation 

mutation  என்றால் என்ன ?

ஹீரோ மேல அணுக்கழிவின்    கதிர்கள் படும் , உடனே அவருக்கு ரெக்கை முளைக்கும் , கையில கத்தி வரும் , கண்ணுல தீ வரும் ......


இவை படங்களில் மட்டுமே சாத்தியம் , அப்ப உண்மையில் mutation என்றால் என்ன . 

ஒரு செல் இரண்டாக ஆவது பற்றி மைட்டாசிஸ்சில் பார்த்தோம் . 

மைடாசிசின் போது DNA இரண்டு செட்டாக இரு குரோமோசோம் பைகளில் திணிக்கப்பட்டு இரு செல்களுக்கு அளிக்கப்படும். 

 DNA காப்பி ஆகும் போது அதில் சில தவறுகள் நேரலாம் .  அந்த தவறை சரி செய்ய சில மெக்கானிசம்கள் உள்ளன , இவற்றையும் மீறி ஏற்படும் தவறுகளே  mutation.

மைடாசிசின் நோக்கம் செல்களின் பெருக்கம் அல்ல , இறந்த செல்களை replace செய்வது .

நிறைய முறை மைட்டாசிஸ் நடக்கும் இடத்தில்  DNA காப்பி செய்வதில் ஏற்படும் தவறுகளுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன.

ஐந்து பைசா திருடிகள் திருடித்திருடி , ஐந்து கோடி திருட்டாக மாறி அந்நியனிடம் கும்பிபாகம் பெருவது போல,

ஒவ்வொரு முறையும் மைட்டாசிஸ் நடக்கும் போது , mutation னுக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன , 

அதிகப்படியான  mutation கான்சருக்கு வழிவகுக்கும் .
.......................................................
நமது உடலில் 30 ட்ரில்லியன் செல்கள் உள்ளன ( மூனுக்கு பக்கத்தில் எத்தனை முட்டையோ ) , நமது வாழ்நாளில் நடக்கும் செல் division ளின் எண்ணிக்கை  10  ட்ரில்லியன். ( எல்லாம் தோராய கணக்கு தான் , ஒன்னு ரெண்டு கூட குறைய இருக்கலாம் ).

தோலிலும் குடலிலும் தினமும் செல்கள் உதிர்ந்து  கொண்டே இருக்கின்றன ., அவற்றை replace செய்ய புது செல்கள் மைடாசிசின் மூலம் முளைக்கின்றன  .
நிறைய மைட்டாசிஸ் ,mutation னுக்கான  நிறைய  சாத்தியக்கூறுகள் ....

அதனால் தான் தோலிலும் குடலிலும் புற்று நோய் அதிகம் வருகின்றன .(அங்கே செல்கள் தினமும் உதிர்கின்றன ),

இதய செல்கள் பிறப்பிலிருந்தே அவ்வாறே இருக்கும் , அதனால் தான் இதய கான்சர் என்று ஒன்றை நாம் கேள்விபட்டது இல்லை . 
--------------------------------------------------------------------------------------------------
மனிதனின் ஒரு செல் கான்செர் செல்லாக மாற கிட்டத்தட்ட 12 mutation கள் நடக்க வேண்டும் .
6 என்பது எல்லைக்கோடு { அதாவது pre  cancerous செல் ( கான்செருக்கும் நல்ல செல்லுக்கும் இடைப்பட்ட செல் வகையறா)   கான்சர் செல் ஆவதற்கு முந்தின பருவம் }.

ஆறுக்கு மேல் நடக்கும் ஒவ்வொரு மரபு மாற்றமும் இந்த கடவுள் பாதி மிருகம் பாதி செல்லை முழுவதும்  மிருகமாக மாற்றமடைய செய்யும் .
----------------------------------------------------------------------------------------------------

இப்போது  ஒரு நல்ல செய்தி , ஒரு கெட்ட செய்தி .....

முதலில் நல்ல செய்தி .

ஒரு நல்ல செல் இந்த ஆறை எட்டுவதற்கான சாத்தியங்கள் மிக மிக மிக குறைவு .

