Monday, March 12, 2012

ஏழாம் அறிவு


அறிவு என்பது இன்னது என்று நாம் வகை படுத்துவதில் தவறு செய்து விட்டோம் என்றே சில நேரம் எண்ணத்தோன்றுகிறது .

மனிதனுக்கு ஆறு அறிவாம் ....

அதை இன்னும் எந்த ஐந்து அறிவு நாயும் ஒத்துக்கொண்டதில்லை என்று ஒரு கவிஞன் சொன்னது நினைவுக்கு வருகிறது .
 .............................................................................................................................................................................................
உண்மை தான் ....

 சில செய்கைகளை வைத்துப்பார்க்கும்  போது அறிவில் குறைந்த(தாக நாம் கருதும்உயிரினங்கள் , சிந்திக்கும் திறன் அற்றதாகவே தோன்றுகிறது .

எடுத்துக்காட்டு : கண்ணாடியை பார்த்து சண்டைக்கு போகும்  விலங்கு .


கண்ணாடிக்கும் காற்றுக்கும் வித்யாசம் தெரியாமல் , கண்ணாடியில் முட்டியபடி அதை கடக்க நினைக்கும் பறவை , பூச்சி .


இருப்பினும் நாமும் குழந்தை பருவத்தில் இது போன்று கண்ணாடியில் நமது உருவத்தை கண்டு ஏமாந்தவர்கள் தான் .நமக்கு இந்தசமயங்களில் learned behaviour தான் கைகொடுக்கிறது .

இருப்பினும் நமது மூதாதையர்களும் ( சிம்பன்சி ) தனது உருவத்தை கண்ணாடியில் பார்த்து அறியும் திறன் பெற்றவர்கள் ..............................................................................................................................................................

நானும் இந்த ஐந்து ,ஆறு... அறிவு வரிசையில் நம்பிக்கை கொண்டிருந்தேன் ....

அந்தக்காட்சியை காணும் வரை .

சித்தர்களுக்கு மட்டுமே கைவரப் பெற்றதாக நாம் நம்பும் சில செயல்களை என் கண் முன்னே அரங்கேற்றின சில ஐந்தறிவு ஜீவன்கள் .

அந்த நிகழ்ச்சியை பகிர்வதற்கு முன்னர் வரலாற்று சிறப்பு மிக்க சில நிகழ்சிகளை பகிர்ந்து கொள்ளலாம் .
.............................................................................................................................

நம்மை விட மிருகங்கள் நுண்ணறிவு பெற்றவை , அவற்றை பற்றி இந்த பதிவில் சொல்லி இருக்கிறேன் .

............................................

   இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் Rupert Sheldrake  நடத்திய ஆராய்ச்சியில் மிருகங்களுக்கு டெலிபதி அறிவு இருப்பதாக கண்டுபிடித்து உள்ளார் ( இவை செடிகளுக்கு இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது ) .

   உங்கள் வீட்டு நாய் உங்கள் மேல் வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தினால் உங்கள் மேல் எண்ணத்தினால் ஒரு பிணைப்பை ஏற்படுத்தி உங்களை அதன் எண்ணத்தோடு பிணைத்து வைத்துள்ளது ,

   நீங்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் விஷயத்தை உங்கள் மனைவிக்கு தொலைபேசியில் தெரிவிக்கும் முன்னரே உங்கள் நாய் அதை உணர்ந்து உங்களுக்காக வாசற்படியில் காத்திருக்க ஆரம்பிக்குமாம் .


நீங்கள் மெளனமாக குடுக்கும் கட்டளைகளை அவை புரிந்து கொள்ளும்.

 (As reported in the Journal of the Society for Psychical Research (July 1998), a telephone survey of 200 households in Northern California conducted by Sheldrake found 132 of the households surveyed had pets.  45% of dog owners claimed their animal knew in advance when a member of the household was on the way home, compared with 37% of cat owners, and around 20% of these pets were said to react more than 10 minutes in advance.  The survey indicated 46% of dog owners and 41% of cat owners stated their pets respond to their thoughts or silent commands. )   சுனாமி வருவதை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கை செய்த உயிரினங்களை   பற்றி நீங்கள் படித்திருக்கக்கூடும் .

   உங்கள் செல்லபிராணி உங்களுக்கு வரும் கான்சர் நோயையோ , வலிப்பு வாதம் போன்ற நோய்களையோ முன்கூட்டியே உணரும் சக்தி படித்தவை .   நாம் ஐந்தறிவு உள்ளதாக   கருதும் இதே நாய் தான் ,ஆப்பில் துண்டு மூச்சுக்குழாயில் சிக்கி மூச்சுத்திணறி இறக்க இருந்தவரை நெஞ்சின் மேல் குதித்து முதலுதவி செய்து காப்பாற்றியது என்பதை நீங்கள் நம்புவீர்களா ?

   கண்காணாத தேசத்தில் வீட்டிலிருந்து ஆயிரம் மைல்கள் தள்ளி ,தனித்து விடப்பட்ட நாய் ஒன்று சரியாக தனது வீட்டை அடையாளம் கண்டு பிடித்து வீட்டிற்கு  திரும்பிய கதையை நம்புவீர்களா ?

..................................................................................
  ஆஸ்கார் என்று ஒரு செல்லப்பூனை ஒன்று தோசா மருத்துவரின் மருத்துவமனையில் வளர்ந்து வந்தது (மருத்துவரின் பெயர் . David M. Dosa, M.D., a geriatrician and associate professor of medicine at Brown University ) .

