Sunday, December 7, 2014

காடுகள் மலைகள் தேவன் கலைகள் (இயற்கை நோக்குதல்-4)


எங்க வீட்டாண்ட ஒரு அண்டங்காக்கா இருக்கு , அது நா வைக்கிற சோற சாப்ட்டுட்டு நல்லா ஹெல்தியா இருந்துச்சு. 

ஒரு நாள் நா சொல்ல சொல்ல கேக்காம, பாய் கடைல போயி கொஞ்சம் மட்டன் பீச சாப்டுட்டு , அப்டியே ஒரு யு டர்ன் போட்டு பந்தி இலைல இருந்த மிச்ச மீதிய சாப்டுட்டு வானத்துல பறந்துட்டு இருக்கும்போதே வயித்த கலக்கி டர்ர்ர்ர்ர்....ன்னு கழிய ஆரம்பிச்சுடுச்சு .

கரெக்டா நா கீழ நிக்கிறேன் ....

ஆத்தி... இந்த காக்கா நம்ம மண்டைல ஹேர் கலரிங் பண்ணாம விடாது போலயேன்னு  பாத்தா , தரைய தொடுவதற்கு முன்னாடியே ஆவியாகிவிட்டது காக்கையின் பேதி :)

க்ளோபல் வார்மிங்னால ஊருக்குள்ள அவ்ளோ வெயிலடிக்குது பாஸ் :(

இவ்ளோ வெயிலடிச்சா , கடல் தண்ணி எவ்ளோ ஆவியாவும்???
அப்புடி ஆவியாவுர மேகமெல்லாம் எவ்ளோ மழை குடுத்துருக்கணும் ???

ஆனா நாட்ல ஒரு சொட்டு மழை இல்லையே பாஸ் !!!

அப்போ இந்த மேகமெல்லாம் எங்க ஊர் மேய போயிருக்கும்???
ஊருக்குள்ள இப்போ நல்லோர் ஒருவர் கூட உளருரது இல்லையா???
இல்ல நல்லோர் ஒருவர் உளருனாத்தான் மழை பெய்யுமா???என்னாச்சு ??? ஏன் மழை பெய்யல ???

 சொல்லுங்க ...சொல்லுங்க ...சொல்லுங்க ....

டங்சனாவாதீங்க. 

ஆவியாவுர தண்ணியெல்லாம் மழையா வாந்தி எடுத்துட்டு தான் இருக்குதுங்க.

ஆனா அந்த மழையெல்லாம் யாருமே இல்லாத கடல்பகுதில யாருக்கோ டீ ஆத்தும் சிங்கு மாதிரி வேஸ்ட்டா பேயிதுங்க.
..........................................................................................................

இந்த வட நாடு இருக்கே ...அது எப்புடி கொடநாடு மாதிரி செழிப்பா இருக்குன்னு யாராச்சும் யோசிச்சிருக்கீங்களா ?

 காரணம் - இமயமலைத்தொடர்.

இமய மலைத்தொடர் மட்டும் இல்லாட்டி பருவக்காற்ற பஞ்சர் பண்ண வழியில்லாம அதுங்க எல்லாம் சீனாவுக்கு போயிருக்கும்......................................
 மலைகள் பாஞ்சு வரும் பருவக்காற்ற நெஞ்சு மேலயே மிதிச்சு மழையா வாந்திய கக்க வைக்கிதுங்க.


மலைகளும் மரங்களும் மழை வசூல் செய்யும் இயற்கை ஏட்டையாக்கள்
--------------------------------
பூமி தோன்றிய போதிருந்தே இது மாதிரி மழை பெய்யுதே மகனே ? 

பின்னே  எங்கிருந்து இந்த  மரங்களும் ,காடுகளும், கானக்குயில்களும், பட்டக்சிலே விசிறி வச்ச மயில்களும் தோன்றின? 

-- வாங்க ... வரலாறு வாய்க்காக்குள்ள முழுகி முத்தெடுப்போம் .

பல லட்சம் வருஷமா மழை மேகங்கள் மலைகளில் மோதி; நதியாக  வெள்ளப்பெருக்கெடுத்து கடல்ல கலந்துகிட்டு தான் இருக்கு .

 அதுவும் அந்த காலத்து காற்றில் கார்பன்டைஆக்சைட் மிகுந்திருந்த காரணத்தால அமிலமாக பெய்த மழை, பாறைகளின் மினரல்களை பிராண்டி  நதியோரங்களை  வளப்படுத்தி வைத்திருந்தது.