கெட்ட செய்தி 

சில சாயனங்கள்   , கதிரியக்கங்கள் மூலமாக ஆறை ஒரே தாவலில் எட்டி விடலாம் .

சிகரெட்டில் இருக்கும் நிகொடினில் ஆரம்பித்து , தமிழ் சினிமா வில்லன் பயன் படுத்தும் அனைத்து லாகிரி வஸ்துக்களிலும் இருக்கும் பொருட்கள் ஆறை எளிதில்  அடைய துணை போக வல்லது .

"சிகரெட் பிடிக்கும் அனைவரும் புகையோடு  தனக்கான சங்கையும் சேர்த்தே ஊதுகின்றனர். "









     எனது வட இந்திய நண்பர் ஒருவர் வாயில் மாவாவை எந்நேரமும் அதக்கி வைத்துக்கொண்டு இருப்பார் . மாவாவின் கெமிக்கல்கள் அவரது உதட்டின் செல்களில் mutation நை தூண்டி விட்டு ஆறு மற்றும் பனிரெண்டை வேகமாக அடைய ச்செய்து கட்டி உண்டாக்கியது ,.தாடையையே  அகற்றும் நிலைமை . அந்தோ பரிதாபம் , தாடையை அகற்றியும் புற்று செல்கள் உடல் முழுதும் பரவியதால் மரணத்தை தழுவினார் .
............................................................................
போதையின் hellucination  னை   மழலையின் சிரிப்பிலும் ,அன்னையின் முத்தத்திலும் ,காதலியின் அரவைணைப்பிலும் வரும் endorphin வெள்ளத்தினால் எளிதில் அடையலாமே .
.............................................................................
பின்னர்  எப்படித்தான் இந்த mutation ரேட்டை குறைப்பது ?

, றுத்த பண்டங்களை  தவிர்த்து   பச்சை காய்கறிகள், நார்சத்து உணவுகள்   நிறைய சாப்பிடுங்கள் .

அடுத்த பதிவில் , இன்னும் பல தகவல்களை  பகிர்ந்து கொள்ளாலாம் ........

Saturday, May 12, 2012

என்ன படிக்கலாம் ?

தொழிற்படிப்புகளுக்கு என்னைக்குமே மவுசு தான் . பனிரெண்டாம் வகுப்புக்கு பின்னர் எல்லோருடைய கனவும் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பாக இருக்கும் . என்னுடைய கனவும் அதுபோல தான் இருந்தது , மருத்தவம் பயில வேண்டும் என்பதே எனது கனவு .ஆனால் மருத்துவம் சேர்வதற்கு ஒன்றரை மதிப்பெண் குறைவு , நல்ல வேலை கால்நடை மருத்துவத்திற்கு விண்ணப்பிதிருன்தேன். கால்நடை முதுவப்பணியினை தற்போது செவ்வவனே செய்து வருகிறேன் .

தற்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.கால்நடை மருத்துவம், மீன் வளம், உணவுத் தொழில்நுட்பம் மற்றும் கோழி உற்பத்தித் தொழில்நுட்ப இளநிலை பட்டப் படிப்புகளில், இந்தக் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள், நாளை மறுநாள் முதல் வினியோகிக்கப்பட உள்ளது.விண்ணப்பங்களை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இது குறித்த விவரங்களை, பல்கலைக் கழக இணைய தளத்தில் (www.tanuvas.ac.in) தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


கால்நடை மருத்துவப்படிப்பு பற்றிய சில தகவல்களும் எனது அனுபவங்களும் ....