  அந்த பூனை, மருத்துவர்கள் தினமும் ரவுண்ட்ஸ் வருவதைப்போல மருத்துவமனையை தினமும் சுற்றி வந்தது .ஆனால்  அதன் செய்கை சாதாரண மருத்துவர்களை போல அல்லாமல் வித்யாசமாக இருந்தது .

   சில நோயாளிகளிடம் மட்டும் அது அதிக பாசத்துடன் இருப்பதை அவர் கவனித்தார் ,
அதுவும் அந்த பூனை தனி கவனம் செலுத்திய அந்த நோயாளிகள் சில மணி நேரங்களில் இறைவனடி சேர்ந்தனர் .அதுவும் அவர்களின் கடைசி நிமிஷங்களை துல்லியமாக அறிந்தது போல அவர்களுடனே அந்த பூனை செலவிட்டது .    ஒரு முறை அல்ல இரு முறை அல்ல இருபத்தி ஐந்து   மரணங்களை துல்லியமாக கணித்தது  அந்த பூனை .அந்த பூனையின் இருப்பை விரும்பாமல் கதவை சாத்தினாலும் அந்த அறைக்கதவை வெளியில் நின்று பிராண்டியபடி  இருக்குமாம் ( உனக்கு சங்குதாண்டி என சொல்லாமல் சொல்லுமாம் ).அது இறப்பிற்கு முன்னால் வெளிப்படும் சில pheromone களை அறியும் திறன் பெற்றிருக்கலாம்  . இந்த துறையில் இன்னும் கவனம் செலுத்தினால் உயிர் என்பது என்ன என நாம் அறியக்கூடும் .


.....................................................................................................................................................
எனக்கு நேர்ந்த அனுபவம் :

நான் வேலை செய்யும் ஒரு பண்ணையில் சில சமயம் சில மாடுகள் நோய்வாய்பட்டு படுத்தபடுக்கையாகி விடும் .

அதில் பல  மாடுகள் நாங்கள் வழங்கும் மருத்துவத்தினால் பிழைத்துக்கொள்ளும் , ஆனால் சில மாடுகள் என்ன வைத்தியம் பார்த்தாலும் இறந்து விடும் .

அப்படி இறக்கப்போகும் பசுக்களை சக பசுக்கள் அடையாளம் கண்டுகொள்வது போல தோன்றுகிறது , நான்கு முறை இது போன்ற காட்சியை நான் கண்டு உள்ளேன் .

......................................................................................................................................................

         இவ்வுலகத்திலிருந்து விடைபெறப்போகும் தனது தோழியை பசுக்கள் சூழ்ந்து கொண்டு அதை ஆசுவாசப்படுதுகின்றன , சிறிது நேரத்தில்  அதன் உயிர் மெல்ல அதன் உடலை விட்டு பிரிகிறது .
அதன் உடலை அப்புறப்படுத்தும் போதும் துக்கம் தாளாமல் வாசல் வரை வந்து வழியனுப்புகின்றன .


அவற்றிற்கு பிரிவின் துயரம் ,எனக்கு எனது மருத்துவத்தை மீறியும் உயிர் பிரிந்த தோல்வியின் வலி இருந்தாலும் , இவற்றின் இந்த செய்கை அன்று இரவின் தூக்கத்தை தின்றது என்னவோ உண்மை .

..................................................................................................................................................................
பிரிவின் துயரம் நமக்கு மட்டும் தான் சொந்தமா என்ன ?11 comments:

 1. உண்மையிலேயே நெகிழவைக்கும் பதிவு டாக்டர்..!!

  ReplyDelete
  Replies
  1. thanks sir ,பசுக்களின் கண்ணீரை காட்டி பதிவு எழுதுவதா என்று இதை எழுத நான் தயங்கினேன் , இருப்பினும் என்னை பாதித்த இந்த சம்பவத்தை நண்பர்களுடன் பகிர ஆசை

   Delete
  2. உணர்வுகளை பதிவாக எழுதுவதற்கு தயக்கமே வேண்டாம் நண்பரே...

   Delete
 2. உனக்குள் இப்படி ஒரு அருமையான எழுத்தாளன் இருப்பதை இன்றுதான் கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்! இன்னும் நிறைய எழுது! நன்றி~!

  ReplyDelete
 3. அருமையான பதிவு அன்பரே! எனக்கு இது போல் நேர்ந்ததுண்டு. அது போக இது குறித்து நிறைய கேள்விப்பட்டும் இருக்கிறேன். இந்த உணர்வு மிக்க பதிவைத் தருவதற்கு ஏன் தயக்கம்?

  ReplyDelete
  Replies
  1. இனி தயக்கம் ஏதும் இல்லை நண்பரே . நன்றி

   Delete
 4. நல்ல பதிவு, நிறைய அறியாத விஷயங்கள் உள்ளன.

  ReplyDelete
 5. நல்ல தகவல்கள்..சில விஷயங்களில் விலங்குகள் மனிதனை விட மேல் தான்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தான் சார் , இன்னும் சில நிகழ்சிகளை பார்த்துள்ளேன் சார் , அது பற்றி விரைவில் பதிவிடுகிறேன்

   Delete

டாக்டருக்கே ஊசியா ? சரி குத்துங்க ...

Related Posts Plugin for WordPress, Blogger...