கடல்ல மிதந்துட்டு இருந்த கடல் பாசிகள் ; ஆத்துவழியா வந்து இந்த வளங்களைக்கொண்டு ; கரையோரம்  மரங்களாக பரிணமித்து நெடிந்துயர்த்து வளர்ந்து நின்றன.

மத்த மரத்தைவிட ஹைட்டா வளந்தா தான் நிறைய சூரிய வெளிச்சத்த பெற முடியும் .

அவ்ளோ ஹைட்டா வளர்ந்தா  சூரக்காத்து   எளிதா மரத்த சாய்ச்சுரும்ல ? அதுனால பருமனாவும் அடர்த்தியாவும் மரங்கள் வளர்ந்தன .

இப்புடி ஒன்னுக்கொன்னு போட்டி போட்டு வளர்ந்ததால , அடர்த்தியான காடுகள் உருவாச்சு .

இப்ப பாத்தீங்கன்னா சார் ...மாடு சாணி போடுற மாதிரி , மரத்துலேருந்து அங்கேயே சொத்'ன்னு விதை விழுந்தா , இந்த அடர்ந்த...உயர்ந்த மரங்களுக்கு  கீழ எப்புடி அடுத்த சந்ததி மரம் உருவாகும்??

ஆரம்ப கால கட்டங்கள்ல மரங்கள் ;விதை பரவலுக்கு காத்தை நம்பி இருந்துச்சு .

உதாரணத்துக்கு நம்ம காடுகள்ல சாதாரணமா  காணப்படும் இந்த மரங்களின் /கொடிகளின் விதைகள பாத்தீங்கன்னா, வேகமா காத்தடிக்க சொல்ல , ஹெலிகாப்ட்டர் மாதிரி சொய்ங்'ன்னு சுத்திகினே தூர போய் விழும் .பாக்கவே சூப்பரா இருக்கும் தெரியுமா :)
 


ஆனா இந்த வித்தைல  ;விதைகள கொஞ்ச தூரம் வரைதான் பரவ வைக்க முடிஞ்சது.

 மரங்களுக்கு இது பத்தாது.

 ஒரு வளமான வெரைட்டியான சந்ததி உருவாக ; பல்வேறு ஜீன்களின் சங்கமம் அவசியமாகிறது .

இந்த இன்டர்நெட் யுகத்துல ;ஆப்ரிக்க அழகிகள் ; இந்திய ஆண்களின் மூலம் ஓர் அறிவார்ந்த சந்ததியை பெற்றுக்கொள்ள ஆன்லைனில் அழைப்பு விடுக்கின்றனர். ஒத்து வந்தா ;ப்ளேன் ஏறிப்போயி சந்ததிய அளிச்சிட்டு வரும் வாய்ப்புகள் நம்ம மக்களுக்கு உள்ளன .

ஆனா இது மாதிரி ...நம்மூர் நாட்டுத்தக்காளி ; பெங்களூர் தக்காளி மேல ஆசைப்பட முடியுமா ?

 பாவம் பயபுள்ளைனால நகரக்கூட முடியாது இல்லையா ?

so  sad :( 

அதுனால தாவரங்கள் கத்துகிட்ட மொத்த விதையும்  இறக்கி வச்சு , பூக்கும் தாவரங்கள்'ன்னு புதுவகை இனமாக ட்யூன்'னாகி நின்றன.
----------------------------------------------------
எதற்காக பூக்கள் ?

தாவரங்கள் நிலத்தை ஆக்ரமிச்சதும் , காத்துல இருந்த co2 உறிஞ்சப்பட்டு வளிமண்டலத்தில் ஆக்சிஜன் பெருக ஆரம்பித்திருந்த காலமது. மேலும் அவற்றால் உருவான ஓசோன் படலமும் அல்ட்ரா வயலட் கதிர்களை தடுக்க ... கடல் வாழ் உயிரினங்கள் பயமில்லாமல் நிலத்தை நோக்கி வர ஆரம்பித்திருந்தன..(for further details )

மேலும் இவ்வகை உயிரினங்களால்  நகர முடியும் .

அதுங்களுக்கு சோறு போட்டு தேனஊட்டி வளர்த்தா , அதுங்கள காலம் பூரா  அடிமையா  வச்சிருக்கலாமல்லவா ?