இது ஐந்து வருட படிப்பு ,படிப்பு செலவு மிகவும் கம்மி ,(வருடத்திற்கு பதினைந்தாயிரதிற்கு மேல் செலவு கிடையாது , அதுவும் நிறைய ஸ்காலர்ஷிப் இருக்கு ( எங்க பாட்ச்சில் என்னையும் சேர்த்து மொத்தம் ஆறு பேரு தான் ஸ்காலர் இல்லாம படித்தோம் ), இரண்டு கல்லூரிகள் சென்னை , நாமக்கல் ( இன்னும் இரண்டு இடங்களில் வரப்போகின்றன ),பெண்களையும் படிக்கவைக்கலாம் ( எங்கள் பாட்ச்சில் பெண்கள் நாற்பது சதவீதம் - அனைவருக்கும் தற்போது அரசாங்க வேலை கிடைத்து விட்டது,


  , வெட்னரி படித்தால் மாட்டு வைத்தியம் மட்டுமல்ல ,ஆராய்ச்சி , சிவில் செர்விஸ் ( veterinary option  ஒன்றே civils இல் தனியாக உள்ளது  , போன முறை எனது சீனியர்கள் மூவர் சிவில் கிளியர் செய்துள்ளனர் ), GRE  , TOFL கிளியர் செய்து வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்கலாம் , யார் கீழயும்  வேலை செய்ய பிடிக்காதவர்கள் கிளினிக் வைக்கலாம் .


மேலும்  இது ஒரு , 

போட்டியே இல்லாத துறை .மனநிறைவான தொழில் .

இவ்வளவு குறைந்த கட்டணத்தில் மருத்துவ பட்டம் உலகில் வேறு எங்குமே கிடைக்காது .

so chose the road which is less traveled by 


பின்குறிப்பு :
NRI க்களுக்கு கோட்டா இருக்கிறது . 

மேலும் விவரங்களுக்கு  ..

Monday, April 16, 2012

பரிணாமத்தை ஆண்டியாக்குமா ஆன்டிபயாடிக் ?

நாய் ஏன் மரத்துல ஒன்னுக்கு அடிக்கிது ?


நீங்க ஏன் பஸ்சுல துண்டு போடுறீங்க ?

எல்லாருக்கும் தங்களின்  இடத்தை யாருக்கும் விட்டுக்குடுக்க மனம் இல்லை .
..................................................................................................................................................................

நமது அடிப்படை தேவைகள் உணவு , (பல சமயங்களில் )உடை  , உறைவிடம் .
.....................................................................................

நம்மளோட இடத்தை நாம் பாதுகாத்துக்கொள்வதில் நமக்கு ரொம்ப அக்கறை .

இதுக்கு பேருதான் Territorial  behavior .

நம்ம இடத்தில அடுத்தவன் நுழையாம இருக்க நாம என்ன பண்ணுவோம் ?

காம்பவுண்டு   கட்டுவோம் , அதுல யாரும் விளம்பரம் எழுதகூடாதுன்னு நாமளே பெருசா எழுதி வைப்போம் .



நம்ம இடத்துல யார் நுழைந்தாலும் நமக்கு கோவம் வரும் தான் .


நாடுகள் லெவல்ல   பாத்தோம்னா இதுக்கு தீர்வு    துப்பாக்கி .


தனிமனித அளவில் பாத்தோம்னா இதுக்கு நாம் கையில் எடுப்பது  கையில் கிடைக்கும்  ஆயுதம் .


இந்த இடச்சண்டை இவ்வாறு ரத்தகளறியாக நடக்கலாம் , இல்லை என்றால் கண்ணுக்கு தெரியாத அளவும் நடக்கலாம் .
..................................................................

கோரல் reef  கள் ஆழ்கடலில் மெதுவாக வளரும் , அவை நன்றாக வளர ஒரு பிடிமானம் தேவை , அப்படிப்பட்ட நல்ல பிடிமானமுள்ள  இடத்தில பல வகை கோரல்கள் வளரும் .


அந்த இடத்தை முழுதும் ஆக்கிரமிப்பதில் அவற்றுக்குள் போட்டி நடக்கும் . பார்க்க வெளியில் ஒன்றும் தெரியாது . ஆனால்  மெதுவாக ஒன்றை ஒன்று கபளீகரம் செய்ய முயற்சிக்கும் . 





யார் யாரை வேகமாய் தின்று தீர்க்கிறார்களோ   அவர்களுக்கு வெற்றி . அந்த இடம் அவர்களுக்கு சொந்தமாகிவிடும் .

..........................................

சில வகை பூஞ்சைகள் , நுண்ணுயிரிகள் தங்களை சுற்றி  மற்ற உயிரினங்கள் வளரக்கூடாது என்பதற்காக சில வகை பொருட்களை உற்பத்தி செய்யும் .

 Louis Pasteur மற்றும்  Robert Koch  1877 இல் ஆந்த்ராக்ஸ் கிருமிகளின் வளர்ச்சியை வேறு சில கிருமிகள் தடுப்பதை கண்டறிந்தனர் .

1928 இல்  Alexander Fleming Penicillium எனும் பூஞ்சை தன்னை சுற்றி பாக்டீரியாக்கள் வளருவதை தடுப்பதற்காக   ஒரு பொருளை உற்பத்தி செய்வதை கண்டறிந்தார் , அதற்கு பெனிசிலின் என்று பேர் வைத்தார் .

இதை பின்பற்றி பல்வேறு பூஞ்சைகள் மற்றும் கிருமிகளில் இருந்து ஆன்டிபயாடிக் மற்றும் antimicrobial களை உருவாக்கினர் .
.......................................................................................
antibiosis, meaning "against life,"  - அதாவது உயிர்களுக்கு எதிரான என்று பொருள் .


ஆன்டிபயாடிக்  என்பது....


"any substance produced by a microorganism that is antagonistic to the growth of other microorganisms in high dilution ."

அதாவது இன்னொரு நுண்ணுயிரியினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருள் ,
அதன் நோக்கம் அதை சுற்றி மற்ற நுண்ணுயிரிகள் வளராமல் தடுப்பதற்காகஅதனால் கையாளப்படும் ஒரு தந்திரம் .

"An antibacterial is a compound or substance that kills or slows down the growth of bacteria.The term is often used synonymously with the term antibiotic(s)".
.....................................................................................................
ஒருவனை திரும்ப திரும்ப அறைந்தால் அவனுக்கு தோல் தடித்து அந்த அறை உரைக்காத அளவுக்கு சுரணை  அற்று போய்விடும் அல்லவா 


அதுபோல தான் ஆன்டிபயாடிக் மருந்துகளை தேவையில்லாமலும் , தவறான முறைகளிலும் உபயோகப்படுத்துவதினால் அவற்றிக்கு எதிராக, பாக்டீரியாக்கள் தடுப்பாற்றலை வளர்த்துக்கொண்டன .
..........................................................

ஆனால் சிலரை அடிப்பதும் ஜெயிப்பதும் ரொம்ப கடினம் .

ஏன் என்றால் பிறவியில் இருந்தே அவர்களுக்கு எதிர்ப்பாற்றல் அவர்கள் உடல் பலத்தால் சாத்தியப்படும் .


அது போல தான் சில பாக்டீரியாக்கள் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதற்கு ஏற்ப பரிணாமத்தின் துணை கொண்டு  இந்த ஆன்டிபயாடிக்கினை எதிர்த்து வளரும் சக்தியினை கைவரப்பெற்றிருக்கும் .
.........................................................................................

Vancomycin என்பது Amycolatopsis orientalis எனும் கிருமியினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஆன்டிபயாடிக், 


அந்த Amycolatopsis orientalis கிருமி பழங்காலதிலிருந்தே இருந்து வருகிறது , அந்த காலத்தில் அதனை எதிர்த்து வளரும் சக்தி படைத்த ஒரு கிருமியினை தற்போது கண்டு பிடித்து உள்ளார்கள் . 



இந்த செய்தியை கேட்ட நமது நண்பர்கள் அது எப்புடி சில வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆன்டிபயாடிக் மருந்துக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கிருமி எதிர்ப்பாற்றலை கொண்டிருக்க  முடியும் ? எனவே பரிணாமம் சுத்தப்பொய் எனும் முடிவுக்கு வந்துள்ளனர் .



http://www.ethirkkural.com/2012/04/blog-post.html


Vancomycin சில வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாடிக்.


அதாவது discovered , invented அல்ல .


பல்லாயிரம்   வருடத்திற்கு முன்பே இருந்து வந்ததை இப்போது வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்கள் .

..............................................................................