//அடிமை சிக்கிட்டான்.//

---plants made insects to evolve as their  "MOBILE PENISES " .--

(இந்த கருத்தை ; டாக்ட்டர்  டூலிட்டில் தனது ராசதந்திரத்தை பயன்படுத்தி ஆங்கிலத்துல எழுதியதன் மூலம் , "வக்கிரம் டோலரே" எனும் கமெண்ட்டை வேரறுத்தார் என்பதை இங்கு பதிவு செய்ய கடமைபட்டுள்ளேன்  )
-----------------------------------
பறக்கும் பூச்சிகள் தேனெனும் கூலிய வாங்கிக்கினு ஒரு செடியின் மகரந்தத்தை , இன்னொரு செடியில் இறக்கி வைத்து அவை கலவி கொள்ள உதவுகின்றன.

அதுவும் இமயமலைச்சாரலில் நா பாத்த இந்த வண்டு ; அப்புடியே இந்த பூவுக்கு அளவெடுத்து செஞ்சது போல கச்சிதமா இருந்துச்சு . 

இதல்லாம் பாத்து நீங்க ஆத்திகனா இருந்தா இறைவனின் பெருமையை போற்றுங்க . நாத்திகனா இருந்தா பரிணாமத்த எண்ணி வியப்படைங்க. இல்லாக்காட்டி என்ன மாதிரி இயற்கையை ரசிங்க :)


 பூச்சிக்கப்புறம் பரிணாமமடைந்த விலங்குகளையும் PENIS 'சா மாத்த உருவானது தான் பழங்கள் .

பறவைகளும் விலங்குகளும் பழங்கள விழுங்கி ...அவற்றின் விதைகளை ; தமது 'ஆய்' என்கிற அற்புத உரத்தோடு, தாம் செல்லும்  தூர தேசங்களில் நட்டு விட்டு வந்தன.

Next time தக்காளி சாதம் சாப்ட்டுட்டு ; அடுத்த நாள் காலை கம்மாக்கரை ஒதுங்கும் போது, " என்ன சித்தப்பு சாப்ட்டீங்களா? " என நக்கலாக கேட்க்கும் ஒண்டிப்புலியிடம்,"உரம் போட்டு தக்காளி விதை நட்டுட்டு வந்துருக்கேன்டா இடியாப்பத்தலையா ", என நெஞ்சை நிமிர்த்தி சொல்லிவிட்டு வாருங்கள் .

இன்னுமா பாஸ் புரியல ...

ஒரு தடவ காட்டுக்குள்ளார காலாற நடந்துட்டு வீட்டுக்கு வந்ததும் கால்சட்டைல ஒட்டிருக்குற விதைகள பாத்தீங்கன்னா ; இந்த தாவரங்கள் நம்மள தங்களின் நகரும் penis'களாக பயன்படுத்தி வந்திருப்பது உள்ளங்கை உருளைகிழங்கா , தெளிவா தெரியும் .

-------------------------------------------

ok ...

இந்த தென்மேற்கு பருவக்காற்று இருக்கில்லையா ? இது   தேனிப்பக்கம் வீசும்போது எப்புடி சார் சாரல் வருது?

எல்லாம் ஏட்டையா வேல தான் :)
ஏட்டய்யா செக்போஸ்ட்ல எல்லா மேகத்துகிட்டையும் மழை வசூல் செஞ்சுட்டுத்தான் விடுவாரு . 

உதாரணத்துக்கு; தென்மேற்கு பருவக்காற்று; எல்லா மழையையும் மேற்குதொடர்ச்சிமலைக்கு அப்புடிக்கா இருக்குற கேரளாவுல பொழிஞ்ச்சிட்டு, வெறுங்கையோட இப்டிக்கா வருதுங்க. அதுனால தான் கேரளம் செழிப்பா இருக்குது .

மலைகளில் ...அதுவும் windward  பக்கமா இருக்கும் இடங்களில் தண்ணீருக்கு பஞ்சமில்லை, கனிம வளத்திற்கு குறைச்சலில்லை.வேறென்ன வேண்டும் மரங்களுக்கு ???


பணக்காரர்களுக்கு ECR ரோட்டு மேல எப்புடி ஒரு கண்ணோ, அது மாதிரி மலைகளின் மரங்களுக்கு இது போன்ற இடத்தின் மேல் ஒரு காதல்.
.............................................................

நிலத்துக்கு அடீல தண்ணி ஓடுது, மரங்கள் அதை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி மேல இழுத்து கொண்டுவருது, அந்த தண்ணிய வச்சு மரங்கள் சாப்பாடு செஞ்சுக்குது.அதுனால மரங்கள் இருக்கும் பகுதில காற்றின் ஈரப்பதம் நிறைந்து குளுகுளுனு இருக்கு. 