குறிப்பிட்ட அந்த பதிவில் என்னை மிகவும்  சங்கடத்தில் ஆழ்த்திய இரண்டு வரிகள் 

1)  "Nothing makes sense in biology except in the light of evolution"
"பரிணாமம் இல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்து வராது"

இப்படியாக சிலபலர் கூறுவதை நாம் பார்த்திருக்கலாம். இம்மாதிரியான வாசகம் எனக்கு குழப்பத்தையே தந்துள்ளது. 


2)உண்மை என்னவென்றால், பரிணாமம் இல்லையென்றாலும் கூட உயிரியல் அறிவுக்கு ஒத்துவரக்கூடியதாகவே இருக்கும்.



என்னை பொறுத்த வரை  சில தீர்வே இல்லாத நோய்களுக்கு பரிணாமம் தான் தீர்வு .

அப்படிப்பட்ட நோய்களுக்கு human மெடிசின்காரர்கள்  பரிணாம வழியாக அணுகினால் எளிதில் தீர்வு காணலாம் என எனது veterinary அறிவு கூறுகிறது .

ஆனால் ஏனோ அந்த நோய்க்கு என்னென்னமோ வழிகளில் ஆராய்ச்சி செய்தாலும் , நான் யோசித்து வைத்திருக்கும் வழிமுறையில் ஆராய்ச்சிகள் அரிதின் அரிதாகவே நடை பெற்று வருகிறது .

அதை பற்றி மிக விரைவில் ( அதாவது 2 மாதம் கழித்து) பதிவிடுகிறேன் , அது யாராவது ஆராய்ச்சியாளர் கண்ணில் பட்டு ஏதாவது நல்லது நடந்தால் சரி .

அந்த நோய் ......................................

கடகம் @ cancer   .

Saturday, April 7, 2012

சக்கை டாக்டரின் மொக்கை கவிதைகள்


pit புகைப்பட போட்டிக்கு படம் அனுப்பலாம்னு யோசிச்சேன் , நாம எடுத்ததுலயே சிறப்பான போட்டா எதுன்னா , மயில் பறக்குற போட்டா தான்

http://walkingdoctorcom.blogspot.in/2012/03/drdolittle.html

அந்த படம் நம்ம நண்பர்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தாலும் , அதை போட்டிக்கு அனுப்பினால் நடுவர்கள் கடுப்பாகி விடும் அபாயம் இருப்பதால் , வேற ஒரு போட்டா போட்டிருக்கேன் ,

தலைப்பு ?

வழி நடத்தும் கோடுகள்' (Leading Lines)



இது எப்புடி இருக்கு ?


....................................................................................................................

கம்பிகளில் மாறி மாறி அமர்கின்றன மைனாக்கள் ...


கோடுபோட்ட நோட்டில் அழித்து அழித்து எழுதப்பழகும் குழந்தை போலவே ...


------------------------------------------------------------------------------------------------------

மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி ...

( கர்டசி - வைரமுத்து )

ஆனால் ...

புதிதாக போட்ட ரோட்டையே முட்டி முட்டி முளைப்பது காணக்கிடைக்காத அரிய காட்சி ...

Monday, March 26, 2012

வரும் .... ஆனா வராது ....


மன்னித்து விடுங்கள் நண்பர்களே ,வேலை பளுவினால் , உங்களுடன் எதையும் பகிர முடியவில்லை .

சோ , உங்களுக்காக  ஒரு சின்ன கார்டூன் , (இத நானே சிந்திச்சேன் ).


அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் ,

ஒரு நல்ல செய்தி , ஒரு கெட்ட செய்தி , 

எத முதலில் சொல்ல ?

கெட்ட செய்தி ....

ரெண்டு மாசம் பூரா நகர முடியாத அளவுக்கு வேலை , பதிவு எழுதுவது கடினம் .

அப்ப நல்ல செய்தி ....  

ரெண்டு மாசம் பூரா நகர முடியாத அளவுக்கு வேலை , பதிவு எழுதுவது கடினம் .( இது உங்களுக்கு நல்ல செய்தி ).

சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடர்வோம் ...

Thursday, March 15, 2012

Dr.Dolittle ட்டும் மொக்க மொபைல் கேமராவும்



face  book ஒரு மயில் பறக்குற போட்டோ போட்டுருந்தாங்க , அதுக்கு பல லைக் , பல share ,


    அடப்பாவிங்களா மயில் பறக்குறத பாத்ததே இல்லையா ?

   போட்டா என்னமோ நல்லா  தான் இருந்திச்சு , அதோட கமென்ட்ட  பாத்தா , பொண்ணுங்க எல்லாம் "ஐயோ so  cute ", பசங்க எல்லாம் "wide angle camera   long shot வச்சு strite drive close  up வச்சு எடுக்க பட்ட அருமையான படம்  ",அப்பிடின்னு பொண்ணுங்க கமென்ட்டுக்கு கீழயே பயங்கரமா அளந்து விட்டுருந்தானுங்க ( அப்ப தானே அந்த புள்ள அதை படிக்கும்ன்னு ஒரு நப்பாசை ---- தம்பி சூது என்னன்னு எங்களுக்கும் தெரியும் ).
............................................................................................................................................

அன்னைக்கு நான் சில முடிவுகள் எடுத்தேன் ....

   நான் தங்கியிருந்த farm சுத்தி மான் ,மயில்ன்னு நிறைய இருக்கும் ,நாமளும் அதே மாதிரி ( அதை விட சூப்பரா) மயில் பறக்குறத போட்டா புடிக்குறோம் , FB போடுறோம் , ஓவர் நைட்டுல பேமஸ் ஆகுறோம் .

நாங்கல்லாம் யாரு ?

மூணாவது படிக்கும் போதே முனிவர் வேஷம் போட்டவங்ய   , தெரியும்ல ?
........................................................................................................................................................
மயில் நல்லா பறக்குது , ஓகே ...

போட்டா புடிக்க நான் இருக்கேன் ,ஓகே ...

எதோ ஒன்னு மிஸ் ஆகுதே ?

ஆங் !கேமரா ......
....................................................................................................................................................
இடம் : கேமரா , மொபைல் விற்கும்  அங்காடி

என்னென்னமோ எடுத்து காமிச்சான் , பன்னண்டு , பதினாறுன்னு மெகா பிக்சல் கணக்கு சொன்னான் , நல்லா தான் இருந்துச்சு ...

விலையை கேட்டேன்   .............................................

சரி மயில் பாட்டுக்கே பறந்துட்டு போவுதுன்னு முடிவுக்கு வந்தேன் .

கடைக்காரன் : சார் பேசாம இந்த கேமரா போன் வாங்கிக்குங்க அஞ்சு மெகா பிக்சல் கேமிராவுல போட்டா புடிக்கலாம் , பாட்டு கேக்கலாம் , கேம்ஸ் ஆடலாம் , போன் பேசலாம் , அலாரம் வைக்கலாம் , காப்பி குடிக்கலாம் , கல்யாணம் பண்ணலாம் .....

நான் : மயில் பறக்குறத போட்டா புடிக்கலாமா ?

 கடைக்காரன் : மயில் என்ன சார் , மஸ்கிட்டோ பறக்குறதயே படம் புடிக்கலாம் .

என்னை படம் புடித்து டெமோ வேறு காட்டினான் .


சார் போட்டாவுல எப்புடி MGR கலருல மின்னுறீங்க பாருங்க என்றான் .

அழகா தான் இருக்கோமோ ?

  ச்சே இருக்காதா பின்னே ?
.....................................................................................................................

   அடுத்த நாள் கிளினிக்குல ஒரு ascites ( தமிழில் வயிறு வீக்க நோய் ?) கேசு நாய் ஒன்னு வந்துச்சு . சரி வித்யாசமா ஒரு கேஸ் வந்துருக்கு , மருத்துவத்துக்கு முன் மருத்துவத்துக்கு பின்னுன்னு வழுக்கதலை add மாதிரி போர்டு போட்டு பட்டய கெளப்பிட வேண்டியதுதான்னு   முடிவு பண்ணி owner அம்மா கிட்ட நாய  போஸ்  குடுக்க சொன்னேன்  .