அந்தப்பக்கமா போற மேகங்களெல்லாம், இது போல காற்றில் ஈரப்பதம் நிறைஞ்சிருக்குற இடங்களில் கொஞ்சநேரம் இருந்து மழையை பேஞ்சிட்டு போயிரும்.

அறிவியல் கூறும் நல்லுலகம், மரங்கள் இது போல காற்றின் ஈரப்பததை கூட்டும் செயலை transpiration என்றழைக்கிறது
..................................
மலையை சுத்தி மரங்கள் , மரங்கள் இருப்பால மழை'ன்னு ஒரு செழிப்பான வெப்ப மண்டல பசுமைமாறாக்காடுகள் நம்ம தென் இந்தியாவுல உருவாச்சு . 

  இங்கே இருந்த திராவிட இனமக்களுக்கு  இதன் அருமை தெரியும்.

அவர்கள் அங்கிருந்த வளங்களை பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்க்கையினை கட்டமைத்துக்கொண்டனர். அந்த வளங்களை தங்களின் வாழ்வாதாரமாக உபயோகித்தனரே தவிர  அதை அவர்கள் சுரண்டவில்லை .

உதாரணாமாக; உயர்ந்த மலைகளில் தேனீக்களின் இருப்பை பயன்படுத்தி தேன் எடுத்தலை மழைவாழ்மக்களின் ஒரு பகுதியினர் வாழ்வாதாரத்தொழிலாக மேற்கொண்டனர். 
   


மலை மற்றும் மலைசார் இடங்களிலும் , காடு சார் இடங்களிலும் , அந்த இடங்களின் வளங்களை ஆதாரமாகக்கொண்டு , அந்த வளங்களின் காரணிகளையே கடவுளாகவும் வழிபாட்டு வந்தனர் நம்ம  ஆட்கள்  .


நீலகிரியில் இருக்கும் தோடா இன எருமைகளை பாதுகாத்து; அதை தங்களின் வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களிலும் முக்கியத்துவமளித்து; இந்த நாகரிக உலகின் தொலைக்காட்ச்சி போன்ற அத்யாவசிய தேவைகளை !பயன்படுத்திக்கொண்டிருக்கும் அதே வேளையில் ,தங்களின் முன்னோர்கள் கட்டமைத்துக்கொடுத்த வாழ்க்கைமுறையை  கைவிடாமல் வாழும்  தோடர்களை பார்த்தால் , பண்டைய தமிழ் வாழ்வு முறையில் இயற்கையை நமது  முன்னோர்கள்  போற்றிப்பாதுகாத்து , அதைக்கொண்டே தம் வாழ்வினையும் கட்டமைத்துக்கொண்டது தெளிவாகத்தெரிகிறது.

தோடா இன எருமை 

தோடர்களின் கோயில் 
--------------------------------------
வளங்களை பயன்படுத்திகொள்வதற்கும் சுரண்டுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன . 

வெள்ளைக்காரன் வந்தேறிய பின்னர் , பசுமை மாறாக்காடுகள் அழிக்கப்பட்டு டீ  எஸ்டேட்டாக மாற்றப்பட்டன .


பைன் மரங்களும் தைல மரங்களும்  நடப்பட்டன .
lantana camera செடிகள் புல்வெளியை ஆக்கிரமித்தன
lantana camera செடி
kikuyu grassம் clover செடிகளும் நடப்பட்டன .இவை மண்ணை பிடித்துவைக்கு திறம் இல்லாமல் , Soil erosion ஏற்பட்டன .இவை நிலச்சரிவுக்கு வழிவகுத்தன .
--------------------------------------
சரி இதாவது வெள்ளக்காரப்பயபுள்ளைங்க , கொள்ளையடிக்கிற நோக்கோடு வந்தவுங்கன்னு ப்ரீயா விட்ரலாம் . 

ஆனா நம்மூரு ஆளுங்க ....இதான் சார் வளங்களை பயன்படுத்திகொள்வதற்கும் சுரண்டுவதற்கும் உள்ள  வேறுபாடு.

------------------------------------------------------------வளங்களை சுரண்டி bank balance சை பெருக்கிகொள்ளலாம் .ஆனா அதை அனுபவிக்க நாம இருக்கோணுமே :)

நன்றி :Giri M Prasanna & Raveendran NatarajanRaveendran Natarajan

No comments:

Post a Comment

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...