பந்தாவா போஸ்  குடுக்க அது என்ன பாவனாவா ?

நானும் போட்ட புடிக்கிற பட்டன அமுக்குனேன்,

அது மெல்ல போட்டா புடிக்கிறதுகுள்ளார ,நாய் நாலு தடவ சாபிட்டுடுச்சு, மூணு தடவ பாத்ரூம் போயிடுச்சு .

புது கேமரா இல்லையா , அப்பிடிதான் இருக்கும் . பழக பழக எல்லாம் சரியா போயிடும் ( அவ்வ்வ்வ் ).


............................................................................................................................

அந்த பொன்னான நாளும் வந்தது , காட்டுக்குள்ளார இருக்குற அந்த farm மூணு நாள் டூட்டி போட்டாங்க .


அஞ்சு மெகா பிக்சல் கேமரா ...

சொய்ங்க்னு மயில் பறக்க ...

டைமிங்கா அத நான் போட்டா புடிக்க .....

அத FB அப்லோட் பண்ண ...

பொண்ணுங்க லைக்கோ லைக்கா குடுக்க ...

ஒரே நாளில் பேமஸ் + தாய்மார்கள் ஆதரவு ....
தேர்தல் ....
முதல்வர் ....
பிரதமர் ......

க்கா ….க்கா ...சதக்ப்ளிச்

நல்ல வேலை.
ஜஸ்ட்டு மிஸ்ஸு ,

காக்கையின்  கழிவு கனவை கலைத்த சோகத்துடன்  அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன் .
............................................................................................................................
   farm வேலை எல்லாம் முடித்து விட்டு , சாயங்காலம் கையில் கையில் கேமராவோட ( மொபைல் என்று வாசிக்க ) போட்டா புடிக்க கிளம்பினேன் .கொஞ்சம் லேட்டா போயிட்டேன் போல , எல்லா மயிலும் மரத்துல செட்டில் ஆகி தூங்க ஆரம்பிச்சுடுச்சுங்க .






விடுவனா ?

மயிலே மயிலே போட்டா புடிக்கணும் . பறந்து போ’ ன்னா போகாதுங்க .

நாமதான் மரத்த ஆட்டி விடனும் !!! 

ஆட்டி விட்டேன் .....

எல்லா மயிலும் பரப்பிக்கிட்டு பறக்க ஆரம்பிச்சுங்க .

க்ளிக் .... பட்டன அமுக்கி பத்து நிமிஷம் கழிச்சு இந்த சத்தம் வந்துச்சு .
அதுக்குள்ளே   மயிலுங்க எல்லாம் வேற மரத்துல செட்டில் ஆயிடுச்சுங்க .

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ... கடைசியா போட்டா புடிச்சோம்ல ... வரலாற்றில்  இடம் பிடிக்க போகும் அந்த போட்டா தங்கள் பார்வைக்கு ...


சத்தியமா  இது மயிலு தாங்க ...

அட நம்புங்க ...

அரிதின் அரிதாக grey  horn  bill ஒன்றையும் படம் பிடித்துள்ளேன் ,

  அதோ அந்த மரத்தின் உச்சியில்  ஒன்று பறந்து கொண்டிருக்கிறதே  , அதே தான் .

என்னது தெரியலையா ?

சீக்கிரம் நேத்ராலயாவுக்கு  கிளம்புங்க .கடைய மூடிற போறாய்ங்க .
................................................................................................................................
இதெல்லாம் வேலைக்காவதுன்னு நான் ஒரு முடிவுக்கு வந்தேன் .


அனிமல்ஸ்சே தான் படம் புடிக்கனுமா ? ( பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ?) , அனிமல்ஸ நாமளே கற்பனை பண்ணி பாக்கலாமே ?

எப்புடி ?

இப்புடி .....
கலைக்கண்ணோடு பாருங்கள் மரமும் ஒட்டகசிவிங்கியாய் தெரியும் .
......................................
எல்லாம் இந்த ஓட்ட போனால வந்தது 



Related Posts Plugin for WordPress, Blogger...